Today 9th
Aug 2013 - is Thiruvadipooram [Puram Nakshathiram in the month of Aadi] –
a most blessed day for all Srivaishnavaites – for this day marks the birth of Kothai
Piratti [Andal]. Andal was the most unique combination of divine wisdom coupled with devotion non-pareil. A paragon of virtues - supreme example of single-minded devotion in serving the Lord, as clearly brought out in her great prabandham of 30 hymns "Thiruppavai".
Thiruvallikkeni
Andal
Andal’s birth occurred in the 98th year of
Kali Yuga – Nala Varudam – in the month of Aadi – shukla paksham – chathurthasi
day. She was found in a thulsi garden at Sri Villiputhur
by Vishnu Chithar [Periyazhwaar]
Our Acharyar in his ‘Upadesa Rathina Malai’ hails the day
as ‘Periyaazhwar pen pillaiai Aandal pirantha thiruvadipurathin seermai’. Uyyakkondar
says in the thanian visualizing Srivilliputhur as a very special Divya desam
where Hamsam [anna pakshi] known for its power to separate milk from water are
abundant and hails Andal for the verses with which she offered garlands to the
Lord.
Sri ANDAL is the quintessence incarnation of
Shri Bhuma Devi, the divine consort of Sriman Narayana, who took birth on this
earth to liberate suffering human beings from worldly bondage. Today,
there will be grand procession [purappadu] of Andal at Srivilliputhur,
Srirangam, Kanchipuram, Thiruvallikkeni and many other divyadesams. The
10 day celebrations are on at Thiruvallikkeni also, which culminates today.
Her philosophy is clear and unmistakable. She
says ‘immaikkum ezhezhu piravikkum patraavan, nammaiyudaivan Narayanan nambi’ - "Sriman
Narayana is our refuge now and forever and He will not let us down, for we are
His possessions".
Adiyen – Srinivasa dhasan.
9/8/2013 - இன்று மிகச் சிறந்த
நன்னாள் ! ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம்.'திருவாடிப்பூரம்' ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில்,துளசி மலரில்
பூமிபிராட்டி அம்சமாய் தோன்றிய கோதை பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை
தொடங்கியே 'மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்' என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி பேருக்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.
Srivilliputhur
Andal and Rangamannar
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த பிரபந்தங்கள் 'திருப்பாவை; நாச்சியார் திருமொழி".
திருப்பாவை 'சங்கத் தமிழ் மாலை' என போற்றப்படுகிறது. நம் பொய்யில்லா
மணவாள மாமுனிவன், தமது 'உபதேச ரத்தினமாலையில்' திருவாடிப்பூர
திருநக்ஷத்திரத்தில் பூமி பிராட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த
அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு திருமகளாக இந்த உலகத்தில் நாம்
உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதை, அழகிய ஆடி மாதத்தின்
பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு கிடையவே கிடையாது.
ஆண்டாளுக்கு சமானமாக ஒருவர் உண்டு என்பது உண்டாகுமேயானால், இந்த நாளுக்கும்
சமானமாக ஒரு நாள் உண்டாகக்கூடும் என :
பெரியாழ்வார்
பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின்
சீர்மை - ஒருநாளைக் கு
உண்டோ மனமே உணர்ந்துப்
பார் ஆண்டாளுக் கு
உண்டாகில் ஒப்பு
இதற்கும் உண்டு - என பாடி மகிழ்கிறார்.
ஆண்டாள் பாடலில் 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி,
..... நீங்காத செல்வம்
நிறைந்தேலோர் எம்பாவாய்' என வேண்டுகிறார். ஆண்டாளை அனுதினமும்
சேவித்து,ஆண்டாள் அருளிச்செய்த பாசுரங்களை, தங்கள் சிந்தையிலே அனுசந்தித்து வாழ்பவர்கள், பெருமை பொருந்திய திருவடிகளையுடைய எம்பெருமானுடைய
திருவடிகளின் கீழே எந்நாளும் பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்.
சூடிக்குடுத்த நாச்சியார் கோதை பிறந்ததனால் கோவிந்தன் வாழும் ஊரான வில்லிபுத்தூர்
பெருமை பெற்றது. எல்லா க்ருஹங்களில்
உள்ள மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு சிறந்த நீதியை கடைப்பிடிக்கும்
சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்; நான்கு மறைகள் எனப்படும் ரிக், யஜுர்,
சாம, அதர்வ வேதங்கள் தினமும் ஓதப்படும் ஊர். அம்மண்ணை மிதித்தாலே நமது அனைத்து
பாவங்களும் விலகும்.
ஆண்டாள் பிறந்த இந் நன்னாளில் திருப்பாவை முதலான
திவ்யப்ரபந்தங்களை பாடி திருமால் அடியார்களை மகிழ்வித்து, ஸ்ரீமான் நாராயணின் அருள்
பெறுவோமாக !!
அடியேன் ஸ்ரீனிவாச
தாசன்
No comments:
Post a Comment