திருவல்லிக்கேணியில்
சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம் நாள். இன்று [9th
May 2012] காலை ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான்
அழகு பொலிந்திட புண்ணிய கோடி விமான
சப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார். திருவல்லிக்கேணியில்
காஞ்சிபுரத்தை போல ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம் நடை பெறுகிறது.
சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம்
பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்துஅருளிய களைப்பு தீரவும்
ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக
இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்ற ப்படுகிறது. இந்த
சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும்
வழங்கப்படுகிறது. திருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய
"கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம்"
அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.
அடியேன்
ஸ்ரீனிவாச தாசன்.
9th
May 2012 - Today is the 6th day of Brahmothsavam at Thiruvallikkeni
Divyadesam for Sri Parthasarathi Perumal.
This
morning after ‘Choornabishekam’, Sri Parthasarathi had purappadu in ‘Punyakodi
Vimanam’. Some photos taken during the
purappadu are here.
No comments:
Post a Comment