Purattasi Sani 5 ~ Thiruvallikkeni 2019
Sri Azhagiya
Singar purappadu
There could be some
oddities ! ~ 19th Oct 2019 was day 2 of Tamil month of Aippasi
whence we would celebrate Deepavali and the birth celebrations of our Acarya
Swami Manavala Mamunigal. To complete,
it was 5th week Purattasi Sani and there was grand purappadu of Sri
Thelliya Singar at Thiruvallikkeni divyadesam.
இன்று ஐப்பசி மாதத்தில் 2ம் நாள் - மிருகசீரிஷம் நக்ஷத்திரம்.
எனினும் புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையாக கொண்டாடப்படுகிறது. இன்று திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே ஸ்ரீ அழகிய சிங்கர் எம்பெருமான் பெரிய மாட வீதி புறப்பாடு
கண்டருளினார். கோஷ்டியிலே ஸ்ரீபேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி சேவிக்கப்பெற்றது.
பரபக்தி
பரக்ஞான பரமபக்தியையுடையராய், 'ஞான திருப்தஸ்ய யோகின' எனும்படியே, லோக யாத்திரையில்
கண்வையாதே அலௌகிகராய், முதல் ஆழ்வார்களில், மாடமாமயிலை என புகழ்பெற்ற தலத்திலே அயோனிஜராய் அவதரித்து
'மஹ்தாஹ்வயர்' என்கிற தமிழ் தலைவன் பேயாழ்வாரின் அமுத வரிகளில் மூன்றாம் திருவந்தாதி
பாடல் இங்கே (இரண்டாம் பாடல்)
இன்றே
கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்*
பொன்தோய்
வரை மார்பில் பூந்துழாய்* அன்று
திருக்கண்டு
கொண்ட திருமாலே * உன்னை
மருக்கண்டு கொண்டு
என் மனம் ..
At Thirukkovalur
idaikazhi, standing alongside Poigaippiran and Boothathazhvaar, Sri Peyalwar
has darshan of Sriman Narayan with the aid of the lamps lit by the two
Azhwaars. Having had good darshan of that complete Sriman
Narayana along with pirattiyar, holding divine arms – Alwar declares
that – the moment, he realized Sriman Narayana, he could rid of all sins as
also the continuing trouble of rebirth – the very thought of realization takes
him to moksha, is what Alwar proudly declares.
மூன்றாம்
திருவந்தாதியின் முதல் பாசுரத்தில், மற்றைய ஆழ்வார்கள் ஏற்றிய வையம் மற்றும் அன்பு
எனப்படுகின்ற திருவிளக்குகளின் ஒளியாலே திவ்யமங்கள ஸ்வரூபனனான எம்பெருமான் கண்ட
பேயாழ்வார், "திருக்கண்டேன்" என்று தொடங்கி, பகவானைத் தரிசிக்கப் பெற்றேன்; அவனுடன் கூடிய பிராட்டியைத்
தரிசிக்கப் பெற்றேன்; அவனோடு கூடிய திவ்ய ஆயுதங்களைத் தரிசிக்கப் பெற்றேன் என்று தான்
கண்ட தரிசனத்தை அறிவித்தார். ஆக, அந்த ஆயனான கண்ணனின் தரிசனத்தைப் பெற்றேன் என்று தொடங்கி,
"இன்றே கழல் கண்டேன்" என்பதன் மூலம், கண்ணனே! உனது திருவடிகளை வணங்கப் பெற்றேன்
என்றும், "ஏழ்பிறப்பும் யான் அறுத்தேன்" என்பதன் மூலம் ஜென்ம பரம்பைரைகள்
இனி என்னைத் தொடரமுடியாதபடி ஒழித்திட்டேன் என்றும் உரைக்கிறார். கண்ணன் எம்பெருமானின்
திருவடிகளைச் சரண் பற்றியதால் கிடைத்த பலன், பிறவித் துன்பம் முடிந்தது என்று அறுதியிடுகிறார்
பேயாழ்வார்.
ஸ்ரீமன்
நாராயணனைக் கண்டுகொண்ட அந்த க்ஷணத்திலேயே மற்ற எல்லாப் பிறவிகளையும் இனித்
தொடரமுடியாதபடி அறுத்துவிட்டேன், என்று உள்ளம் மகிழ்ந்து பாடுகிறார். அவன் தரிசனம்
கண்ட அடுத்த கணமே பிறவாப் பெருவீடு நிச்சயம் கிடைத்துவிடும் என்பதை உணர்த்துகிறார்
இந்தப் பாசுரம் மூலம்.
Here are some photos taken during today’s periya maada veethi
purappadu.
அடியேன்
ஸ்ரீனிவாச தாசன். [S. Sampathkumar]
நன்றி : ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியார் சுவாமியின் விளக்க உரை from dravidaveda.org
No comments:
Post a Comment