To search this blog

Tuesday, February 21, 2023

the most attractive parrot at Thiruvallikkeni 2023

Of the many birds  “Parrots”  attract us with their beauty, wisdom, colour, speaking capability and more .. .. .. The parrots are a broad order of more than 350 birds. Macaws, Amazons, lorikeets, lovebirds, cockatoos and many others are all considered parrots.   All parrots have curved beaks and all are zygodactyls, meaning they have four toes on each foot, two pointing forward and two projecting backward. Most parrots eat fruit, flowers, buds, nuts, seeds, and some small creatures such as insects.

 


Many parrots are kept as pets, especially macaws, Amazon parrots, cockatiels, parakeets, and cockatoos. These birds have been popular companions throughout history because they are intelligent, charismatic, colorful, and musical. Some birds can imitate many nonavian sounds, including human speech. 

பச்சை கிளிகளின் நிறம், அழகு, சத்தம், நம்மை ஈர்ப்பன.  கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. -  சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளனவாம் . கிளிகள் மிகவும் பிரபலமான செல்லப்பிராணிகளாக இருக்க காரணம், அவைகளின் ஒலிகளைக் கற்கும் மற்றும் பின்பற்றும் திறன். . ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள், அமேசான் கிளிகள் ஒலிகளைப் பின்பற்றுவதில் சிறந்தவை.  ஒரு ஆப்பிரிக்க சாம்பல் கிளி 100 வார்த்தைகளுக்கு மேல் பேசக்கூடியதாம்.

'பறவைகள் கத்துமா !'   இவ்வாறு கூறுவது மரபு வழு. ஏனெனில், பறவைகளின் குரலுக்கு சரியான தமிழ் சொற்கள் வழக்கத்தில் உள்ளன.  :  ஆந்தை - அலறும்; காகம் கரையும்; கிளி          பேசும்; குயில்        கூவும்; கூகை        குழறும்; கோழி கொக்கரிக்கும்; சேவல் கூவும்; மயில் அகவும்; வண்டு      முரலும் !

 


மிக சிறந்த பக்தி இலக்கியம் அருளிய கோதை நாச்சியார் எம்பெருமானை அடைவதற்கு ஏங்கி இயம்பிய பாடல்கள் -  *நாச்சியார் திருமொழி* - இப்பாசுரங்களில்  அன்பு, பரிவு, காதல்,  என உணர்வு பூர்வமான வரிகளில் கோதை பிராட்டி இயம்புகிறார்.  கண்ணன் இருக்கும் இடத்துக் கொண்டு செல்க என கிளிகளை பற்றி இவ்வாறு விவரிக்கின்றார். : - கூட்டில் இருந்து கிளி எப்போதும்   !!

 

Srivilliputhur Andal kili

 

கூட்டிலிருந்து கிளியெப்போதும்; கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும்*

ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில் ..  உலகளந்தானென்றுயரக்கூவும்*

 

எம்பெருமானிடத்தில் தீராக் காதல் கொண்டு, அவனையே அடைவதற்கு நோன்பு இருக்கும் ஆண்டாள் நாச்சியார் வளர்க்கும்   கிளியானது முன்பு கற்பித்து வைத்த திருநாமத்தை  - கோவிந்தா, கோவிந்தா, என உச்சரிக்துக்கொண்டு,   அங்கே இங்கே திரிய நலிவுற்ற கோதை,  கூட்டிலே பிடித்து அடைத்தால்  - கண்ணன் நாமமே குழறிக் கொல்ல  அக்கிளி கூட்டில் அடைப்பட்டபோது  அவன் நாமமான உலகளந்தான் என உயர கூவிற்றாம்  !!

 




Today (21.2.2023)  on day 2 of Theppothsavam  - Sri Parthasarathi Emperuman’s crown was embellished with thura, Chandra pathakkangal,  mayirpeeli (peacock feathers) and atop a beautiful golden parrot.  Here are some photos of Sri Parthasarathi Perumal.

 


சமீபத்தில் படித்த ஒரு செய்தி :  உரிய  அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  சென்னை சாலிகிராமத்தில் உள்ள சிரிப்பு  நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத் துறையினர் பறிமுதல் செய்து கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர்.   அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில்,  பச்சை கிளிகள் உள்ளதால்,  இந்த வகை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும். வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972 இல் பட்டியலிடப்பட்ட இந்தியப் பறவையான அலெக்ஸாண்ட்ரின் கிளி வளர்ப்பவர்கள் பிடிபட்டால், 6 மாத சிறைதண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுமாம்.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.2.2023 

No comments:

Post a Comment