To search this blog

Sunday, February 28, 2010

மாசி மகம் - ஸ்ரீ பார்த்தசாரதி வங்கக்கடலில் தீர்த்தவாரி {Sree Parthasarathi visiting Bay of Bengal}

இன்று மாசி மகம் - மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் சேர்ந்து உள்ள நன்னாள். மாசி மகம் அன்று பெருமாள் கடல் மற்றும் நீர் நிலைகளுக்கு எழுந்து அருள்வது வழக்கம்.


இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் அழகாக எழுந்து அருளினார். வழக்கமாக தெற்கு மாடவீதி துளசிங்க பெருமாள் தெரு, சிங்கராச்சாரி தெரு வழியாக நல்லதம்பி தெருவில் திரும்பி கடற்கரைக்கு எழுந்து அருள்வார். இன்று ஒரு அசந்தர்ப்பம் காரணமாக இவ்வழி ஏள இயலவில்லை. பெருமாள் குளக்கரை புறப்பட்டு கண்டு அருளி சுங்குவார் தெரு வழியாக எழுந்து அருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.


மெரினா கடற்கரையில் (முன்பு சீரணி அரங்கம், திலகர் திடல் இருந்த இடம்) எழுந்து அருளினார். எனது சின்ன வயதில் பெருமாளுக்கு அழகான பந்தல் போடப்பட்டு திருமஞ்சனம் கண்டு அருளினது ஞாபகம் உள்ளது. கால போக்கில் பல விழயங்கள் மாறி உள்ளன. சமீப காலங்களில் பெருமாள் எழுந்து அருள்வது மட்டுமே.


அதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் புறப்பட்டு கண்டு அருளி கடற்கரையை அடைந்தார். சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த உடன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்தனர். சாதாரண நாட்களில் கடலில் குளிக்க கூடாது என்பர் பெரியோர் - இன்று போன்ற முக்கிய தினங்களில் குளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இன்று காலை நான் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.


அடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.

கோவில் வாசலில் 
சக்கரத்தாழ்வார்

சுங்குவார் கிழக்கு வாயில் அருகே 



திரும்புகால்



Tuesday, February 16, 2010

சுவாமி எம்பார் சிறப்பு



29th Jan 2010 was special as it was combination of Thai Pusam and Embar Satrumurai. Sri Parthasarathi had periya maada veedhi purappadu in ‘Kaalinga Narthana thirukolam’ accompanied by Sri Embar and Senai Mudalvar. For Saivaites – thai poosam on pournami day is significant as it commemorates the birth day of Murugan and the occasion when Parvati gave Subramanyar a spear for vanishing the demon Soorapadman.


In Triplicane, traditionally on Thaipusam day, Sri Parthasarathi visits Big Street – the long winding Veeraghava Mudali Street – big street of yore but now narrow lane very difficult to traverse. This is a Uthsavam where Perumal probably went to the field for harvesting (kadhir aruthal). In my childhood days remembered that Perumal would come till the Pycrofts road junction where a pandal would be erected. Slowly, even the pandal disappeared.
உடையவர் 
For Srivaishnavaites – Thai Punarvasu is of great importance being the Thirunakshathram (birthday) of Swami Embar. He was a cousin of Ramanujar. Swami EmBaar was born as Sri Govindar in Madhuramangalam (then known as Mazhalai mangalam) proximate to Sriperumpudur, closer to Sunkuvar chathiram. He was born in Krothana Samvatsaram (1026 AD). Embaar born to PeriyaPiraati and Kamala nayana Bhattar . Swami Ramanujar is known as the incarnation of ThiruAnanthazhvan and Swami Embaar as the incarnation of Periya Thiruvadi . arising out of his connection to Periyathiruvadi, the Theertham of this temple is known as Garuda Pushkarini and it is believed that at this place any snake or poisonous insects will not harm anyone. The Avathara Mandapam of Swami Embaar is located around ½ km from the temple


Govinda studied under Yadava prakasar and rescued Ramanujar from the plot- the Guru Yadavaprakasa hatched. Legend has it that while taking bath in a river, a shivalinga landed in his palm and he became an orthodox Saivatie for a while. He stayed in kaalahasthi praying and offering pooja to the lingam. During this period he was known as ‘ullangai konarntha nayanar’.


A great Acharya and uncle of Ramanuja - Thirumalai Nambi along with his disciples went to Kaalahasthi and started delivering upanyasams (discourses) next to where Govindha was offering floral prayers to the linga. He started with the great epic Ramayana on which Swamy Thirumalai Nambhi was quite well versed but could not succeed. Then he discoursed on Srimath Bhagawatham and then continued on Gita. All these efforts did not fructify. Then he discoursed on Maran’s tamizh vedam – Thiruvaimozhi. In the pathu titled “Thinnan veedu” – there is a pasuram - dhevum epporulum padaikkap poovil naanmukhanaip padiaatha - devan Emperumaanukkallal Poovum poosanaiyum thagume ?


which would mean “ Maha Vishnu is the One who created everything – including all demi gods and all beings, sentient, non-sentient- is Chathurmukha Brahma (he is the one who created even Sivan); and it is the Lord Sriya Pathi Sriman Narayanan – the Primordial Chief who as the indweller enabled Brahma to do so… Essentially it is MAHA VISHNU who does it all..
அவதார ஸ்தலத்தில் எம்பார் 
Chathur mukhan the creator was created on the lotus flower from the navel of Emperuman and Azhwar asks whether any flower could be meant for some one else but HIM – the only one unparalleled !! Govindar jumped down crying ‘thagathu ! thagathu ! (cannot cannot). He fell down at the feet of Thirumalai Nambhi… with tears rolling down his cheeks and cried for saving him and to change him to a Vaishnavaite again.


Embaar’s attachment to Ramanuja can be understood by the excellent description of the divinely beautiful thirumeni azhagu :
Embar's enjoyment of seeing Sri Ramanujacharya's lotus feet , tender fingers reminding one of the creepers, sacred saffron robe, most auspicious poonool, thridandam , His enchanting smile laden with Daya , large dark eyes reminiscent of wish yielding karpaka maram (tree), the kudumi (sikha) formed by abundant tresses is simply beautiful . Embar declares that there is no one equal to him; since Yathirajan's Divine Beauty lingers in his heart.




A great contribution to Vaishnavism is Embar being the acharya to the greatest Sri Parasara Bhattar (son of Koorathazhwan). Legend has it that when Udayavar asked Embar to bring baby Parasarar for naming, Embar by way of protection muttered Dvaya mantram in the infant’s ears and that placed on the baby unusual brilliance. Upon instruction of Udayavar, Embar became the Acharya of the baby and thus vaishnavaites are endowed with a great Acharyar – Sri Parasara Battar.


He attended Ramanujas all lectures, discourse, debates expositions and dispositions and served his master as a shadow. With great resolve and commitment, he secured sanyasa from Udayavar and obtained robe of an ascetic. Udayavar named him Emperumanar but he could not accept this and pleaded that he did not deserve this honour, upon which Udayavar called him “Embar”


In the year 1137 the greatest of Acharyas Ramanujar left for heavenly abode resting on the lap of Embar. His moving away left Embar sans any interest in life and four years later, he followed the Jagadhacharyar. His work ‘Vijnaasthuthi” will ever be remembered by posterity.


Sri Bhagavath Ramanujar Thiruvadigale Saranam


Adiyen Srinivasa dhasan.

Monday, February 15, 2010

THIRUVALLIKKENI THEPPOTSAVAM

To live in punya bhoomi is fortunate. To have darshan of Perumal often is more fortunate. Sri Parthasarathi Swami temple is an important Sri Vaishnava Divya desam dedicated to Lord Krishna – the name “Parthasarathi” in sanskrit means the charioteer of Arjuna. Legend has it that Emperuman offers darshan as sarathi, coming as he did after the great Maha Baratha war with scars all over his face. This is an ancient temple traced to the period of Pallavas of 8th century, then later renovated by Chola kings and Vijayanagara Kings. This temple finds a mention in the songs of Peyazhwar, Thirumazhisai azhwar and Thirumangai Azhwar – known as mangalasasanam.


The temple tank (I had written earlier on SYMA cleaning the tank and maintaining it) is Kairavani Pushkarini which would literally give the name for the place “Thiru Allikkeni” – tank consisting of sacred lily flowers. Thiruvallikkeni in course of time became Triplicane. The tank has added significance attributed to the birth of “Yathi Rajar” – Swami Ramanujar due to the penance undertaken by Kesava Somayaji and Kanthimathi ammal. Pushkarinis were developed closely associated with temples. The water from the tank was once used daily for thirumanjanam and all other religious functions of the Lord. The conclusion of Brahmotsavam would be by ‘thirthavaari’ the sacred bath at the tank.


Every year there would also be the ‘theppam’ – the float festival. A floating structure made up of drums, timber would be constructed and would be beautifully decorated. Perumal would come to the temple tank in purappadu and placed majestically inside the float. The beautifully lit theppam would be dragged around in water. Devotees in hundreds would converge and sit everywhere on the steps of the temple tank to have darshan of the Lord on theppam.


The annual float festival of the Sri Parthasarathy Swamy temple starts every year on Maasi Ammavasai day and is a 7 day affair. The first three days, Sri Parthasarathi would embellish the theppam; the rest four days are for Sri Narasimhar, Sri Ramar, Sri Ranganathar and Sri Varadarajar.


In my young days, the tank was much bigger and would brim with water – so the size of the float also would be much bigger. Now a days, it is much smaller in size, though the grandeur of the festival has only increased.


This year the Theppa Utsavam began on 12th Feb 2010 and yesterday was the second day. Here are some photos taken by me during the celebrations at temple tank.


Adiyen
Srinivasa Dhasan

the theppam
perumal in purappadu





ghoshti inside theppam

perumal inside the theppam





another view of theppam with neerazhi mandap in background

Sunday, February 7, 2010

THE QUIZ CONTEST :GOLDWINNER - SYMA CHILDFEST 2009-10 : THE ANSWERS

Yes Quiz is always interesting. There could be clues strewn around and some lateral thinking is required.


Here are the answers.


1. Sitter – The Bharat Ratna
2. Sir Isaac Newton
3. The Nobel Prize winners in Chemistry who shared with Venkatraman Ramakrishnan, Thomas A Steitz of USA & Ada E Yonath of Israel
4. the river Krishna
5. Newzealand
6. the state of Sikkim
7. Michael Fred Phelps (30/06/1985)- an American swimmer. He has won 14 career Olympic gold medals
8. He is the only Indian in the list of players who was never dismissed for a duck in the One dayers – having played 43 matches and scoring 883 runs
9. this was about the Indian connection of the Nobel Laureate – Ronald Ross born in Almora, now part of Uttrakhand, awarded Nobel in Physiology or Medicine in 1902 for his work on Malaria. His first posting was in Madras, worked in Ooty, and did research in Secunderabad and has a road named after him in Kokatta as Ronald Ross Sarani.
10. Martin Marty Cooper – lead Engineer of the Motorola Team that developed the first handheld phone – the mobile phone.


Hope you enjoyed this.


With regards – S Sampathkumar.

Tuesday, February 2, 2010

SRIVAISHNAVISM - INTRODUCTION ABOUT AZHWARGAL

Dear (s)

Srirangam Rangarajan aka Sujatha is arguably one of the best writers of our times who could astonish every one with his great stories, short stories, dramas and his writings on Science.  He has done yeomen service to the cause of vaishnavaism by quoting Divya prabandham exquisitely in his books and by speaking of its greatness in many forums.

Stumbled upon his simple lucid introduction to Azhwars - extracted from www.desikan.com and posted as it is…


With regards - S Sampathkumar.


Reproduced for spreading the great mastery info for more people…




முன்னுரை : முதலில் ஆழ்வார் என்கிற சொல்லுக்கு என்ன பொருள் என்று பார்ப்போம்.
பகவானின் குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுபவர்களை ஆழ்வார்கள் என்று சொல்வார்கள். பகவான் விஷ்ணுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. எதிலும் தீவிரமாக ஆழ்பவர்களை ஆழ்வார் என்று அழைக்கலாம். துக்கத்தில், துயரத்தில், சந்தோஷத்தில் ஆழ்வாரும் உண்டு. ஏ.கே. ராமானுஜன் ஆழ்வார் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த புத்தகத்துக்கு Hymns for the Drowning என்று பெயர் வைத்தார். வெள்ளத்தில் மூழ்குபவர்களுக்கான பாடல்கள் என்று. பக்தி வெள்ளம். 'ஆசைப்பட்டு ஆழ்வார் பலர்' என்று திருமழிசையாழ்வாரே நான்முகன் திருவந்தாதியில் சொல்லியிருக்கிறார். நான் சொல்லப் போகும் ஆழ்வார்கள் தனிச் சிறப்புள்ளவர்கள்.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் அருமையான வைணவ நூலின் பாடல்களை இயற்றியவர்கள். ஒரே ஒரு பாடலை முதலில் மாதிரி பார்ப்போம்.

நீயே உலகெலாம் நின் அருளே நிற்பனவும்*
நீயே தவத் தேவ தேவனும் – நீயே*
எரிசுடரும் மால்வரையும் எண் திசையும் அண்டத்து*
இரு சுடரும் ஆய இவை ………………….  ஏழாம் நூற்றாண்டில் - எழுதப்பட்ட இந்த வெண்பாவின் அற்புதம் ஏறக்குறைய உங்களுக்குப் புரியும் என்று எண்ணுகிறேன். கடவுளைப் பார்த்து,

நீதான் எல்லா உலகமும்.; பூமியில் நிலைத்திருப்பவை யெல்லாம் உன்அருள்.; நீதான் தேவர்களுக்கெல்லாம் தேவன். ; நீதான் நெருப்பு, நீதான் மலை, நீதான் எட்டுத் திசைகளும் நீதான் சூரியன் சந்திரன். ~~ இவ்வகையிலான அபாரமான நாலாயிரம் பாடல்களைக் கொண்டது திவ்வியப் பிரபந்தம் - அவைகளைப் பாடிய ஆழ்வார்கள் பற்றியது இந்தக் கட்டுரைத் தொடர்.

ஆழ்வார்கள் பத்துப் பேர். அவர்கள் பெயர்கள் இவை : பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், இவர்களுடன் விஷ்ணுவை நேரடியாகப் பாடாமல் நம்மாழ்வாரைப் பற்றிப் பதினோரு பாடல்கள் பாடிய மதுரகவியாழ்வாரையும் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடிய பெண்பாற் புலவரான ஆண்டாளையும் சேர்த்துக் கொண்டு ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர் என்று சொல்வதும் உண்டு. பெண்களையும் ஆழ்வார் என்று குறிப்பிடும் பழக்கம் - பழந்தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. ஆழ்வார் பராந்தகன், குந்தவைப் பிராட்டியார், மதுரகவியாழ்வார்., குலோத்துங்க சோழன் மகளார் அம்மங்கையாழ்வார் போன்ற சோழ சாசனங்களிலிருந்து, இந்தச் சொல் இருபாலார்க்கும் பயன்பட்டது என்பது தெரிகிறது. ஆண்டாள் என்னும் பெயரில் - ஆள் என்பதே ஆழ்வாரின் - பகுதி என்று எண்ண வைக்கிறது.

ஆழ்வார் என்கிற சொல்லை ஜைன, பௌத்த ஞானிகளுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக மயித்திரியாழ்வார் என்று புத்ததேவர்க்குப் பெயருள்ளதைத் தக்கயாகப் பரணி என்னும் நூல் சொல்கிறது. அவிரோதியாழ்வார் என்று ஒரு ஜைன முனிவருக்குப் பெயர் இருந்திருக்கிறது.

ஆழ்வார் என்ற பட்டம், நேரடியாகக் கடவுள் என்கிற பொருளிலும் - ஆழ்வார் திருவரங்கத் தேவர்- என்று சோழ சாஸனங்களில் வருகிறது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தை இயற்றிய ஆழ்வார்கள் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. சங்க காலத்துக்குப் பிற்பட்டும் பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் காலத்துக்கு முற்பட்டும் ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். இவர்கள் காலத்தைப் பற்றிப் பின்னால் விவரமாகச் சொல்லப் போகிறோம்.

இவர்கள் ஒரே குலத்தை சேர்ந்தவர்களும் இல்லை. முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் 'அயோநிஜர்கள்' என்று விவரிக்கப்படுகிறார்கள். இவர்கள் கண்டெடுக்கப்பட்டவர்கள் என்பதும் பிற்பாடு ரிஷிகளாக இருந்தவர்கள் என்பதும் தெரிகிறது. திருமழிசையாழ்வார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்பது அவர் பாட்டிலிருந்தே தெரிகிறது.

குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் ~ என்று அவரே சொல்லிக் கொள்கிறார். பெரியாழ்வார் வேயர் குல அந்தணர் (மூங்கிலைச் சார்ந்த பார்ப்பனக் குடியினரை வேயர் என்று சொன்னார்கள்). பெரியாழ்வாரால் ஒரு துளசித் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, ஆண்டாள். திருமங்கையாழ்வார் கள்வர் குலத்தைச் சார்ந்தவர். குலசேகர ஆழ்வார் சேரநாட்டு அரச குலத்தைச் சார்ந்தவர். திருப்பாணாழ்வார் அந்திம வம்சம் பஞ்சம குலம் என்று அப்போது அழைக்கப்பட்ட பாண வம்சத்தில் பிறந்தவர். தொண்டரடிப் பொடியாழ்வார் பிராமணர். நம்மாழ்வார் வெள்ளாள சிற்றரசர் வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் மாணாக்கரான மதுரகவி, பிராமணர். இவ்வாறு எல்லாக் குலங்களிலும் ஆழ்வார்கள் இருந்திருக்கிறார்கள்.

சாதி வித்தியாசம் பார்க்காமலிருப்பது வைணவக் கருத்துக்களில் தலையாயது. அந்தணருக்கான கிரியைகள் அவர்களுக்கு முக்கியமில்லை. அவைகளைப் புறக்கணித்தார்கள் என்பதற்குக்கூட ஆதாரம் இருக்கிறது. அந்தணரான தொண்டரடிப் பொடியாழ்வார்,

“குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள்அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்” - என்று சொல்லும்போது தினம் குளிப்பதும் மூன்று முறை அக்கினி ஹோத்திரம் செய்வதும் போன்ற rituals முக்கியமில்லை என்பதை வலியுறுத்துகிறார்.

முதலாழ்வாரான பொய்கையாழ்வார், : புத்தியால் சிந்தியாது ஓதி உருவெண்ணும், அந்தியால் - ஆம்பயன் அங்கென்?  - என்று பாடும்போது பகவானை மனத்தால் நினைக்காமல் வேறு மந்திரங்களை உருப்போட்டுச் செய்யும் சந்தியாவந்தனத்தால் பயனே இல்லை என்று கூறுகிறார். ஆரம்பத்திலிருந்தே சடங்குகள் முக்கியமில்லை என்கிறது வைணவம்.

தொண்டரடிப் பொடியாழ்வார், இழிகுலத்தவர்களேனும் எம் அடியார்கள் ஆகில் தொழுமினீர் கொடுமின் கொண்மின் - என்று வைணவராக இருந்தால் போதும்; குலம் முக்கியமில்லை; அவர்களைத் தொழுது அவர்களுக்குக் கொடுக்கலாம், கொள்ளலாம் என்கிற சாதியற்ற வைணவத்தின் ஆணிவேர் ராமானுஜர் காலத்துக்கு முன்பே இருந்திருக்கிறது.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் நம்மாழ்வார்,
''குலத்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து
நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு
ஆள் என்று உள் கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே''

எத்தனைதான் கீழான சாதியராக இருந்தாலும் சக்கரத்தை வலது கையில் வைத்திருக்கும் விஷ்ணுவின் ஆள் நான் என்று உள் கலந்துவிட்டால், அவர்களின் அடியவர்களுக்கு அடியவர் நாங்கள் என்று கூறும் இந்தக் குரல் எட்டாம் நூற்றாண்டிலேயே சாதி பாராட்டாத பக்திக் குரல்.

பிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களின் வரிசைக் கிரமம் அவைகளைத் தொகுத்த நாதமுனிகள் அமைத்தது. இக்கட்டுரைத் தொடரில் அந்த வரிசையைப் பயன்படுத்தினால் - ஒரே ஆழ்வாருக்குப் பலமுறை திரும்ப வரவேண்டியிருக்கும். அதனால் ஆழ்வார்கள் வாழ்ந்த கால வரிசைப்படி அவர்கள் பாடல்களையும் தத்துவங்களையும் விளக்க முற்படுகிறேன். இக்கட்டுரையில் உள்ள வைணவக் கருத்துக்கள் யாவும் பெரிய மகான்களும் உரையெழுதியவர்களும் வியாக்யானக்காரர்களும் கொடுத்த கருத்துக்கள். என் சொந்தக் கருத்துக்கள் அங்கங்கே இருப்பின் அதை நான் தனியாகக் குறிப்பிடுகிறேன். பிரபந்தத்தில் என் ஈடுபாடு நான் ஒரு வைணவன் என்கிற கோணத்தில் மட்டும் இல்லை. அதன் தமிழ் நடையும் சொற் பிரயோகங்களும் என் எழுத்துத் திறமைக்கு வலுவான பின்னணியாக இருந்திருக்கின்றன. பிரபந்தத்தில் குறிப்பாக நம்மாழ்வார் திருவாய் மொழியில் உள்ள பிரபஞ்சக் கருத்துக்கள் இயற்பியல் காஸ்மாலஜி கருத்துக்களுடன் ஒத்துப் போவதை ஓர் அறிவியல் உபாசகன் என்ற முறையில் வியந்திருக்கிறேன். அந்த வியப்புக்களையும் உங்களுக்குக் கொடுக்க முயல்கிறேன். உதாரணமாக -

நம்மாழ்வாரின் பாசுரம் ஒன்று இவ்வாறு துவங்குகிறது.

ஒன்றும்தேவும் உலகும் உயிரும் யாதுமில்லா
அன்று நான்முகன் தன்னோடு தேவர்
உலகோடு உயிர் படைத்தான்
ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஒரு கட்டுரையில் (The Origin of the universe),

Although Science may solve the problem of how the universe began, it cannot answer the question why does the universe bother to exist என்கிறார். அதற்கு ஆதிகாரணமாக ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என்பதை அறிவியலாளர்கள் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள். எதுவுமே இல்லாத, காலம் கூடத் துவங்காத அந்த முதற் கணத்திற்கு முற்பட்ட நிலையைப் பற்றி இயற்பியல் Singularity என்கிறது. நம்மாழ்வாரும் அதைத்தான் சொல்கிறார்.

இந்த முன்னுரையுடன் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வாரின் முதல் பாடலைப் பார்ப்போம்.

வையம் தகளியா(ய்) வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று ~   

என்று கம்பீரமான மிகப் பெரிய விளக்கு ஒன்றை ஏற்றுகிறார் பொய்கையாழ்வார்.  உலகம்தான் அகல், கடல்தான் நெய், சூரியன்தான் ஒளிப்பிழம்பு, இம்மாதிரியான பிரம்மாண்டமான விளக்கை சக்கரம் ஏந்திய விஷ்ணுவின் பாதத்தில் ஏற்றி, சொற்களால் ஒரு மாலை அணிவித்தேன், என் துன்பக்கடல் எல்லாம் நீங்குக என்று.

இதைச் சொல் மாலை என்பது எத்தனை பொருத்தமானது!

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் ஆளுக்கு நூறு பாடல்கள் பாடியிருக்கிறார்கள். அவை அந்தாதி என்னும் வடிவில் உள்ளன. அதாவது, முதல் பாடலின் கடைசி வரியில் அடுத்த பாடலின் ஆரம்ப வார்த்தை இருக்கும். இப்படிச் சொற்களை மாலை போன்று தொடுக்கிறார்கள் மூவரும். அதில் விசேஷம் நூறாவது பாட்டின் கடைசி வார்த்தை முதல் பாட்டின் முதல் வார்த்தை. உதாரணமாக முதல் பாடல் 'வையம்' என்று ஆரம்பிக்கிறது. 'என்று' என்பதில் முடிகிறது. அடுத்த பாட்டு - 'என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது' என்று துவங்குகிறது. பொய்கையாழ்வாரின் முதல் திருவந்தாதியின் நூறாவது பாடல் மாயவனை மனத்து வை என முடிகிறது! மாலை ஒரு சுற்று முற்றுப் பெற்று விட்டதல்லவா?

வைணவ சம்பிரதாயத்தின் கருத்துக்களைப் பரப்பும் பெரியோர்களை ஆழ்வார்கள், ஆசாரியர்கள் என்று இரு வகைப்படுத்துவார்கள். இவர்களில் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர். ஆசாரியார் என்போர் ஆழ்வார்களுக்குப் பிற்பட்டவர்கள். பிரபந்தத்தைத் தொகுத்த நாதமுனிகள் இவர்களில் முதலானவர். ஆழ்வார்கள் சொன்ன வழியைப் பின்பற்றி வைணவக் கருத்துக்களை நாட்டில் பரப்பி நல்வாழ்வுக்கு வழிகாட்டுபவர்கள் ஆசாரியார்கள். இன்றைய நாட்களில் கூட ஒவ்வொரு வைணவனுக்கும் ஒரு ஆசாரியர் இருப்பார். அவரிடம் தத்துவ விளக்கங்கள் கேட்டறியலாம். இந்த மரபு தொடர்கிறது.

ஆழ்வார்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் உள்ளன. டாக்டர் மு.இராகவையங்கார் அவர்கள் எழுதிய ''ஆழ்வார்கள் கால நிலை'' என்கிற புத்தகம் முதன்மையானது. அதில் வரும் கருத்துக்கள் அத்தனையுடனும் ஒத்துப் போக முடியாவிட்டாலும் ஐயங்காரின் ஆராய்ச்சி முறை விஞ்ஞானபூர்வமானது.

வைணவ வரலாறுகள் அவ்வளவாகச் சரித்திர உண்மையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கருடவாகன பண்டிதர் என்பவர் ராமானுஜரின் காலத்தவர். அவர் சமஸ்க்ருதத்தில் 'திவ்ய சூரிசரித்திரம்' என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதிலும் பின்பழகிய பெருமாள் சீயர் என்பவரால் ஆக்கப்பட்ட ஆறாயிரப்படி குருபரம்பரை என்கிற, சமஸ்க்ருதமும் தமிழும் கலந்த மணிப்ரவாள நடையில் எழுதப்பட்ட, நூலும் ஆழ்வார்களின் பிறந்த தினங்கள், அவர்கள் வாழ்வின் சம்பவங்களை விவரிக்கின்றன.

ஆனால், நவீன ஆராய்ச்சி முறைப்படி உணர்ச்சியும் பக்தியும் கலந்த இந்தக் கதைகளை சரித்திரச் சான்றுகளாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் உள்ளது. எனவே, ஆழ்வார் பாடல்களிலேயே கிடைக்கும் அகச்சான்றுகளிலிருந்தும் மற்ற, பக்தி சாராத இலக்கண இலக்கிய நூல்களின் மேற்கோள்களிலிருந்தும் தற்செயலான வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் ஆழ்வார்கள் காலத்தை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.


***************************