To search this blog

Saturday, July 7, 2018

Sri Nathamunigal Sarrumurai 2018

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது. பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள்.             


                             Chennaites would well remember this project that ran into many a political troubles ~  first conceived in mid 1970s,  the Veeranam project, was to deliver water to the parched metropolis of Chennai.  The pipes at some point were lying ungainly at many places, providing housing for some .. .. years later water was not to  flow from the parched Veeranam tank, 235 km away from the city, but instead the Chennai Metropolitan Water Supply and Sewerage Board (Metrowater)  dug out  a network of 45 deep borewells north of the tank.


On  third day of  Brahmothsavam of Sri Azhagiya Singar (25th June 2018) – it is Garuda vahanam in the morning and  ‘Hamsa Vahanam’ in the evening.  The Thiruvallikkeni Hamsa vahanam is one of the heaviest among the vahanams.  Today being ‘Aani Anusham’ – it marks the sarrumurai vaibhavam of Acharyar Nathamunigal, who was extolled  with such high regards by Sri Alavanthar who in his ‘sthothra rathnam’ praises his spiritual master Svami Nathamuni in three hymns.  Svami Nathamuni is identified as the eternal refuge both in this world and the next. 


At Chennai, in summer we start worrying about the drinking water as the storage capacity in the tanks that supply water to the metropolis run dry.  In the  sweltering heat – residents are worried about water shortage.  Every street we see water tankers and people running after them with colour colour plastic pots.  Though there are four reservoirs of Poondi, Cholavaram, Redhills and Chembarakkam as lifelines for drinking water needs of Chennaites, there is another important water source that supplements daily water supply to the city and that is more than two hundreds of kilo meters away……  The lake spoken in Ponnyin selvan is  about is 235 km away from Chennai, yet becoming its lifeline, supplying roughly 50 to 180 million litres of water to the city every day.  The lake owes its existence to Chozha  prince Rajaditya  who in  the 10th   century  assigned his men the task of excavating this tank, to collect the surplus waters of the Kollidam River.


In the 1830s,  Arthur Cotton, the engineer who later harnessed the waters of the Krishna and Godavari, studied the tank in detail. He noted that there was no serious defect in the tank (this, 900 years after it was constructed) .. in recent decades much water has flown in concrete pipes becoming hotly debated corruption topic.  The Veeranam lake derived its name from the nearby place ‘Veera Narayana puram’ which is of great significance to Srivaishnavaites.  The Veeranam project, to supply water to Chennai, was conceived in 1967; later got mired in rampant corruption; once there were so many pipes lying unutilized in the city that were synonymous with the corruption in the project .  The project's completion in 2004 was a major political victory for the AIADMK government of the time due to the project's long history of corruption and politicking. At some point of time, water started flowing from the lake to Chennai.  




பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு வந்திய தேவனையும் அவனது குதிரை மெல்ல நடந்து சென்ற கடல் போன்ற வீராணம் ஏரியையும் நன்கு தெரியும்.   தமிழகத்தில் வாழ்ந்து வரும் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீராணம் ஏரி, அதனை சுற்றிய ஊழல், பெரிய பெரிய பைப்புகள், ஒரு காலத்தில் அதனுள் குடித்தனம் நடத்திய ஏழைகள் என பல நினைவுகள் மலரும்.

நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில்  உள்ள கோவில் சுவாமி நாதமுனிகள்  அவதார திருத்தலம்.    ஸ்ரீமந் நாதமுனிகள், இத்திவ்ய தேசத்தில், ஈச்வர பட்டருக்கு திருக்குமாரராக அவதரித்தார். இவருக்கு ஸ்ரீ ரங்கநாத முனி, நாத ப்ரஹ்மர் என்றும் திருநாமங்கள் உண்டு. இவர் அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார். முதன்முதலில் அரையர் சேவையை இவர்  தொடங்கி வைத்தார். அது இன்றளவும் திருவரங்கம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், மேல்கோட் திருநாராயணபுரம்  மற்றும் சில திவ்ய தேசங்களில் நடந்துவருகிறது.

நாதமுனிகள்  தமது தந்தை மற்றும் குமாரருடன் (ஈச்வர முனி) -  வட மதுரை, விருந்தாவனம்,  கோகுலம், கோவர்தனகிரி, த்வாரகை, பதரிகாஸ்ரமம், நைமிசாரண்யம் மற்றும் பல திவ்ய தேசங்களை மங்களாசாஸனம் பண்ணுவதற்காக சென்றார். அப்பொழுது யமுனை நதிக்கரையில் கோவர்தனபுரம் என்ற கிராமத்தில் இருந்துகொண்டு எம்பெருமானுக்கு (யமுனைத் துறைவனுக்கு) கைங்கர்யம் செய்து வந்தார். ஓரு நாள் எம்பெருமான் இவர் கனவில் வந்து திரும்பவும் காட்டு மன்னார் கோவிலுக்கே எழுந்தருளுமாறு கட்டளையிட, நாதமுனிகளும் திரும்ப பல திவ்யக்ஷேத்திரங்களை சேவித்துக்கொண்டு திரும்பினார். 

ஒரு சமயம் சில வைணவர்கள் இவரது குடில் முன்பே ''ஆராவமுதே!  அடியேன் உடலம் நின்பால் அன்பாயே' எனும் திருவாய்மொழி பாசுரத்தை சேவித்ததை கேட்டுண்டு - அதன் முடிவில் -  ஓராயிரத்துள் இப்பத்தும் என்று வருவதால், அப்பாசுரங்களை தேடி அலைந்தார்.  ஆழ்வார் திருநகரியில் மதுரகவி ஆழ்வார் சிஷ்யரான பராங்குச தாசரை சந்தித்தார்.  அவரிடம் கண்ணிநுண்சிறுத்தாம்பு  பாசுரங்களை கற்று, அவற்றை  12000 முறை திருப்புளியாழ்வார் ((நம்மாழ்வார் வாழ்ந்த புளிய மரம்) முன்பு அனுசந்தித்து, தமது  அஷ்டாங்க யோக  பலத்தால்  நம்மாழ்வாரைத் தியானித்து  நாலாயிர திவ்ய ப்ரபந்தம் மற்றும் அதனுடைய சகல அர்த்த விஷேசங்களையும்  - சடகோபனிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டார்.  நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு அருளியதையே உபதேசரத்தினமலையில், மணவாளமாமுனிகள் “அருள் பெற்ற நாதமுனி” என்று அருளிச்செய்தார். இவ்வாறாக நாம் அநுஸந்திக்கும் 'நாலாயிர திவ்யப்ரபந்தம்' - ஸ்ரீமந் நாதமுனிகளாலேயே நமக்கு கிடைக்கப்பெற்றது.


                       In SriVaishnava Satsampradhayam, great emphasis is on ‘Guru Parampara’ that starts from Sriman Narayana Himself, down to Sri Nathamunigal who has to be remembered ever for what he gave us – *Sri Naalayira Divyaprabandham*.  Sri Nadhamunigal was born in  Anusha nakshatra of ‘Ani’ month at Sri Veeranarayanapuram.   Sri Nathamuni went on a long pilgrimage that took him to holy places  like Mathura, Vrindhavan, and other holy places including Puri.  Back home, upon hearing some Srivaishnavaites reciting Thiruvaimozhi pasuram (that had sort of become extinct ) ‘Aaravamuthe’ and curious to know the rendering in full  ~ he followed its trail that led him to KUmbakonam; Lord Aravamudhan directed him to ThiruKurugoor; with the divine blessings, collated Sri NalayiraDivyaprabandham and thence onwards these hymns are continually sung in  Divyadesams and other Sri Vaishnavaite temples,  Dravida  Veda.

Nathamunigal was also a great Bhakti Yogi and practiced the Yoga of eight accessories ( ashtAnga yoga); he authored the  treatise “Yoga Rahasya”.  He was also an exponent of divine music  who initiated the ‘singing of divyaprabandham ~ now known as ‘Arayar Sevai’. Without this great Acharyar’s efforts in retrieving aruliCheyal,  theVaishnava World would not have got the rich possessions that we have today.  Alavanthar in his SthothraRathinam sings the glories of Nathamunigal in the first 3 slogas.

                            Acharyar Nathamunigal codified the treasure of the most divine ‘Nalayira Divya Prabandham’. He also revived the Adhyayana Utsavam instituted by Thirumangai Azhwar.  After him, the Guru paramparai mantle passed on to Uyyakondar, Manakkal nimbi and  thence to Yamunacharyar @ Aalavandhar, the grandson of NathaMunigal. 

Salutations to Naatha muni who had the single minded devotion to the Lord and who is the treasure of both Gnaana and Vairaaghya.  At Thiruvallikkeni Sri Nathamunigal had purappadu with Lord AzhagiyaSingar in hamsa vahanam.  Here are some photos taken during the Brahmothsava purappadu of Sri AzhagiyaSingar.

~adiyen Srinivasadhasan.


Photos of Sri Nathamunigal at Avatharasthalam Kattumannar koil, credit : Sri TMK Sriram.
25th June 2018.

No comments:

Post a Comment