Mylapore has been a shoppers’ paradise ~ with Navarathri golu – there
are so many shops selling beautifully made dolls. The historical place has two MRTS railway
stations : Thirumayilai and Sri Mundakakanni amman temple. In between runs Kutchery road, linking Beach
Road with Luz Junction and you would have travelled many a times on this – do
you know that one of the bylanes leads to a famous landmark with divine
connection ! - the Arundale Street.
ஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி
பிருந்தாரண்யம் என துளசிகாடாக இருந்ததைப் போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள்
அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் திருமாதவப்
பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே
மஹாவிஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார்.
இவர் அயோநிஜர். இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும்
வீதியில் மிக சாதரணமாகஉள்ளது.
இவர் அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி. முதல் ஆழ்வார்கள் மூவரும் ஒரு நல்ல மழைநாளில் திருக்கோவலுரில்
ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார்
அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம்,இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும்
அங்கே வரவே "ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரை
இருவரும் வரவேற்றனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்தபோது,
முதலில் பொய்கைஆழ்வார் "வையம் தகளியா, வார்கடலே நெய்யாகக் கொண்டு (உலகத்தையே
விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார். பிறகு, பூதத்தாழ்வார்,
'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக'க் கொண்டு (அன்பை
விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களை நெய்யாகவும்) நூறு பாடல்கள் பாடினார்.
பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான
விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார்,
திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து
"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன்,*
என்னாழி வண்ணன் பால் இன்று" - என "மூன்றாம்திருவந்தாதி"
நூறு பாடல்கள் அருளிச் செய்தார்.
பேயாழ்வாரின் பக்தி சுரக்கும் வார்த்தைகளில் இங்கே இன்னொரு பாசுரம்
:
பொலிந்திருண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி,*
மலிந்து திருவிருந்த மார்வன், - பொலிந்த*
கருடன்மேல் கொண்ட கரியான் கழலே, *
தெருடன்மேல் கண்டாய் தெளி.*
Azhwar likens the lightning appearing
clear on dark rain cloud – with the appearance of Sriman Narayana with Sri
Lakshmi on His chest, seated resplendently on Garuda as mount. Having seen the lotus feet through knowledge
Alwar directs our hearts to fall and follow those divine feet, which alone can
lead us to salvation.
Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath
Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth
earlier. They were contemporaries and are praised as “Muthal Azhwars (the
first among the Azhwars). They were born in the month of “Aippasi: in the
thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine
trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which
now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira
Divyaprabandham.
Sri Peyalwar was born in a well in Mylapore (thence known as Mylai
Thiruvallikkeni). His birthplace is in the present day Arundel Street
[described in the first para of this post] in Mylapore closer to Mylai
Sri Madhaava Perumal Kovil. At Thiruvallikkeni, the road adjacent to Sri
Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri
Peyalwar and this street is named after the Azhwar and is known as ‘Peyazhwar
kovil Street’.
Today 23rd Oct 2015 is doubly important. Besides Vijayadasami, today is ‘Sadhayam in the month of Aippasi’ ~ the
sarrumurai of Sri Peyalwar. In the morning – Alwar proceeded to the
temple and from there, Sri Parthasarathi
swami had purappadu to Peyalwar sannathi.
Perumal adorned spectacular rose garland and a simple jasmine
strand. Peyalwar was wearing the same
rose garland that was adorned by Perumal in the morning. At Peyazhwar thirukkovil, there will be
thirumanjanam and in the evening there will be Vijayadasami purappadu – in the
concluding part, Azhwar will join Perumal to have mada veethi purappadu.
Some photos taken during the morning purappadu are here.
Azhwar Emperumanar Jeeyar Thiruvadigale Saranam !!
Adiyen Srinivasa dhasan.
23rd Oct 2015.
Sri Peyalwar purappadu to Temple
Sri Peyalwar
Sri Parthasarathi … have darshan of the
wonderful garland
No comments:
Post a Comment