To search this blog

Thursday, September 29, 2022

Abhaya Hastham of Emperuman - 'கை' என்றால் என்ன ??

தாய்மொழியாம் தமிழ் தனிலே புலமை கொண்டவரோ ! - ஒரு எளிய கேள்வி  -    -  'கை' என்றால் என்ன ??

 

A hand is a prehensile, multi-fingered appendage located at the end of the forearm or forelimb of primates such as humans, chimpanzees, monkeys, and lemurs. The anatomy of the hand is complex, intricate, and fascinating. Its integrity is absolutely essential for our everyday functional living. Our hands may be affected by many disorders, most commonly traumatic injury. 

          The hand is composed of many different bones, muscles, and ligaments that allow for a large amount of movement and dexterity. There are 3 major types of bones in the hand itself, including: Phalanges; Metacarpal bones and Carpal bones.  Numerous muscles, ligaments, tendons, and sheaths can be found within the hand. The muscles are the structures that can contract, allowing movement of the bones in the hand. The ligaments are fibrous tissues that help bind together the joints in the hand. The sheaths are tubular structures that surround part of the fingers. The tendons connect muscles in the arm or hand to the bone to allow movement. In addition, there are arteries, veins and nerves within the hand that provide blood flow and sensation to the hand and fingers. 

கை  மனிதர்களின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று.  மனிதர்கள், குரங்குகள் போன்ற விலங்குகளின் தலைக்கு அருகாக தோள்களில் இருந்து நீண்டிருக்கும் உறுப்பு.    கை - பொதுவாக ஓர் முதனியின் கரம் அல்லது முன்னுறுப்பொன்றின் இறுதியில் இருக்கும், பொருட்களைப் பற்றிக்கொள்ளும் தன்மையுடையதும் பல விரல்களைக் கொண்டதுமான உடலுறுப்பாகும். கைகள் தன்னைச் சுற்றியுள்ளவற்றை கையாள முக்கியமான உறுப்பாகும். பெரிய பொருட்களைப் பற்றிக் கொள்ளவும் (பெரு உந்துதிறன்) சிறு கற்களையும் பிரிக்கவும் (நுண் உந்து திறன்) இவை பயனாகின்றன. விரல்முனைகள் உடலின் மிக அடர்த்தியான நரம்புத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், தொடு உணர்ச்சி மூலமான பின்னூட்டம் கிடைக்கிறது; 

திருவல்லிக்கேணி வாழ் எம்பெருமான் ஸ்ரீபார்த்தசாரதி - கண்ணபிரான் .. பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு சாரதியாய் அம்பு பட்ட காயங்களுடன் நமக்கு சேவை அளிப்பவன்.  ஸ்ரீமன் நாரணன் கிருஷ்ணாவதாரத்திலே -  கற்றினம்  மேய்த்தவன் .. .. வெண்ணெயில் உண்டான ஆசையால் இடக்கையாலும் வலக்கையாலும் வாங்கி உண்டான்.  பைந்தமிழில், இந்த  பொய்யான சரீரத்தை ‘மெய்’ என்பது  - மங்கல வழக்கு. இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின்  திருவாய்மொழி பாசுரம் ஒன்று  : 

வைகலும் வெண்ணெய், கைகலந்து உண்டான்

பொய்  கலவாது  என், மெய்  கலந்தானே.

கிருஷ்ணாவதாரத்திலே  ‘நாள்தோறும் வெண்ணெயை இரண்டு கைகளாலும் கலந்து உண்டவனான எம்பெருமான், பொய் இல்லாதபடி என் சரீரத்தில் கலந்தான்,’ என்கிறார் நம் சடகோபன். 




சரி இந்த சங்க தமிழ் பாடலை கேட்டுள்ளீர்களா ?

கழனி யுழவர் கலியஞ்சியோடித்

தழென மதவெருமை தண்கயம் பாயும்

பழன வயலூரன் பாணவெம் முன்னர்ப்

பொழெனப்பொய் கூறா தொழி.

தமிழ் இலக்கியம் மிக பரந்தது .. .. சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களைச் சேர்த்து பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.  இவற்றிலே நாம் நன்றாக அறிந்தது - திருக்குறளும் நாலடியாரும்.  சற்று குறைவாக அறிந்தது :  நான்மணிக் கடிகை; கார்நாற்பது; களவழி நாற்பது; இன்னா நாற்பது ; இனியவை நாற்பது - போன்ற சில !!   கைந்நிலை  என்ற நூல் வாசித்துள்ளீர்களா   ?? 

கைந்நிலை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுதியில் அடங்கிய ஒரு நூல். இத் தொகுப்பில் காணப்படும் ஆறு அகப்பொருள் நூல்களுள் இதுவும் ஒன்று. இஃது அறுபது பாடல்களால் ஆனது. ஐந்து தமிழர் நிலத்திணைப் பிரிவுகளைப் பின்னணியாகக் கொண்டு பாடல்கள் வெண்பா பாவகையில் உள்ளன. இதன் காரணமாக இதற்கு ஐந்திணை அறுபது என்ற பெயரும் உண்டு. இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பது நூல் இறுதிக் குறிப்பில் காண்கிறது. நூலாசிரியர்   தந்தையார் காவிதியார் எனப்படுதலின், அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றவர்போலும்! மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவர்.  

கை' என்பது இங்கே ஒழுக்கம் என்று பொருள்படும். எனவே, கைந்நிலை என்பதற்கு ஒழுகலாறு பற்றியது என்று பொருள் உரைக்கலாம். ஐந்திணை ஒழுக்கம் பற்றியது இந் நூலாகும்.  முன்பு படித்த கைந்நிலை பாடலின் அர்த்தம் :   வயலின் கண் உழுகின்ற உழவர்கள் ஆரவாரத்தைக் கேட்டுப் பயந்து விரைந்து சென்று; செருக்குடைய எருமை தழென ஒலியெழும் படி குளிர்ந்த தடாகத்தில் வீழும் இயல்புடைய;   மருத நிலங்களையும் வயல்களையும் உடைய தலைவன் விடுத்த பாணனே!; எம் முன்னர் - எங்கள் முன்னிலையில் நீ;   பொய்ம்மொழி கூறாதிருப்பாய்;  உண்மையே கூறு  என உறைத்தாளாம் !!  

For a Srivaishnavaite, life is simple !  fall at the lotus feet of Sriman Narayana.  At Thiruvallikkeni, Sri Parthasarathi who is the embodiment of Bhagwan Sree Krishna – shows us His Abhaya Hastham (that protective hand) – worship Him and for sure every good things would happen.  




Here are some photos of Sri Parthasarathi emperuman and His abhaya hastham taken during thirumanjanam on 22.4.2022 – on the evening of thiruther during Chithirai brahmothsavam at Thiruvallikkeni divyadesam.

 

adiyen Srinivasa dasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29th Sept. 2022 

Wednesday, September 28, 2022

Navarathri Thiruvizha 2022

25th Sept 2022   (8th  day of Purattasi) was Mahalaya Amavasai.  Navarathri uthsavam started from tomorrow  26.9.2022  and today is day 3 of the uthsavam. Daily there is Sri Vedavalli thayar purappadu at Thiruvallikkeni divyadesam. 

புரட்டாசி மாதம் ஒரு புனித மாதம்; பக்தர்களுக்கு சிறந்த மாதம். எல்லா ஸ்ரீவைஷ்ணவ தலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.  திருவேங்கடவன் இப்புவியில் அவதரித்த மாதம் ஆனதால் பக்தர்கள் திருமலை திருப்திக்கு திரளாக சென்று வணங்குகின்றனர்.   புரட்டாசி மாதத்தில் திருமலையில் "பிரம்மோத்சவம்" சிறப்புற நடைபெறுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் "நவராத்திரி" வருகிறது.  புரட்டாசி வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் விழா நவராத்திரி விழா.  



In the Tamil  month of ‘Purattasi’ comes the grand  festival of “Navarathri”- literally meaning ‘Nine fabulous Nights’ – celebrated all over the Nation, especially in South India with arrangement of dolls known as ‘Bommai Golu’. The festival of “Navarathri  comes at the ascendence of moon in the month of Purattasi.   

The festivities are to Goddesses Durga, MahaLakshmi and Saraswathi.    It is customary in Southern States to keep a display known as ‘bommai Golu” (display of dolls) in most houses.  This is an ornate exhibition of various dolls and figurines of Gods, National Leaders, Fruits, Vegetables, Animals etc.,  Traditionally the dolls used to be made of earthern soil, now a days many are of paper.  The dolls are carefully kept packed throughout the year and are displayed during these nine days of “Navarathri”.  Every day, people invite their near and dear.  People visit the houses of Relatives, neighbours and friends for seeing the Bommai Golu and for exchanging pleasantries.  Gifts are also given to visitors. 




Each day, offerings  including various types of sundal are made to the dolls.  The 9th day is devoted to Saraswathi, the Goddess of Learning and special poojas are offered to  Goddess Saraswati - the divine source of wisdom and enlightenment. Books, pens, education oriented things  and musical instruments are placed in the puja and worshipped as a source of knowledge.  Also, tools are placed in the pooja as part of "Ayudha Pooja". Vehicles are washed and decorated, and puja is performed for them.  Most shop keepers also clean their shops,  have them white washed and conduct pooja praying for their well being. 

The 10th  day, "Vijayadasami" – is considered to be  the most auspicious day of all.  It is the day of evil being destroyed by good.  It marks a new and prosperous beginning. New ventures started on this day are believed to flourish and bring prosperity.    The mood is one of festivity and bonhomie.  

நமது பாரத தேசம் ஒரு புண்ணிய பூமி - நமது பண்டிகைகள் நமது சமயத்துடன், பண்பாட்டுடன், மக்கள் நலத்துடன் இணைந்தவை .. .. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்  "நவராத்திரி" ,மங்களகரமானது. பெண்களுக்கு ஆனந்தத்தை தர வல்லது.   துர்கா,  லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் தொழுதால் பற்பல  நன்மைகள்  விளங்கும்.   கல்வி,செல்வம்,வீரம்  என்பன மூன்றும் அனைவரின் வாழ்விலும் மிக அவசியமானவை.    பத்தாவது நாள் இன்னமும் மிக முக்கியமான நாளாகும். இது ‘வெற்றியின் அடையாளமாகக்   விஜயதாசமி என்று  கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி வழிபாட்டின் ஒவ்வொரு கட்டத்தின் முக்கியத்துவமும் தெளிவான விளக்கத்தை தருகிறது. முதலாவதாக, எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்; இரண்டாவதாக, நல்லொழுக்கங்கள் வேரூன்ற வேண்டும்;  தேவையான மன தூய்மையைப் பெற்ற பிறகு,  ஆன்மீக அறிவைப் பெற வேண்டும்.  

உலகத்து மக்கள் பிணி, நோய்கள் என எந்த கடினங்களையும் நீக்கி உடல் ஆரோக்கியத்துடன், மனமகிழ்வுடன், கூடி சந்தோஷமாக கொண்டாடுவதே நவராத்திரி.  இதற்காகவே, வீடுகளில் பொம்மைகளை அலங்கரித்து கொலு வைத்து, உற்றார் உறவினரை அழைத்து - பரிசு பொருட்களை தந்து கூடியிருந்து மகிழ்ச்சி உருகின்றனர். 

எல்லா ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களிலும் நவராத்திரி சிறப்புற கொண்டாடப்படுகிறது.  திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே - நவராத்திரி நாட்களில் ஸ்ரீ வேதவல்லி தாயார் வாகனங்களில் உள்புறப்பாடு நடைபெறுகிறது.  திருமங்கை மன்னன் அருளிச்செய்த 'சிறிய திருமடல்' சேவிக்கப்பெறுகிறது.



Here are some photos of Sri Amruthavalli thayar Navarathri  from Adi velli purappadu at Thirumylai Sri Mahdava Perumal thirukovil  on 23.7.2021.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28th Sept 2022.

Tuesday, September 27, 2022

Thiruvallikkeni Aani Thiruvonam purappadu 2022 - ஆழி - எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி

ஆழி -  எனும் சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும். இதற்கு :  கடல்; கடற்கரை; அரசனின் ஆணைச் சக்கரம் ;   மோதிரம்; சக்கரம்; வட்டம்; கட்டளை என பல அர்த்தங்கள் உண்டு.  ஆழி என்பதற்கு ’பரந்து விரிந்த’ ’அளவிடமுடியாத’ என்பது முதன்மை  பொருள்.  இதனாலேயே   கடலுக்கு ஆழி எனப் பெயர் வந்தது.  திருவாரூரில் உள்ள திருத்தேர்  அளவில் பெரியதும், புராணம், வரலாற்று பெருமை மிக்கதுவாகும்.    பண்டைக்காலத்தில் திருவாரூர் தியாகேசப் பெருமான் தேருக்கு எழுந்தருளும்போது பொன்பூ, வெள்ளிப்பூக்களை வாரி இறைப்பதாகக் கூறுவர். பொன்பரப்பிய திருவீதி என்று ஒரு வீதிக்கு உள்ள பெயரை வைத்து இதனை உணரலாம். அடிக்கோராயிரம் பொன் சின்னங்கள் கூற அளிப்பார் என்று திருவாரூர்க் கோவையும், உய்யும்படி பசும்பொன் ஓராயிரம் உகந்து பெய்யும் தியாகப்பெருமானே என்று திருவாரூர் உலாவும் இதன் சிறப்பைக் கூறுகின்றன.  பெரிய தேரை இழுக்க 12,000 தேவைப்பட்டனர் என குறிப்புகள் உள்ளன. 




இச்சொல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பொருளானது விந்தையே !  .. .. சில வருடங்கள் முன்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான, ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு, இரண்டு விடைகளில் ஏதாவது ஒன்றை அளித்திருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   'கடலை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு' என்ற கேள்விக்கு, 'ஆழி' என, பதில் அளிக்கப்பட்டிருந்தது. 

மாற்றுத்திறனாளிகளுக்கான,   தேர்வில், வேலூர் மாவட்டம், வீராரெட்டிபாளையத்தைச் சேர்ந்த, ஈஸ்வரி என்பவரும் பங்கேற்றார்; 81 மதிப்பெண் பெற்றார். கேள்விகளுக்கான, 'கீ' விடைத்தாள் வெளியிடப்பட்டது. அதில், இதற்கு, ஈஸ்வரி தரப்பில், ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.அவர் அந்த கேள்விக்கு  'சமுத்திரம்' தான் சரியான பதில் என, தெரிவித்திருந்தார். ஏற்கனவே வெளியிட்ட, 'கீ' விடைத்தாள் அடிப்படையில், தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட கேள்விக்கு, சரியான விடை அளித்தும், மதிப்பெண் அளிக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈஸ்வரி, மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி நாகமுத்து விசாரித்தார்.  

நிபுணர்களின் கருத்தை பெற, முதுகலை பட்டம் பெற்ற மூன்று தமிழ் ஆசிரியர்களை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர்களிடம் கருத்து பெறப்பட்டது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், ''கடலை மட்டும் குறிக்காத சொல் என்பதற்கு, சமுத்திரம் என்பதும், சரியான பதில் தான். சமுத்திரம் என்பதற்கு, 'கடல், ஓர் எண், மிகுதி என்ற அர்த்தங்கள் உள்ளன,'' என்றார். இதற்கு ஆதாரமாக, சென்னைப் பல்கலை கழகம் வெளியிட்ட, அகராதி, தமிழ் அகரமுதலி, சாரதா பதிப்பகம் வெளியிட்ட தமிழ் அகராதியை, தாக்கல் செய்தார். அரசு தரப்பில், சிறப்பு அரசு பிளீடர்  'ஆழி என்பதுதான், சரியான விடை. ஆழி என்பதற்கு, 'கடல், மோதிரம், சக்கரம்' என, பொருள் உள்ளது. நிபுணர்களும், இது தான் சரி என, கூறியுள்ளனர்,'' என்றார்.  

மனுவை விசாரித்த, நீதிபதி நாகமுத்து :: நீதிமன்றத்துக்கு வந்த நிபுணர்கள், 'ஆழி' தான், சரியான விடை; சமுத்திரம் என்பது தமிழ் வார்த்தை அல்ல; எனவே, சமுத்திரம், சரியான விடை அல்ல' என, கூறியுள்ளனர். 'சமுத்திரம்' என்பது தமிழ் வார்த்தை அல்ல என கூறுவதை, நான் ஏற்கவில்லை. அது, தமிழ் வார்த்தை அல்ல என்றால், தமிழ் அகராதிகளில், சமுத்திரம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்காது. ஆனால், 'சமுத்திரம்' என்பதற்கு, மூன்று விதமான அர்த்தங்கள் இருப்பது, தமிழ் அகராதியில் கூறப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள, 'கீ' விடைத் தாள், முழுமையாக சரியில்லாததால், மனுதாரருக்கு அளிக்கும் பயன், மற்றவர்களுக்கும் போய் சேர வேண்டும். அனைவருக்கும், நீதி கிடைக்க வேண்டும் என, இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, 'கடலினை மட்டும் குறிக்காத சொல்லை கண்டெடு' என்ற கேள்விக்கு, 'ஆழி' என்றோ, 'சமுத்திரம்' என்றோ, விடை அளித்திருந்தால், அவர்களுக்கு, ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். அனைத்து விடைத்தாள்களையும், மறு மதிப்பீடு செய்து, திருத்தப்பட்ட முடிவை வெளியிட வேண்டும். ஒரு வாரத்துக்குள், இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்  

நமது வாழ்க்கை எளிமையானது .. பரம்பொருளான ஸ்ரீமன் நாரணனை மட்டுமே சுற்றி வருவது.  எம்பெருமானே ஆழிப்பிரான்  -  எம்பெருமான்  திருவவதரிக்கும்போதே கையுந்திருவாழியுமாய்த் திருவவதரித்து, பிறகு பாரதப்போரில் ‘ஆயுதமெடேன்’ என்று சொல்லிவைத்தும் ஆச்ரிதபக்ஷபாதத்தாலே ஆயுதமெடுத்தும் காரியம் செய்தருளினவன்.  இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரத்திலே ரசமான ஒன்று :  





ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான்றன்னை,

தோளுமோர் நான்குடைத் தூமணி வண்ணனெம்மான்  தன்னை

தாளும் தடக்கையும் கூப்பிப் பணியும் அவர்க்கண்டீர்,

நாளும் பிறப்பிடை தோறு எம்மையாளுடை நாதரே.  

ஆள்கின்ற பரம புருஷனாகவும் ஸ்ரீகிருஷ்ணனாகவும்  திருவாழியாழ்வானையுடைய  உபகாரகனாயும்,  ஒப்பற்ற நான்கு புஜங்களையுடையவனாயும்  பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தை  உடையவனாயுமிருக்கின்ற எம்பெருமானை, தாளும் தடக்கையும் கூப்பி  வணங்குகின்றவர்கள்  - எல்லா ஜென்மங்களிலும்,  தினந்தோறும் எங்களை ஆட்கொள்ளும் அடிகளாவர் என திருமாலடியார் தம் சிறப்பை உரைக்கின்றார் நம்மாழ்வார்.  

திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே பார்த்தனுக்கு சாரதியாக பணி புரிந்த பகவான் ஸ்ரீகிருஷ்ணன் - ஸ்ரீபார்த்தசாரதியாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.  இதோ இங்கே நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளின் அற்புத திருக்கோலம் - ஆனி திருவோணம் புறப்பாடு 18.6.2022  அன்று  எடுக்கப்பட்ட சில படங்கள்

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
27.9.2022.  













Sunday, September 25, 2022

Mahalaya Amavasyai 2022

Mahalaya Amavasai @ Thiruvallikkeni  2022 : Sri Parthasarathi Swami purappadu #

 

Today 25th Sept 2022   (8th  day of Purattasi) is Mahalaya Amavasai.  Navarathri uthsavam starts from tomorrow  26.9.2022  

                    முழுவினைகள் முன்னம் கழலும் முடிந்து !!   –தொழவேணுமென்று நினைத்த மாத்திரத்தில் பாவங்கள்  தொலையுமா /  அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?? 

 




இன்று 'மஹாளய அமாவாசை'!  .. ..  சென்ற வருஷம் நிலைமை வேறு !  -  காலை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் வாசலில் அதிகமாக காவலர்கள் !! - கோவில் திறந்து இருந்தது - பக்தர்கள் சேவிக்க அனுமதி உண்டு ஆனால் திருக்குளம் அருகே சடங்குகள் செய்ய விரும்பிய ஹிந்து பக்தர்கள் துரத்தப்பட்டனர்.  ஏன் இப்படி இந்துக்கள் சம்பிரதாயங்கள் அனைத்துக்கும் அரசாங்க எதிர்ப்பு !!   ஏன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த வசதியையும் செய்து தராமல் இடர்பாடுகள் மட்டுமே அதிகாரிகள் செய்கிறார்கள் !!  அய்யகோ சென்ற வருஷம்  -   கடற்கரை பகுதிகள், நீா்நிலைகள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களுக்கு  வழிபாடு  செய்ய பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை எனக்கூறி பல்வேறு விதமான தொந்தரவுகள் பக்தர்களுக்கு !!

மஹாளய அமாவாசை : -  ஐதீகங்கள் !  நம்பிக்கைகள் !! சடங்குகள் ! மத நம்பிக்கைகள் !! - சிலருக்கு புரியவில்லை என்பதால் மட்டுமே இவை எவையுமே அர்த்தமற்றவை ஆகிவிடாது !!  மாளய அமாவாஸ்யை வழிபாடு இந்துக்களின் அடிப்படை ஆணிவேர் நம்பிக்கை.   வேர்கள் இல்லாது விருட்சங்கள் இல்லை; விதைகள் இல்லாது கனிகள் இல்லை. முன்னோர்களின் சாயல் இல்லாமல் நம் தலைமுறைகளே இல்லை என்கிறது கருட புராணம். வாழையடி வாழையென நம்மை வாழ்விக்கும்  முன்னோர்களை மகாளய அமாவாசை தினத்தில்  முடிந்த அளவுக்கு வழிபட்டு நலமும் வளமும் பெறுதல்  ஹிந்து தர்மம். 

மகாளய தானம் மகத்தான தானம்' என்கின்றன புனித நூல்கள்.  'மறந்து போனவர்களை மாகாளயத்தில் சேர்' என்பது பழமொழி. ஏழேழ் தலைமுறையைச் சேர்ந்த முன்னோர்களுக்கும் அவர்களுக்கான பித்ரு காரியங்களைச் செய்ய வேண்டும் என்பது ஹிந்து  தர்மங்கள் நமக்கு விதித்திருக்கும் கட்டளை. பெற்றோர்களைப் பேணுதல், தெய்வ ஆராதனை, அதிதி வரவேற்பு, சந்நியாசிகளைப் போற்றுதல், பித்ரு காரியங்கள் என ஐவகை தர்மங்களைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.   திதி, தர்ப்பணம் என்னும் வகையில் நீர் நிலைகளுக்கு அருகே எள்ளும் நீரும் பிண்டமும் கொடுத்து செய்யப்படும் ஒரு வழிபாடு.  மூதாதையர்களுக்கு  மக்கள்  நன்றி காட்டும் நாளே மகாளய அமாவாசை.   

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளாய அமாவாசை என்று கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில்  நீர்நிலைகளில் புனித நீராடி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் முன்னோர்கள் நினைவாக நீர் நிலைகளின் அருகில் தர்ப்பணம் கொடுத்தும் வழிபடுவார்கள். 

 

அதுநன்று  இது தீது என்று ஐயப்படாதே,

மதுநின்ற தண்டுழாய் மார்வன், - பொதுநின்ற

பொன்னங் கழலே தொழுமின், முழுவினைகள்

முன்னங் கழலும் முடிந்து.

 

இந்த பூவுலகில் - ‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டு ஐயுற வேண்டா ! நம் பேயாழ்வார் அருளுரை இதோ :   எவ்வித மனக்கிலேசமும் இல்லமால், தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த எம்பெருமானான ஸ்ரீமன் நாராயணனின்  அழகிய, விரும்பத்தக்க திருவடிகளை பற்றி தொழுதால் ஒன்றே போதுமே ! நமது முழு பாவங்களும் முடிந்து,  கஷ்டங்கள் எல்லாம் நம்மை நீங்கும்.   நலம் தரும் சொல் 'நாராயணா  என்ற நாமமே *'.  






In astronomy, the new moon [Amavasyai]  is the first lunar phase, when the Moon and Sun have the same ecliptic longitude. At this phase, the lunar disk is not visible to the unaided eye, but its presence may be detected because it occults stars behind it.  

Last year, the moon went  through a remarkable celestial event, the only one of its kind in a 28-year window. The moon passed  in front of three planets and one of the sky’s brightest stars. The last time it obscured three planets in so short a period was in 2008, and the next will be in 2036.  Astronomers refer to the moment when one celestial body blocks out another in Earth’s sky as an “occultation.”  It happens fairly regularly as the moon orbits our world, but it’s unusual for so many bodies to be involved in this way.  

Ever heard of a moon by name ‘Europa’ ?  Europa also  Jupiter II, is the smallest of the four Galilean moons orbiting Jupiter, and the sixth-closest to the planet of all the 80 known moons of Jupiter. It is also the sixth-largest moon in the Solar System. Europa was discovered in 1610 by Galileo Galilei and was named after Europa, the Phoenician mother of King Minos of Crete and lover of Zeus (the Greek equivalent of the Roman god Jupiter).  Slightly smaller than Earth's Moon, Europa is primarily made of silicate rock and has a water-ice crus  and probably an iron–nickel core. It has a very thin atmosphere, composed primarily of oxygen.   In addition to Earth-bound telescope observations, Europa has been examined by a succession of space-probe flybys, the first occurring in the early 1970s.  

On Thursday, Sept. 29, at 2:36 a.m. PDT (5:36 a.m. EDT), NASA’s Juno spacecraft will come within 222 miles (358 kilometers) of the surface of Jupiter’s ice-covered moon, Europa. The solar-powered spacecraft is expected to obtain some of the highest-resolution images ever taken of portions of Europa’s surface, as well as collect valuable data on the moon’s interior, surface composition, and ionosphere, along with its interaction with Jupiter’s magnetosphere.  Such information could benefit future missions, including the agency’s Europa Clipper, which is set to launch in 2024 to study the icy moon.   

Back home, on the important Mahalaya Amavasai day, Sri Parthasarathi Perumal had periya mada veethi purappadu.  In this earthly World, most worries are in determining – what is good and what is not – why doubt all these, when you have the simplest way out ?   Sri Peyalwar offers his golden advice – he says :  the simplest thing in life that we can do, is worship the Golden feet of Sriman Narayana with a Tulsi garland on this chest,  who is easily accessible to every one of His bakthas.  The sins and karma would vanish without a trace before we age.  

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veervalli Srinivasan Sampathkumar
25.9.2022. 











Saturday, September 24, 2022

Thiruvallikkeni Sri Azhagiya Singar Purattasi Sani 1 2022 - எந்தையெம்பெருமானென்று .. .. சிந்தையுள் வைத்து!!.

The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.  This year, Navarathri festival starts from Monday 26.9.2022.   On every Saturday in this  month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Emperuman  Azhagiya Singar.   Today is  Sani varam 1.  




அச்சுதா, அனந்தா , கேசவா, நாரணா, மாதவா, கோவிந்தா என எம்பெருமானின் திருநாமங்களை உச்சரித்து அவனையே நினைத்து அவனடி சேர்வதே நம் இலட்சியம்.  இதற்கு மிக உகந்த மாதம் புரட்டாசி.  திருவேங்கடமலையில் அடிவாரத்தில் இருந்து ஒவ்வோர் இடத்திலும் 'கோவிந்தா, கோவிந்தா' என அவனது திருநாமம் எதிரொலிக்கும்.  ஏழுகொண்டலவாடா ! வேங்கடரமணா, கோவிந்தா என அடிமனதில் இருந்து எழும் பக்தனின் மன உச்சரிப்பு அது.  திருமலையில் பக்தர்கள் எளியவர்கள், திருவேங்கடவனை தவிர வேறொன்றையும் நினைக்காதவர்கள்.  அவர்கள் பக்கலில் உள்ளவர்களின் கருத்தையோ, அங்கீகாரத்தையோ எதிர்பார்ப்பதில்லை.  பக்தனுக்கும் பெருமாளுக்கும் ஆன நேர் உரையாடல் அது.  ஸ்வாமி நம்மாழ்வார் தமது திருவாய்மொழியில் :  

எந்தையேயென்றும்  எம்பெருமானென்றும்,

சிந்தையுள்  வைப்பன் சொல்லுவன்பாவியேன்,

எந்தையெம்பெருமானென்று   வானவர்,

சிந்தையுள் வைத்துச் சொல்லும்  செல்வனையே. 

பரமபத வாசிகளான நித்யஸூரிகள்,  ஸ்ரீமந்நாராயணனை எந்தையே! எம்பெருமானே! என்று  மனத்தினால் சிந்தித்து,  வாயினால் தோத்திரஞ் செய்யப்பெற்ற ஸ்ரீமானாகிய எம்பெருமானை - பல குறைகள் நிறைந்த குற்றங்கள் பல புரிந்த பாவியாகிய நான் எந்தையே! என்றும்,  எம்பெருமானே என்றும் என ஆசை  பொங்க  அழைத்து, எனது சிந்தையினுள்ளே வைத்துக்கொள்வேன்,  வாயினாலுஞ் சொல்வேன் - எப்பொழுதும் நலம் தரும் சொல் அதுவே. நாரணனது திருநாமங்களே எமக்கும் அனைத்து பக்தர்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் நலம் தர வல்லது.   





At Thiruvallikkeni divyadesam, there would be 5 weeks of Purattasi Sani celebrations but the 2nd falling during Navrathri, there would be no purappadu of Sri Azhagiya Singar.  Today with huge expectations, Sri Thelliya Singar came out His gopura vasal around 0450 pm .. .. as HE came out – there was moonram thiruvanthathi goshti thuvakkam and immediately came sharp showers for a very short while.  Sri Azhagiya Singar purappadu was curtailed and HE returned back with thiruvanthikappu too occurring inside the temple.  

Here are some photos of the short purappadu. 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.09.2022.