To search this blog

Tuesday, October 22, 2019

Celebrating the glory of Acarya Ramanuja ~ ஐப்பசி மாச திருவாதிரை 2019


Celebrating the glory of Acarya Ramanuja ~ ஐப்பசி  மாச திருவாதிரை 2019

Glory to num Iramanusan !  ~ today is Thiruvathirai nakshathiram in the month of Aippasi  – we hail the birth star [monthly] of our Great Acarya Swami Ramanujar.
இன்று [20.10.2019]  ஐப்பசி  மாச திருவாதிரை நக்ஷத்திரம் ~ எம்பெருமானார் ராமானுஜர் திருவவதார தின - மாச சிறப்பு.  

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒரு சிறப்பான பிரபந்தம் 'இராமானுச நூற்றந்தாதி' - இது திருவரங்கத்து அமுதனார் அருளிச் செய்தது.  நம் திவ்யதேசங்களிலே - ஆழ்வார் ஆசார்யர் சாற்றுமுறை தினங்களிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் 'இராமானுச நூற்றந்தாதி'  சேவிக்கப்பெறுகிறது.  ராமானுஜரால் ஈர்க்கப்பெற்ற திருவரங்கத்தமுதனார் ராமானுஜரின்  அடியாரை மாறிய பின், குருவின் பெருமையைப் போற்றும் விதமாக ராமானுஜரைப் பற்றி ஒரு அந்தாதி எழுதிக்கொண்டு போய் அவரிடம் கொடுத்தார். ஒவ்வொரு பாடலிலும் முதல் இரண்டு வரிகளில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் பெருமையைச் சொல்லி, பிந்தைய இரண்டு வரிகளில் அவர்களின் சம்பந்தம் பெற்ற ராமானுஜரின் பெருமையை எழுதினார். இதை ஸ்ரீரங்கத்தில் உள்ள காட்டு அழகிய சிங்கர் சன்னதியில் அமர்ந்து அனைவருக்கும் சொல்லிய போது, தற்செயலாக ஸ்ரீ ராமானுஜர் அங்கு எழுந்தருளினார். அவரும் நூற்றந்தாதியை முழுமையாகக் கேட்டார். அவர் மறுத்துச் சொல்ல முடியாதபடி ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர் பெருமை கூறப்பட்டபடியால், அதை ஏற்றுக்கொண்டாராம்.

எம்பெருமானாரை தவிர ஒரு தெய்வத்தையும் வணங்க மாட்டேன்; எந்த மானுடரையை உயர்த்தி கவி பட மாட்டேன், என உடையவரையே தஞ்சமாக கொண்டு அமுதனார் பாடிய இராமானுச நூற்றந்தாதியில் இருந்து ஒரு சிறப்பான பாடல் இங்கே: -

பேரியல்நெஞ்சே! அடிபணிந்தேன்  உன்னைப் பேய்ப்பிறவிப்*
பூரியரோடுள்ள சுற்றம் புலத்திப்* பொருவருஞ்சீர்
ஆரியன் செம்மை இராமானுசமுனிக்கு  அன்புசெய்யும்
சீரிய பேறுடையார் அடிக்கீழ்   என்னைச் சேர்த்ததற்கே.!!

இதோ அமுதனாரின் வரிகளின் அர்த்தம் -  ஸ்ரீ உ.வே. கச்சி  ஸ்வாமிகளின் உரை - நன்றி -திராவிடவேதா  இணையம் . 

மிகவும் கம்பீரமான மனமே! -  உன்னை அடிபணிந்து வ ணங்குகின்றேன்;  ஏன் எனில் ஆஸுரப் பிறப்பையுடையவர்களான (பேய் பிறவி என்கிறார் அமுதனார்), நீசர்களோடு (எனக்கு) இருந்த உறவை, (புலர்த்தி) போக்கடித்து, ஒப்பற்ற குணங்களையுடையவரும் [ஆரியன் என்றால் சிறந்த குணங்களை உடையவர்]-, சிறந்த அநுஷ்டானங்கள்  உடையவரும்,  (ஆச்ரிதரோடு) ருஜூவாகப் பரி மாறுந்தன்மை வாய்ந்தவருமான இராமாநுச முனிக்கு [எம்பெருமானார் திறத்தில்]  பக்தி பண்ணுவதையே  பரம புருஷார்க்தமாகவுடையவர்களான  கூரத்தாழ்வான் போல்வாருடைய திருவடிகளின் கீழே, பரம நீசனாயிருந்த  என்னை கொண்டுசேர்த்த மஹோபகாரத்திற்காகவே உன்னை அடி பணிந்தேன் என்கிறார் நம் அமுதனார்.  எவ்வளவு சிறப்பு வாய்ந்த பக்தி இலக்கியம்.

Thiruvarangathu Amuthanar in his glorious work  reiterates directing thyself -   O Benevolent Heart!   I  bow for the beneficial direction rendered in severing the wasteful association with men of devilish birth, and placing me at the feet of the most worshipful beloved ones of our peerless lord and sage Ramanuja, worshipped by worthy people like Swami Kurathazhwan. For this grace, I bow to you.






Today  [20.10.2019] had the fortune of worshipping Sri Adhi Kesava Perumal and Sri Mayuravalli thayar at Thirumayilai and could attend thiruveethi purappadu of our Acaryar Swami Ramanujar in the mada veethis around Chithirai kulam. Here are some photos of the purappadu.  Immediately thereafter could attend Ramanuja noorranthathi rendering at Sri Madhava Perumal koil also.

Anything on the glory of Swami Ramanusan will not be complete without a reference to His favourite place Thirunarayanapuram and here are a couple photos of Swami Ramanujar at this holy place.

உய்ய ஒரே வழி, உடையவர் திருவடி.  நம் ஆசார்யர்  ஸ்ரீ ராமானுசரின்
புகழ் பாடும் இராமானுச நூற்றந்தாதியினை  கற்று, பாடி  அனுபவிப்போம்.

adiyen Srinivasa dhasan.

No comments:

Post a Comment