To search this blog

Friday, May 22, 2026

Sri Parthasarathi Emperuman - Vasanthothsavam 2026

  

எம்பெருமான் எத்தகையவன் ?   ஏக காலத்தில் ஆயிர ஞாயிறு உதித்தாற்போல் பார்க்க பார்க்க பரவசமடையும் படியான  ஜ்வலிக்கும்  கிரீடத்தையுடையவனாய் காட்சி தருபவன். 

 


பெரியாழ்வார் திருமொழி (நான்காம் பத்து, முதல் திருமொழி) பாசுரத்தில்  ஆழ்வார் -  

 

"கதிர் ஆயிரம் இரவி கலந்தெரித்தால் ஒத்த நீள் முடியன்" –

 

ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒன்றாக உதித்தால் எப்படியிருக்குமோ, அதைப்போன்ற பேரொளியைக் கொண்ட நீண்ட திருமுடியை (கிரீடம்) உடையவன் என சாதித்தபடி இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் வசந்தோத்சவம் - நான்காம் நாள் புறப்பாட்டில் - முத்து கிரீடம் பின்பு சூரியன் ஜாஜ்வலிக்க சேவை. 

22.5.2026

No comments:

Post a Comment