To search this blog

Thursday, October 10, 2019

Purattasi Ekadasi purappadu 2019 – Avitta nakshathiram.


Purattasi Ekadasi purappadu 2019 – Avitta nakshathiram.

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு.. .. ... சாஸ்த்ரங்களில் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமாக   சொல்லப்பட்டுள்ள  எட்டுவகைப் புஷ்பங்கள் யாவை என அறிவீரா  ? 


தர்ம அர்த்த காம மோக்ஷம் என்று நான்கு புருஷார்த்தங்களைச் சொல்கிறோம். இதிலே முதலாவதான தர்மம் எப்போதுமே விட்டுப் போகக்கூடாது. அர்த்தம் (பணம்) சம்பாதிப்பதும் காம அநுபவமும் ஒரு காலத்தில் விட்டு விடுபவை. ஆனால் இவற்றை அநுபவிக்கும் காலத்திலும் தர்மத்திலிருந்து விலகக்கூடாது.  எம்பெருமானை வணங்க செல்பவர்கள் எப்படி செல்ல வேண்டும் ? 

ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர்கள் ~ எம்பெருமானிடத்திலே ஆழ்ந்து, அவனிடத்திலே தங்களை முற்றுமாய் ஒப்படைத்து அனுபவித்தவர்கள்.  இதோ நம் பூதத்தாழ்வார் வழங்கிய அற்புத வரிகள்.

நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, - நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி.

9th Oct 2019 was a significant day ~ Purattasi Ekadasi day.  On all Ekadasis, there will be periya maada veethi purappadu of Sri Parthasarathi Swami at Thiruvallikkeni Divyadesam.   Today was Purattasi Avittam too ..  after the purappadu Perumal had asthanam with Sri Boothath Azhwar. In the madaveethi purappadu, it was Sri Peyalwar’s moonram thiruvanthathi and inside the temple, it was Sri Boothathazhvar’s Irandam thiruvanthathi. 




பூதத்தாழ்வாரின் இந்த வரிகள் ஆழ்வாரின் அனுபவத்தை நமக்கு உணர்த்த வல்லன.  மிக சாதாரணமாய் புரிந்து கொள்ள முயற்சித்தால் இப்பாசுரத்தின் அர்த்தம் இவ்வாறு ஆகுமாம் போல :  " என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து,  (அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து, ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும்  தாதுமாக வைத்து, ஒப்பில்லாத  பக்தியாகிற அழகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு, குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய திருவடிகளை வணங்கி தொழுதேன் ! 

Azhwar’s pasuram would mean :  -  In that city (literally heart of Azhwar made ready for the living of Emperuman), under a canopy of pearls, gems and diamonds and strings of fresh flowers, the Lord is seated with the lotus-dame Lakshmi, borne on his right, I worship his feet.  Azhwar pleases Emperuman by placing Him in a place decoratively made, rich with pearls, gems and diamonds, made fragrant by fresh flowers – and there Azhwar places Emperuman having Lakshmi and worships Him. There is much more to be read and understood as read from dravidaveda.org – that has the vyagnam of Sri Kachi Swami [Sri UVe PB Annangarachar swami]

ஆழ்வார் அசார்யர்களின் நல் முத்துக்கள் பெருங்கடலில் ஆழத்தில் உள்ளவை போன்றன.  நம் ஸம்ப்ரதாய பெரியவர்களின் வியாக்கியானங்களை படித்தும் கேட்டும் அனுபவிக்கும் போதே அவற்றின் அகப்பொருட்கள் மேலும் விளங்கும்.  இதோ இந்த பாசுரத்துக்கு கச்சி சுவாமி ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை [தலையாய நன்றி : திராவிட வேதா . org எனும் அற்புத பேழை]

***- இப்பாசுரம் பெரும்பாலும் ரூபகாதிசயோக்தியலங்காரம் கொண்டுள்ளது.  அதாவது - விஷயங்களை மறைத்தும் ரூபகமாக்கியும் பேசுகிறது.  திருமாமகள் பொகுநனான எம்பெருமானை என்னுடைய நெஞ்சிலே எழுந்தருளப்பண்ணி உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன் என்று சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறார்.

நகரிழைத்து - ராஜாக்கள் வஸிக்குமிடம் நகரமெனப்படும்: தேவாதி தேவனான எம்பெருமான் உவந்து வஸிக்குமிடம் பக்தர்களுடைய ஹ்ருதயமேயாகையாலும் இவ்வாழ்வார் தாமும் பக்தசிரோமணியாகையாலும் இவர் தம்முடைய திருவுள்ளத்திலேயே உவந்து வஸிப்பதென்பது திண்ணம்; ஆகவே ‘நகரிழைத்து’ என்றது - என்னுடைய நெஞ்சை அவனுக்கு ‘உறைவிடமாக்கி’ என்றபடி.

அரசர்களை ஆநந்தப்படுத்த விரும்புமவர்கள் தாமரை முதலிய நல்ல புஷ்பங்களைக்கொண்டு பணிவதுபோல, தாமும் எம்பெருமானை நல்லதொரு புஷ்பமிட்டுப் பணிந்தமை சொல்லுகிறார்மேலே.  நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் என்று.  சாஸ்த்ரங்களில் (அஹிம்ஸை, இந்த்ரிய நிக்ரஹம், ஸர்வபூததயை, பொறுமை, ஞானம், தபஸ், த்யாநம், ஸத்யம் என்னுமிவை யெட்டும் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமான எட்டுவகைப் புஷ்பங்கள்)  என்று சொல்லியிருப்பதுபோல, இங்கு இவ்வாழ்வார் பகவத் விஷய பகதியை நிகரில்லாத தாமரைப்பூவாகக் கருதுகின்றனர்.  தாமரைப்பூவென்றால் அதற்குப் புறவிதழ் அகவிதழ் முதலானவை இருக்குமே; அவற்றின் ஸ்தானங்களிலே ஸ்நேஹம் ஸங்கம் காமம் என்கிற  பக்தியின் பருவ விசேஷங்களையிட்டுப் பேச நினைத்து, அவற்றையும் நேரே சொல்லாமல் முத்தும் மணியும் வயிரமுமாக உருவகப்படுத்திப் பேசுகின்றார்.  “நிகரில்லாப் பைங்கமல” மென்றது பொற்கமலத்தையாகையால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்ல வேண்டிற்று.  முதலடியில், மலர் என்றது மலரிதழைச் சொன்னபடி: ஆகுபெயர்.  புறவிதழின் ஸ்தானத்திலே முத்தாகச் சொல்லப்பட்ட ஸ்நேஹமும், அகவிதழின் ஸ்தானத்திலே மாணிக்கமாகச் சொல்லப்பட்ட ஸங்கமும், தாதின் ஸ்தானத்திலே வயிரமாகச் சொல்லப்பட்ட காமமும் கமலமென்னப்பட்ட பக்தியின் அவஸ்தாபேதங்களென்க.

நித்திலம் - வடமொழியில், ‘நிஸ்தலம்’ என்கிற சொல் முத்து என்னும் பொருளதாகக் கவிகளால் பிரயோகிக்கப்படுகிறது.

Here are some photos taken during the chinna mada veethi purappadu at Thiruvallikkeni divyadesam.

Azhwar, Emperumanar, Jeeyar thiruvadigale saranam

~adiyen Srinivasa dhasan [S. Sampathkumar]
9X2019










No comments:

Post a Comment