To search this blog

Tuesday, September 28, 2021

Purattasi Thiruvathirai 2021 - இராமானுசன் சீலமல்லால் .. .. ஒன்றறியேன் !!

For Srivaishnavaites, life is blissful – today 29th Sept 2021 (Purattasi 13)  is the masa thirunakshathiram of our great Acaryar Swami Ramanujar.  ‘Ananthah sarasi dhere  Ramye  Bhoothapurivare’ – on the bank of Ananthasaras the temple pushkarini, is the temple of Sri Adhi Kesavar.   Boothapuri, better known now as Sri Perumpudur is the most divine place for us –  the place where our Greatest Acharyar “Emperumanaar, Bashyakarar” the reincarnation of Aadi Sesha and Sri Lakshmanar was born,  in the year 1017  to Kesava Somayaji and Gandhimathi.    




கிருதயுகத்தில் ஸ்ரீ ரங்கநாதருக்கு ஆதிசேஷனாகவும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமபிரானின் தம்பி இலக்குவனாகவும் துவாபரயுகத்தில் கிருஷ்ணனின் மூத்த சகோதரர் பலராமனாகவும் கலியுகத்தில் உலகைத் திருத்தி பக்தி வழியிலும் சரணாகதி மார்க்கத்தையும் காட்டி உலகை உய்விக்க ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். 

எம்பெருமானாரிடத்திலே  மிகுந்த ப்ரேமையுடன் பணிவிடைகள் செய்து வந்தவர்களில் திருவரங்கத்து அமுதனார் முக்கியமானவர்.  பூர்வத்தில் பெரிய கோயில் நம்பி என்ற திருநாமம் பூண்டிருந்த திருவரங்கத்து அமுதனார் கோயில் காப்பாளராகவும் புரோஹிதராயும் இருந்தார்.  அமுதனார் எம்பெருமானார் விஷயமாக இராமாநுச நூற்றந்தாதி எனும் 108  அற்புத பாசுரங்களை இயற்றி நம்பெருமாளுக்கும் எம்பெருமானார்க்கும் சமர்ப்பித்தார். உபவீததாரிகளுக்கு காயத்ரிபோலே ப்ரபன்னர்களுக்கு இது என்று மாமுனிகள் திருவுள்ளம், ஆகையால் இது ப்ரபன்ன ஸாவித்ரி என்று அழைக்கப் படுகிறது.  இராமானுசரின் பணிகள், பெருமைகள், வைணவத் தொண்டு ஆகியனவும், தனக்கும் இராமானுஜருக்குமான தொடர்பின் வலிமையையும் திருவரங்கத்து அமுதனார் எடுத்துரைத்துள்ளார்.  




எம்பெருமானரிடத்திலே அளப்பரிய பக்தியும் பாசமும் கொண்ட திருவரங்கத்து அமுதனார் அருளிச்செய்த ப்ரபந்ந காயத்திரி எனும் 'இராமானுஜ நூற்றந்தாதியின்" இரண்டாவது பாசுரம். 

கள்ளார் பொழில்  தென்னரங்கன் கமலப் பதங்கள் .. … … 

திருவரங்கம் எனும் அற்புத திவ்யக்ஷேத்திரம், தேன் நிறைந்த சோலைகளை உடையது.  திருக்காவேரியின் நடுவே பள்ளிகொண்ட பெருமாளாகிய நம்பெருமாளின்   தாமரை போன்ற திருவடிகளை,  தமதுநெஞ்சிலே வையாத மனிதர்களை விட்டொழித்து, திருமங்கை மன்னனுடைய திருவடிகளையே  என்றும்  விட்டு நீங்காத பக்தியையுடையரான ஸ்வாமி  எம்பெருமானாருடைய  சிறந்த சீலகுணத்தைத் தவிர வேறொன்றையும்  எனது நெஞ்சானது நினைக்க மாட்டாது.  இவ்வாறாக, எனக்கு உற்ற பேர்இயல்வு,  சிறந்தஸ்வபாவத்திற்கு  ஒரு காரணத்தையும் அறிகின்றிலேன், ஆசார்யானது அனுகூல நற்கருணையைத் தவிர !

கள்ளார் பொழில்  தென்னரங்கன் கமலப் பதங்கள்  நெஞ்சிற்*

கொள்ளா மனிசரை நீங்கிக் குறையல் பிரானடிக்கீழ்*

விள்ளாத அன்பன்   இராமானுசன்மிக்க சீலமல்லால்*

உள்ளாதென்னெஞ்சு   ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே. 

It is indeed a good fortune – Thiruvarangathu Amuthanar in his Iramanusa Noorranthathi says – “I cannot understand this good fortune. My heart does not think of anything other than the extreme benevolence of Ramanuja.  He gave up the company of men who do not contemplate the lotus feet of the nectar-groves-surrounded-Arangam lord, and only sought the feet of the kuraiyalur king. Tirumangai Alvar”. 

To all of us bonded to the feet of our greatest Acaryar Swami Ramanujar, it will always be good things – whatever be the tough times, let us fall at the holy feet of our Acaryar Swami Emperumanar and through Him reach the glorious Lord of Thiruvarangam.   Life has changed for the Globe – 2020 & 2021 have been far different – nothing prevents us in reminiscing and celebrating the Birth of Swami Ramanujar    Here are some photos of Swami Ramanujar purappadu in pallakku on  8th May 2016. 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். 

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.9.2021.
 
பாசுர விளக்கம் : ஸ்ரீ .வே. பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் சுவாமி - ஒப்பற்ற ஸ்ரீவைணவ கலைக்களஞ்சியம் திராவிட வேதா இணையம். 












1 comment: