Panoramic night view of Thiruvallikkeni
Sri Parthasarathi perumal thirukkovil
vimanangal and gopurangal – taken a decade ago [in 2016]
Panoramic night view of Thiruvallikkeni
Sri Parthasarathi perumal thirukkovil
vimanangal and gopurangal – taken a decade ago [in 2016]
திருமலை திருப்பதியில் கண்டு களிப்புற்ற பூக்களும்,
ஆனந்த விமானமும், பெரிய கோபுரமும்
Of the many divyadesams sung by Azhwaargal, Thirumala occupies a very prominent position. Our Acharyan Emperumanaar (Udayavar, Ramanujar, Bashyakarar……….) did many service to the Lord here and Udayavar was instrumental in many of the religious practices being established in Thirumala. His disciple ‘Thirumalai Ananthazhwaan’ did Nandavana kainakryam (floral offerings daily) to the Lord here as ordained by his Acharyar.
Swami Nammalwar in his pasuram describes Lord
of Seven Hills Thirumalaiyappan
"சிந்து பூ" என்பது திருவாய்மொழியின் மூன்றாம் பத்து, மூன்றாம் திருவாய்மொழியில் (3.3.2) வரும் ஒரு வார்த்தை. இதன் பொருள் "சிந்தி (பரவி) இருக்கும் மலர்கள்" என்பதாகும், இது திருவேங்கடத்தில் தேவர்கள் மலர்களை தூவி வணங்குவதைக் குறிக்கிறது.
Swami NammalvĀzhvār
begins this pasuram by establishing the
Lord as the very foundation of his lineage, proclaiming, endhai... ("My
father..."). This declaration serves a profound theological purpose. he now establishes the supreme nature of the
Lord (parasvarūpa) by tracing his own ancestry upwards to its ultimate source:
Śrīman Nārāyaṇa Himself. This affirms Bhagavān as
the primary relative and progenitor of our entire ancestral chain.
This Supreme Lord at holy Thirumala is worshipped by the highest of celestials. The term vānavar refers to the nityasūris, and their leader, vānavarkōn, is none other than the great commander, Śrī Sēnāpati Āzhvān, also known as Viṣvaksēnar. To a query why he is rendering service unto the Lord at Tiruvēṅkaṭam when the final goal is service of the Lord in spiritual world, the Āzhvār replies that even the Nithyasuris headed by Śrī Śēṉāimuthaliyar come down, in their strength, to serve the Lord at Tiruvēnkaṭam.
சிந்து பூ மகிழும் திருவேங்கடத்து: தேவர்கள் தங்கள் தலைவனான சேனை முதலியாரோடு வந்து பூக்களைத் தூவி
மகிழ்கின்ற திருவேங்கட மலையில் வீற்றிருப்பவர், எல்லையற்ற புகழைக் கொண்ட, மேகம் போன்ற
கார்வண்ண எம்பெருமான் திருவேங்கடமுடையான்.
எங்கள் தந்தை, அவருக்கு முன் சென்ற தந்தை, அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர்
என்று எத்தனை தலைமுறைகளைச் சொன்னாலும், அவர்களுக்கு எல்லாம் முன்பாகத் திகழும் இறைவனே,
தேவர்கள் தங்கள் தலைவனோடு வந்து பூக்களைத் தூவி மகிழும் திருவேங்கட மலையில் வீற்றிருக்கும்,
முடிவில்லாத புகழைக் கொண்ட எம்பெருமானே என்று
எம்பெருமான் புகழ் பாடி, எம்பெருமானுக்கு
அடிமை செய்ய வேண்டும் என்ற கருத்தையும் ஸ்வாமி நம்மாழ்வார் வலியுறுத்துகிறார்.
திருவேங்கடமுடையானை ஸேவிக்க விரும்பி திவ்யபுஷ்பங்களை
யெடுத்துக்கொண்டு இங்கே வருகிறார்கள்; அப்புஷ்பங்களைத் திருமலையப்பனுடைய பாதாரவிந்தங்களில்
யதாக்ரமமாக ஸமர்ப்பிக்க-சக்தராகாதபடி சீலகுணத்திலே உருகி நிற்கிறார்களாதலால் அவர்களது
கைகளிலிருந்து புஷ்பங்கள் அவசரமாகவே சிந்துகின்றனவாம்; அப்படிச் சிந்தின புஷ்பங்கள்
செல்விகுன்றாமல் விகாஸமும் பரிமளவும் மல்கி விளங்குகின்றனவாம். அப்படிப்பட்ட திருமலையில் அந்தமில் புகழ்பெற்று
விளங்காநின்றான் எம்பெருமான்.
Vyagynam:
Sri UVE PBA Kachi swamigal – great repository dravidaveda-org.
Thiruvallikkeni vimanangal of Sri Parthasarathi Swami thirukkovil
Sri Alavandhar; Swami Ramanujar, Acaryan
Manavala Mamunigal, Sri Chakravarthi Thirumagan, Srimannathar, Sri Parthasarathi (golden); Sri
Azhagiyasingar (partly hidden); Andal (extreme right) and two white Gopurams of
Sri Azhagiya singar ..
Pic
taken from Peyalwar Koil Street in Feb
2016 (it was thiruther day of Special Brahmothsavam of Sri Parthasarathi ) - Sri
Parthasarathi Perumal samprokshanam had concluded and Sri Azhagiya Singar
balalayam was yet to commence
Thiruvallikkeni
Sri Parthasarathi Perumal Ananda nilaya vimanam
- blessed
are those living nearer and able to have darshan daily
திருவல்லிக்கேணி கண்டேனே ! கோபுர தர்சனம் ! - ஸ்ரீபரமபத நாதன்
ஸ்ரீய:பதியான எம்பெருமான் அர்ச்சா ரூபியாய் உகந்து எழுந்தருளியிருக்கும் திவ்யக்ஷேத்திரங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் நம் திருவல்லிக்கேணி. தேசங்களுள் மிகவும் புராதனமாய், நாரதாதிகளால் பாராட்டப்பெற்று, பரமரிஷிகள் தங்களது தவத்திற்கு ஏற்றதான ஸ்தலம் என்று பெரிதும் விரும்பப்பெற்று, துளஸிவனம் என்று எங்கும் ப்ரஸித்திபெற்ற திருவல்லிக்கேணி திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி செடிக்கள் நிறைந்த ஆரண்யம் (காடு) ஆக இருந்தது. இத்தலத்திற்கு 'கைரவிணி, பிருந்தாவனம், ப்ருந்தாரண்யம், துளசீவனம்' - என பல பெயர்கள் உண்டு.
Sri Paramapadha Nadhan is the form in which Emperuman Sriman Narayana is seated at Paramapadham beyond Universe to which we humans cannot go ! Here are couple of photos of Sri Parthasarathi Emperuman Paramapadanadhan thirukkolam and Sesha vahanam at Thiruvallikkeni divaydesam.
நமது சம்ப்ரதாயத்திலே - எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பது ஸ்ரீ பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார்.
திருப்பரமபதம் அல்லது வைகுந்தம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான ஒன்று - நாம் இந்த சரீரத்துடன் செல்ல இயலாத இடம். வாசுதேவன் வைகும்படியான (வாழும்படியான) இருப்பிடமாதலால் வைகுந்தம் என்று பெயர். வைணவ அடியவர்கள் கடைசி நிலையாகிய வீடுபேறு அல்லது மோட்சம் அல்லது முக்தி என்ற நிலை எய்தி செல்லும் இடமாகும். மோட்சம் பெறுவதே குறிக்கோள் என்றெண்ணும் அடியார்கட்கு இந்த பரமபதமே எல்லை நிலமாகும். பரமபதத்திலிருந்து தன்னை வ்யூகப்படுத்தி விபவ, அர்ச்சாவதாரங்களில் தன்னைக் காட்டிக்கொடுத்து இவைகளே பரத்தினும் மேலானவை என்று எண்ணி ஆட்பட்ட அடியவர்களை, பூவுலகில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட காலம் முடிவுற்றபின் அவனே வந்து அழைத்துச் செல்கிறான். அப்படி அங்கே செல்லும் பெரும்பேறு பெற்ற ஜீவாத்மாக்கள் நித்யசூரிகள் - எப்போதும் அழிவற்ற சக்தியைப் பெறுகின்றன.
இங்கு அடையும் இன்பத்திற்கும் நலத்திற்கும் முடிவே இல்லாததால் நலமந்தமில்லதோர் நாடு என்பதும் அத்தகைய இன்பத்திற்கு “அந்தமில் பேரின்பம்” என்று நம்மாழ்வார் தமது பாசுரங்களில் உரைக்கின்றார். திருநாட்டைப் பற்றிப் புராணங்களாலும் ஆழ்வார் பாசுரங்களாலும் உணரலாம்.
அத்தகைய
அற்புத இடத்திலே - திருவனந்தாழ்வானின் மேல்
- தடக்கையனாய் சங்கு சக்ர கதாதாரனாய், காயாம்பூ இதழ்போல் கருத்தவனாய் தாமரை இதழ்போன்ற
திருக்கண்களை உடையவனாய், கோடி மன்மதர்களை ஒத்த அழகு உடையவனாய். உலகை மயக்கும் திருமேனி
உடையவனாய், கோடிச்சூர்யப் பிரகாசமுடையவனாய், கோமளமான அவயவங்களால் நிற்பவனாய், தோள்வளை,
ஹாரம், முன்கைவளை, சதங்கை முதலான திருஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாய், அப்ராக்ருத
சந்தனத்தால் பூசப்பெற்ற திருமேனியை உடையவனாய். பீதாம்பரத்தை தரித்தவனாய், நித்யயௌவனம்
படைத்தவனாய், ஸ்ரீபூமி, நீளா தேவிகளோடு கூடினவனாய்
பரமேஸ்வரனாய் நித்தியர்களாலும் முக்தர்களாலும் சேவிக்கப்படுபவனாய் பெரியவனாய் ஸர்வவ்வியாபியான
பரமபத நாதன் பேரின்பத்துடன் எழுந்தருளியிருக்கிறான்”.
இதோ இங்கே ஸ்வாமி நம்மாழ்வாரின்
திருவாய்மொழி பாசுரம் :
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்தறச்,
செய்குந்தன்றன்னை என்னாக்கியென்னால்
தன்னை,
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி,
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்தார்வனோ.
பரமபதநாதனாக வீற்று இருக்கும் எம்பெருமான் என்னுடைய பிரபல பாபங்கள் தொலையும்படி செய்பவனாய், பரிசுத்தி பெற்றவனாய் என்னோடு ஒரு நீராகக் கலந்து என்னைக்கொண்டு தன்னை வைகுண்டபதியாகப் புகமும்படி மதுரமான பாசுரங்களை செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய அவ்வெம்பெருமானை சிந்தித்து கை தொழுது அனுசந்திப்பது எந்நாளோ ! அத்தகைய சந்தோசம் என்று அமையுமோ !!
திருவல்லிக்கேணி
திவ்யதேசத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி சன்னதியின்
விமானம் - ஆனந்த விமானம். எம்பெருமான் தம் விமானங்கள் மிக புண்ணியம் தருபவை. திருவரங்கம் - பிரணவாகார விமானம்; திருப்பதி - ஆனந்த
நிலைய விமானம்; திருக்கச்சி - புண்யகோடி விமானம்; திருக்கண்ணபுரம் - உத்பலாவதாக
விமானம் - என இங்கே : ஆனந்த விமானம். இந்த ஆனந்த
விமானத்தின் இடது புறத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீபரமபத நாதனின் சேவை இங்கே. திருக்கோவிலின் உள்ளே
ஆண்டாள் சன்னதி அருகில் இருந்து இவரை நன்கு சேவிக்கலாம்.
திருவல்லிக்கேணி கண்டேனே ! கோபுர தர்சனம் ! ஸ்ரீ நரசிம்ஹர்
ஸ்ரீய:பதியான
எம்பெருமான் அர்ச்சா ரூபியாய் உகந்து எழுந்தருளியிருக்கும் திவ்யக்ஷேத்திரங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலம் நம்
திருவல்லிக்கேணி. தேசங்களுள் மிகவும் புராதனமாய், நாரதாதிகளால்
பாராட்டப்பெற்று, பரமரிஷிகள் தங்களது தவத்திற்கு ஏற்றதான ஸ்தலம் என்று பெரிதும்
விரும்பப்பெற்று, துளஸிவனம் என்று எங்கும் ப்ரஸித்திபெற்ற திருவல்லிக்கேணி திவ்யதேசம் முன்னொரு காலத்தில் துளசி செடிக்கள்
நிறைந்த ஆரண்யம் (காடு) ஆக இருந்தது. இத்தலத்திற்கு
'கைரவிணி, பிருந்தாவனம், ப்ருந்தாரண்யம், துளசீவனம்' - என பல பெயர்கள் உண்டு.
அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடியும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். திருவல்லிக்கேணி பெயர் அமையக் காரணமானது அல்லி மலர்கள் நிறைந்து இருந்த திருக்கோவில் குளம் - கைரவிணி புஷ்கரிணி. நம் பகவத் ராமானுஜர் பிறக்க சோமயாஜி வேண்டி தவம் இருந்த குளம் இது.
வேதங்கள் கர்மபாகம், ப்ரஹ்மபாகம் என்று பிரிவுடையது. கர்மபாகம் பகவானுடைய ஆராதனங்களான
கர்மாக்களைச் சொல் லும். பிரஹ்மபாகம் பகவானுடைய
ஸ்வரூப ரூபகுண விபூதிகளைச் சொல்லும். வேத முதல்வன்
என ப்ரதிபாதிக்கப்படும் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனை அனுதினமும் சேவிப்பது நம் புண்ய
பலன்.
தொண்டை மண்டலத்தில் "துண்டீரம்" என்றும் அழைக்கப்பட்ட நாட்டை "சுமதி" என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு திருமலை திருப்பதியில் கோவில் கொண்டுள்ள "திருவேங்கடமுடையான்" மீது தீவிர பக்தி - இந்த அரசனுக்கு, பார்த்தனுக்கு (அர்ச்சுனனுக்கு) சாரதியாக (தேரோட்டியாக) விளங்கிய கிருஷ்ணன் இத்தலத்தில் குடும்ப சமேதராக சேவை அளித்தார். இங்கே இரண்டு கோபுரங்கள்- கிழக்கு மேற்கு, இரண்டு கொடிமரங்கள். ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் (ஸ்ரீபார்த்தசாரதி உத்சவர்) ஆண்டாள்; ஸ்ரீவேதவல்லி சமேத ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ ராமபிரான், ஸ்ரீ கஜேந்திர வரதர், ஸ்ரீயோக நரசிம்மர் (உத்சவர் தெள்ளிய சிங்கர்) மற்றும் ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சன்னதிகள் அழகாக அமைந்துள்ளன.
கிழக்கு
ராஜகோபுரம் மற்றும் பிற கட்டமைப்புகள் தொண்டமான் சக்ரவர்த்தி முதலில் கட்டியிருந்ததாகக்
கூறப்படுகிறது. . ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி
சன்னதியின் ஆனந்த விமானம், ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி, ஸ்ரீ ராமர் சன்னதி, ஸ்ரீ வேதவல்லி
தாயார் சன்னதி, ஸ்ரீ நரசிம்மர் சன்னதி, மற்றும் ஸ்ரீ ஆண்டாள் சன்னதிகளின் விமானங்களும் அழகுற அமைந்துள்ளன. எம்பெருமான் தம் விமானங்கள் மிக புண்ணியம் தருபவை. திருவரங்கம் - பிரணவாகார
விமானம்; திருப்பதி - ஆனந்த நிலைய விமானம்;
திருக்கச்சி - புண்யகோடி விமானம்; திருக்கண்ணபுரம்
- உத்பலாவதாக விமானம் - என இங்கே : ஆனந்த விமானம்
இங்கே நாம் சேவிக்கும் அற்புத நரஸிம்ஹ மூர்த்தி ஆனந்த விமானத்தில்
எழுந்து அருளி உள்ளார். தங்க தகடுகள் பதித்த
அற்புத விமானத்தின் சேவை இங்கே.
Holy darshan of Sri Narasimha with His consorts – on the
Golden plated Anandha Vimanam at Thiruvallikkeni divyadesam