To search this blog

Monday, July 10, 2023

Aani Revathi Sri Ranganathar 2023 - " நுண்ணேர்மையன்" - infinitesimist !!!

எம்பெருமான் எத்தகையவன் ?  -  " நுண்ணேர்மையன்" 


Small !  Tiny !  -  Atoms represent the smallest pieces of matter with constant properties, and are referred to as the basic unit of matter. However, Scientists have discovered that atoms are not the smallest particles in nature.  In mathematics, an infinitesimal number is a quantity that is closer to zero than any standard real number, but that is not zero. The word infinitesimal comes from a 17th-century Modern Latin coinage infinitesimus ! which originally referred to the "infinity-th" item in a sequence. 

Generally we call them ‘minute’ (no reference to Time here) – meaning exceptionally small, tiny !!  - at one time atoms were thought to be the tiniest particles of matter.  Not any longer !! 

Electrons are one of the things inside atoms and they are seen moving around when an electric current flows.  The list of tiniest things  include quarks, gluons, electrons and neutrinos. Then there are the forces that join those things up: light is one of them. Light is carried by little particles called photons; then  there is the Higgs boson particle, which was found in recent times, found to be  smaller than an atom. 

No Science or GK post but today being Revathi in the month of Aani – something on Periya Perumal – Lord of Thiruvarangam – Sri Ranganathan, resting on Adisesha on the beautiful island full of coconut trees, big walls, flowing water, riches and devotees – surrounded by the holy Cauvery that washes pearls and gems against the golden walls of the Temple built by Devas.  Emperuman here is everything the mightiest as also the one who resides in the tiniest of the substances. 




எம்பெருமான் எத்தகையவன் ?  -  " நுண்ணேர்மையன்"  - அப்படி என்றால் !?!?! -  நேர்மை என்றால்  – நுட்பம். 

நுண் என்ற  பெயர்ச்சொல் - மிகச்சிறிய/ மிகத்தெளிவான என அர்த்தங்கள் பெறும்.  நுண்ணுயிர்  என்பது - கண்களுக்கு புலப்படாத உயிரினம்.  நுண்ணேர்மையன்  என்றால்  ஸூக்ஷ்ம வஸ்துக்கள்  எல்லாவற்றையும் விட  மிகவும் ஸூக்ஷ்ம ஸ்வரூபனானவன் !  என்றபடி.   அதிஸூக்ஷ்மமான பதார்த்தங்களெங்கும் வியாபித்துத் தரித்துக்கொண்டு நிற்பவனே ஸ்வாமி நாரணன் எம்பெருமான். .  

திருமங்கை மன்னன் தம் திருமொழியில்  திருவரங்கத்து சிறப்பு பாசுரங்களில் இவ்வாறு : 

சேயனென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையினாய, இம்

மாயையை ஆருமறியா வகையான்  இடமென்பரால்,

வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து ஆர்ப்புனற் காவிரி,

ஆய பொன்மாமதிள்  சூழ்ந்தழகார் தென்னரங்கமே, 

என மங்களாசாசனம் செய்த்துள்ளார்.  மூங்கில்களில் நின்று முதிர்ந்த முத்துக்களையும் ரத்னங்களையும் தள்ளிகொண்டுவந்து நிறைந்திருக்கிற தீர்த்தத்தையுடைய திருக்காவேரியாலும் தகுதியான அழகிய பெரிய திருமதிற்களாலும் சூழப்பட்டு அழகு பொருந்தியிருப்பதான "தென் அரங்கம்"  எனும் பெருமகிமை கொண்ட திவ்யக்ஷேத்திரத்திலே  எவர்க்கும் கிடைத்தற்கரிய மஹாபுருஷன்;  அனைத்து சிறப்புகளும் பொருந்திய  நுண் நேர்மையன் என்ற புகழ் வாய்ந்த சர்வேஸ்வரன் - புனித காவிரி ஆற்றின் நடுவே அற்புதமாக அமைந்த திருவரங்கத்திலே பள்ளி கொண்டு நம்மை ரக்ஷித்து அருள்கிறான்.  அவன் திருவடியல்லால் வேறு ஒன்றும் நமக்கு புகலிடமில்லை - அவன் தாள்களையே பற்றி அவனை அடைவோமாக !! 

Today Aani Revathi and  Sri Ranganathar had siriya mada veethi purappadu at Thiruvallikkeni divyadesam.  Here are some photos taken during the purappadu

 
adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
10.7.2023
 
பாசுர விளக்கம் : கச்சி ஸ்வாமி  ஸ்ரீ உ.வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி உரை  - கட்டற்ற சம்பிரதாய களஞ்சியம் திராவிடவேதாவில் இருந்து !! 









No comments:

Post a Comment