To search this blog

Friday, March 9, 2012

Kulasekara Azhwaar Sarrumurai at Thiruvallikkeni


4th Mar 2012 was ‘Punarvasu (punarpoosam) nakshathiram’ in the month of ‘Maasi’ – the Thiruavathara thirunaal of Kulasekhara Azhwaar.  He was born in Kerala Nadu and was the amsam of ‘kausthubam’ – the jewel adorning Maha Vishnu.  He was born at Thiruvanjikulam as son of King Thiruviradhan and ruled the Chera Empire.  He was greatly devoted to Rama and ‘Ramayana’ and reverred Sri Vaishnavaites with devotion.
His contribution in ‘Sri Naalayira Divya Prabandham’  is 105 songs titled ‘Perumal Thirumozhi’.  In the 4th chapter – he sings about his various wishes of the forms that he would like to take for doing service to the Lord Balaji at Thirumala.  In one of these songs, he says ‘he would eternally  be waiting as the step before the Lord, as he could continuously have darshan of Lord Thiruvengadavan’ all the time.  After these beautiful words, the padi (doorstep) at Thirumalai is known as ‘Kulasekara Padi’.
4th March being the 5th day of Thavana Uthsavam,  at Thiruvallikkeni divyadesam, there was veedhi purappadu of Kulasekhara Azhwaar alongwith Sri Parthasarathi in the morning to Thavana Uthsava Bungalow.  Thirumanjanam was performed at Bungalow and then there was periya mada veedhi purappadu in the evening.   Some photos taken during the morning purappadu and during Thirumanjanam are available down below :
4/3/2012 - இன்று 'மாசி புனர்வசு' - கௌஸ்துபம் அம்சமாய் தோன்றிய சேரலர் கோன் 'குலசேகராழ்வார்' அவதரித்த  நந்நாள்.  குலசேகரர் சேர நாட்டில் திருவஞ்சிக்குளத்தில் - திருவிரதன் என்ற மன்னனுக்கு மகனாய் அவதரித்தார்.  வைணவர்கள் மீது இவருக்கு இருந்த அபிமானம் விவரிக்க முடியாதது. ஒரு சமயம் அவரது அரண்மனையில் தங்க ஆரம் ஒன்று தொலைந்து போயின போது - மற்றவர்கள் குற்றம் சொல்ல - திருமாலடியார்கள் ஒரு போதும் இழிச்செயல் செய்யார்  என, நச்சு பாம்புகள் நிறைந்த குடத்தில் கையிட்டு நிலை நாட்டினவர்  இவர். 

இவர் அருளிச்செய்தது 'பெருமாள் திருமொழி" எனும் பிரபந்தம் -   பாடல்கள் கொண்ட அற்புதமான களஞ்சியம்.  "ஊனேறு செல்வத்து உடற் பிறவி யான் வேண்டேன்' என தொடங்கும் பதிகத்தில், 'திருமலை திருப்பதியில்' என்னென்னவாக எல்லாம் இருந்து திருவேங்கடவனுக்கு கைங்கர்யங்கள் செய்து வேங்கடவனையே தரிசிக்கும் பேறு பெற தமக்கு உள்ள எண்ணங்களை அழகாக 'செம்பவள வாயான் திருவேங்கடமென்னும், எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே !" - என்கிறார். 

குலசேகர ஆழ்வார் வாய் மொழியான சீரார்ந்த தமிழ் மாலை வல்லவர், தீ நெறிக்கண் செல்லார் என்பது திண்ணம். 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஞாயிறு அன்று தவன உத்சவம் ஐந்தாம் நாள்.  காலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உடன் குலசேகர ஆழ்வாரும் புறப்பாடு கண்டு அருளினார். காலை கோஷ்டியில் 'திரு விருத்தம்' சேவிக்கப் பெற்றது. தவன உத்சவ பங்களாவில் காலை ஆழ்வார் பெருமாள் திருமஞ்சனம் நடந்தது.  மாலை சாற்றுமுறை புறப்பாடு - இராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டி ஆனது.

மாசி புனர்பூசம் காண்மின் இன்று மண் உலகீர் - கொல்லி நகர் கோன் குலசேகரன் பிறப்பால், நல்லவர்கள் கொண்டாடிய சீரிய நந்நாள், இந்நாள் !!

சேரலர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 



ஸ்ரீ பார்த்தசாரதி புறப்பாடு கண்டு அருள்கிறார்
குலசேகரர்
திருமஞ்சன கட்டியம் - ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி 

குலசேகரர்
திருமஞ்சனம் கண்டு அருளும் பெருமாள் 




No comments:

Post a Comment