Arulmigu Sundaravalli Thayar samedha Sri Lakshmi Narayana
Perumal
Dusi Mamandur, near Kanchipuram
Triplicane
mourns the passing away of Shri TR
Kuppuswamy Iyengar, the Centurion !!
Triplicanites are in for a shock hearing the passing away of
doyen, centurion Shri U. Ve. TR Kuppuswamy Iyengar, peacefully today evening.
Recently, on
29.7.2024, Barani nakshathiram in the month of Aadi in Krothi Tamil varusham
.. he completed a perfect 100 and
entered 101 ! ‘Sri T.R. Kuppuswamy Iyengar’ – a
scholar, philanthropist, great human being living at South Mada Street, very
close to the divine aboard of Sri Parthasarathi Perumal.
He completed B.A. (Hons)
in Mathematics, was an alumnus of St. Josephs College, Trichy, worked in and
retired as Accounts Officer, Accountant General Office. A man well versed
in Ubhaya vedantham and interested in Sanskrit studies, he has patronized our
sampradhayam in great measure. He has written and published 6 books in
Tamil highlighting interesting aspects of our sampradhayam.
He comes in the sishya
lineage of Cholasimhapuram Doddayachaaryar (Sri U. Ve.
Kovil Kanthadai Chandamarutham Yoga Nrusimhan Swamy, is our varthamana
swami). His wife Tmt. Susheela hailed from ancestral
village of Dusi Mamandur. Sri Kuppuswamy Iyengar is the principal donor
for the Ramanuja koodam that stands now in front of Sri Lakshmi Narayana
Perumal temple at Dusi Mamandur, having donated land and major amount for its
construction. He has donated for the corpus fund of SYMA couple of times.
Shri T.R. Kuppuswamy Iyengar is no more ! ~ though
aged, the news is shocking and a very sad one for the Vaishnava community and
for us living in Triplicane and those connected to Dusi Mamandur. Though the loss is colossal and very hard to
accept, we pray for Sadagati for the great person’s aathma and take solace citing Swami Nammalwar thiruvaimozhi pasuram.
எம்பெருமான் அடியவர்கள்
- எம்பெருமான் தம் இருப்பிடமாம் வைகுண்டத்துக்கு சென்று சேர்ந்தபடியே, அங்குள்ள நித்யஸூரிகள்,
வைகுந்தனாகிய எம்பெருமானின் இருப்பிடத்துக்கு வருக, வருக, என்று வரவேற்று அமரர்களும்,
முனிவர்களும் 'மண்ணுலகில் பிறந்தவர்கள்' வைகுண்டம் அடைவது பெரும் பாக்கியம் என்று உரைத்ததாக
திருவாய்மொழி பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி பாசுரம் :
வைகுந்தம் புகுதலும்
வாசலில் வானவர் .. .. இந்த பாசுரத்தின் “வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே”
என்ற ஈற்றடியை ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து
சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று என்று கொள்வர்.
We pray Emperuman for giving strength to his bereaved family to bear this colossal loss. Understand that obsequies will be performed at his house in South Mada Street tomorrow morning by 7.30am.
மலைபடுகடாம் .. .. இதை கேட்டவுடன் உங்கள் எண்ண ஓட்டம் என்ன ? ..
.. தமிழ் நன்கு அறிவீரா? – 20.1.2025
இன்று ஸ்ரீவைணவ திவ்யதேசங்களில் 'தமிழ் சிறப்பு' கொண்டாட்டம்.
திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்குற்ற விளங்கு அடர் பாண்டில்
After 20 days bonanza of
darshan and hearing Arulicheyal during Adhyayana Uthsavam comprising of Pagal
Pathu, Vaikunda Ekadasi, Irapathu, festivities culminate with Iyarpa Sarrumurai – during this great Adyyayana
Uthsavam, “Naalayira Divaprabandham’ is rendered entirely.
During Pagal pathu, it is
the 1st and 2nd Aayiram pasurams including :
Periyalwar Thirumozhi, Thiruppavai, Nachiyar Thirumozhi, Perumal Thirumozhi,
Thiruchanda Vrutham, Thirumaalai, Thirupalliyezuchi, Amalalathipiraan, Kanninum
Chiru thambu, Thirumozhi, Thirukurunthandagam, ThiruNedumthandagam are recited
in the afternoons.
The Irapathu is hailed as
‘Thiruvaimozhi Thirunaal’ when after the purappadu, daily one canto [hundred]
from Thiruvaimozhi are rendered everyday. On day 10, it is
the last canto ‘Patham Pathu’ of Swami Nammalwar, which speaks of
‘entering Vaikundam’ by all ‘vaikuntham puguvathu mannavar vithiye’ in the
pasuram of Nammalwar.
The day after the
culmination of Irapathu, comes “Iyarpa Sarrumurai” when all pasurams of
Iyarpa are being rendered. Today, it was the Iyarpa sarrumurai at
Thiruvallikkeni. At the Thiruvaimozhi Mandapam, there was the grand golu
of all Azhwargal and Acharyas and in the centre was Lord Parthasarathi.
Divyaprabandha goshti started around 0500 pm ~ the pasurams forming part
of the Moondravathu Aayiram, known as Iyarpa : Muthal
Thiruvanthathi, Irendam Thiruvanthathi, Moondram Thiruvanthathi,
Nanmugan Thiruvanthathi, Thiruvirutham, Thiruvasiriyam, Periya Thiruvanthathi,
Thiruvezhuk koorrirukkai, Siriya Thirumadal, Periya Thirumadal and Iramanuja
Noorranthathi [also known as Prabanna Gayathri] of Thiruvarangathu Amuthanar
were all rendered.
தமிழ் இலக்கியம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில்
ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. இலக்கியம்
ஒரு கலை. கலையென்பது சொல்லுகிற செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது;
பழந்தமிழில் ஆடல், பாடல், இசை அல்லது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள்
ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன. இயல் என்பது பாடல்
அல்லது கவிதையைக் குறிக்கும். இந்த மூன்று கலைகளும் சேர்ந்து முத்தமிழ் என்று சொல்லப்படுகிறது.
முத்தமிழில் - இயல்
என்னும் தமிழ், இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகியது. திவ்யப்ரபந்தத்தில் மூன்றாவது ஆயிரம் " இயற்பா" -இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா. நமது ஆச்சார்யரான சுவாமி நாதமுனிகள்
நாலாயிரம் பாசுரங்களையும் இயல், இசைக்குத் தக்கவாறு பிரித்தார். இப்பகுப்பினைச் செப்பும்
தமிழை இயலிசையிற் சேர்த்து என்று வடிவழகிய நம்பிதாசரின் குருபரம்பரையும்
குறிப்பிடுகின்றது. சுமார் ஆயிரம் பாடல்கள் இயற்பாவாகவும் மற்றையவை
இசைப்பாவாகவும் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இயற்பா : முதல்
திருவந்தாதி (ஸ்ரீபொய்கையாழ்வார்); இரண்டாம் திருவந்தாதி (ஸ்ரீ பூதத்தாழ்வார்); மூன்றாம்
திருவந்தாதி (தமிழ் தலைவன் பேயாழ்வார்); நான்முகன் திருவந்தாதி (திருமழிசைப்பிரான்);
திருவிருத்தம் (ஸ்வாமி நம்மாழ்வார்); திருவாசிரியம் - (ஸ்வாமி நம்மாழ்வார்);
பெரிய திருவந்தாதி - (ஸ்வாமி நம்மாழ்வார்); திருவெழுக்கூற்றிருக்கை; சிறிய
திருமடல் & பெரிய திருமடல் (திருமங்கை மன்னன்) - ஆகிய பாசுரங்களின் தொகுப்பே இயற்பா
!
இந்த பதிவின் ஆரம்பத்தில்
சொல்லப்பட்ட 'மலைபடுகடாம்' - சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை
இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை
எனவும் குறிப்பிடுவர். நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக்
கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின்
கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந்நூற்பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள்
பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும்
பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை
இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
'மலைபடுகடாம்' நூலின் முதல் பாட்டின் விரிவான அர்த்தம் இங்கே : பையில் முழவு முதலான இசைக்கருவிகளை வைத்துக்கொண்டு
செல்பவர்களைப் பார்த்து ஆற்றுப்படுத்தும் புலவர் சொல்லத் தொடங்குகிறார். கூத்தர் கூட்டத்தில்
பாணன் வைத்திருக்கும் இசைக்கருவிகள் பேரியாழ்,
மீட்டும் பாணன் தன் இசைக் கருவிகளைத்
துணிப்பையில் போட்டுத் தோளில் சுமந்துகொண்டு செல்கிறான். யாழோசை மழை பொழிவது போல எல்லாராலும்
விரும்பப்படும் தன்மையதாக இருக்கும். முழவு ஓசை மழை பொழியும்போதே முழங்கும் இடி போல
இருக்கும். ஆகுளி - யாழோடும் முழவோடும் சேர்ந்து முழங்குவது ஆகுளி என்னும் சிறுபறை.
(பாண்டில் - வெண்கலத்தை உருக்கிச் செய்த தாளம். உயிர்த்தூம்பு - யானை பிளிறுவது போல
உயிர்ப்பொலி தரும் கொம்பு. அதன் வளைவமைதி தன் தலையைப் பின்புறமாகத் திருப்பிப் பார்க்கும்
மயிலின் பீலிபோல் அமைந்திருந்தது. எல்லரி - மோத ஒலிக்கும் பெரிய தாளவகை. பதலை - கடம்
என்று நாம் கூறும் பானை. மற்றும் பல. இவற்றை யெல்லாம் வேரில் காய்த்துத் தொங்கும் பலாக்காய்
போலப் பாணர்கள் சுமந்து சென்றனர்.
The photo at the start is a
screengrab of Iyarpa sarrumurai at Thiruvallikkeni divaydesam in 2021.. rest of
the photos are of Thirumayilai Sri Madhava Perumal taken today.
செய்ய தாமரைக்
கண்ணனாய்’ என்று தம் திருவாய்மொழி பாசுரத்தில்,
‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்!’ என்று தம்முடைய கண்கள்
அவனைக் காண வேண்டும் என்று அருளிய ஸ்வாமி நம்மாழ்வார் - திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இராப்பத்து உத்சவ புறப்பாட்டில் உபதேசமுத்திரை, அலர்ந்த செவ்வல்லி மலருடன் சேவை.
" ஆனிரை மேய்க்க நீ போதி* அருமருந்து ஆவது அறியாய்"
கானகம் எல்லாம் திரிந்து
கரிய திருமேனி வாடிய எழில் கண்ணபிரான் 17.1.2025 திருவல்லிக்கேணியில்
இராப்பத்து உத்சவம் 8ம் திருநாளில்- இராஜமன்னாராக சேவை சாதித்தபடியே
A few years after partition and Independence, Indian team toured Pakistan in 1954 and played five test matches. Year later there was another tour and the first match was played on Mar 28, which India won by an innings and 52 runs. In a stadium can hold up to 28,000 people – it was sparse and poorly attended. No Cricket post this but .. something on history and Cricket intertwines !!
பசுக்கள்தாம் செல்வம் என்று நினைத்த, உணர்ந்து, கால்நடைகளை மதித்து, பூஜித்து மக்கள் வாழ்ந்த நாடு இது. மஹாபாரதத்தில் சுசர்மன் ஆநிரை கவர்ந்து மிக பெரிய போர் செய்து, தர்மர் கூறியதால் வீமனால் விடுவிக்கப்பட்டு பின்னர் யுத்தத்தில் பாண்டவர்களை கொல்வதாக சபதம் ஏற்று மாண்ட கதை அறிவீர் !!
ஆ - தமிழ் மொழியின் எழுத்துகளில் இரண்டாவது -
இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும்.
ஆ, என்றால் பசு என்றும் பொருள். பசு மாட்டிற்கு வேறு பெயர்கள் : கோமாதா, குரம், கபிலை, கூலம், கோமளம்,
சுரபி, சுரை, தேணு, பத்திரை, சுதை, வற்சலம், வற்சை. பசுக்கூட்டத்திற்க்கு
ஆநிரை என்று பெயர்.
செல்வத்தின் குறியீடாக ஆநிரைகள் கூட்டம் இருந்தது. அந்த காலத்தில், அவற்றை காப்பது
தலையாய கடமை. நாகரீக வளர்ச்சியில் குடியிருப்புகள் உருவான பின்,
கால்நடைகள் வளர்ப்பும், விவசாயமும் முக்கிய தொழிலானது.
சிறந்த மேய்ப்போன் - மாயோன் ஆன கண்ணபிரான். அவனே ஆநிரை மேய்த்தான் ! அவனே ஆநிரை காத்தான் ! அவனே நமக்கு கலங்காப் பெருநகரம் காட்டுவான் கண்டீர்!. அவனே தலை சிறந்த அரசன். "கோ' என்னும் சொல் பசுவையும், அரசனையும் குறிக்கும். "கோல்' என்னும் சொல்லடியிலிருந்து கோ, கோன், கோமான் என்னும் சொற்கள் தோன்றின. சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப்போர் முறையைச் சார்ந்ததே ஆகும். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடைபெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். எத்துனை நாள் போராயினும் இதுவே வழக்கானது. ஆநிரை கவர்தல் - ஆநிரை மீட்டல், எயில் காத்தல் - எயில் வளைத்தல் முதலியன போரின் வகைகளாம். போர் அறிவிப்பை உணர மாட்டாதவை பசுக்களாகும். எனவே பசுக்களைப் பாதுகாக்க விரும்பி ஆநிரைக் கவர்தல் நடைபெற்றது. அவ்வாறு கவர்ந்து திரும்பும்போது அப்பசுக்களுக்கு உணவினை வழங்கி, அவற்றிற்கு ஊறு செய்யாமல் ஓட்டிச் செல்வர்.
On 17.1.2025, day 8 of
Irapathu Uthsavam, was ‘ Raja
Mannar ’ Thirukolam……….. it is but natural –
Krishna was the King of cowherds and Sri Parthasarathi in His natural
self…as Rajamannar, blessed His bakthas. The whip and the crowning
glory were of unparalleled beauty – one could also notice the small calf at His
lovely feet and the beautiful cow behind Him.
The easiest way to reach
Him, is surrender thyself (Saranagathi) ~ of the infinite kalyanagunas of the
Emperuman – there is one of ‘Vathsalyam’ – the exposition of patience and
forgiveness……… we make so many mistakes knowingly and yet our Lord
protects and takes us nearer removing us of all the sins….. it is rendered that
the cow would like the dirt off the calf revealing it’s extreme love for its
progeny. So also Emperuman accepts us even when we are full of dirt and
mistakes. We need to do nothing but surrender, prostrating at the
divine feet of Sriman Narayana. The
meek cow represents the devotees who reach to Him, as the Eternal Saviour ~ the
Emperor who protected the cows would sure protect us and give us the ultimate
salvation.
Swami
Nammalwar in his Thiruvaimozhi (8th decad 1 thiruvaimozhi)
prays Emperuman to come and provide darshan to His devotees calling Lord
Krishna, the little sweet child, who came to the rich chieftain Nandagopan;
having been born to Devaki but gave Yasodha the pleasure of His
upbringing. He, with his claws tore apart the wild
Hiranya ~ He is our eternal SAviour – and sAdagopan prays that He
presents Himself in a much more adorable form.
எடுத்த பேராளன் நந்தகோபன்றன்
இன்னுயிர்ச் சிறுவனே! * அசோதைக்கு
அடுத்த பேரின்பக் குலவிளங்
களிறே! அடியனேன் பெரியவம்மானே!*
கடுத்த போரவுணன் உடலிருபிளவாக் கையுகிராண்ட எங்கடலே
!*
அடுத்ததோர் உருவாய் இன்று நீவாராய்
எங்ஙனம் தேறுவர் உமரே ?
செல்வச்செழிப்பு
வாய்ந்த சீமானான நந்தகோபனுடைய இன்னுயிர்ச் சிறுவனாய் வளர்ந்த கண்ணன், ஒருத்தி
மகன் என தேவகிப்பிராட்டி வயிற்றிலே பிறந்து, யசோதைப்பிராட்டியிடம்
அக்குலத்திற்கோர் இளங்கன்று போன்று சீரும் சிறப்பையுமாய் வளர்ந்தவன். பல
களங்களை கண்டு சண்டையிலே தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை இரண்டு துண்டமாகும்படி
திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு பிளந்த கடல் போன்றவனே !
~ யாம் மிக விரும்புவளவிலே ஒரு வடிவழகைப் பூண்டு, உந்தன்னை உபேக்ஷித்து
இருப்பவர்களுக்கு வருகை தருவாயாக ! என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கள் உன்னை
சர்வரக்ஷகன் என கொண்டாடும்படியாக வாரும் என நம்மாழ்வார் பிரார்திக்கிறார்.
திரிகர்த்த நாட்டின்
தலைநகராக பிரஸ்தலம் எனப்படும் தற்கால முல்தான்
நகரம் விளங்கியது. திரிகர்த்த
நாடு (Trigarta Kingdom) பரத
கண்டத்தின், தற்கால பஞ்சாப் பகுதியில் அமைந்த பண்டைய நாடுகளில் ஒன்றாகும். திரிகர்த்த
நாட்டை சத்லஜ் , பியாஸ் மற்றும் ராவி ஆறுகள் வளப்படுத்தின. மேற்கு திரிகர்த்த
நாட்டு மன்னர்கள், கௌரவர்களுக்கு கூட்டாளிகளாகவும், பாண்டவர் மற்றும் விராட நாட்டவர்களுக்கு
பகைவர்களாக விளங்கினர். திரிகர்த்த நாடு, விராட நாட்டிற்கு கிழக்கில் அமைந்து இருந்தது. இந்நாட்டின் புகழ்பெற்ற மன்னர் சுசர்மன்.
விராட பருவத்தில், திரிகர்த்த நாட்டவர்களும், குரு நாட்டவர்களும் விராட நாட்டின்
இருபுறங்களில் முற்றுகையிட்டு, பசுக்களைக் கவர்ந்து சென்றனர்.
மன்னன் விராடனுக்குச்
சேவை செய்யப் புகுந்து, அவனது சிறந்த நகரத்தில் மாறுவேடத்தில் வசித்து வந்த
அளவிலா பராக்கிரமம் கொண்ட உயர் ஆன்ம பாண்டவர்கள், பிறரறியாமல் வாழ்வதாகத் தாங்கள் வாக்குறுதி
அளித்திருந்த {அஜ்ஞாதவாச காலத்தை} காலத்தை நிறைவு செய்தார்கள். பகைவீரர்களைக் கொல்பவனான
பலம்பொருந்திய மன்னன் விராடன், கீசகன் கொல்லப்பட்ட பிறகு, குந்தியின் மகன்கள் {பாண்டவர்கள்}
மீது முழு நம்பிக்கை கொண்டான். பாண்டவர்களின் வனவாச காலத்தின் பதிமூன்றாவது வருட நிறைவில்தான்
விராடனின் கால்நடைகளை சுசர்மன் ஆயிரக்கணக்கில் கைப்பற்றினான்.
கால்நடைமந்தைகள்
அப்படிக் கைப்பற்றப்பட்ட போது, விராடனின் மந்தையாளர்கள் பெருவேகத்துடன் நகருக்கு
வந்து, மத்ஸ்யர்கள் மன்னனான தங்கள் ஆட்சியாளன் விராடனிடம் முறையிட, மன்னனும்
தேர்களும், யானைகளும், குதிரைகளும், காலாட்படைகளும், கொடிக்கம்பங்களும் நிறைந்த மத்ஸ்ய
படையை அணிவகுக்கச் செய்தான். விராடனின் அன்பிற்குரிய தம்பியான சதானீகன் தங்கத்தால்
அலங்கரிக்கப்பட்டு, பிளக்க இயலாத எஃகால் செய்யப்பட்ட கவசத்தைத் தரித்தான். சதானீகனுக்கு
அடுத்து பிறந்தவனான மதிராக்ஷன் வலுவான கவசத்தை அணிந்தான். மத்ஸ்யர்கள் மன்னன்
தம்பியான சதானீகனிடம், “பெரும் சக்தி கொண்ட கங்கன், வல்லவன், தந்திரீபாலன் மற்றும்
தமக்கிரந்தி (பஞ்ச பாண்டவர்கள்) பெரும் போர் வீரர்கள், அவர்களுக்கு கொடிகளுடன்
கூடிய தேர்களை அளிக்குமாறு ஆணையிட்டான்.
விராடன்
தங்கத்தேரில் இருந்த திரிகார்த்த ஆட்சியாளன் சுசர்மனை எதிர்த்தான். மன்னன் விராடன்,
சுசர்மனை பத்து கணைகளாலும், அவனது நான்கு குதிரைகளில் ஒவ்வொன்றையும் ஐந்து கணைகளாலும்
துளைத்தான். திரிகர்த்தர்களின் தலைவனான மன்னன் சுசர்மன், தனது சக்தியால் மத்ஸ்யர்களின்
முழுப் படையையும் ஒடுக்கி வீழ்த்தியபடி, பெரும் சக்தி கொண்ட விராடனை நோக்கி அவசரமாக
விரைந்தான். விராடன் தேரை இழந்திருந்தபோது, அவனை உயிருடன் சிறைபிடித்து
துன்புறுத்திய சுசர்மன், விராடனைத் தனது தேரில் ஏற்றி, களத்தை விட்டு விரைந்து சென்றான்.
தர்மரின் ஆணைப்படி
களமிறங்கிய பீமன், ஒரு பெருமரத்தை பிடுங்கி, கதாயுதம் போன்ற பெரும் அடிமரம் கொண்ட இந்தப்
பலமிக்க மரத்தை கொண்டு நான் எதிரியை முறிப்பேன்” என்றான். நீதிமானான வீரமிக்க
மன்னன் யுதிஷ்டிரன், தனது தம்பியிடம் {பீமனிடம்}, “ஓ! பீமா, இத்தகு மூர்க்கமான செயலைச்
செய்யாதே. அந்த மரம் அங்கேயே நிற்கட்டும். நீ அந்த மரத்தைக் கொண்டு மனிதசக்திக்கு அப்பாற்பட்ட
முறையில் இத்தகு சாதனைகளை அடையக்கூடாது. நீ அப்படிச் செய்தால், “இவன் பீமன்”
என்று மக்கள் உன்னை அடையாளம் காண்பார்கள். எனவே, மனித ஆயுதங்களான, (கணைகளுடன் கூடிய)
வில்லையோ, வேலையோ, வாளையோ, போர்க்கோடரியையோ எடுத்துக் கொண்டு போர் செய் என பணித்தார்.
கையில் கதாயுதத்துடன்
களமிறங்கிய வீர தீர போரில் படைகளை சின்னாபின்னம் செய்து, நெருங்க சுசர்மன் தேரிழந்து
ஓடினார். அவன் ஓடுவதைக் கண்ட பீமன், “நில்! ஓ இளவரசே! இப்படி நீ ஓடுவது
உனக்குத் தகாது! இந்த உனது பராக்கிரமத்தைக் கொண்டு, மந்தையை நீ எப்படிப் பலவந்தமாகக்
கைப்பற்ற முடியும்? உனது தொண்டர்களையெல்லாம் கைவிட்டு, எதிரிகள் மத்தியில் நீ தாழ்வடையலாமா?”
என்று கேட்டான். பீமன், கோபத்தில் சுசர்மனின் தலைமுடியைப் பிடித்துத் தூக்கி,
கீழே எறிந்து தரையில் மோதச் செய்தான். துன்பப்பட்ட திரிகார்த்த மன்னன்
உணர்வற்றுப் போனான். தேரை இழந்த திரிகார்த்தர்களின் மன்னன் சுசர்மன் பிடிப்பட்டதும்,
மொத்த திரிகார்த்தப்படையும் பீதியடைந்து எல்லாத் திக்குகளிலும் ஓடின.
சுசர்மனை வீழ்த்தி,
பசுக்களையும், அனைத்து வகைச் செல்வங்களையும் மீட்டு, விராடனின் துயரை அகற்றி, விராடனின்
முன்பு சுசர்மனை நிற்க வைத்தனர். யுதிஷ்டிரன் இம மன்னன் விராடனின் அடிமையாகிவிட்டான்”
என இயம்பி, சுசர்மனை நோக்கித் “நீ விடுதலையடைந்தாய். சுதந்திர மனிதனாக
நீ செல்லலாம். இனியும் இவ்வழியில் செயல்படாதே” என்று புத்திமதி கூறி விடுதலை
செய்வித்தான்.
திரு.கிசாரி மோஹன்
கங்குலி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மஹாபாரதம் தமிழாக்கம்... விராட பர்வம் பகுதி 32 - திரு செ.அருட்செல்வப்பேரரசன்
அவர்களின் சிறப்பான நடையில் இருந்து !
பன்னிரண்டாம் நாள்
குருசேத்திரப் போரில் இம்மன்னனது படையான சம்சப்தகர்கள்,
எனப்படும் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் குருக்ஷேத்திர
போரில் அருச்சுனனை கொல்வோம் அல்லது அருச்சுனனால் கொல்லப்படுவோம் என வீர சபதமிட்டு போரிட்டனர்.
அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமான ஜெயத்திரதனை சூரியன் மறைவதற்குள் பழி வாங்க துடித்த
அருச்சுனை ஜெயத்திரதன் பக்கம் நெருங்காதவாறு, சம்சப்தகர்கள் அருச்சுனனை போருக்கு அழைத்து,
போர்க்களத்திற்கு வெகு தொலைவிற்கு அழைத்துச் சென்று போரிட்டனர். சூரியன் மறைவதற்கு
சிறிது நேரம் இருக்கும் போது, வீரமுடன் போரிட்ட அனைத்து சம்சப்தகர்களை அருச்சுனன் கொன்றழித்தான்.
பின்னர் கண்ணனது உதவியுடன் சயத்திரனது தலையும் உதிர பண்ணினது பிறிதொரு சம்பவம்.
Multan is a city in Punjab, Pakistan, located on the bank of river Chenab. It is one of the five largest urban centres of Pakistan and is the administrative centre of Multan Division. It is a major cultural, religious and economic centre of Punjab region, Multan is one of the oldest cities of Asia with a history stretching deep into antiquity.
Way back in March 1818, a siege commenced and lasted until 2 June 1818 as part of the Afghan–Sikh Wars, and saw the Sikh Empire capture Multan from the Durrani Empire. Maharaja Ranjit Singh had previously invaded Multan seven times successfully. He first led the invasion in 1802 which ended with Nawab Muzaffar Khan offering his submission, some presents and a promise to pay tribute. Ranjit Singh led the second invasion in 1805 which resulted in Nawab Muzaffar Khan again offering him rich presents and a tribute of 70,000 rupees. The third invasion in 1807 happened when Ahmad Khan Sial, who had fled to Jhang during Ranjit Singh's invasion of Multan in 1805, persuaded Nawab Muzaffar to organise a tough resistance against Ranjit Singh, noting that Ranjit Singh was busy with Holkar-Lake incident. Ranjit Singh advanced and besieged Multan but the siege was raised after the Nawab yielded, paying some tribute and gifting 5 horses. In the fourth, a hard-fought battle over 2 months, Muzaffar Khan was defeated and submitted to paying tribute of 180,000 rupees along with 20 horses and a promise to pay annual tribute to Ranjit Singh.
Multan was
part of the Achaemenid Empire of Iran in the early 6th century BC. The
Achaemenid Empire, was an Iranian empire founded by Cyrus the Great of the
Achaemenid dynasty in 550 BC. Based in modern-day Iran, it was the largest
empire by that point in history, spanning a total of 5.5 million square
kilometres (2.1 million square miles). The
ancient city was besieged by Alexander the Great during the Mallian Campaign. Later it was conquered by the
Umayyad military commander Muhammad bin Qasim in 712 CE after the conquest of
Sindh. The region came under the rule of the Ghaznavids and the Mamluk
Sultanate in medieval period. Multan province was one of the significant
provinces of the Mughal Empire. In 1848, it was conquered by the British from
Sikh Empire and became part of British Punjab.
Long ago, there was a beautiful Sun Temple in Multan, now the location remains unknown as it was destroyed totally by mughal rulers. This is different from the Prahladpuri Temple. The temple commanded significant fame in the subcontinent — as a place of pilgrimage and wealth — under Hindu as well as Islamic rule before being destroyed in the late tenth century. It appears to have been reconstructed, before being purportedly obliterated by the Mughal Emperor Aurangzeb at some point after 1666.
During the conquest of Sindh by the Umayyad Caliphate in 8th century C.E. under the leadership of Muhammad bin Qasim, Multan fell after a long siege and the Brahmin dynasty was replaced. Upon the Umayyad conquest, Qasim obtained thirteen thousand and two hundred mans of gold upon excavation. This gain of treasures—by loot or revenue—would lead to Multan being regarded as the "Frontiers of gold" by Arab geographers, well into the fourteenth century. Al-Baladhuri's Futuh al-Buldan (c. mid-9th century C.E.) remains the earliest narrative-history to cover the history of the temple under Umayyad rule; he noted that all wealth—amounting to thirteen thousand and two hundred maunds of gold—were confiscated from what was the "preeminent site of pilgrimage" for local Sindhis. It was also recorded about how the Sindhis used to shave their beards and head before circumambulating it and offering riches.
Multan lost its very important position as soon as the British stronghold over the sub-continent grew stronger and stronger. After independence was achieved in 1947, Multan became less significant politically. The predominantly Muslim population supported Muslim League and Pakistan Movement – and during partition, the minority Hindus and Sikhs migrated to India en masse, while some Muslim refugees from the newly independent Republic of India settled in the city.
Muhi al-Din Muhammad (1618 – 1707), commonly known by the title Aurangzeb, and also by his regnal name Alamgir I, was the sixth Mughal emperor, who left a significant impact in India. Aurangzeb and the Mughals belonged to a branch of the Timurid dynasty. He held administrative and military posts under his father Shah Jahan and jointly administered the provinces of Multan and Sindh in 1648–1652.
A search of
Sultan of Multan would give you a different result showing Virender Sehwag. In Test no. 1693 - when day 2
began, Indians were on 356 for 2 and
Sehwag on 228. Tendulkar, on 60, led the way, showing his more impetuous
partner the virtue of leaving the ball alone, carefully choosing high percentage
scoring areas and targeting specific bowlers. Virendar was a swash-buckler, he brought up his hundred with a six off Shoaib
Akhtar, and on the verge of a triple-century for the first time in his career
(first of India too), he had no qualms about swinging Saqlain Mushtaq over the
deep fielder at long-on for another six.
A high voltage behind-the-scenes drama was sparked off in the Indian
dressing-room by Rahul Dravid's abrupt declaration which left Sachin Tendulkar
stranded only six runs short of a double century !!
அஞ்சன
வண்ணன் ஆயர்க்கோலக் கொழுந்து
எம்பெருமான்
கண்ணன் திருவடிகளும்
அன்று
கோவிந்தன் மேய்த்த ஆநிரைகள் - பசுவும் கன்றும்.
திருவல்லிக்கேணி
இராப்பத்து 8 - ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
ஸ்ரீராஜமன்னார்
திருக்கோலம்.
17.1.2025
‘Thaiyil Makam’ ~ thirunakshathiram of Thirumazhisai Alwar
2025.
தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம்! திருமழிசைப்பிரான் அவதரித்த நாள் *
Today 17.1.2025
(Thai 4) is day 8 of Irapathu Uthsavam, today being Makam in the month of Thai
marks the sarrumurai vaibhavam of Thirumazhisai Azhwar.
வாழ்க்கை என்பது என்ன? பிறப்பா ! உயிரோடு இருப்பதா? ! 'வாழ்' என்பது வாழ்வு, வாழ்தல் என்ற வினைச்சொல்லின் தொழிற்பெயர். உங்களிடம் இப்போது இருப்பது உங்கள் உடலும் மனமும் மட்டுமே. அவற்றை உங்களால் முடிந்தவரை இனிமையாக்குங்கள். உங்கள் உடல் மற்றும் மனம் இனிமையான நிலையில் இருந்தால் மட்டுமே, உங்களில் உள்ள அனைத்தும் மிகச் சிறப்பாக செயல்படும். நீங்கள் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்போது மட்டுமே உங்கள் அறிவுத்திறன் சிறப்பாக செயல்படும்.
Life starts from – birth, growing to become teens, education, work, marriage, children, living and death ! for many life is a constant struggle – struggle to balance, survive – heard of - bachelor father or bachelor mother ?
Polly Parrish moved to New York City to seek more opportunities and works as seasonal temporary help in a large department store, Merlin's. She receives notice that her position will be terminated after the Christmas season and she will not be kept on. Walking home, she sees a stranger leaving a baby on the steps of an orphanage. To protect the baby from the cold, Polly takes it inside. The orphanage staff offer Polly assistance and aid so she can keep the baby, because the immediate mutual fondness between Polly and the baby convinces the orphanage staff that Polly is the mother, despite her many protests. Polly leaves the baby in their care, but not before she gave them her name and informed them she was being laid off from Merlin's department store… .. …
திருமழிசை ஆழ்வார் - அவதாரஸ்தலம் திருமழிசை
சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக
திருவள்ளூர், திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் "திருமழிசை". ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காப்பியங்களில் பாடப் பெற்ற பல்லவர் காலத்தில் புகழ் பெற்ற
புண்ணிய க்ஷேத்ரம் திருமழிசை. இவ்வூரில் ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள்
கோவில் அழகுற அமைந்துள்ளது. திருமழிசை பேரூராட்சி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை
மற்றும் சென்னை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருமழிசையின்
ரியல் எஸ்டேட் சந்தையில் மலர்ந்து வரும் பல திட்டங்களில் மாநில அரசின் மிகப்பெரிய சாட்டிலைட்
டவுன்ஷிப் முக்கியமானது.
வாழ்க்கை என்பது
என்ன? பிறப்பா ! உயிரோடு இருப்பதா? ! நிச்சயமான இறப்பை நோக்கி பயணமா !
மகிழ்ச்சியா ! பணமா, புகழா, பதவியா !, செல்வங்களா ! மக்கட்செல்வங்களா ! வெற்றிகளா!
தன்னலமற்ற அர்ப்பணிப்பா? …. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும்,
பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது. வாழ்க்கை ஒரு
பயணம். வாழ்க்கை அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை
பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில்
எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.
நன்றாக வாழ்க்கையை
வாழ்வது என்பது என்ன ? செய்யும் சில செயல்களோ அல்லது சிலவற்றை அடைவதோ
மட்டுமே வாழ்க்கை, முழுமையை எட்டிவிடாது. வாழ்வின் எல்லா நிலைகளிலும்,
"இது மட்டும் நடந்தால் என் வாழ்க்கை முழுமையடையும்" என்கிற எண்ணம் ஒவ்வொரு
மனிதனுக்கும் ஏற்படும். குழந்தை பொம்மைக்காகவும், சில உணவு பொருட்களுக்காகவும்
அழும் .. .. அவை கிடைக்கலாம். ஒவ்வொரு நிலையிலும் தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள்
மாறும். அவை கிட்டுவதானால் மட்டுமே, சந்தோசம் பொங்குவதில்லை! வாழ்க்கை
முழுமை அடைவதில்லை.
- உலகுமழிசையும் உள்ளுணர்ந்து, உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் “மாநீர் மழிசை வலிது” என பிரசித்தி பெற்ற இத்தலத்தில் துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தை மாசம் கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி கூடிய மகம் நட்சத்திரத்தில், பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக திருமழிசைப்பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு
அம்சம்.
For Srivaishnavaites, Azhwaars and their birthdays
are of great
significance. Bhakthisarar, well known as
Thirumazhisai Azhwar was born in Thirumazhisai and hence is hailed as
Thirumazhisai Piran. This place is near Poonamallee around 20
kms away from Chennai on the Bangalore High Road. Thirumazhisaippiran’s
works are : Naanmukhan Thiruvanthathi (96) and Thiruchanda Virutham
(120). He was born in the Magam nakshathiram of Thai month.
இளமையிலேயே பரஞான
முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்னவென்று அறிய- சாக்கியம்,
சமணம், சைவம், நாத்திகம் உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச்
சார்ந்திருக்கும்போது திருமயிலையில் பேயாழ்வார் இவரை திருத்திப் பணி கொண்டார்.
பக்தியில் தலை சிறந்தவராக இவர் விளங்கியதால் முக்கண் மூர்த்தியான சிவபெருமான் இவருக்கு
பக்திசாரர் என திருநாமம் சாற்றினார்.
இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 - நான்முகன்
திருவந்தாதி (96);
திருச்சந்த
விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள்
கொண்டாடுகிறார். திருமழிசை ஆழ்வார் அருளிய திருச்சந்த
விருத்தம் "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் " என பெருமையுடன் அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல்
வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. இதோ இங்கே *திருச்சந்தவிருத்தத்தில்*
இருந்து ஒரு பாசுரம் :
வாள்களாகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பெய்தி
மாளுநாளதாதலால் வணங்கி வாழ்த்தென் நெஞ்சமே
ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்ததன்றியும்
மீள்விலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே.
ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே, நம்மை
காப்பற்றவல்லன். 24 மணிகள் கொண்ட ஒவ்வொரு தினங்களும், நமது ஆயுளை அறுக்கும்
வாள்கள்போன்று கழிய, பலவகை வியாதிகளாலே சரீரம் பலவீனமடைந்து, கிழத்தனமும்,
மனச்சோர்வும், நம்மை கவனிப்பாரில்லையே என சோர்ந்து மரணமடைவதோர் நாள்
நெருங்கிவிட்டது என பயமும், பதைபதைப்பும் வரும் முன்னரே, எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனுக்கு ஆட்பட்டிருப்பதே
நன்மையென்று நன்கு உணர்ந்து, நம்பெருமாளை தொழுது ஏந்துவோம். எம்பெருமானின் திருவடிகளே
'மீள்வு இலாத போகம்' - மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகம். அதை எனக்கு
நல்குவீராக என எம்பெருமானிடத்திலே மனமுருகி பிரார்திப்போம்.
On his sarrumurai day
this year, at Thiruvallikkeni divyadesam, being Irapathu uthsavam, there
is no purappadu of Azhwar. Here are some photos of Bakthisarar at his
avatharasthalam taken yesterday – thiruther purappadu.
adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17th Jan 2025.
PS: Vaazhkkai (வாழ்க்கை) directed by CV Rajendran starring Sivaji Ganesan & Ambika was spoken well with nice songs of Isaigani Illayaraja.
Back in 1949 – directed by AV Meyyappan and starring TR Ramachandran, SV Sahasranamam – Vazhkkai movie was released. The story, essentially a family drama, was partially inspired by the successful Hollywood movie, Bachelor Mother (1939), and a Hindi film Kunwara Baap (1942).
In Vazhkai, the hero finds the baby in his car left by a girl duped by her lover. The rich heroine and her family come to the wrong conclusion. T. R. Ramachandran was the ‘bachelor father.' K. Sarangapani was cast as the hero's rich, eccentric father.
The Polly Parish story read at the start was the plot of - Bachelor Mother (1939), an American romantic comedy film directed by Garson Kanin, starring Ginger Rogers, David Niven, and Charles Coburn. With a plot full of mistaken identities, Bachelor Mother was a light-hearted treatment of the otherwise serious issues of child abandonment. While it was bachelor mother who struggled in raising a kid in American movie, it was a bachelor father who had issues in raising child in Tamil movie – Vazhkkai.