To search this blog

Sunday, September 29, 2019

Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman Rathnangi Sevai 2019


25th Sept 2019 was a significant day ~ Purattasi Ekadasi day.  On all Ekadasis, there will be periya maada veethi purappadu of Sri Parthasarathi Swami at Thiruvallikkeni Divyadesam.  This Ekadasi was  more  special.  For two decades now, annually Sri Peyalwar from Sri Adhi Kesava Perumal Devasthanam has been visiting Thiruvallikkeni for mangalasasanam of the Divyadesa perumal.  So @ 7 pm it was double bonanza – of Peyalwar and Sri Parthasarathi together having purappadu ~ there was to be more glory – as Sri Parthasarathi was embellished with exceptionally attractive Rathnangi. 



Remember that there used to be a special Hundi infront of Sri Alawanthar sannathi, with a black & white portrait of a pic calling for collections towards ‘Vajrangi’  for Perumal; today it was Rathnangi.   Rathnam, could be ‘gem’ – there are precious and semi- precious stones classified as gem, a piece of mineral crystal – both cut and polished form are used to make jewellery – this Rathnangi naturally became more attractive as it embellished our Emperuman.

Hailed as Thamizh Thalaivan, Sri Peyalwar  glorifies Emperuman  as having seen the lotus-dame on the frame of Ocean-hued most bountiful Lord, who wields a fiery discuss (Chakra) and the dextral conch (Sangam) in His Hands and radiating more than the Golden Sun ~ what a darshan and how great even to imagine such a darshan .. .. ..  in his Moonram thiruvantathi, Alwar starts :

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன்*  செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம்  கைக்கண்டேன்*
என்னாழி வண்ணன்  பாலின்று**

This Emperuma Sri Parthasarathi came out dazzling in the streets of Thiruvallikkeni having adorned the newly submitted Rathnangi ~ and what a sight to behold !
தீங்கரும்பாம் தமிழ்மொழிதனிலே ~ அழகை எவ்வளவு அழகாக சொல்ல இயலும் ?  இதோ நம் தமிழ்த்தலைவன் பேயாழ்வாரின்    நல்வாக்கு   :  **  எழில் அளந்து எண்ணற்கு அரியான்  **   எம்பெருமானுடைய திருமேனி அழகு நமது எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டது.  கண்டவர்களெல்லாரும் நன்கு மதிக்கும்படியான தேஜஸ்ஸும், எதிரிகளை வாய்மாளப் பண்ணவல்லமிடுக்கும், கண்டார் நெஞ்சையுங் கண்ணையும் கவரும்படியான வடிவழகும், குற்றமற்ற நற்குடிப்பிறப்பும், மற்றும் நன்மையாகச் சொல்லப்படுமவைகளும் தானேவந்து சேரும், யாரிடத்திலென்னில், சங்குதங்கு தடங்கையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கற்கவேணுமென்பாரிடத்து.

கழல்தொழுதும் வாநெஞ்சே, கார்கடல்நீர் வேலை,
பொழிலளந்த புள்ளூர்திச் செல்வன், - எழிலளந்தங்
எண்ணற்கரியானை எப்பொருட்கும் சேயானை,
நண்ணற் கரியானை நாம்.

எம்பெருமான் ஸ்ரீமன்நாராயணன்  - பரந்து விரிந்திருக்கும் கடல் சூழ்ந்த உலகங்களையெல்லாம் அளந்தவன்; அற்புத பெருமிதத்துக்கொப்ப  பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டிருப்பவன்;  அளவிட முடியாத எல்லா  ஐச்வரியமும்  மிக்கவன்;  வடிவிலும் குணநலனும் இவ்வளவென்று  அளவிட்டு, நெஞ்சால் கருதி பார்க்கவும் முடியாதபடி அழகு விஞ்சியிருப்பன்;  புலவர்கள் தண்மதி என்றும் வேறு பலவெனவும்,  எந்த வஸ்துவோடும் ஒப்பிட்டுச் சொல்லவொண்ணாதபடி எல்லா வஸ்துக்களுக்கும் அப்பாற்ப்பட்ட வைலக்ஷண்யத்தையுடையவன்;   இவ்வளவு அருமைகள் அனைத்தும் உடையவனாக  பரமபுருஷனுடைய திருவடிகளைத் தொழுவோம், வா நெஞ்சமே! என்றாராயிற்று.



என்னே ஒரு அற்புத சேவை ... நம் ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் இரத்தினாங்கி  அணிந்து ஜாஜ்வல்யவமாக சேவை சாதித்தார்.  இரத்தினக்கல் அல்லது இரத்தினம் என்பது கனிமத் துண்டு. இது வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு அணிகலன் அல்லது ஏனைய அலங்கரிப்பு செய்ய பயன்படுகின்றது.  நம்பெருமாள் ஸ்ரீரங்கநாதன் விசேஷ நாட்களில் இரத்தினங்கி அணிந்து சேவை சாதிப்பது போலவே இன்று திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதி சேவை சாதித்தார்.    திரு.N. வெங்கட்ராமன் குடும்பத்தினர் சார்பில், நவரத்தின கற்கள் பதித்த ரத்னாங்கி கவசம் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில் காணிக்‍கையாக வழங்கப்பட்டுள்ளது.


At Thiruvallikkeni Sri Parthasarathi rightly the One who is Matchless and has no comparisons – had chinna mada veethi purappadu.  The photos would describe better the beauty of Emperuman that made the garland and ornaments look more beautiful.  On this day, everyone tried capturing the matchless beauty of Emperuman with cameras, mobiles and with their eyes.

Here are some photos of our Emperuman adorning the Rathnangi.
adiyen Srinivasadhasan.[Srinivasan Sampathkumar]







Thiruvallikkeni Purattasi Sani 2 ~ Sri Azhagiya Singar purappadu 2019


Thiruvallikkeni Purattasi Sani 2 ~ Sri Azhagiya Singar purappadu 2019


The tamil month of Purattasi has a pride of place.  Devotees throng  Vishnu temples, especially Tirupathi.  In this month, occurs the  annual Brahmothsavam at Tirupathi. It is also the month of ‘Navrathri’ festival.  Navarathri festival starts from Sunday 29.9.2019.




Devotees in large numbers visit Thiruvallikkeni Divyadesam.  Every Saturday of the month of Purattasi, there will be Periya maada veethi purappadu of Lord Azhagiya Singar.   Today 28th  Sept 2019 was Sani varam 2  and   at Thiruvallikkeni divyadesam,   there was grand  Purappadu  of Sri Azhagiya Singar.  Today happens to be Mahalaya Amavasya too – on this day, usually it would be Sri Parthasarathi perumal purappadu, yet, today being Purattasi Sani, it was purappadu for Sri Thelliya Singar.

எவ்வளவு அழகு ! அதி அற்புதமான ஸ்வபாவலாவண்யமுடைய திருமேனிமிக அழகான கிரீடம்நறுமணத்தை பரிமளிக்கும் மலர் மாலைகள்நேர்த்தியாக சாற்றப்பட்ட ரம்மியமான வஸ்திரங்கள்; உபயநாச்சிமார் அழகான பச்சை பட்டாடைகள், திருமார்பிலே  நீலமேகம், தங்க பூணூல் தரித்து அழகிய சிங்கர், -  அழகாக வடிவமைக்கப்பட்ட தோளுக்கு இனியான்”  -   * இன்று மாலை திருவல்லிக்கேணியில் புரட்டாசி சனிக்கிழமை புறப்பாட்டில்  அருள்மிகு அழகிய சிங்கர் அருள் பாலித்தார்.



கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,
மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன்,
மேவி அரியுருவ மாகி இரணியன தாகம்,
தெரியுகிரால் கீண்டான் சினம்.

எம்பெருமானிடத்திலே சரணம் புகுந்தவன் எவரையும் அஞ்ச வேண்டியதில்லை.  காருண்ய சீலனான எம்பெருமான்தனது பக்தர்களுக்கு துன்பம் தருபவர்களிடத்தில் சீற்றம் கொள்வான் என்பதை நாம் உணர்ந்தால்,  எத்தகைய  பகைவர்க்கும்  நாம் அஞ்சவேண்டாமன்றோ?

நீலமணி போன்ற வடிவையுடைய மாயக்கண்ணன்இடையனாய்ப் பிறந்து பசுக்கூட்டங்களை மேய்த்துபுல்லாங்குழலை ஊதி அனைவரையும் மகிழ்வித்து இருந்த காலத்தில்,  குதிரை வடிவு கொண்டுவந்த கேசி என்னுமசுரனை கிழித்தான்.  தனது பக்தன் மீது கொண்ட மிகையான அன்பாலேபொருத்தமான நரசிங்க வடிவங்கொண்டு இரணியனது முரட்டுடலை  நகங்களினால் கிழித்த நரசிங்கனதுசீற்றத்தை (நெஞ்சமே!) தெரித்துகொள்.:  பேயாழ்வாரின் அமுத வரிகள் .

Sri Peyalwar in his Moonram Thiruvanthathi – gives this wonderful piece of advice.  One who has dedicated self to the lotus feet of Sriman Narayana need not fear anything, especially that of his foes.  Here are some photos taken during today’s periya maada veethi purappadu. 

adiyen Srinivasadhasan
28th Sept. 2019.












Thursday, September 26, 2019

Thirumylai Sri Peyazhwar mangalasasanam @ Thiruvallikkeni 2019


நம்மை நல்வழிப்படுத்தி எம்பெருமானிடம் ஈடுபாடு கொண்டு நல்லவைகள் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

**தேசும் திறலும் திருவும் உருவமும், மாசில் குடிப்பிறப்பும் மற்றவையும் – பேசில்**

வேறொன்றும் வேண்டாம் ! ~ எம்பெருமானிடம் மையல் கொண்டு அவனையே நினைத்து அவனிடத்திலே கைங்கர்யங்கள் செய்தாலே போதும் !! எம்பெருமானை நினைத்த மாத்திரத்திலே, அவனது - தேஜஸ்ஸும், பராக்ரமமும், செல்வங்களும்,  அழகிய ரூபமும், குற்றமற்ற நற்குலமும் மற்றுமுள்ள நன்மைகளும், நம்மை நலம்புரிந்து வந்தடையும். 



25th Sept 2019 was a significant day ~ Purattasi Ekadasi day.  On all Ekadasis, there will be periya maada veethi purappadu of Sri Parthasarathi Swami at Thiruvallikkeni Divyadesam.  This Ekadasi was  more  special.  For two decades now, annually Sri Peyalwar from Sri Adhi Kesava Perumal Devasthanam has been visiting Thiruvallikkeni for mangalasasanam of the Divyadesa perumal.

Later in the night, it rained pretty heavily and was wondering how Thamizh thalaivan Sri Peyazhwar could have reached back his abode at Thirumylai.  Rains are not new and the Muthal azhwargal enjoyed ~ in fact that was the very reason how we got those treasure-trove of thiruvanthathis.   On that beautiful rainy day at Thirukkovalur, Sri Peyalwar in the company of Sri Poigai Alwar and Bootathalwar, lighting with the Universe and love, had darshan of Emperuman. Among the 12 Azhwaars of Srivaishanva Tradition, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwar – were the ones to have descended on this Earth earlier.  They were contemporaries and are praised as “Muthal Azhwars (the first among the Azhwars).  They were born in the month of “Aippasi: in the thirunakshathirams of ‘Thiruvonam, Avittam, Sathayam’ respectively. This divine trio met on a rainy day at Thirukkovalur – when they sang 100 verses each which now form part of Moonravathu Ayiram (Iyarpa) in Naalayira Divyaprabandham.

Sri Peyalwar was born in a well in Mylapore (thence known as Mylai Thiruvallikkeni).  His birthplace is in the present day Arundel Street in Mylapore closer to Mylai Madhaava Perumal Kovil.  At Thiruvallikkeni, the road adjacent to Sri Parthasarathi Kovil houses a separate sannathi (temple by itself) for Sri Peyalwar and the street is named after the Azhwar and is known as ‘Peyazhwar kovil Street’.

Hailed as Thamizh Thalaivan, Sri Peyalwar  glorifies Emperuman  as having seen the lotus-dame on the frame of Ocean-hued most bountiful Lord, who wields a fiery discuss (Chakra) and the dextral conch (Sangam) in His Hands and radiating more than the Golden Sun ~ what a darshan and how great even to imagine such a darshan .. .. ..  in his Moonram thiruvantathi, Alwar starts :

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன்*  செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம்  கைக்கண்டேன்*
என்னாழி வண்ணன்  பாலின்று**

Sri Adhi Kesava Perumal Devasthanam better known as ‘Kesava Perumal Kovil’ is near Mylai Kapaleeswarar Temple and the Chithirai kulam belongs to this Temple.   Now the Peyalwar who graces this beautiful Thennacharya  temple – annually visits Thiruvallikkeni in a grand procession.  Sri Peyalwar is taken in a palanquin and nearer Triplicane [at the TP koil Street – Besant Road Junction] – the pallakku is opened to let all devotees have his darshan fully.  Nearer the Western gate of the temple, Senai Muthaliyar and Sri Sadagopam [Sadari] of Sri Parthasarathi are taken on purappadu for mariyathai for Alwar. 




                        From there, Sri Peyalwar is taken on a grand procession in Chinna mada veethi with ‘Moondram Thiruvanthathi’ goshti and enters vahana mantap  – from there, Azhwar enters Thirukovil in kaipalagai.  Sri Peyazhwar visits all sannathies inside the Temple ~ those of Lord Venkata Krishnan, Vedavalli Thayar, Varada Rajar, Azhagiya Singar and Andal and does mangalasasanam – i.e., ‘praying and praising the divine Gods and begetting happiness in doing so’.

Sri Peyawlar has sung about Thiruvallikkeni temple in his ‘Moondram Thiruvanthati’ –  the highlight besides the visit of Azhwar was Perumal adorning Rathnangi and outdazzling the ornament.   Sri Peyalwar mangalasasanam was a grand festival grandly organized by Sri NC Sridhar, Trustee of Sri Kesava Perumal Kovil, Mylapore….   Here are some photos taken on the occasion.

adiyen Srinivasa dhasan
[Mamandur Srinivasan Sampathkumar living in  Thiruvallikkeni divyadesam]
26.9.2019













Tuesday, September 24, 2019

Thiru Pavithrothsava Sarrumurai 2019 @ Thiruvallikkeni


Today (14th Sept 2019 – Avani 28) is  the concluding day of Thirupavithrothsavam at Thiruvallikkeni.  Sri Parthasarathi had grand periya mada veethi purappadu at Thiruvallikkeni.  Apart from the beautiful crown, the big garlands and His most attractive face, one can worship the silken threads (pavithram) adorning Him.

மன்னு முழுவேழுலகும் வயிற்றினுள் கொண்ட ஸ்ரீமன் நாராயணனை எவ்வாறு அழைத்து கழிப்புறுவீர் ? .. மாதவ, கேசவா, வாமனா, மதுசூதனா, நாராயணா, வாசுதேவா, புருடோத்தமா ... .. என நினைவுகள் விரியலாம்.  நம் சுவாமி நம்மாழ்வார் அனுபவித்து "என்னுள் கலந்தவன்’ என்று ஒரு திருநாமம் சாற்றுகிறார். 

ஏழு நாட்கள் விமர்சையாக நடந்த திருப்பவித்ரோத்சவம் இன்றுடன் முற்றப்பெறுகிறது.  இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும்,  அத்யாபகர்களால்  திவ்யப்ரபந்த திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடும் நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ரமாலை சாற்றப்படுகிறது.

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.  

இதோ ஸ்வாமி நம்மாழ்வார் எம்பெருமானை கொண்டாடும் விதம் .. :
என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும்சுடர்மலைக்குக் கண்பாதம்கைகமலம்,
மன்னுமுழுவேழுலகும் வயிற்றினுள,
தன்னுள் கலவாதது எப்பொருளும் தான் இல்லையே

ஆழ்வாரின் மனதிலே குடிகொண்டு, அவருள் முழுமையாய் கலந்தவனாக  விளங்குகின்ற, அற்புத ஒளி பொருந்திய மலை போன்ற பெருமானின்  சிவந்து கனிந்த திருவாய் , செந்தாமரை மலர் போன்றது ; - திருக்கண்களும் திருவடிகளும் செந்தாமரை மலரே என ஆயின;  மன்னு நிலைபெற்ற ஈரேழு பதினான்கு  லோகங்களும், எம்பெருமானின்  திருவயிற்றில் அடங்கியுள்ளன.  இத்தைகைய சிறப்பு சேர்ந்த எம்பெருமானிடத்திலே சேராதது யாதொரு பொருளுமேயில்லை !  என்கிறார் சுவாமி நம்மாழ்வார்.

Here are some photos of grand purappadu on Thiru Pavithrothsava Sarrumurai 2019.

~adiyen Srinivasa dhasan.