To search this blog

Friday, April 27, 2012

Day 10 - Thiruvallikkeni Udayavar Uthsavam - (Sarrumurai) : எம்பெருமானார் சாற்றுமுறை


எம்பெருமானார் சாற்றுமுறை - சித்திரையில் செய்ய திருவாதிரை

Today is the 10th day of the grand Uthsavam of Swami Emperumanaar.  Today is the most auspicious ‘Thiruvathirai in the month of Chithirai’.  Today is the day when Acharyar Ramanujar was born on this planet for imparting knowledge to all and to guide us towards Sriman Narayana. 

Ramanuja toured the entire Country, making the Srivaishnavatie tradition flourish in all his path.  He was a great administrator too.  He created flawless systems, corrected the administration of Sri Rangam ensuring the proper maintenance of the wealth of Lord Ranganatha and creating teams to properly continue all kainkaryams to the Lord.  The fountain of knowledge, he was, he provided wealth of knowledge through his many works which include the Magnum Opus ‘Sri Bashyam – the vishishtavaida commentary of Brahma sutram of Vyasa Bhagavan.; Vedantha Deepam, Vedanta Saram, Vedanta Sangraham, Gadyathrayam and more….

Let us fall at the lotus feet of our Acharyar which will relieve us of all our sins and steer us towards good thinking, good deeds and towards salvation through service to Lord and His bakthas.

Some photos taken this morning during the Emperumanar purappadu at Thiruvallikkeni are posted below :

இன்று 27.04.2012 -  சித்திரையில் செய்ய திருவாதிரை நந்நாள்.  நம் ஆச்சார்யன் இவ்வுலகத்தில் வந்துதித்த சீரிய நாள். செங்கயல் வாவிகள் சீர்வயல்கள் சூழ்ந்த ஸ்ரீபெரும்புதூரில் இளையாழ்வார் எனும் ராமானுஜர் அவதரித்த நந்நாள்.  எம்பெருமானாரின் பிறப்பு உலகத்தவர்கள் உடனே பெறுதற்கான  நண்ணறு ஞானத்தை அனைவருக்கும் அருளி அவர்களை ஸ்ரீமன் நாராயணன் இடத்தில் பக்தி செலுத்துமாறு மாற்றிய அவதார திருநாள்.   

உடையவர் ஒரு தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் * பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று "ஸ்ரீமன் நாராயணனின் பரத்வத்தை" நிலை நாட்டினவர்.  ஸ்ரீ வைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர்.   ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார்.   ஸ்ரீ பாஷ்யம் அவரது தலை சிறந்த படைப்பு. பகவத் கீதைக்கு விசிஷ்டாத்வைத பிரமாணமாய் கீதா பாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண் புகுதலை பற்றி சரணாகதி கத்யம், ஸ்ரீ ரங்கநாதரை தன்னை தாசனாக கொள்ளும்படி ஸ்ரீரங்க கத்யம், மஹா விஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்ட கத்யம் என்பன இவரது பிற நூல்கள். 

லோகோபகாரியாராகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும்  ரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமி கூரேசர் வாக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்த நாள் அதி விசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே ( சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைஷ்ணவ தலங்களிலும் சேவாகாலம் முடியும் போது "ராமானுஜார்ய திவ்யாக்ஞா -  வர்ததாம் அபிவர்ததாம்" என அவரது கட்டளைகள் சிறப்புற நடைமுறையில் உள்ளதை பாராட்டுவர். 

இன்று 27.04.2012  காலை - உடையவர் சாற்றுமுறை சிறப்பாக நடை பெற்றது. காலை புறப்பாட்டில்  உடையவர் அழகிய பல்லக்கில் எழுந்து அருளினார்.   காலை புறப்பாட்டில் ஸ்தோத்ர பாடல் கோஷ்டி ஆனது.  எம்பெருமானார் பிறந்த நாளை அத்யாபக சுவாமிகள் மேல் உத்தரீவத்தை விண்ணை நோக்கி விசிறி ஆர்ப்பரித்து கொண்டாடினர். 

பெரிய கடலை போன்ற கருணை கொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள் பணிவோர்க்கு எல்லா நலமும் பெருகும். அவரைப்பற்றி சிந்திப்போர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும் ! 

அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.
No comments:

Post a Comment