To search this blog

Wednesday, May 26, 2021

Sri Varadhar uthsavam 2021 ~ தொண்டை நன்னாடு : பெரும்பாணாற்றுப்படை

Where do you live ? – how old is the history of Chennai metropolis !  .. .. how were the geographical positions drawn and redrawn over the years ! – all these might offer lot of interesting historical information !!



வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து - பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்  தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து.. ..


என்றார் ஒளவையார் -  தொண்டை மண்டல சதகம்.  ஆம்,  இந்த தொண்டைநாடு என்பது யாது ?

For a  Srivaishnavaite, Perumal Koil refers to “Sri Varadharaja Swamy temple’ at Kanchipuram.  Legend has it that Brahma performed Asvamedha yaga at mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma himself. Indira’s white elephant Iravatham took the form of a hill called Hastigiri on which shrine of Varadharajar is located. This Swami is known by various names, prominent among them being : Devarajar, Devathirajar, Thepperumal, Varadhar, PerArulalar … 

இது சமயம் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீ வரதராஜர் உத்சவம் நடைபெறும்.  திருவல்லிக்கேணியில் பத்து நாள் உத்சவ புறப்பாடு உண்டு எனினும் திருக்கச்சி தேவாதிராஜரின் ப்ரம்மோத்சவம்  மிக பிராபல்யம்  - இங்கே திருக்கச்சி மூதூரின் சிறப்பும் சில சங்க இலக்கிய சரித்திரமும்.

 

காழோர்  இகழ்பதம் நோக்கிக் கீழ

நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளங்

கடுஞ்சூன் மந்தி கவருங் விற்

களிறு கதனடக்கிய வெளிறில் கந்திற்  .. .. .. 

இளந்திரையன் எனும் மன்னன் ஆண்ட  ஊர் கச்சி. அம்மாநகரத் தெருக்களில் யானைகள் கட்டப்பட்டிருக்கும். காடுகளில் யானைகளைக் குழியில் விழச்செய்து பழக்கிக் கொண்டிருப்பர். காழோர் என்போர் யானைப் பாகர். அவர்கள் சோற்றில் நெய் ஊற்றிப் பிணைந்து கவளமாக்கிப் பழக்கி வைத்திருக்கும் யானைக்கு ஊட்டுவர். இவர்கள் சோர்ந்திருக்கும் காலம் பார்த்து கருவுற்றிருக்கும் மந்தி நெய்ம்மிதி கவளத்தைக் கவர்ந்து சென்று உண்ணும். வெளிறு என்பது யானை கட்டிவைக்கும் இடம். கந்து என்பது பற்றுக்கோடு இங்கு யானையைக் கட்டி வைக்கும் தூண். வெளிறு இல்லாத கந்து என்பது, வைரம் பாயாத இளங் குச்சிகளால் மூடி, யானையை விழச் செய்யாத பற்றுக்கோடு உள்ள இடம்.  

இவை 500 அடிகளைக் கொண்டு அமைந்த பெரும்பாணாற்றுப்படை இலக்கிய நூலின் வரிகள்.  பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது   கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர் இயற்றிய நூல்.   இந்நூல் புலவர், காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனைப் புகழ்ந்து பாடிய 500 அடிகள் கொண்ட அகவற்பாட்டாகும்.  269 அடிகள் கொண்ட சிறுபாணாற்றுப் படையை நோக்க இது பெரியது என்பது பற்றி இப்பெயர் பெற்றதாகவும் கொள்வர்.   இந்நூல்  சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்தது. இளந்திரையன் நாட்டின் ஐந்திணை வளமும், அவ்வத்திணையில் வாழ்ந்த வேடர், எயினர், மறவர், உழவர், பரதவர், ஆயர், அந்தணர் ஆகிய இனத்தவர் வாழ்க்கையும், அவர்களின் விருந்தோம்பற் பண்பும் பிறவும் பற்றி விரிவாகப் பேசுகிறது.  

Six Indian sites, including the temples of Kanchipuram in Tamil Nadu, the Ganga ghats in Varanasi, and the Satpura Tiger Reserve in Madhya Pradesh, have been added to the tentative list of UNESCO’s world heritage sites, the Ministry of Culture, recently announced.  The submissions were made by Archaeological Survey of India, which is responsible for the conservation and preservation of Indian monuments. “Delighted and proud that @ASIGoI had submitted a proposal for India’s 9 places for inclusion in the tentative list of UNESCO, where six sites have selected in Tentative Lists of @UNESCO World Heritage Site,” the tweet read.

The six sites are namely Satpura Tiger Reserve, Iconic riverfront of the historic city of Varanasi, Megalithic site of Hire Benkal, Maratha Military Architecture in Maharashtra, Bhedaghat-Lametaghat in Narmada Valley- Jabalpur, and temples of Kanchipuram.

Synonymous with spirituality, serenity, and silk, the temple town of Kanchipuram in Tamil Nadu, is dotted with ancient temples that are architectural marvels and a visual treat, states incredibleindia.org. Situated on the banks of River Vegavathi, this historical city once had 1,000 temples, of which only 126 (108 Shaiva and 18 Vaishnava) now remain. Its rich legacy has been the endowment of the Pallava dynasty, which made the region its capital between the 6th and 7th centuries and lavished upon its architectural gems that are a fine example of Dravidian styles.

Thirukachi to Srivaishnavaites, Kanchipuram is one of the seven Mukthi kshetras ie., Mokshapuris (cities of liberation from the bondage of birth and deaths) – Ayodhya, Mathura, Haridwar, Kasi, Avantika (Ujjain), Kanchi and Dwaraka. It has been a place of worship for Sakthi cult (Kamakoti Peeta and Kamakshi temple) – seat of learning and Ghatika (University) for vedic studies that thrived during 4th century AD.   Chidambaram is Akasa kshetra, Kanchi is known as Akasa peetha as mentioned in Soubhagya Chintamani.

Besides Pallava history, one needs to study something about Thondaimandalam and its Kings too .. .. ..

நம் முன்னோர் உழவுத் தொழிலை முதன்மையாக கொண்டே இயங்கினர். ஒவ்வொரு சமூகமும் உழவோடு ஏதோவொருவகையில் தொடர்பு கொண்டிருந்தது; அந்த வகையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னைப் பகுதிகளை உள்ளடக்கிய தொண்டை மண்டல வேளாளர்கள் பல நூற்றாண்டுகளாக நெல் விளைவித்து வருவதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. இங்கே பாய்வது - பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விளங்கியது.    கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகி  கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே 100 கிமீ தொலைவிலுள்ள வாயலூர் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில்  பாலாறு கலக்கிறது. .  .. . .. . … … 

1000 வருடங்களுக்கு முன்பு, தமிழகத்தின் வடபகுதி 'தொண்டை மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. தொண்டை மண்டலத்தில், புழற்கோட்டம், புலியூர்க்கோட்டம், ஈக்காட்டுக் கோட்டம், மணவிற்கோட்டம், வேலூர்க்கோட்டம் என 24 கோட்டங்கள் இருந்துள்ளன. இந்தக் கோட்டங்களுள் புலியூர்க்கோட்டம் நிர்வாக ரீதியாக சிறப்புற்று விளங்கியது. இன்று கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் புலியூர்க்கோட்டம்,   மிகப்பெரிய நிர்வாக அமைப்பாக இருந்தது. அன்றைய புலியூர்க்கோட்டத்தின் ஒரு பகுதியான குன்றத்தூர் வளநாட்டில்தான் பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான் தோன்றினார்.  

தொண்டைமான் இளந்திரையன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனது தலைநகர் காஞ்சி. பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலின் பாட்டுடைத் தலைவன். கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் இவனிடம் பரிசில் பெற்று மீண்டவர். 21 நரம்புகள் கொண்ட பேரியாழ் மீட்டும் பெரும்பாணனை இந்த அரசனிடம் சென்று பரிசில் பெறுமாறு ஆற்றுப்படுத்துகிறார். தொண்டை மண்டலம்  என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டைமான் இளந்திரையன் இந்நாட்டின் சங்ககால அரசன். பிற்காலச் சோழர்கள் தொண்டை நாட்டைக் கைப்பற்றியபிறகு, அதற்கு ஜயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயர் சூட்டப்பட்டது. தொண்டை மண்டலம் குறித்து தொண்டைமண்டல சதகம் என்ற நூலானது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படிக்காசுப் புலவரால் இயற்றப்பட்டது.  வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணைஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள் ஆகும். இது இன்றைய ஆந்திரமாநிலத்தின் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களின் சில பகுதிகள் மற்றும் இன்றைய தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம் , கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, புதுச்சேரி , திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். 





A few years ago,  30th May 2013 was the 9th day of Sri Varadharajar  Uthsavam.. the day  being  Thiruvonam [the first Thiruvonam after the Chithirai Brahmothsavam],  Varadhar had purappadu in the morning and in the evening there was  purappadu of Sri Parthasarathi perumal.  Here are some photos taken on that occasion.

 

Adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
26.5.2021 











Tuesday, May 25, 2021

Swami Nammalwar Sarrumurai 2021 - வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !!

Swami Nammalwar Sarrumurai 2021

- வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !! 


Today  25.5.2021  is celebrated as Sri Narasimha Jayanthi and being Vaikasi Vishakam – we celebrate the birth of Swami Nammazhwar (photo as at Avatharasthalam) . .. .. .. but sadly, as was the case last year – we do not have access to Temple.  At Thiruvallikkeni the thirumanjanam and goshti is webcast for devotees to have solace of darshan.

ஆழ்வார்கள் அருளிச்செய்த நம் சம்பிரதாய ரத்னங்களான திவ்யப்ரபந்தங்களை சேவிக்கும் முன் அந்தந்த பிரபந்தங்கள் தனியன்கள்  சேவிக்கப்பெறுகின்றன. ஆசார்யர்களையும் ஆழ்வார்களையும் முதலில் வணங்கி, பிறகு திவ்ய ப்ரபந்தங்களை அனுஸந்திப்பது நம் ஸம்ப்ரதாயம்.    தன் ஆசாரியனை அல்லது அவரது நூலைப் போற்றி புகழ்ந்து அதன் சாரத்தை தனியன்கள் கூறும். இது அந்த நூலுடன் சேராமல் தனித்து நிற்கும் செய்யுள் அல்லது ஸ்லோகம். இவை திவ்யப்ப்ரபந்தங்களிலிருந்து தனித்து நிற்பதால், தனியன் என்று பெயர் பெற்றன.   . தமிழில் வரும் தனியன்கள் வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைவது வழக்கம்.  இன்றயை பதிவை நாயகன் ஸ்வாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழி தனியனோடு துவங்குவோம் !   இந்த தனியன் சுவாமி நாதமுனிகள் அருளிச்செய்தது :  

பக்தாம்ருதம் விஸ்வஜநானுமோதனம்

ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம்

ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்

நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.  

ஸ்ரீமன் நாரணனின் பக்தர்களுக்கு பருகதற்கினிய  அமுதம் போன்றதும் பக்தர்களை இறைவனுக்கு அமுதமாக்குவதும், பயிலும் எல்லா மக்களுக்கும் பெருமகிழ்ச்சியைத் தருவதும், வேண்டியவற்றை எல்லாம் தருவதும், மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியாக இருப்பதும், ஆயிரக்கணக்கான பகுதிகள் கொண்ட வேத உபநிடதங்களுக்கு நேரான ஆகமமானதும், தமிழ் வேதக்கடலை அடியேன் வணங்குகிறேன்.


As we travel from Thirunelveli towards Tiruchendur – approx. 25 km away – on the banks of Tamirabarani, is this beautiful divyadesam  Thiru Kurugur.  The temple is ‘Aathinadhar Azhwar Thirukovil’. It was one of the largest towns of Pandya dynasty.  The presiding deity is Aathippiran and Utsavar is PolinthuNinraPiran.  Thayar is Aathinaayaki and ThirukurugurNayaki. 


உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பொருநாள்*

உண்டோ சடகோபர்க்கு ஒப்பொருவர் – உண்டோ*

திருவாய்மொழிக்கு ஒப்பு தென்குருகைக்குண்டோ*

ஒருபார் தனில் ஒக்குமூர்**

 

Great words of our Acharyar Sri Manavala Maamunigal when hailing the birth of Swami Nammazhwar.   Acharyan Manavalamaamunigal in his ‘Upadesa Rathinamalai’ says :   there is no other day matching Vaikasi Visakam; there is none matching Sadagopar; there is nothing equivalent to ‘Thiruvaimozhi’ and there is no place on earth which can be treated on par to Thirukurugai – the birthplace of Swami Nammalwar.   

" ஈசன் ஞாலமுண்டுமிழ்ந்த எந்தை யேகமூர்த்திக்கே" ~ என   ஸர்வேச்வரானாயும், ஜகத்துக்கு ஸர்வப்ரகார ரக்ஷகனாயும், அந்தத் தன்மையினால் என்னை யீடுபடுத்திக் கொண்டவனாயும் அத்விதீயமான திருமேனியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்  திருவுள்ளம் பற்றுவதே!  என நமக்கு உபதேசித்த அற்புத ஆசார்யர் ஆழ்வார் ஸ்வாமி  நம்மாழ்வார்  அவதரித்த நன்னாள் இந்நாள் .   

 திருக்கச்சியிலே ஸ்வாமி நம்மாழ்வார் சன்னதிக்கு தேவப்பெருமாள் எழுந்து அருள்வது விசேஷம்.  நம் திருவல்லிக்கேணியில் ஆழ்வார் சாற்றுமுறை அன்று ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாளுடன் பெரிய வீதி புறப்பாடு நடைபெறும்.   ஆயினும் ஆழ்வார் உத்சவம்  ஸ்ரீஅழகிய சிங்கர் ப்ரஹ்மோத்சவத்தில் வரும் போது  ஆழ்வார் அழகியசிங்கருடன் புறப்பாடு  கண்டு அருள்வார்.  சென்ற 2019 வருஷம் இரண்டாம் நாள் இரவு சிம்ம வாஹனம்.  ஒரு அசந்தர்ப்பத்தாலே திருவீதி புறப்பாடு நடைபெறவில்லை.   ஸ்ரீதெள்ளியசிங்கர் நம்மாழ்வார் சன்னதியிலேயே இரவு முழுதும் தங்கி இருந்து திருவாய்மொழி சாற்றியவருடன் உசாவி இருந்தார்.   மறுநாள்  அவருடனேயே திருமஞ்சனம்  கண்டருளி அருளிச்செயல் இசைக்கப்பெற்று, சாயங்காலம் 4 மணி அளவில் கருடசேவை புறப்பாட்டிலே உடன் செல்லும் பிரபாவம்.  திருவல்லிக்கேணியில் அப்படி ஒரு திவ்யசேவை.  இந்த வருஷமும் (2021) சென்ற வருடம் [2020] போன்றே  கொரோனாவால் புறப்பாடு இல்லை என்பது வருத்தமே !

Of the Nava Thirupathi divyadesams, ThirukKurugoor is hailed as “AzhwarThirunagari”-  as this is the Avatharasthalam of  Swami Nammalwar.   Madura Kavigal saw the leading light from Thiru Ayodhya, travelled all the way to Kurugoor, identified  Nammazhwar in the Puliyamaram [tamarind tree].  Mathurakavigal was so attached to Nammazhwaar that he sang only in praise of Nammazhwaar and considered his duty to spend life devoted to Nammazhwaar. 

நவதிருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள "உறங்காபுளிய மரம் பூக்கும்காய்க்கும் ஆனால் பழுக்காது.  இன்றும் கோவில் உள்ளே இந்த மரத்தை சேவிக்கலாம்.   

The Greatest among Alwars preached to us – “ ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,” – that when we do kainkaryam to Lord (to Him at Thiruvenkadam), we must do service by being with HIM throughout our life and do as a slave would serve his master.    Swami Nammazhwaar was born on the auspicious poornima day of Tamil Vaikasi month in Visakha nakshathiram at Thirukurugur, now famously known as ‘Azhwar Thirunagari’.  He was born to Kari and Udayanangai. Nammazhwaar has greatly contributed and his works are Thiruvaimozhi (1102 verses), Thiruvirutham (100), Thiruvasiriyam (7) and Periya Thiruvanthathi (87) 

வைகாசி விசாக நட்சத்திரத்தில் காரி மாறனுக்கும் உடயநங்கைக்கும்  (இவர் திருவண்பரிசரத்தில் பிறந்தவர்) - நம்மாழ்வார் அவதரித்தார். இவர் பிறந்த போது அழவே இல்லையாம்.  சடம் என்றால் காற்று.  வாயுவை முறித்ததனால் சடகோபன் என பெயர் பெற்றாராம்.  இந்த சடகோபர் ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் உள்ள புளிய மர பொந்தில் எந்த அசைவுகளும் இல்லாமல் வாசம் செய்தார். 

ஸ்ரீமந் நாராயணனால் தன் விஷயமான மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் நம்மாழ்வார். அருளிய அற்புத பிரபந்தங்கள் : திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி.  திருவாய்மொழி ஸாமவேதத்தின் ஸாரமாகக் கருதப்படுகிறது. மோக்ஷத்தை விரும்புபவனான முமுக்ஷு அறிந்து கொள்ள வேண்டிய முக்யமான விஷயங்கள்,  நன்கு விளக்கப்பட்டுளன. திருவாய்மொழிக்கு நம்பிள்ளை அருளிய ஈடு வ்யாக்யானம் திருவாய்மொழியின் அர்த்தங்களை நன்கு விளக்குகிறது.  

ஆழ்வார்திருநகரி எனப்படும் திருக்குருகூர் – நவதிருப்பதிகளில் ஒன்றான அழகான திவ்யதேசம்.   நம்மாழ்வார் இத்திருத்தலத்தை 11 பாசுரங்களால் 'ஸ்ரீமன் நாராயணனையே பற்றுதல்பற்றி அறுதியிட்டு மங்களாசாசனம் செய்து உள்ளார்.  

திருவாய்மொழி தனியனில்:- “திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும், மருவினிய வண்பொருநல் என்றும்,”  -  என பாண்டியநாட்டு தாமிரபரணிநதியின் பெருமையும் குருகூர் திவ்யதேசத்தின் பெருமையும் விளக்கப்படுகிறது.   இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமானதால் “ஆழ்வார்திருநகரி”  என்றழைக்கப்படுகிறது.  திருவாய்மொழி திராவிட வேதசாகரம் என போற்றப்படுகிறது.  ஸ்ரீமன் நாராயணனின்  பரத்வத்தையும் அவனுக்கு மட்டுமே கைங்கர்யம் செய்ய  வேண்டியதையும் மிக   சிறப்பாக  அழுத்தமாக   ஆழ்வார்  நிலை  நாட்டியுள்ளார்.    இதோ இங்கே ஒரு துளி     :

கொள்ளும் பயனில்லைக் குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை,*

வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை இழக்கும்   புலவீர்காள்,*

கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்லாம் தரும் கோதில்,என்*

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ. 

குப்பையைக் கிளறினாற்போல் குற்றம் குறைகளே தோற்றும்படியான செல்வமுடைய  அற்பரைக் குறித்து, வள்ளல்  என்றும்  உயர்ந்தவன் என்றும் போற்றுவதால்  நீங்கள் பெறும்பலன் சிறிதுமில்லை. உங்கள்  வாய்மையை  இழப்பதை தவிர;  நீங்கள்  பாடுகிற துதிமொழிகளுக்கு மிகப்பொருத்தமானவன் -  பக்தர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் தந்தருள்பவனும்  எவ்வித குறைகளும் இல்லாதவன்  ஆன மிக சிறப்பான நீலமணிவண்ணனுமான மணிவண்ணன் மட்டுமே;  நம் நா அவனை மட்டுமே  எவ்வெப்பொதும் துதிபாட வேண்டும் !  

தனியனில் ஆரம்பித்து - நம் ஆசார்யர் சுவாமி மணவாள மாமுனிகள் அருளிய திருவாய்மொழி நூற்றந்தாதியுடன் முடிப்போம் இன்று.    திருவாய்மொழி 100 பதிகங்கள் கொண்டது.  முதல் பத்து, இரண்டாம் பத்து  என பத்து பத்துக்களாகவும் அவற்றுள் முதல் திருவாய்மொழி, இரண்டாம் திருவாய்மொழி என பாடல்களும் அமைக்கப்பெற்றுள்ளன.  திருவாய்மொழியில்  உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள் இயற்றிய நூற்றந்தாதியில் உள்ளன. ஒவ்வொரு பதிகத்திலுமுள்ள தொடக்கச் சொல்லை அப்பதிக வெண்பாவின் முதற்சொல்லாகவும், பதிகத்தின் இறுதிப் பாடலிலுள்ள இறுதிச் சொல்லை வெண்பாவின் ஈற்றுச் சொல்லாகவும் அமைத்து வெண்பாவிலேயே அந்தாதி -அதிலும் ஒவ்வொரு பாடலிலும் எ\ஒரு பத்து பாசுரங்களின் தொகுப்பு விளக்கம் என அற்புதமாக அமைந்துள்ளது இது.    

முதல் பத்தில் மூன்றாம் திருவாய்மொழி - எம்பெருமானது எளிமையான சௌலப்ய குணத்தை கூறும் பாசுரங்கள் - 'பத்துடை அடியவர்க்கு எளியவன்' தொடங்கி 'அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னை' பாசுரம் ஈற்றாக உள்ள பதிகத்தின் மாமுனிகள் பாசுரம் இங்கே :  

பத்துடையோர்க்கு என்றும்   பரன் எளியனாம் பிறப்பால்

முத்தி தரும் மாநிலத்தீர்! மூண்டவன் பால் – பத்தி செய்யும்

என்றுரைத்த  மாறன் தனின் சொல்லால் போம்  நெடுகச்

சென்ற பிறப்பாம் அஞ்சிறை.  

ஆழ்வாரின் இனிய வார்த்தைகளான “ஸர்வேச்வரன் தன்னுடைய அடியவர்களால் எளிதில் அடையப்படுபவன்; தன்னுடைய அவதாரங்கள் மூலமாக அவர்களுக்கு மோக்ஷத்தை அளிப்பவன்; இந்தப் பெரிய உலகில் வாழ்பவர்களே! கனிந்த அன்புடன் அவனிடத்தில் பக்தி செய்யுங்கோள்” என்பதை அனுஸந்திப்பவர்களுக்கு, நெடுங்காலமாகத் தொடர்ந்து வரும் பிறவி எனும் கட்டு விலகும். 

ஆனதிருவிருத்தம் நூறு மருளினான் வாழியே !!

ஆசிரியமேழு பாட்டளித்த பிரான் வாழியே !!

ஈனமறவந்தாதி யெண்பத்தேழீந்தான் வாழியே !!

இலகு திருவாய்மொழியாயிரத்தொரு நூற்றிரண்டுரைத்தான் வாழியே !!

வானணியும்மாமாடக் குருகைமன்னன் வாழியே !!

வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !!

சேனையர் கோனவதாரஞ் செய்தவள்ளல் வாழியே !!

திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே.  !!

 

Blessed are We to be born as Srivaishnavas, singing the glory of Alwars, Acaryas and Emperuman.  Glory to the feet of Swami Nammalwar – here are 10 photos of Swami Nammalwar as worshipped on 10 days of Irapathu (photos not of the same year ! and hence Nachiyar thirukolam getting repeated !)

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25th May 2021.




  












Monday, May 24, 2021

Thirukachi Sri Devathi Rajar uthsavam 2021

The difference from 2019 – 2021 is people are conversant with words like, lockdown, new normal, vaccination jab and more .. ..but sadly, not many experiences have been learnt !

 



From this morning Chennai and Tamilnadu is under stricter lockdown – it is expected that all arterial roads in Chennai and other places would wear a  deserted look and shops remained closed -  a day after chaos prevailed in most streets due to panic buying by people.  From now on, apart from the law enforcement, civic body teams, food delivery agents and sanitary workers, others should not be on roads, as Police have warned that those traveling without e-registration or without valid reasons would be fined, their vehicles would be seized and could face FIR too !!  

The Tamil Nadu government on Saturday extended a lockdown in force for a fortnight by another week and made it stricter. In doing so, however, it revealed a failure to learn from the lessons of the past. In 2020, as the nation first faced the Covid-19 pandemic,  and there were turmoils .. .. in April 2020, Tamil Nadu compounded that error by ordering a “lockdown within a lockdown” forcing large numbers of people to scramble for provisions and groceries. These sudden, poorly thought-out moves have hurt the people, both by forcing large groups to converge in closed spaces to make purchases risking a spike in infections as well as by eroding public faith in government. .. .. and people too have contributed generously by congregating in large numbers, coming out to buy everyday and more !  .. .. it is crisis and everybody should act with responsibility !!  

People become sick because of overthinking.  Sad for those daily wage earners, entrepreneurs, and others who are not able to do their daily work and have lost their livelihood.  On the other hand, there are people working from home, who theoretically should be happier and lot calmer – but there are talks of mental illness, distress,  depression and more.  Office premises was just not a physical space – it was also a place for meeting people, share work, crib, laugh and cry ! – all that is missed.  

One major source of distress of many of us is – Temples are closed.  Emperuman would take care of us.  Darshan of Emperuman and doing kainkaryam in every little manner gave us comfort.   

For a  Srivaishnavaite, Perumal Koil refers to “Sri Varadharaja Swamy temple’ at Kanchipuram.  Legend has it that Brahma performed Asvamedha yaga at mokshapuri i.e., Kanchi and Lord Vishnu emerged out of the fire with Sanku Chakram. It is believed that the annual Uthsavam was initiated by Brahma himself. Indira’s white elephant Iravatham took the form of a hill called Hastigiri on which shrine of Varadharajar is located. This Swami is known by various names, prominent among them being : Devarajar, Devathirajar, Thepperumal, Varadhar, PerArulalar … 






Now is the time for the annual Brahmothsavam of Sri Devathi Rajar. Garuda Sevai and   Thiruther  are among the most important ones drawing crowds in lakhs.  At Thiruvallikkeni, during Sri Varadharajar uthsavam,  purappadus are in the evening only except Garuda sevai purappadu which would be in the morning.   


ஆரே  அறிவார் அனைத்துலகும்  உண்டுமிழ்ந்த,

பேராழியான் தன் பெருமையை,- கார் செறிந்த

கண்டத்தான் எண் கண்ணான் காணான், அவன் வைத்த

பண்டைத்தானத்தின் பதி.

 

ஈரேழு  உலகங்களையும்,  (பிரளய காலத்தில்) உண்டு  (பிறகு) உமிழ்ந்த  பேராழியான் (சிறப்பு  வாய்ந்த திருச்சக்கரமான திருவாழிதனை) தனது கரங்களில் ஏந்திய எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் பெருமையை அறிபவர் ஆரே ! என கேள்வி எழுப்பிய திருமழிப்பிரான், தனது நான்முகன்  திருவந்தாதியிலே தானே பதிலையும் அளிக்கிறார்.  .. அவ்வளவு சிறப்பு வாய்ந்த எம்பெருமானின் மகிமைகளை முழுமையாய் அறியக் கூடியவர் யார்? (ஒருவருமில்லை).  அவ்வெம்பெருமான்  முன்பே ஸாதித்து வைத்த பரமபதமார்க்கமென்னத் தகுந்த சரமச்லோகத்தை, நீலகண்டனான சிவனும், நான்கு முகங்களை உடையவனும் கூட காண்கின்றிலர் .. .. அவர்களே   அறியமாட்டாதபோது மற்றபேர்கள் அறியமாட்டார்களென்பது சொல்ல வேணுமோ? .. .. நமக்கு எளிய உபாயம் அவனது திருவடிகளை பற்றி இருப்பதே ! ~  திருமழிசைப்பிரான் தனது நான்முகன் திருவந்தாதியில். 



We are missing Emperuman darshan, His uthsavams and purappadus – reminiscing, here are some photos of Sri Varadharajar, Perundevi thayar, Rajagopuram &  the grand temple at Kanchipuram and the pushkarini taken during earlier visits.

 

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli  Srinivasan Sampathkumar
24.5.2021.
PS :  our village Mamandur is situate less than 10 km from Kanchi on the way to Vandavasi (Thiruvathur) identified as Doosi Mamandur by Dhoosi its  twin hamlet.