To search this blog

Saturday, September 24, 2011

Thiru mayilai Peyalwaar Thiruvallikkeni Mangalasaasanam 2011

Azhwaargal were totally immersed in their devotion and bakthi to Lord Sriman Narayana.  Our Vaishnavaite tradition hails 12 Azhwaars who have sung hymns on Lord Narayana, collectively known as “Naalayira Divya Prabandham” – (4000 divine songs in praise of Lord)

Amongst them, Poigai Azhwar, Boothath Azhwar and Peyazhwaar are known as Muthal Azhwargal – the first amongst azhwaargal.  Peyalwaar was born in Mylapore in a lily flower in a well (this place is presently in Arundale Street,  Mylapore).  Peyalwar has sung in praise of Thiruvallikkeni Divyadesam and Lord Parthasarathi.

Every year Sri Peyalwar from ‘Mylai Aadi Kesava Perumal Devasthanam’ visits Thiruvallikkeni (mangalasaasanam of Perumal Parthar).  This has been well organized by the Devasthanam and with the great efforts of Sri NC Sridhar, who has been doing lot of kainkaryams to many divyadesams. 

This year Peyalwar visited Thiruvallikkeni on 23/09/2011.  It was indeed a grand occasion providing great festivity to Triplicane area.

Evening at around 0700pm there was the magnificent purappadu of Azhwar with Lord Parthasarathi.  It was grand replete with fireworks, horses and thoranams, a big divyaprabandha goshti and the Lord glittering in his resplendence.

Here are some photos taken during the grand purappadu.


முதலாவார்   மூவரே என நமது ஆழ்வார்களில் "பொய்கையார், பூதத்தார், பேயார்" என மூன்று ஆழ்வார்கள் - முதலாழ்வார்கள் என போற்றப்படுகின்றனர் .  இவர்களில் பேயாழ்வார்  திருமயிலையில் (மயிலாப்பூர்) ஒரு கிணற்றில் மலர்ந்த செவ்வல்லி மலரில் உதித்தவர்.   இவர் உதித்த புனித நாள் ஐப்பசி மாதம் சதய நக்ஷத்திரம் பொருந்திய சுப தினம்.  இவர் திருமாலின் நாந்தகம் எனும் திருமாலின் வாளின் அம்சம்

பேயாழ்வார் தமது மூன்றாம் திருவந்தாதியில் திருவல்லிக்கேணி எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார்.   திருமாலின் திருப்பெயரை ஓதிடுவார் யாவரும் ஒளியும்ஆற்றலும், செல்வமும், உருவச் சிறப்பும், உயர்குடிப் பிறப்பும், பிற எல்லா நன்மைகளும் அடைந்து மகிழ்ச்சியாய் வாழ்வர் என உறுதி படக்கூறுகின்றார்.
திருவல்லிக்கேணி   எம்பெருமானை : 

வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்*
அந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று.

                                                                              - என பாடியுள்ளார்.    கடற்கரையில் வெள்ளை அலைகள் வந்து உதைக்க சிவப்பான பவளம், வெண்மையான முத்துக்கள், அந்தி நேரத்தில் அழகான மங்கள  விளக்குகள்  என விளங்கும்  திருவல்லிக்கேணியில்    பிராட்டி வந்து திருமார்பை உடைய எம்பெருமானை சேவித்து பாடிய பாடல் இது.  


மயிலை கேசவ பெருமாள் கோவில் அழகான கோவில்.  திரு என் சி ஸ்ரீதர் போன்றோரின் முயற்சியால் - மயிலை பேயாழ்வார் அல்லிக்கேணி எழுந்து அருளி  ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் மங்களாசாசனம் செய்வது நன்கு நடந்து வருகிறது. இவ்வருடம்  23/09/2011 அன்று பேயாழ்வார் மங்களாசாசனம் வைபவம் சிறப்புற நடந்தது

மாலை ஏழு மணியளவில் வானவேளிக்கை, குதிரைகள், பதாகைகள், பெரிய திவ்யப்ரபந்த கோஷ்டி என ஸ்ரீ பார்த்தரும் பேயாழ்வாரும் ஒன்றாக புறப்பாடு எழுந்து அருளியது மிக சிறப்பாக திகழ்ந்தது.

புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :

ஆழ்வார்  அல்லிக்கேணி எழுந்து அருளுதல்




மாலை புறப்பாட்டில் ஆழ்வார்


ஸ்ரீபெரும்புதூர் சின்ன ஜீயர் சுவாமி - திவ்ய பிரபந்த கோஷ்டி




ஸ்ரீ பார்த்தர்





குதிரைகள், பதாகை, நாதஸ்வரம் மற்றும் பல 

Monday, September 12, 2011

Sri Parthar Pavithrothsavam - (5) - 11092011

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு பவித்ரோத்சவம் விமர்சையாக நடந்து வருகிறது. 

நேற்று (11/09/2011) அன்று ஐந்தாம் உத்சவம்.  மாலை உத்சவர் பார்த்தர் முத்தங்கி அணிந்து மிக அழகாக சேவை சாதித்தார். 

புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாசதாசன் 







Sunday, September 11, 2011

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம்


திவ்யதேசங்களில் வருடந்தோறும் நடக்கும் உத்சவங்களில் திருப்பவித்ரோத்சவம்  ஒரு முக்கியமான உத்சவம். இவ்வருடம்  ஆவணி 20  (செப்ட் 6) செவ்வாயன்று அங்குரார்பணத்துடன் உத்சவம் தொடங்கியது.

ஏழு நாட்கள் புறப்பாடு, திருவாய்மொழி சேவை மற்றும் யாக சாலை என சிறப்புறும் இவ் உத்சவத்தின் நான்காம் நாள் புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :






அடியேன் ஸ்ரீனிவாச தாசன்