Thirukadigaipathi Thakkan Emperumanukku thiruvabarangal Samarpanai 2026
சோழசிம்ஹபுரம் (சோளிங்கர்)
108 திவ்யதேசங்களில் மிகவும் சிறப்புமிக்க, இயற்கை எழில் சூழ்ந்த புண்ணியத்
திருத்தலம். இத்திருத்தலத்தில் பெரியமலை, சின்னமலை, மற்றும் கொண்டபாளையம் திருக்கோவில்
என மூன்று முக்கியமான திருக்கோவில்கள் உள்ளன.
சுமார் 450 அடி உயரமுடைய பெரியமலையில், மூலவராக ஸ்ரீ யோக நரசிம்மர் யோகாசனத்தில்
அருள்பாலிக்கிறார். அவர் சாளகிராம மாலை அணிந்து, சதுர்புஜங்களுடன் சேவை சாதிக்கிறார்.
இரண்டு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தியிருப்பதோடு, இரண்டு கரங்கள் ஆழ்ந்த யோக தியான திருக்கோலத்தில்
எழுந்தருளியுள்ளார். சின்னமலையில், ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் யோக திருக்கோலத்தில் பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார்.
மலையடிவாரத்தில் அமைந்துள்ள திருக்கோவிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
எழுந்தருளியுள்ளார். இந்த ஆலயத்தின் உள்ளே ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருச்சன்னதி அமைந்துள்ளது.
அந்தச் சன்னதிக்கு முன்பாக, ஸ்ரீ பக்தோசிதர் எனப் போற்றப்படும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்,
தக்கான், அக்காரக்கனி எம்பெருமான் ஆகிய திருநாமங்களுடன் பக்தர்களால் ஆராதிக்கப்படுகிறார்.
"தக்கான்" என்பது, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றத் தகுதியும் கருணையும்
உடையவர் என்ற பொருளை உணர்த்துகிறது. "அக்காரக்கனி" என்பது, இனிமை நிறைந்த
அமுதமாகிய எம்பெருமானின் பேரருளைக் குறிக்கும் திருநாமமாகும்.
இந்தப் புனிதத் திருத்தலத்தின் பெருமையைப் போற்றி நம்மாழ்வார், பேயாழ்வார்,
மற்றும் திருமங்கையாழ்வார் ஆகிய ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். கடிகைத் தலத்து
யோக நரசிம்மப் பெருமானின் அருளால், பக்தர்களின் மனக்கவலைகள் நீங்கி, அவர்கள் விரும்பும்
நலன்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது தலைமுறைகளாக நிலைத்து வரும் நம்பிக்கையாகும்.
சோளசிங்கபுரம் தொட்டையாச்சார்யார் எனும் மஹாசார்யர் இந்த திருத்தலத்தில்
அற்புத கைங்கர்யம் செய்து எழுந்தருளி இருந்தார்.
அவர் தம் திருவம்சத்தில் இப்போது .
நமது வர்த்தமான ஆசார்யர் - ஸ்ரீமான் உபய வேதாந்த கோயில் கந்தாடை சண்டமாருதம்
கந்தாடையாண்டான் (எ) யோகந்ருசிம்மன் ஸ்வாமி பற்பல கைங்கர்யங்கள் செய்து வருகிறார்.
இன்று காலை (ஜூலை 17
- ஆடி வெள்ளி - மகம் நக்ஷத்திரம்) ஸ்ரீ அக்காரக்கனி எம்பெருமானுக்கு உபய நாச்சிமார்களுக்கும்
- நமது "கோவில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் சிஷ்ய ஸபை' சார்பில், நமது
வர்த்தமான ஆச்சார்யரால் - வெள்ளி மீது தங்க முலாம், வண்ண கற்கள் இழைத்த பதக்கங்கள்
மூன்றும், அதே போன்று வெள்ளியில் தங்க முலாம் பூசிய நீண்முடிகள் (திருக்கிரீடங்கள்)
மூன்றும் சமர்ப்பிக்கப்பட்டன.
திருவாபரணங்களின் படங்களை இங்கே காணலாம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !
நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!
ஸ்ரீவைஷ்ணவனுக்கு
உய்ய ஒரே வழி
எம்பெருமானிடம்
சரணாகதி அடைந்து,திருவடிகளில் பிரபத்தி செய்வதே. ஸ்ரீவைகுண்டத்து
எம்பெருமானிடம் நம்மை சேர்விப்பவர் நம் ஆசார்யரே *** ***
adieyn
Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17.7.2026
.jpg)



No comments:
Post a Comment