To search this blog

Saturday, June 29, 2019

Thiruneermalai Divyadesam 2019


Living in a city that too Metropolitan city, has its distinct advantages ~ but Chennai is reeling under server water shortage ! ..  fortunately some respite as after close to 200 days – there have been some rains in the week that fleeted past.  City suburbs too are suffering and some complain of neglect .. .. sad, that places like Thiruneermalai (which was under water for 6 months making Thirumangai Azhwar wait !) – which was under floods in Dec 2015, is now dry .. it was sad to see the Temple tank bone dry .. ..

The temple place, is known for its leather tanneries on the way and quarries too – there was a report in Indian Express that the construction debris from the Chennai Metro Rail’s sites where work is going on is collected and dumped illegally on the waterbed in a quarry at Thiruneermalai along the Chennai Bypass Road. When Express visited the spot, locals and residents said that this activity had been happening since construction of Phase-I stretch that started in 2011. The Thiruneermalai quarry is one of the few structures in the city that still holds a good amount of water.  As a handful of lorries have been depositing debris into the quarry’s waterbed on a daily basis for the past eight years, the accumulated debris resembles a small mountain now. Sources privy to the issue said that concrete waste was collected from Metro stations where construction is underway and from Wimco Nagar where Phase-I extension is in progress. Residents recalled that before this menace started, they used to drink stagnant rainwater from the quarry which had no traces of pollution then.


Thirukulam as was seen in yesteryears and as seen today (below)


This is no post on quarry or anything else ~ a religious post on Thiruneermalai divyadesam.   Thiruneermalai  has a beautiful pushkarini and is in two parts – one at the ground level and the other atop a small hill.   The sannathi of Neervannar is at the base along with his consort Animamalar Thayar and sannathies of Kalyana Ramar and Andal. As one  ascends 300 odd steps, one can have great darshan of Lord Ranganathar (in reclining posture);  Thiruvikramar; Lord Narasimha (in sitting posture)  - “நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம் மாமலையாவது நீர்மலையே” – in the words of Thirumangai Azhwar. 

The Lord in Krishna Avathar married Nappinnai coming from the cowherd clan and the lotus dame Mahalakshmi;  He remained ever merciless against the Asuras ~ that great Lord who is worshipped standing  at  divyadesam surrounded by groves of the well watered Thirunaraiyur, in a sitting posture at Thiruvali, reclining at Thirukudanthai and measuring the earth at Thirukkovalur – is to be seen and worshipped at the great hill abode at Thiruneermalai. 

அன்றாயர் குலக்கொடியோடு * அணிமாமலர்  மங்கையொடு  அன்பளவி* அவுணர்க்கு
என்தானும்   இரக்கமிலாதவனுக்கு உறையுமிடமாவது  *இரும்பொழில்சூழ்
நன்றாய புனல்  நறையூர் திருவாலிகுடந்தை  தடந்திகழ் கோவல்நகர்,*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கு  இடம் * மாமலையாவது  நீர்மலையே.

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணனாய் திருவவதாரம் செய்த அவ்வமயத்தில்,  ஆயர் குலத்து சிறப்பு மிக்க  நப்பின்னை பிராட்டியோடும் மிகச் சிறந்த தாமரை மலரிற் பிறந்த பெரியபிராட்டியோடும், அன்புடன் கலந்தவனும்,   எக்காலத்திலும்  அசுரர்கள் விஷயத்திலே இரக்கமில்லாதவனுமான எம்பெருமானுக்கு  இருக்கும் சிறப்பு கொண்ட இடம் எதுவென வினவின்,  அது, பரந்த சோலைகளாலே சூழப்பட்டு நல்ல தீர்த்தங்களையுடைய திருநறையூரிலே நின்றவனும், திருவாலியிலே வீற்றிருந்தவனும், திருக்குடந்தையிலே சயனித்தவனும்,  தடாகங்களாலே விளங்குகின்ற திருக்கோவலூரிலே உலகளந்த திருக்கோலமாக எழுந்தருளியிருந்தவனுமான எம்பெருமானுக்கு இடமான மாமலை, சிறந்த  மலையான திருநீர்மலையாம்; என்கிறார்  திருமங்கை மன்னன்.

திருநீர்மலை ஒரு அற்புத திவ்யதேசம்.  பெரிய குளம் அருகே அமைந்துள்ள கோவிலும், மலைமேல் மேலும் சன்னதிகளும் அமைந்துள்ளன.  சிறியமலை மேலேறிச் செல்ல படிக்கட்டுகள் வசதியாக இருக்கின்றன. அடிவாரக் கோவிலில் உள்ள மூலவர் நீலமுகில் வண்ணன், நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் நாச்சியாராக எழுந்தருளியிருக்கிறார். மலைமேல் சாந்த நரசிம்மன், வீற்றிருந்த திருக்கோலத்தில், கிழக்கு நோக்கியும், ரங்கநாதன், மாணிக்க சயனமாகத் தெற்கு நோக்கியும், திருவிக்கிரமன் நின்ற திருக்கோலமாகக், கிழக்கு நோக்கியும் சேவை சாதிக்கிறார்கள்.  பள்ளிகொண்ட அரங்கநாதனின் உத்சவர் கீழே கண்ணாடி மண்டபத்தில் எழுந்து அருளி உள்ளார்.


Today had the fortune of worshipping the Emperuman at this beautiful temple.  Here are some photos of the Temple and that of Uthsavar Ranganathar, taken during last year Pagal pathu uthsavam. 

adiyen Srinivasa dhasan.
29th June 2019.




pics (4) above of Temple on the hillock
pics below - the temple at adivaram







Sunday, June 23, 2019

Sri Azhagiya Singar Sapthavaranam 2019 : "வேட்கை மீதூர வாங்கி* விழுங்கினேற்கு இனியவாறே"




On the concluding day of Brahmothsavam is ‘Sapthavaranam’ and purappadu in Siriya Thiruther [the small chariot].  22nd June 2o19   was the tenth day of Sri Azhagiya Singar Brahmothsavam at Thiruvallikkeni [Triplicane] divyadesam. Heard of ‘Chrysopogonzizanioides’ and wonder what is has to do with a Temple related post, especially one on the last day of Sri AzhagiyaSingar  Swami Brahmothsavam at Thiruvallikkeni.

On the concluding day of Brahmothsavam is  -  ‘Siriya  Thiruther’ famously known as ‘Vettiver Chapparam’… occurring after ‘Sapthavaranam’- ‘dwadasaaradhanam’.  The entire Thiruvaimozhi is rendered at the mantap having all Azhvar, Acaryar and Emperumans.  It is an exceptional site to have darshan of five Emperumans at one place ~ and at around 8.45 pm, Alwars, Acaryas and Perumals had purappadu back to their sannathi. At 9.30 pm Sri Azhagiyasingar had purappadu  – whence Thiruvarangathu Amuthanaar’s ‘ Ramanuja Noorranthathi’ was rendered. 


திருமங்கை மன்னனின் திருக்குறுந்தாண்டகம் ஒரு அற்புத பிரபந்தம்.  இறைவனைப் பெருநிதியாக வர்ணித்து மாந்தர்களாகிய நமக்கு எது செல்வம், எது உயர்ந்தது, நாம் என் செய்ய வேண்டும் என போதிப்பது !! ~ இங்கே ஒரு பாசுரம் 

கேட்கயான் உற்றதுண்டு*  கேழல்ஆய் உலகம் கொண்ட,*
பூக்கெழு வண்ணனாரைப்*  போதரக் கனவில் கண்டு,*
வாக்கினால் கருமம் தன்னால்*  மனத்தினால் சிரத்தை தன்னால்,*
வேட்கை மீதூர வாங்கி*  விழுங்கினேற்கு இனியவாறே.

மனிதர்களுக்கு தேவைகள் : உணவு, உடுப்பு, இருப்பிடம் .. .. இவை கிடைத்தாயின், மேலும் பணம், பொருள், போகம், என தேடல் .. .. .. பண்டைய கால மன்னர்கள் -  தண்ணீர், வெற்றிலைப்பாக்கு, வாசனை திரவியம், மண்,  மாதர், ஆடையாபரணம், சூது சதுரங்கம்  என உல்லாசித்தனர்.  மனிதர்களின் வாய்வெகுவுதலும், பொழுது போக்குதலும்,  இப்பொருள்களிலேயே  மாறிமாறி நடந்தன  !! 


ஸ்ரீவைணவர்களான நமக்கு கிடைத்தற்கரிய நிதி - நம் ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே!  - பவளத்தூண்  நெறிமையில் உயர்ந்த ஸ்ரீமன் நாராயணனை மனம், வாக்கு, கருமம், சிந்தை அனைத்தாலும்  நினைத்து வாழ்த்தி வணங்கி உய்வு பெறுவோமாக !    இனிப்பான ஒரு பொருளை நாக்கில் வைத்தவுடன், தித்திப்பது போல, ஸ்ரீமன் நாராயணனைக் குறித்த எண்ணங்களும். சிந்தையும், செயலும், ஆகிய அனைத்தும் இனிது, நமக்கு நன்மையே பயக்கும்.   




Kaliyan dreams of the Lord who in His earlier avatar came as a boar to reclaim the earth. .. Azhwar feels His sweetness having swallowed the mighty Lord in his thought, word, deed and faith .. .. that Sriman Narayana, in His splendour gave darshan to us as Lord Thelliyasingar with floral crown .. ..

The thiruveethi purappadu should have taken in  ‘siriya  Thiruther’ famously known as ‘Vettiver Chapparam’… I had earlier posted of the scientific name of  vetti ver as - ‘Chrysopogon zizanioides’, a type of grass of Poaceae family, native to India.  Also known as ‘khus’ Vettiver can grow up to 1.5 metres high and form clumps as wide. This Ther is known as ‘Vettiver Chapparam’ – for there used to be so many sheets made of this grass placed on the temple car.  One could feel the divine fragrance from a distance itself.  

However, due to asantharpam in the vicinity of the temple, the thiruther purappadu could not be held and it was perhaps the shortest of the purappadus ~ as Sri Azhagiya Singar emerged from the eastern Gate in front of Sri Nammalwar sannathi, had purappadu in south Mada street and reached His sannathi through the western gate.  Here are some photos of the purappadu

~ adiyen Srinivasadhasan [S. Sampathkumar]
22nd June 2019.








Saturday, June 22, 2019

Sri Azhagiya Singar ananda vimanam 2019


Sri Azhagiya Singar ananda vimanam 2019

                               At Thiruvallikkeni divyadesam – there are grand Brahmothsavams for Sri Parthasarathi in Chithirai and for Sri Azhagiya Singar in Aani, which is presently on – and today  21st June 2019   is day 9 day of the Uthsavam.  On  8th   day morning it is ‘VEnnak thazhi kannan’ for Sri Parthasarathi, while it is ‘Lakshmi Narasimhar’ for Azhagiya Singar.  On day 9 evening it is Kannadi pallakku for Sri Parthasarathi and Ananda vimanam for Thelliya Singar.




எங்கள் எம்மிறை எம்பிரான் இமையோர்க்கு   நாயகன்,*
ஏத்து அடியவர் தங்கள் தம்மனத்துப்*  பிரியாது அருள்புரிவான்,*
                                                                                                 ~ கலியன் வாய்மொழி !

திவ்யதேசத்தில் வாழும் ஸ்ரீவைணவர்கள் 'எங்கள் ஊர் - எங்கள் எம்பெருமான் 'எங்கள் திருகோவில் - என உரிமையுடன் உரைப்பர்.  ஆழ்வாரும் இங்கே  'எங்கள் எம்மிறை எம்பிரான்' என்கிறார்.  ‘எங்களிறை’ என்றோ ‘எம்மிறை’ என்றோ அருளிச் செய்தால் போதுமாயிருக்க ‘எங்களெம்மிறை’ என்பது  புநருக்தி ! .. .. ‘எங்களுக்கே இறை’ என்று திடமான அவயாரணந் தோற்றச் சொல்லப்பட்டதாதலால்   இரட்டித்துச் சொல்லப்பட்டதாம்.  இவன் நமக்கு உரியவன்“ எனும்படி சேஷத்வத்திலே நிறுத்திவைப்பது மாத்திரமான ஸ்வாமித்வம் முதல் விசேஷணத்தின் பொருள்.   ஆழ்வார் நம் எம்பெருமானை “இமையோர்க்கு நாயகன்“ என்கிறார். [இந்த பாசுரம் திருக்கோட்டியூர் பாசுரம்] .. ..

இன்று 21.6.2019 திரு அழகியசிங்கர் ஆனி ப்ரஹ்மோத்சவத்திலே 9ம் நாள்.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானுக்கு 9ம் உத்சவம் இரவு கண்ணாடி பல்லக்கு; தெள்ளியசிங்கனுக்கு அற்புதமான ஆனந்த விமானம்.  ஸ்ரீஅழகியசிங்கர் பேயாழ்வார் கோவில் தெரு வழியாக எழுந்து அருளி, திருமொழி செவி மடுத்து, விமானத்தில் எழுந்து அருளி, குளக்கரை, பெரிய மாடவீதி புறப்பாடு கண்டு அருளினார்.  புறப்பாட்டின் சில படங்கள் இங்கே.


Dravidian architecture  has been in prominence for over thousand years now.  It consists of  pyramid shaped temples which are dependent on intricate carved stone in order to create a step design consisting of many statues of deities, warriors, kings, and dancers. These type of temples are abundant in the Southern states and flourished during the various kingdoms of Pallavas, Cholas, Cheras, Pandyas, Chalukyas, Vijayanagara empire and Hoysalas.   Some are also found in parts of Srilanka, Maldives and Southeast Asia.  In this style of Temples -     the principal part is the Vimanam, the porches or Mantapams which precede the door to the garbagriha,  Gate-pyramids, Pillared halls or choultries. Besides these, a temple always contains tanks or wells for water—to be used either for sacred purposes .




On  Ninth day evening it is  – Kannadi Pallakku – the palanquin embedded with beautiful mirror work for Sri Parthasarathi, - for Sri Thelliya Singar, there is no ‘kannadi pallakku’ but, the imposing  – ‘Punniyakodi vimanam’ also called Sadasarsha vimanam.   The most beautiful Azhagiya Singar true to His name, has purappadu from the Western gopuram, comes through Peyalwar Kovil street, ascends the Vimanam -  there was rendition of Periya Thirumozhi with goshti occupying every possible space between the vimanam and Nammazhwar sannathi.  Then there was  kulakkarai purappadu and periya mada veethi.   Here are some photos taken during the purappadu.

In recent times, this vahanam gets referred to as ‘Sada darsha vimanam’ in all official communiqué – in the panchangam and in the posters.  A good friend of mine clarifies that is not appropriate to term it ‘sathadarsha vimanam’ .. ..  in Sanskrit,   it is saha dadarsha, which means the glorious Emperuman as seen under the vimana. In our sannidhi it is Anandha vimaanam only. Sa dadarsha vimanashca madhye bhaskara rochishaha  ~  meaning, He was seen under the vimaana blazing brilliantly like sun.  So the Vimanam is Ananda vimanam – and the radiance is of His.

adiyen Srinivasa dhasan.

PS: My special thanks to my friend Kuvalai Raghavan & www.tamilvedham.org












Friday, June 21, 2019

Sri Azhagiya Singar Brahmothsavam - Porvai Kalaithal 2019



21.6.2019   – Today is the 9th day of Sri Thelliya Singar  Brahmothsavam – Theerthavari.  In the  morning Sri Azhagiya signar  had purappadu in “Aaal mael pallakku” – a palanquin with four men holding the pallakku on their shoulders. 




Today’s events are sequel to that of yesterday’s i.e., ‘Thirumangai Mannan Vaibhavam’; Emperuman turning Kaliyan into his astute devotee teaching him the ~  ‘ashtakshara mantra’.... In symbolizing search of lost ring, Perumal has Himself covered with ‘sheets’ and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Parthasarathi with no floral garlands – then many flowers adorn Perumal.  Upon reaching the Temple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted. 



The conflict is not that of mortals…it is divine… ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’….  In the words of Andal ~  *ஊடல் கூடலுணர்தல் புணர்தலை*



ஸ்ரீ அழகிய சிங்கருக்கு  இன்று ஒன்பதாம் உத்சவம்; இன்று 'தீர்த்தவாரி''யும் கூட..  –
காலை  புறப்பாடு  "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால்  "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய (9) போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள்  நாச்சிமாருக்கு கூட தெரியாமல் தனது  மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன்தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம்  "போர்வை களைதல்என  கொண்டாடப்படுகிறது
எம்பெருமான் பரிமேலேறி  மணிமாட வீதிவலம் வந்து வேர்கலியனுக்கு மெய்ப்பொருள் உரைத்த போதினிலே திருவாழி மோதிரம் காணாதே போக, காலை பொழுதினில் பொற்றண்டிகை மேலேறி கையாழி மோதிரம் கண்டெடுக்க போர்வைகள் போற்றிக்கொண்டு பவனி வந்தார் ~ என ஐதீஹம்.  [thandigai தண்டிகை என்றால் சிவிகை; பல்லக்கு] 
கலியன் வைபவம் நடந்து, திருத்தி பணி கொண்டாடப்பட்டு,  பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில் பெருமாள் பல்லக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்றி ஏளப்பண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும், ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டுபெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார்.  ஸ்ரீஅழகியசிங்கர் திருக்கோவிலை சென்றடைந்ததும்  'மட்டையடி' எனப்படும் ப்ரணய கலஹம்'  -  பிணக்கு - ஊடலில்  பெருமாள் எழுந்து அருளும் போதுஉபய நாச்சிமார்  திருக்கதவை சாற்றி விடபெருமாள் மறுபடி திரும்ப  திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.    ப்ரணய கலஹ ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது. 
பிறகுபெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.   இதன் பிறகு தீர்த்தவாரி, சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. இன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே : 

அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 
Srinivasan Sampathkumar @ 21/6/2019