To search this blog

Sunday, July 29, 2012

Thiruvallikkeni Sri Parthasarathi Ekadasi Purappadu


Today 29th July 2012 [Sunday] is Ekadasi.  At Thiruvallikkeni Divyadesam,
Sri Parthasarathi Perumal had  Periya madaveedhi purappadu in the evening.

Some photos taken during the purappadu are here

Adiyen – Srinivasa dhasan. 

Monday, July 23, 2012

Sri Andal Thiruvadipura Uthsavam - day 9 at ThiruvallikkeniThiruvadipura Uthsavam at Thiruvallikkeni – day 9

On  22nd July 2012, it was day 9 of Thiruvadipura Uthsavam for Andal and it was Chinna Thiruther [smaller Chariot].  Here are some photos taken during the evening purappadu of Sri Andal at Thiruvallikkeni

Adiyen – Srinivasan Sampathkumar

 திருத்தேருக்கு எழுந்து அருளல் 


 திருத்தேர் திவ்யப்ரபந்த கோஷ்டி 

Today is Thiruvadipooram - A day to celebrate Sri Andal's birthday


Today 23rd July 2012 -  is Thiruvadipooram [Puram Nakshathiram in the month of Aadi] – a most blessed day for all Srivaishnavaites – for this day marks the birth of Kothai Piratti [Andal]
 Srivilliputhur Andal and Rangamannar
Andal’s was found in a thulsi garden at  Sri Villiputhur by Vishnu Chithar [Periyazhwaar].  Our Acharyas have hailed the birth of Andal – as Andal represents the quitessence of bakthi, abundance of love to God Himself expressed in choicest tamil verses.    Sri ANDAL is the  incarnation  of Shri Bhuma Devi, the divine consort of Sriman Narayana, who took birth on this earth to liberate suffering human beings from worldly bondage. She sang thirty sweet songs containing the cardinal principles of Sri Vaishnava Dharma.  Other than Thiruppavai which is specially sung in all the days of the month of Margazhi, She also gave us 143 verses known as ‘Nachiyar Thirumozhi’.

Today, there will be grand procession [purappadu] of Andal at Srivilliputhur, Srirangam, Kanchipuram, Thiruvallikkeni and many other divyadesams.  The 10 day celebrations are on at Thiruvallikkeni also, which culminates grandly today.
Her philosophy is clear and unmistakable.  She says ‘immaikkum ezhezhu piravikkum patraavan, nammaiyudaivan Narayanan nambi’  -  "Sriman Narayana is our refuge now and for ever and He will not let us down, for we are His possessions".

Here  are some photos taken during the 8th day purappadu on Saturday – 21st July 2012 at Thiruvallikkeni.  


23/07/2012 - இன்று மிகச் சிறந்த நன்னாள் !  ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தினம். 'திருவாடிப்பூரம்" - ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்பிள்ளையாய், நந்தவனத்தில், துளசி மலரில் பூமிபிராட்டி அம்சமாய் தோன்றிய கோதை பிராட்டியின் பக்தி அளவிட முடியாதது. தன் இளமை தொடங்கியே 'மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்என உறுதி பூண்ட பிராட்டியின் பக்தி பேருக்கு திருப்பாவை, நாச்சியார் திருமொழி நூல்களாக வடிவெடுத்தது.

நம் பொய்யில்லா மணவாள மாமுனிவன், தமது 'உபதேச ரத்தினமாலையில்'   திருவாடிப்பூர திரு நக்ஷத்திரத்தில்  பூமி பிராட்டி ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள உயர்ந்த அனுபவத்தை விட்டுவிட்டு பெரியாழ்வாருக்கு திருமகளாக இந்த உலகத்தில் நாம் உஜ்ஜீவிப்பதற்கு அவதரித்தருளினதைஅழகிய ஆடி மாதத்தின் பூர நக்ஷத்திரத்தின் வைபவம் வேறொரு தினத்துக்கு  கிடையவே கிடையாது. ஆண்டாளுக்கு சமானமாக ஒருவர் உண்டு என்பதானால், உண்டாகுமானால், இந்த நாளுக்கும் சமானமாக ஒரு நாள் உண்டாகக்கூடும் என :
பெரியாழ்வார் பெண்பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த
திருவாடிப் பூரத்தின் சீர்மை - ஒருநாளைக்
குண்டோ மனமே உணர்ந்துப் பார் ஆண்டாளுக்
உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு  - என பாடி மகிழ்கிறார்.

ஆண்டாள் பாடலில் 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி, ..... நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்' என வேண்டுகிறார்.  ஆண்டாளை அனுதினமும் சேவித்து, ஆண்டாள் அருளிச்செய்த பாசுரங்களை, தங்கள் சிந்தையிலே அனுசந்தித்து வாழ்பவர்கள்பெருமை பொருந்திய திருவடிகளையுடைய எம்பெருமானுடைய திருவடிகளின் கீழே எந்நாளும் பிரியாமலிருந்து நித்யாநுபவம் பண்ணப் பெறுவர்கள்

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.


Tailpiece :  Today a beautiful pathakkam [a spectacular ornament] is being dedicated to Lord Parthasarathi by Sree Parthasarathi Swami Sripadam Trust.  This Trust formed and run by Sri Vaishnavaite Thennacharya youngsters are the bearers of Perumal during all Purappadu and are engaged in many welfare activities also.  This ornament called ‘Iruthalai Pakshi Pathakkam’ [it resembles birds on either side – with beautiful stones etched on Gold] – it weighs 115 grams of Gold and is more than Rs.4 lakhs.

Monday, July 16, 2012

Geological survey at Thiruvengadam - The Holy Thirumala


Time and again it happens – when people write about Hinduism or about the glorious Temples, they feel they have the liberty to write anything.

The caption and few lines are irritating, to say the least and clearly expose the writer / publisher’s lack of faith.  God forgive them.

Thirumala is as strong as ever.  It has existed for Centuries and Lord Venkateshwara will provide all riches, all wealth and all goodness to all His believers.

Thiruvengadam, the abode of Lord Balaji would ever remain as the ‘Thilakam’ the shining glory of the whole Earth.  All that we need to do is to pray towards the Greatest Lord of Universe from wherever we are, think of HIM always and do good to humanity in Thy Name

The photo used in the article however was captivating and here it is

To fondly quote the words Swami Nammazhwar in this Thiruvaimozhi –

உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி யம்மானே!
நிலவும் சுடர்சூழொளிமூர்த்தி. நெடியாய்  அடியேனாருயிரே!
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே!
குலதொல் லடியேன் உன்பாதம் கூடு மாறு கூறாயே.

திருமலையில் உறையும் திருவேங்கடவன் - மிக அற்புதமான,  தேஜோமயமான திவ்ய மங்கள ஸ்வரூபன். 

நெடிதுயர்ந்து நிற்கும் திருவேங்கடவன், உலகுக்கெல்லாம் திலகம் போன்றதான திருமலையிலே விளங்குகின்ற அந்த எம்பெருமானை குல பரம்பரையாய் நாம் ஆட்பட்டு, அவனது திருவடித் தாமரைகளையே என்றென்றும் சேர்ந்து இருக்குமாறு அவன் நமக்கு அருள் புரிய வேண்டும்.  திருமலை மென்மேலும் எல்லா வளங்களும் சிறந்து புண்ணிய பூமியாய் பல்லூழி ஊழி தொடர்ந்து நம் சமுதாயத்துக்கும், இவ்வுலகத்துக்கும் எல்லா நன்மையையும் பயக்கும்


Adiyen Srinivasa dhasan. 
On shaky ground: Fragile terrain threatens Tirumala temple
By A. Srinivasa Rao. Published: 20:50 GMT, 15 July 2012 |

Is the Lord Venkateshwara temple in Tirumala safe?

The temple authorities are concerned that the centuries- old temple atop the Tirumala hills in Andhra Pradesh might be facing a threat from soil erosion.

The fears stem from the collapse of the 500-year-old royal entrance of the Srikalahasti temple, 35km from Tirupati, in 2010.  While there is no reason to feel alarmed about the safety of the Lord Venkateshwara temple, to be sure that the structure is safe the Tirumala Tirupati Devasthanams (TTD) has commissioned a study of the geology of the Tirumala hills.

TTD manages the affairs of the richest shrine in the country. A private geological consultancy run by former experts from the Indian Institute of Technology, Chennai, is conducting the study, examining the hill soil, the structure of the temple and the terrain in and around the temple complex.

'We have done three studies of the soil structure. One, the upper layers of the earth up to 2m deep to detect loose layers, if any. Second, the earth's crust up to 20m deep. A third study was conducted a couple of days ago using ground penetrating radar (GPR) systems,' an official in TTD's engineering wing said.

It will be a while before the findings are announced as the results are still being studied. But an official closely associated with the exercise said some loose soil areas had been detected.  

'The main temple complex is located in a trough surrounded by hills. The soil in the area where pilgrims form queues has loose layers,' he said, adding that there was no reason to be alarmed.

'These studies are being done only as a precaution and to take preventive measures to ensure a Srikalahasti-type incident does not take place in Tirumala,' he said.  As part of the exercise, experts are also trying to determine whether the main temple is located on a solitary rock or straddles two adjacent rocks.  'It will be known from the GPR studies. Depending on the findings, we will take measures to protect the temple complex,' the official said.

Reports that the Geological Survey of India also carried out soil studies on Tirumala hills were denied by its officials.  'We did some studies for the TTD in the past to find out the stability of the Tirumala hill slopes and the possibility of landslides. Perhaps, the present consultants are making use of our earlier reports,' GSI technical officer L. Hareendranath said.


http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2173982/On-shaky-ground-Fragile-terrain-threatens-Tirumala-temple.html?ito=feeds-newsxml

Thiruvallikkeni Thiruvadipura Uthsavam - Day 2


15.7.2012 திருவல்லிக்கேணி திருவாடிப்பூர உத்சவம் இரண்டாம் நாள்.

During Thiruvadipuram, on all days there is purappadu of Sri Andal in the evenings.  Day 2 fell on Ekadasi day and hence there was the grand purappadu of Sri Andal alongwith Sri Parthasarathi. Here are some photos taken during the purappadu 

ஆழ்வார்கள் பாடல்கள் - பைந்தமிழுக்கும் பக்தி இலக்கணத்துக்கும் உயர்ந்த சான்றாய் திகழ்வன ! -  ஆண்டாள் இயற்றிய நாச்சியார் திருமொழியில் வரும் வரிகள் இவை " தொழுதுமுப்போதும் உன் அடி வணங்கித் தூமலர் தூய்த்தொழுதேத்துகின்றேன், பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப்" -  :  காலை, சாயம், உச்சி என மூன்று காலங்களிலும் பெருமாளின் திருப்பாத கமலங்களிலே நல்ல மனமுள்ள மலர்களை தூவி, பெருமாளையே  ஆச்ரயித்து, அவனடிகளையே தொழும் ஆண்டாளின் பக்தி பிரமிக்க வைப்பது அல்லவா ! பூமியைச் சூழ்ந்த கடல் போன்ற திருநிறத்தையுடைய கண்ணபிரானுக்கு பணி செய்து வாழ்தலே, நமக்கு எல்லா நற்பயன்களையும் தரும்.

இன்று 15/7/2012 இரண்டாம் நாள் - ஏகாதசி சேர்ந்து வந்ததால் ஆண்டாள் ஸ்ரீ பார்த்தசாரதியுடன் பெரிய மாட வீதி புறப்பட்டு கண்டு அருளினார்.  வீதியில் பூதத்தாழ்வாரின் 'இரண்டாம் திருவந்தாதி" சேவிக்கப் பெற்றது. 

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன். 
Saturday, July 14, 2012

Sri Andal Thiruvadipura Uthsavam at Thiruvallikkeni


For Srivaishnavaites, the month of  Aadi assumes special significance for on this month was born the female saintess Azhwar Andal.   Goda devi  was born at Srivilliputhur  in the Tamil month Adi, with the birth-star Pooram, which is celebrated as ‘Thiruvadi puram’. 

Andal composed two works  unique in their literary, philosophical, religious, and artistic content.  One is  Tiruppavai, a poem of thirty verses in which Andal imagines herself to be a cowherd girl during the incarnation of Lord Krishna. This is recited in all temples especially during the month of Margazhi.  The second is the Nachiyar Tirumozhi, comprising of 143 verses.

This year Thiruvadipuram falls on Monday, 23rd of July 2012.  The 10 day Thiruvadipura Uthsavam commenced today, 14th of July 2012.   Here are some photos taken during the purappadu today evening, a few minutes ago.

Regards – S. Sampathkumar.

  *********************************************************************************************


திருவல்லிக்கேணியில் இன்று [14/7/2012]  முதல் திருவாடிப்பூர உத்சவம். தினமும் ஆண்டாள் புறப்பாடுஉண்டு.  "பெரியாழ்வார் பெண் பிள்ளையாய், ஆண்டாள் அவதரித்த திருவடிப்பூரத்தினால்'  இந்த மாதத்துக்கே சிறப்பு. பொங்கும்  பரிவாலே  என பெருமாளிடத்தில் அதீத ப்ரீதி  காட்டிய  வில்லிபுத்தூர்  பட்டர்பிரான்  என்கிறவிஷ்ணுசித்தர்,  எனப் பெயர் பெற்ற   பெரியாழ்வார்    நந்தவனத்திலே துளசிச் செடியின்  அருகே  இவரை  கண்டு எடுத்தார். 

கோதை என்றால் தமிழில் மாலைவட மொழியில் வாக்கை கொடுப்பவள் என்று பொருள்.  தனது பாமாலை களாலும்  பூமாலை களாலும்  பெருமாளை பாராட்டியதால் 'சூடிக் கொடுத்த நாச்சியார்" என பெயர் பெற்றார்  இவர்.  பக்தி பெருக்கத்துடன்  'திருப்பாவை 30   பாடல்களையும்  நாச்சியார் திருமொழி  143  பாடல்களையும் " அருளிச் செய்தார். 

திருப்பாற்கடலில் துயிலும் பரந்தாமனையே நினைத்து அவரடியே சேருமாறு பாடின ஆண்டாள் திருவாடிப்பூர உத்சவம் இன்று துவங்கி  நடைபெறுகிறது.  திருவல்லிக்கேணியில் சாயம் ஆண்டாள் சிறிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.  அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :- 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன். 

Friday, July 13, 2012

Sri Azhagiya Singar Brahmothsavam – Day 10 – Chinna Thiruther


Sri Azhagiya Singar Brahmothsavam at Thiruvallikkeni  – Day 10 – Chinna Thiruther

Heard of ‘Chrysopogon zizanioides’ and wonder what is has to do with a Temple related post, especially one about Azhagiya Singar  Brahmothsavam at Thiruvallikkeni.

‘Chrysopogon zizanioides’ is , commonly known as vettiver – a type of grass of Poaceae family, native to India. Understand that it is known as ‘khus’ in some parts of India.   In western and northern India, it is popularly known as khus. Vettiver can grow up to 1.5 metres high and form clumps as wide. The stems are tall and the leaves are long, thin, and rather rigid; the flowers are brownish-purple. Unlike most grasses, which form horizontally spreading, mat-like root systems, vetiver's roots grow downward, 2–4 m in depth.  This is not intended to by any post on its characteristics..

On the 10th day of Brahmothsvam is Sapthavaranam – on 7th July 2012, there was the ‘Dwadasa Aradhanam’ and ‘Thiruvaimozhi Sarrumurai’ – and in the night there was the purappadu in china Thiruther. 

This Ther is known as ‘Vettiver Chapparam’ – for there used to be so many sheets made of this grass placed on the temple car.  One could feel the divine fragrance from a distance itself.   Understand that it is the stem of the grass, which is cut, smoothened and made into a mat.  These mats were earlier even used in houses and as the air passes through it, there would be fragrance and natural cooling of air.

This year, special arrangements had been made to procure this grass, clean and process them into beautiful mats – the decorative mats so made, were beautifully placed on the temple car [Thiruther] in which Swami Azhagiya Singar had purappadu in the night of 7th July 2012. 

Here are some photos [courtesy : Thirumazhisai Kannan]  taken during the purappadu

With regards – S. Sampathkumar.

Sri Azhagiya Singar - Punniya Kodi vimanam - Day 9 Night


At Thiruvallikkeni, unlike other Divyadesams, there are two dwajasthambams [kodimaram] and there are two Brahmothsavams – one for Sri Parthasarathi and the other for Azhagiya Singar

Both are conducted in the same grand manner.  There are some small differences – On day 8th morning it is ‘VEnnak thazhi kannan’ for Sri Parthasarathi, while it is ‘Lakshmi Narasimhar’ for Azhagiya Singar.

On  Ninth day evening it is  – Kannadi Pallakku – the palanquin embedded with beautiful mirror work.   There was a big, captivating, eye-capturing palanquin made of glass – rather with glasses fitted all over and with chandelier like things suspended on its arms.  Slowly it faded into oblivion as it was not maintained properly and glass pieces started falling as it was not maintained in the best manner.  When there was no ‘Kannadi Pallakku’, Sri Parthasarathi had purappadu on ‘punniyakodi vimana chapparam’.  Then a newly made one – looking differently than the earlier one was submitted.  For Azhagiya Singar, there is no ‘kannadi pallakku’ but – ‘Punniyakodi vimanam’

Here are some photos [courtesy Thirumazhisai Kannan] taken during the purappadu on 9th day which occurred late in the night on 6th July 2012

Adiyen Srinivasa dhasan.

Wednesday, July 11, 2012

Thiruvallikkeni Azhagiya Singar Pushpa Pallakku Purappadu


After 10 days of  Brahmothsavam, it is rest called ‘Vidayarri’ for Sri Azhagiya Singa Perumal and after 3 days of rest, comes the florally bedecked ‘Pushpa Pallakku – the palanquin with flowers’. 

It looks beautiful and pervades goodness all around – treat to the eyes, ears and senses  of Bakthas.

On the night of 10th July 12, Sri Azhagiya Singar  had purappadu in Pushpa pallakku and photos taken can be worshipped below :-திருவல்லிக்கேணி அழகிய சிங்கர்  புஷ்பப் பல்லக்கு புறப்பாடு   -   

புஷ்பப் பல்லக்கு  என்பது வாசம் தரும் மலர்களால் ஆனது.  திருவல்லிக்கேணியில்  பிரம்மோத்சவம் கண்டு அருளிய எம்பெருமான் மூன்று நாட்கள்  'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்.  பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார்.   பெருமாளுக்கு புஷ்பங்கள் சமர்ப்பித்தலும், அதற்கான நந்தவனத்தை பராமரித்தலும், உகப்பான கைங்கர்யங்களாக கருதப்படுகின்றன.

நன்மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்.  எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே.

நம்மாழ்வார் தனது திருவாய்மொழி "திண்ணன் வீடு" என்கிற பத்தில் :

"தேவும் எப்பொருளும் படைக்கப்*   பூவில் நான்முகனைப் படைத்த*   தேவன் எம்பெருமானுக்கு அல்லால்*     பூவும் பூசனையும் தகுமோ ?  -  என வினவுகிறார்.   தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும்  உருவாக்குவதற்காக   நான்முகனை படைத்தவன். அத்தகைய தேவாதிதேவனான எம்பெருமானுக்கு  அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகா !!!!

பெரியாழ்வார் கண்ணனது குழந்தை பருவத்தை வரிசையாக அனுபவித்து, அவருக்கு : செண்பகம், மல்லிகை, பாதிரிப்பூ, தமனகம், மருவு,செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாட்சி, கருமுகை - என பல பல மலர்களை அணிந்துகொள்ளுமாறு வேண்டி அழைக்கிறார்.  பல்வேறு மணங்களை தரும் மலர்களை எல்லாம் கொணர்ந்தேன்,  இவைகளை இப்போதே சூடிக்கொள் என பிரார்த்திக்கிறார்.

10.07.2012 அன்று இரவு, ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் சீர்மையுடன் அமைக்கப்பட்டு மணந்த புஷ்பப் பல்லக்கில் புறப்பாடு கண்டு அருளினார்.    அவ்வமயம்  எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே.

அடியேன் : ஸ்ரீனிவாச தாசன். 


Sunday, July 8, 2012

Thiruvallikkeni Azhagiya Singar - Day 9 Purappadu


6th July 2012 – Today is the 9th day of Sri Azhagiya Singar  Brahmothsavam – Theerthavari.  Due to the passing away of Sri U.Ve. Sthalasayanathuraiyavar Swami, there was no purappadu in the morning and the morning purappadu itself occurred in the evening.  It was the purappadu known as  “Aaal mael pallakku” – a palanquin made with four men holding the pallakku on their shoulders. 

In symbolizing search of lost ring, Perumal has Himself covered with ‘sheets’ and comes incognito  - the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Azhagiya Singar with no floral garlands – then many flower garlands adorn Perumal.  Upon reaching the Temple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted. 


திருவல்லிக்கேணி அழகிய சிங்கர் - ஒன்பதாம் நாள் புறப்பாடு- ஆள்மேல் பல்லக்கு 

ஒன்பதாம் உத்சவம் - காலை "ஆளும் பல்லக்கு " - இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் "ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில்பெருமாள் ஒரு மோதிரத்தை தொலைப்பதாகவும்,  பெருமாள் தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்துஅதே இடத்தில் நகையை தேடும் வைபவம் "போர்வை களைதல்என  கொண்டாடப்படுகிறது

இந்த வருடம், திருவல்லிக்கேணி ஸ்தலசயனதுரையவர் சுவாமி பரமபதித்ததால், காலை நடக்க வேண்டிய புறப்பாடு, சாயம் நடைபெற்றது. நல்ல வெய்யிலில் பெருமாள் புறப்பாடு நடந்தது.  குதிரை வாகன மண்டபம் முன்பே,  திருமங்கை மன்னனை ஆட்கொண்ட  இடத்திலே, பல்லக்கு சுற்றி சுற்றி  ஏளப்பண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றின் போதும், கற்பூர ஹாரத்தி காண்பிக்கப்பட்டு, ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டு, பெருமாள் கீழே இறங்கிய பிறகு, அழகான, பல மாலைகள் அலங்கரிக்க, மறுபடி புறப்பாடு கண்டு அருளினார். 

குளக்கரை புறப்பாடு கண்டு அருளி, வாகன மண்டபத்தில் பல்லக்கில் இருந்து இறங்கி, தெற்கு மாட வீதி புறப்பாடு கேடயத்தில் எழுந்து அருளி, அழகியசிங்கர் தம் சன்னதி  அருகே சென்றடைந்ததும்  'மட்டையடிஎனப்படும் ப்ரணய கலஹம்'  - எனப்படும் பிணக்கு - பெருமாள் எழுந்து அருளும் போது,  உபய நாச்சிமார்  திருக்கதவைசாற்றி விடபெருமாள் மறுபடி மறுபடி திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடை பெற்றது.     ப்ரணய கலஹ  ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் அழகிய சிங்கர் உள்மண்டபத்தில் நடந்தது.   பிறகுபெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடினர்.

இன்று புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.