To search this blog

Thursday, July 20, 2023

Thiruvadipuram 7 2023 - தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார்

For Srivaishnavaites, the month of Aadi is of special significance – as Thiruvadipuram [Puram Nakshathiram in the month of Aadi]    marking  the birth of Kothai Piratti [Andal] falls in this month.    This year Thiruvadipuram falls on Aadi 6 – Saturday July 22 –    Andal  was found in a thulsi garden at  Sri Villiputhur by Vishnu Chithar [Periyazhwaar], grew up idolizing Emperuman Himself.    



கோதைப் பிராட்டி  எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் மீது அளவற்ற  பற்றும் ப்ரேமையும் கொண்டவள்  - மானிடவரான தம்மை ஸ்ரீமன் நாராயணன் வந்து ஆட்கொள்ளுவான் என்று ஐயமற நம்பினாள் - அதன்படியே வாழ்ந்தாள் - திருமாலிருஞ்ச்சோலை அழகிய மணவாளனையே மணாளனாக மணமுடித்தாள். 





கோதை பிராட்டி ஆண்டாள் தமது நாச்சியார் திருமொழியில் - கூடலிழைத்தல் - பாசுரத்தை இவ்வாறு தொடங்குகிறார்.

தெள்ளியார்பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்

பள்ளி கொள்ளுமிடத்து  அடி  வொட்டிட

கொள்ளுகில்  நீ கூடிடு கூடலே 

எம்பெருமானே எங்கள் கூடல் தெய்வமே!-  தெளிவுடைய பக்தர்கள் பலர் கைகளார வணங்கப் பெற்ற ஸ்வாமியாய், பரமோதாரனாய் திருமாலிருஞ் சோலையிலே எழுந்தருளியிருக்கிற மணவாளப் பிள்ளையாகிய பரமபுருஷன் பள்ளி கொண்டருளுமிடத்திலே, அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை நான் பிடிக்கும்படியாக, அந்த சர்வேஸ்வரன்  திருவுள்ளம் பற்றுவனாகில் - நீ  கூடவேணும் !! திருவரங்கம் பெரிய கோயிலிலே சென்று புக்கு அப்பெருமானுக்குத் திருவடிவருடும்படியான பாக்கியம் இன்று நமக்கு வாய்க்குமாகில், கூடல்தெய்வமே! நீ கூடங்கடவை என்கிறாள் ஆண்டாள் நாச்சியார்.   மணாளன் என்பான்,  மணக்கோலத்தோடு வந்து நிற்பவன்.  கூடிடுகூடலே:- “அவனாலே பேறு’  என்று அவ்வெம்பெருமானை அடைத்தலையே தனது வாழ்க்கை நெறியாக தலைக்கச்சு காட்டுகிறாள்  ஆண்டாள் நாச்சியார். 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 

 

Today is day 7 of Thiruvadipura uthsavam and Andal had siriya mada veethi purappadu.  It was rendering of Thiruvezhukkoorrirukkai, Siriya thirumadal and Thirumozhi in the arulicheyal goshti.  Here are some photos taken this evening at Thiruvallikkeni divaydesam.

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
19th Aug 2023









  

No comments:

Post a Comment