To search this blog

Saturday, September 18, 2021

Purattasi Sani @ Thiruvallikkeni 2021 - என்னே திருமாலே செங்கணெடியானே

அளவீடு  .. .. என்பது என்ன - அளவை என்றால் என்ன ?? 



Today 18th Sept 2021 is Avittam nakshathiram in the month of Purattasi and today being a Saturday is special as ‘Purattasi Sanikkizhamai’.  On all Saturdays in the month of Purattasi, devotees in thousands visit and worship Sriman Narayana, especially the Lord of Seven Hills – Venkateswarar.  At Thiruvallikkeni on every purattasi Sani, there would be periya mada veethi purappadu of Sri Azhagiya Singar (other than Navarathri days) .. .. .. sadly, there would be no purappadu today due to Corona restrictions by the State Govt, and temples remain closed – out of bounds for worshippers, while everything is open !! Sad.


அளவை என்ற பெயர்ச்சொல்லுக்கு : தானியங்களை அளவையிடும் படி; அலகுகளைக் கொண்டு அளவு (measure) எடுக்கும் முறை; தத்துவம் - அறிவைப் பெறுவதற்கான வழி.; நிறுத்தலளவை அல்லது எடுத்தலளவை (weight), எண்ணலளவை (count), நீட்டலளவை (distance,height) போன்ற அளக்கும் முறை, என பலவற்றை கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவது ஆகும். இந்த நிலையான அளவு 'அலகு' எனப்படுகிறது. கணிதம், இயற்பியல், கட்டுபாட்டுவியல், புள்ளியியல், கணினியியல் ஆகிய துறைகளும் அளவியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.  

Measurement is the quantification of attributes of an object or event, which can be used to compare with other objects or events.  The scope and application of measurement are dependent on the context and discipline. In natural sciences and engineering, measurements do not apply to nominal properties of objects or events, which is consistent with the guidelines of the International vocabulary of metrology published by the International Bureau of Weights and Measures.  However, in other fields such as statistics as well as the social and behavioural sciences, measurements can have multiple levels, which would include nominal, ordinal, interval and ratio scales.

The UK government has released a 23-item list of things it will pursue now that it’s no longer part of the European Union. And one item in particular is raising quite a few eyebrows. Prime Minister Boris Johnson’s government says it wants to let retailers list goods solely in imperial measurements rather than metric. Britain officially converted to the metric system in 1965, but just like the commonwealth countries of Canada and Australia, there’s still a mix of measurements—both metric and imperial—in everyday usage throughout the UK. When the UK was part of the European bloc, EU rules meant that British retailers could only list imperial measurements as long as metric measurements were given as well. But Johnson wants to let stores list things in just feet and ounces again, rather than grams and liters.

The proposal sparked ridicule and confusion from some Brits online, with one writer for the Financial Times jokingly saying, “YES. Can’t wait to be able to go a pub and order a pint again.” The joke, of course, being that you can still order a pint at any bar in the UK because the British never really converted to metric completely.

முகத்தல் என்றால் : மொள்ளுதல்; அளத்தல் ; தாங்கியெடுத்தல் ; விரும்புதல் ; நிரம்பப்பெறுதல் ; மணம் பார்த்தல்.  மாவடு போன்றவற்றை படி (கால் படி; அரைப்படி; 1 படி) எனவும்; வேப்பம் பூ போன்றவற்றை ஆழாக்கு என்ற அளவையிலும் விற்றார்கள் - நாம் வாங்கினோம் என்பது ஒரு புதிய தகவலாக இருக்கலாம்.  இன்னமும் பூ கட்டி விற்பவர்கள் - ஒரு முழம், இரண்டு முழம் என (முப்பது பைசா மூணு முழம் அந்த காலம் !!) முழம் அளவையாக விற்கிறார்கள் .. .. முழம் ஒரு மனித கையின் அளவு.  அளப்பவரின் கையை பொறுத்து இது மாறலாம்.

அளவீட்டிற்கான பொதுவான ஒப்பீட்டுக் கட்டமைப்பாக அனைத்துலக முறை அலகுகளே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வமைப்பின்படி ஏழு அடிப்படை அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை கிலோகிராம், மீட்டர், கேண்டெலா, நொடி (கால அளவு), ஆம்பியர், கெல்வின், மோல் என்பனவாகும். இவற்றில் கிலோகிராம் தவிர்ந்த ஏனைய ஆறு அலகுகளும், குறிப்பிட்ட ஒரு பொருள் சார்ந்து வரையறுக்கப்படவில்லை. ஆனால் கிலோகிராம் என்ற அலகானது, பாரிஸில், Sèvres இலுள்ள, பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தின் தலைமயகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு குறிப்பிடப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாக உள்ளது.





எம்பெருமான் அளப்பரியவன் - அவனே அகிலத்தை படைத்தான், அகிலத்தை யாசித்து பெற்றான், அவனே மஹாப்ரளயத்தில் உலகத்தோரை காப்பாற்றினவன்.  உலகளந்த சரிதமும்  உலகமுண்ட சரிதமும்  எல்லாம் அவன் லீலைகளே  !   இவ்விரண்டு சரிதங்களையும் சேர்த்தநுபவித்து,  எம்பெருமானையே வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்கிறார்  நம் தமிழ் தலைவன் பேயாழ்வார் : – மிகச்சிறிய வடிவுகொண்டு ஏழுலகங்களையும் உண்டும் உமிழ்ந்தும் போந்த நீ அவ்வுலகங்களை மிகப் பெரிய இரண்டு திருவடிகளினால் அளந்துகொண்டாயென்றால் இது ஒரு வியப்போ? இதை அரிய பெரிய காரியமாக எல்லாரும் சொல்லிக் கொள்ளுகிறார்களே, இஃது என்னோ? என்கிறார்.

முன்னுலகம்  உண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலகம்

ஈரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? - என்னே

திருமாலே செங்கணெடியானே, எங்கள்

பெருமானே நீயிதனைப் பேசு. 

முன்பொரு காலத்தில் மஹாப்ரளய  பேரழிவு வந்த சமயம், உலகங்களை யெல்லாம், உண்டு, தனது  திருவயிற்றிலே வைத்திருந்து  பிறகு வெளிப்படுத்தின உனக்கு  அந்த உலகங்களை  பின்பொருகாலத்தில் உமது இரண்டு திருவடிகளாலே பெரியவொரு காரியமாகுமோ?  எங்கள் எம்பிரானே !  திருமகள்நாதனே!  சிவந்த திருக்கண்களையுடைய ஸர்வாதிகளே!  எமக்கு ஸ்வாமியானவனே! நீரே இதை எனக்கு புரியும் வண்ணம்   சொல்லவேணும், இஃது என்னோ? என வினவுகிறார் நம் பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில்.

Reminiscing the good olden days, here are some photos of  Purattasi Sani purappadu of Sri Azhagiya Singar at   Thiruvallikkeni divyadesam on 19.9.2015.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18th Sept. 2021.
  

பாசுர விளக்கம் : கட்டற்ற சம்பிரதாய கலை  களஞ்சியம் : திராவிட வேதா இணையம்.    







1 comment: