To search this blog

Tuesday, June 29, 2010

Thiruvallikkeni Sri Azhagiya Singar Brahmotsavam 2010 (6 - 7 - 9 days purappadu)

ஆறாம் நாள் காலை ஸ்ரீ அழகிய சிங்கர் புண்ணிய கோடி விமான சப்பரத்தில் புறப்பாடு கண்டு அருள்கிறார். திருவல்லிகேணியில் காஞ்சிபுரத்தை போல ஆறாம் நாள் சூர்ணாபிஷேகம் நடை பெறுகிறது. பிரம்மோத்சவம் ஆகம முறைப்படி நடக்கிறது.

சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்துஅருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம்.

திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றபடுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது. . திருவீதி புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் திருச்சந்த விருத்தம் அனுசந்திக்க படுகிறது. விருத்தப் பா எனும் பா வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.          சூர்ணபிஷேக புறப்பாட்டு புகை படங்கள் இங்கே :

ஏழாம் நாள் காலை திருத்தேர்ஞாயிறு ஆனதால் தேர் வடம் பிடிக்க ஏரளமானோர் வந்திருந்தனர்
திருமங்கை மன்னனின் அவதார மகிமையாக விளங்கும் நிகழ்ச்சியில் பெருமாளும் பெரிய பிராட்டியாரும் திருமேனி முழுவதும் நகைகளுடன் வரும் போது ஆடல்மாவில் வேகமாக வந்த ஆலி நாடன் வாள் கொண்டு அவர்களை மிரட்டி நகைளை பறிக்க முயற்சித்து, . பெருமாள் கால் விரலில் உள்ள மெட்டி மட்டும் கழட்ட இயலாது தவிக்கும் போது ஆலி நாடரை கலியனாக பெருமாள் ஆட்கொள்கிறார். கலியன் "ஓம் நமோ நாராயணா" என்னும்  அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்க பெற்று தனது "திருமொழி" பாசுரங்களை "வாடினேன் வாடி வருந்தினேன்" என தொடங்குகிறார்.



ஒவ்வொரு ஊரிலும் தல புராணங்களில் சில வித்தியாசங்கள் இருப்பது உண்டு. திருவல்லிக்கேணி திவ்ய தேசத்தில் எட்டாம் நாள் இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருள்கிறார். சிங்கராச்சாரி தெருவும் தேரடி வீதியும் சேரும் இடத்தில உள்ள குதிரை வாகன மண்டபதிற்கருகே, ஏசல் முடிந்து ஆழ்வார் மங்களாசாசனம் நடந்து பட்டோலை படித்தல் நடை பெறுகிறது. எப்போதும் போல நேற்று பெருமாள் பரிவட்டத்துடன் ஸ்ரீ உ வே வேங்கட கிருஷ்ணன் சுவாமி தனது கணீர் குரலில் திருவல்லிக்கேணி தல புராணத்தில் உள்ள இந்த நிகழ்ச்சியை படித்தார். அனைத்து பக்தர்களும் அதை கேட்டு மகிழ்ந்தனர். இந்த புராணத்தில், எம்பெருமான், பிராட்டியார் மற்றும் அவருடன் வந்த கொத்து பரிசனங்களும் மங்கை மன்னனிடம் தங்கள் தங்க நகைகளை இழந்தனர். அந்த நகைகளின் விவரங்களும் மதிப்பும் வாசிக்கப்பட்டது. அந்த ஊரின் தலையாரி தலைவன், பெருமாளை வணங்கி, குற்றம் புரிந்த ஆலி நாடனை துரத்தி சென்று பிடித்து, தண்டனை வழங்குவதாக தல புராணத்தில் உள்ளது.

மறு நாள் (ஒன்பதாம் உத்சவ காலை) பெருமாள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து, அதே இடத்தில நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்" என  கொண்டாடப்படுகிறது. போர்வையுடன் ஏளிய அழகிய சிங்கரின் படங்கள் இங்கே :   - 




அடியேன் - சம்பத் குமார்

Friday, June 25, 2010

Sri Azhagiya Singar Brahmotsavam - Nachiyar Thirukolam - ஸ்ரீ அழகிய சிங்கர் ப்ரம்மோத்சவத்தில் நாச்சியார் திருக்கோலம்

25/06/2010


இன்று காலை அழகிய சிங்கர் திவ்யநாயகியாய்,  நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்து அருளினார். ஸ்ரீவைஷ்ணவர்கள் பெருமாளை பல விதங்களில் அனுபவிப்பர். எம்பெருமானது கல்யாண குணங்களில் முக்கியமானது சௌலப்யம் - எளிதில் அனைவருக்கும் அருகில் இருந்து அவர்களுக்கு வேண்டிய பலன்களை அளிப்பது.

'அடியேன் உள்ளான் உடல் உள்ளான்' எனும்படி ஆத்மாவுக்கு ஆத்மாவாய் நம் உடலுக்குள்ளேயே அந்தர்யாமியாய் எழுந்தருளி  இருக்கும் பரமாத்மாவின் நிலையை அனுபவிப்பது அனைவருக்கும் சாத்தியம் ஆஹாது. அடியார்களுக்கு எளியவனாய் மூர்த்திவடிவாய் எல்லா திவ்யதேசங்களிலும் எம்பெருமான் எழுந்து அருளியிருப்பது அர்ச்சாவதாரம். இந்த ரூபத்தில் பெருமாளை கண்ணாரக்கண்டு கொண்டு, கையாரத்தொழுது, வாயாரப்பாடி குளிரலாம். இந்த எம்பெருமான் மேலும் அடியார்களுக்கு அருள் பாலிப்பதற்காக வீதிப்புறப்பாடு கண்டு அருள்கிறான். எம்பெருமானை மனதார உணர்ந்த ஆழ்வார்கள் கூட பல திவ்ய தேசங்கள் சென்று பெருமாளைச் சேவித்து, மங்களாசாசனம் செய்து அருளினர்.


இந்த வருடம் பிரம்மோத்சவம் முதல் நாள் காலை புறப்பாடு முடிந்த பின்னர் கொடி ஏறியது.  மூன்றாம்  நாள் காலை கருட  வாகனம்.  மாலை அம்ச வாகனத்தில் புறப்பாடு.  
ஐந்தாம் நாளான இன்று காலை நாச்சியார் திருக்கோலம்சாற்றி புறப்பாடு கண்டு அருளினார்.  புறப்பாட்டின்போது எடுக்கப்பட்ட  படங்கள் இங்கே : 



சில வருடங்கள் முன்புவரை இந்த புறப்பாட்டில் பெருமாளுக்கு நிறைய   மண்டகப்படிகள் உண்டு. காலப்போக்கில் சில நின்று போய்விட்டன. முதலில் அழகியசிங்கர் வாசலில் இருந்து புறப்பாடு துவங்கும். பேயாழ்வார் கோயில் தெருவில் உள்ள கோமுட்டி பங்களா உள்ளே எழுந்து அருளி, நம்பிள்ளை சன்னதியில் முதல் மண்டகப்படி ; பின்பு தவன உத்சவ பங்களாவில்; அடுத்தது கோவிலுக்கு சொந்தமான நடராஜா ஸ்டோர்ஸ் ; தொடர்ந்து கங்கை கொண்டான் மண்டபத்தில் இளைப்பாறல். இங்கேயும் படி அமுது செய்வித்து குதிரை வாகன மண்டபம்; அடுத்து சுங்குவார் தெருவில் கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள மண்டபம். வசந்த பங்களா; கிழக்கு குளக்கரை அனுமார் கோவில், யதுகிரி யதிராஜ மடம்; கண்ணாடி பல்லக்கு வைத்து இருந்த மண்டபம்; நம்மாழ்வார் சன்னதி, கோவில் உள்ளே ஆண்டாள் சன்னதி, தெற்கு மாட வீதி ஏளி சன்னதி முன்பே திருவந்திகாப்பு கண்டு அருள்வார்.

சில காரணங்களால் சில மண்டகப்படிகள் நின்று விட்டன.  பெருமாள் வீதி புறப்பாடு காணும்  போது சேவார்த்திகள் மிக அதிக அளவில் வந்து சேவித்து, ஆரத்தி தட்டு சமர்ப்பிப்பதால் புறப்பாடு மிக நிதானமாக நடக்கிறது.  அல்லிக்கேணி அழகியசிங்கரும், அழகான சாற்றுப்படிகளும், அருளிச்செயல்,  வேதபாராயண கோஷ்டியும், ஸ்ரீ பாதம்தாங்கிகளும், பக்தர்களும்  என சிறப்பாக மிளிர்கிறது.  புறப்பாடு கண்டு அருளும் மாட வீதிகளில் வசிப்போரும் பெருமானது க்ருபா கடாக்ஷத்துக்கு பாத்திரம் ஆவோரும் பூர்வ ஜென்ம புண்ணியம் பண்ணியவர்களே ! 


அடியேன் -  ஸ்ரீனிவாச தாசன்   [ஸ்ரீ. சம்பத்குமார்]
.

Wednesday, June 23, 2010

Thiruvallikkeni Azhagiya Singar Brahmotsavam - 2010 [திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் புறப்பாடு}

நேற்று காலை ஸ்ரீ அழகிய சிங்கர் சேஷ வாகனத்தில் எழுந்து அருளினார்.  



இன்று காலை கருட சேவை.  ஏராளமான பக்தர்கள் பெருமானின் கோபுர வாசல் தர்சனம் கண்டு மகிழ்ந்தனர் .  பெரிய திருவடி மேல் பொலிந்து நின்ற பெருமான் கண்டீர் இங்கு 






அருளிச்செயல் கோஷ்டி 

அடியேன் : சம்பத்குமார்  

Tuesday, June 22, 2010

Thiruvallikkeni Azhagiya Singar Brahmotsavam 2010 (திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் பிரம்மோத்சவம் 2010)

கோவில்கள் நமது அனுதின வாழ்க்கையில் முக்கிய அம்சம். அனுதினமும் பெருமாளை சேவிப்பது ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம். பெருமாள் சொவ்லப்யமாக பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறான். பெருமாளை எளிதில் அடைய ஏற்படுதபட்டதுதான் அர்ச்சாவதாரம். "எய்துமவர்க்கு இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது' என்பது ஆசார்யன் வாக்கு.


ஸ்ரீ வைஷ்ணவ திவ்யதேசங்களில் பெருமாள் புறப்பாடு என்பது விசேஷம். பெருமாளுக்கு பிரம்மோத்சவம் என பத்து நாள்கள் விழா நடக்கும். பிரம்மாவால் ஆரம்பிக்கப்பட்ட உத்சவம் எனவே பிரம்மோத்சவம்.


திருஅல்லிக்கேணி திவ்யதேசத்தில் - இரண்டு பிரம்மோத்சவம்ங்கள் சிறப்பாக நடக்கின்றன. ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோத்சவம். சித்திரை திருவோணத்தில் (Apr - May) நடக்கிறது. கோவில்களில் நரசிம்ஹர் உக்கிரமாக எழுந்தருளி இருப்பார்; அல்லிக்கேணியிலோ நரசிம்ஹர் அற்புத அழகுடன் சாந்த ஸ்வரூபிஆக, தெள்ளிய சிங்கனாய் - ஸ்ரீ அழகிய சிங்கர் என்ற திரு நாமத்துடன் எழுந்து அருளி உள்ளார். அழகிய சிங்கருக்கு நேற்று (21/06/10) முதல் பிரம்மோத்சவம்.


பெருமாள் தர்மாதி பீடத்தில் அழகுற மிளிர்ந்த சிறப்பு புகை படங்கள் சில இங்கே :
கோஷ்டி துவங்கும் சமயம்

கங்கை கொண்டான் மண்டபத்தில்

                               இரட்டை கொடையுடன் வீதியில் எழுந்தருளும் பெருமாள்

 அடியேன் சம்பத்குமார்

Sunday, June 13, 2010

Sree Parthasarathi Amavasai Purappadu [ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் அமாவாசை புறப்பாடு]

ஸ்ரீ ப்ருந்தாரண்யா  க்ஷேத்ரமாம்  திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி பெருமாளுக்கு திருவீதி புறப்பாடு மிகவும் விசேஷம்.  பெருமாளுக்கு பிரதி மாத பிறப்பு, ரோஹிணி திருவோண திருநட்சத்திரங்கள், பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் புறப்பாடு நடக்கிறது. 


அமாவாசையன்று  பெரிய மாட வீதி புறப்பாடு.  திருவல்லிகேணியில் பல புறப்பாடுகளில் பேயாழ்வார் அருளிச்செய்த  மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி அனுசந்திக்கப்படுகிறது.  12/06/2010 அன்று மாலை ஆறு மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு கண்டு அருளினார்.  புறப்பாட்டில் பெருமாள் படங்கள் சில இங்கே :


அடியேன் - சம்பத்குமார்






Wednesday, June 9, 2010

Grammar - Figure of Speech : தமிழ் இலக்கண பால பாடம் - உவமையணி

In school days grammar lessons were not the ones exactly liked. Many of the lessons were read mostly because they had to be learnt from the examination point of view; not many of evinced in understanding things nor was the tutorial aids available towards that perspective. In the end, passing out was more ritualistic. That way grammar classes were never savoured – the language classes were thought to be something which people can seldom understand. Really pathetic that the way of education has transcended to a level which does not enthuse the students.

As a student, I certainly am to be blamed for that partisan attitude. When you read things after many years of experience if not wisdom, you tend to understand all that was missed which would easily have been begotten with a little effort and more of attitude to learn. Language and grammar tops that list.

Simply, grammar in any language is the body of rules describing the properties of the language. That they are too complex and requires to be demystified goes with the mindset also. A sentence formation has to be in such a way that elements are combined according to prescribed patterns. Languages are descriptive expressions and there are attempts to describe unknown things by comparing them with the known ones. There will be attempts of glorification by providing attributes which are actually not inherent. But that is the way, and in poems you would find that often.

One such analogy of two objects or ideas is ‘Metaphor”. The word is a derivative from French. Metaphors are rhetorical figures of speech which achieve their effects through association, comparison and resemblance. It is very forceful as it assert the two things to be same. Some of the specialized types are : Allegory ( story illustration of important attribute of the subject), Catachresis (mixed usage by design and accident) and Parable (an anecdote illustrating and teaching a moral lesson)

Then there is Simile – a figure of speech comparing two unlike things, often introduced with words ‘like’, ‘as’ or ‘than’. Metaphors and Similes both are forms of comparison – the latter allows the two ideas to remain distinct whereas in Metaphor one is likened to the other.

Tamil grammar is very rich in this type of comparison – figure of speech which is known as Vuvamai. The poems are replete with such figure of speech. Here is an attempt to understand them in a simple way. Hope you enjoy this post. Request your feedback.

With regards – Sampathkumar S

##################################################################################

அமுதினும் இனிமையான தமிழ் மொழியை புரிந்துகொண்டு படித்திருந்தால் இன்னமும் மொழியின் வளமையை ஆழ்ந்து ரசித்து இருக்கலாம் என்பது என் கருத்து. அதே போல நமது கலாசாரம், இலக்கியம் உலகம் முழுவதும் சென்றடைய இன்னமும் நமது நூல்கள் இலக்கியங்கள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும். சில கால கட்டங்களில் நாம் சுருங்கி இருந்தது பல தலை முறைகளை பாதித்து விட்டது. 


பள்ளி நாட்களில் தாய் மொழிக்கு மாணவர்கள் அதிக முக்கியம் தருவது இல்லை ; மேலும் தமிழ் இலக்கணம் படிக்க புரிந்து கொள்ள மிகவும் கடினம் என்ற மனப்போக்கு நமது ஆர்வத்தை தடை போட்டது. இது என் போன்றோர் தமிழை இன்னமும் புரிந்து கொள்ள தேடல் முயற்சி. 


கவிகளுக்கு ஒரு பொருளை மற்று ஒன்றுடன் ஒப்பிட்டு ஏற்றி சொல்தல் வழக்கம். இது உவமை எனப்படும். ஒன்றுடன் இன்னொன்றை ஒப்பிட்டு விளக்குதற்கு உவமை பயன்படுகின்றது. திருமாலை திவ்ய பிரபந்தத்தில் ஆழ்வார் கூறும் "பச்சைமாமலை போல் மேனி, பவளவாய் கமல செங்கண்" - ஒரு அற்புதமான உவமை. 


சில எளிய எடுத்துகாட்டுகள் : • கடன்பட்டார் நெஞ்சம் போல; • கண்ணுக்கு இமை போல; • குரங்கின் கை பூமாலை போல; • எலியும் பூனையும் போல; • சூரியனை கண்ட பனி போல.


பெண்ணின் முகத்தை சந்திரனோடு ஒப்பிடுவது கவிகளுக்கு வழக்கம். இதற்கும் இலக்கணம் உள்ளது !!! இதை புரிந்து கொள்ள உவமை அணியின் இலக்கணத்தைச் சற்று விரிவாகக் காண்போம். உவமை அணியில் நான்கு உறுப்புகள் உள்ளன. அவை :-
1) உவமை அல்லது உவமானம்


2) பொருள் அல்லது உவமேயம்


3) ஒத்த பண்பு


4) உவமை உருபு


உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது. 
1) உவமானம்: ஒரு கருத்தினை கூற வரும் பொழுது, அக்கருத்தின் சுவை கூட, புலவர்கள் எடுத்துக்கொள்ளும் உதாரணம்.
2) உவமேயம் : கூற வரும் கருத்து. "தாமரை போன்ற முகம்" - இங்குப் புலவர் விளக்கக் கருதிய பொருள் முகம். 'முகம்' உவமேயம். முகத்தை விளக்குவதற்காக அதனோடு இணைத்து கூறும் பொருள் 'தாமரை'; தாமரை உவமானம்.
 ஒத்த பண்பு : உவமேயத்துக்கும் உவமானத்துக்கும் பொதுவாக உள்ள இயல்பைப் சுட்டிக் காட்டுவது 'ஒத்த பண்பு' எனப்படும்.
3) உவமை உருபு : உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, புரைய, ஒப்ப, மான போன்ற இவை உவமை உருபுகள் எனப்படும்.
4) ஆரம்பத்தில் ஒரு பொருளை மற்றொரு பொருளுடன் ஒப்பிடுவது உவமை என்றோம் ;




உவமை இது தவிர ஒருபொருளுடன் பலபொருள், பலபொருளுடன் பலபொருள், பலபொருளுடன் ஒருபொருள் என ஒப்புமைப்படுத்தும் நான்கு முறைகளில் அமையும். 


இப்பதிவு உவமையை மேலும் புரிந்து கொள்ள உதவி இருக்கும் என நம்புகிறேன் 




அன்புடன்  -  சம்பத்குமார்