To search this blog

Showing posts with label Vaishnavism. Show all posts
Showing posts with label Vaishnavism. Show all posts

Monday, August 31, 2026

Sri U.Ve. Mudaliandan swami thirukkalyanam

ஸ்ரீ வைஷ்ணவ உலகத்திற்க்கு இன்று  31.8.2026    சீரிய நன்னாள்.



இன்று  திருவரங்கத்தில்  ஸ்ரீ உ.வே. கோ. க. வா. அ - ஸ்ரீ குமார பக்திஸாராச்சார்ய ஸ்வாமி [வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி] திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. 



முதல் படம் -  வர்த்தமான சுவாமி 2021 ஸ்ரீ சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் எடுத்தது;  இரண்டாவது திருக்கல்யாண மஹோத்சவ படம் [இணையத்தில் இருந்து];  மூன்று 2021 ஸ்ரீ சிங்கப்பெருமாள் திருக்கோவிலில் திருவாய்மொழி சேவாகாலம்




Monday, August 24, 2026

ThirupPavithrothsavam day 2 @ Thiruvallikkeni : 2026

 

ThirupPavithrothsavam day 2 @ Thiruvallikkeni : 2026

 



In the ongoing ThiruPavithrothsavam at Thiruvallikkeni, today 23.8.2026 is  day 2 

 

Pavithrotsavam is an annual ritual - the word itself is a derivative from the combination of two words - 'Pavithram (holy) and Uthsavam (Festivity).    This Uthsavam is penitential as also propitiatory  ~ for sure, there is nothing good or bad for the Ultimate Benefactor, the Lord who gracefully blesses in all our endeavours.   It is our own attempt to get rid of the evils that might have been caused by the omissions and commissions in the performance of various rituals throughout the year.   

Sriman Narayanan in Sri Vaishnavaite philosophy beholds the Best of everything and cannot in any manner be having anything in short or less. The festivals are only intended to be error correction [dosha nirvana] of the rituals that we, the humans conduct and fail in some manner.  Lord only accepts them with Divine Grace, blessing us all the time beyond what we deserve.  For a Srivaishnavaite, nothing needs to be done by self as Sriman Narayana with His abundant opulence will shower his blessings and guide us to do kainkaryam to Him.   

During this Thiru Pavithrothsavam, yaga salai is constructed and vedic chants made by Thirukovil Battars; alongside homam – there would be arulicheyal as also veda parayanam by Adyapaka goshti.  In the sacred maha Yagnam - aswaththa samith, cow ghee, bilvapatrams - vilva ilai, lotus are used.    The poornahuthi / the conclusion of Thirupavithrothsava Sarrumurai is to  take place on  28.8.2026







Let us all have darshan of Sri Parthasarathi, Thirupavithorthsava yagnam and have the Divine Blessings.  Here are some photos taken during today’s  chinna maada veethi purappadu of Sri Parthasarathi Pavithrothsavam day 2.  

 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில்  நடை பெறும் பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.  

திருப்பவித்ரோத்சவம் ஆவணி மாதம் ஏழு நாட்கள் நடை பெறுகிறது. இந்த திருப்பவித்ரோத்சவத்தில் திருக்கோவிலில் யாக சாலை அமைத்து ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் உத்சவர் திருமுன்பு திருக்கோவில் பட்டாச்சார்யர்களால் யாக யக்னங்களும், வேதவிற்பன்னர்களால் வேத பாரயணமும்;  அத்யாபகர்கள் மற்றும் திவ்யபிரபந்த கோஷ்டியினரால் அருளிச்செயல்- திருவாய்மொழி  சேவை சாற்றுமுறையும் நடைபெறுகிறது. ஏழு நாட்களும் திருவீதி புறப்பாடு நடக்கிறது. கோவிலில் எல்லா எம்பெருமானுக்கும் பட்டு நூலிலான பல வண்ணங்கள் உடைய திருப்பவித்ர மாலை சாற்றப்படுகிறது. 

திருப்பவித்ரோத்சவம் மகிமை பற்றி படித்தது " எம்பெருமானிடம் உள்ள ஸாந்நித்யம் குறையாது இருப்பதற்கு ப்ராயச்சித்தமாக பல உத்ஸவங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அமுதுபடிகள் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் லோபத்தை (குறைபாடுகளை) நீக்குதற்பொருட்டு ஜ்யேஷ்டாபிஷேகத்திற்கு அடுத்த நாள் “திருப்பாவாடை உத்சவம் ” கொண்டாடப் படுகிறது. , திருவாராதனம் ஸமர்ப்பிப்பதில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் மந்திர லோபம் ஆகியவற்றை நீக்குவதற்காகப் “பவித்ரோத்ஸவம்” கொண்டாடப் படுகிறது. பெருமாள் திருமேனி முழுவதும் பவித்ரத்தை (புனிதத்தன்மையை) உண்டு பண்ணும் பவித்ரம் (முடிச்சுக்கள் கொண்ட தர்ப்பங்கள்) சாற்றப்படுகிறது. " (நன்றி : ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ)  

முடிச்சோதியாய் ஒளி படைத்த கிரீடத்தை தரித்த எம்பெருமானின் திருமேனி ஸௌந்தர்யம் அளவிட முடியாதது.  ஸகல சேதன அசேதநப் பொருள்களென்ன எல்லாவற்றையும்  தன்னுள்ளே வைத்துள்ளதனாலேயே நாராயணனென்னுந் திருநாமம் படைத்தவ எம்பெருமான் பரிபூர்ணன்.  சௌலப்யம், சௌசீல்யம், ஆர்ஜவம், வாத்சல்யம், சுவாமித்வம் என எல்லா கல்யாண குணங்களையும்  தன்னகத்தே கொண்டவன்.  எம்பெருமானுக்கு குறை என்பதே இல்லை.  எம்பெருமானின் திருவடிகளையே சரணாய் கொண்டு கைங்கர்யம் செய்யும் அவனடியார்கள் இது போன்ற உத்சவங்களை சிறப்புற நடத்தி, ஆனந்தம் கொள்கிறோம்.   

திருவல்லிக்கேணி திருப்பவித்ரோத்சவம் இரண்டாம் நாள்  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :  

 
adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar










 

Wednesday, August 5, 2026

H.H. Sri Sri Vadhikesari Azhakiya Manavala Jeeyar swami @ Mandya

H.H. Sri Sri Vadhikesari Azhakiya Manavala Jeeyar swami

at Hale Kiranguru near Srirangapatna -  avathara sthalam

of   Thirumalai Ananthazhwan  2018

: https://youtube.com/shorts/GJOOQu_sib4





Tuesday, August 4, 2026

Bakthi learning from Monkey ! "புகல் ஒன்று இல்லா அடியேன்' !!

 

Monkeys – we see them very rarely in Triplicane – they used roam so much in Thirumala, not any longer, though found on the hills as one climbs by foot.  At  Sholinghur they are aplenty ! here is a photo of a Monkey carrying its kid [the small one too appears to be big !]


Not many may like Monkeys !!  -   some do keep them as pets (no reference to vagabonds here but the rich !]             Monkeys depict a rich mix of playfulness, curiosity, intelligence, and social bonding—and they teach us about the roots of human behavior, the value of community, and how to stay adaptable and creative in the face of problems.  Their tool use, memory, and social learning give clues about the evolution of human intelligence and problem solving.  Monkeys show empathy, reconciliation after conflict, and complex communication, reminding us that emotions and relationships are deeply rooted in our biology. Their ability to thrive in varied environments underscores the survival value of flexibility, curiosity, and learning from others.

Sri Vaishnava devotional concept , about different ways through which a devotee approaches Perumal is presented through nyayas – methods or theories –the two most often cited are markata  and marjara.   The concepts of Markaa Nyāya (Monkey Principle) and Mārjāra Nyāya (Cat Principle) are among the most beautiful analogies in the Sri Vaishnava tradition to explain the relationship between human effort (prayatna) and divine grace (śaraāgati / prapatti).

Markada nyayam  means the monkey-infant principle,   how a soul receives divine grace. In this view, salvation requires active effort from the devotee—just like a baby monkey must tightly cling to its mother's belly for safety while she moves. The seeker must hold on to God through personal discipline, prayer, and action.  If the baby monkey loses its grip and lets go, it falls. Grace is attained by those who actively seek and strive for it.  

The one contradicting this is -  Marjara Nyaya (The Cat Principle): represents total, passive surrender. Like a mother cat that picks up her passive kitten by the scruff of the neck, God takes complete and sole responsibility for the devotee's safety without any active effort from the seeker.  ‘marjara-nyaya refers to the behaviour of kittens, who are likely to wander. The mother cat picks them up by the scruff of the neck and carries them wherever she wants them to be. The kitten is passive; she makes no effort but arrives safely by surrendering to the mother’s protective grasp.’ It is up to the devotee, then, to choose: to keep making an effort to cling for succour to his deity, or to leave everything to the deity, trusting him and surrendering to him completely. No recommendation is made, no preference indicated.

The Thennacharya sampradhaya  is often associated with Mārjāra Nyāya.   This concept emphasizes :  God's grace is unconditional; the  soul cannot save itself.  The Lord Himself becomes both:  the means (upāya), and the goal (upeya).  The devotee merely performs sincere surrender (prapatti).

Our Great Acaryar Swami  Pillai Lokacharya drew extensively on Nammāvār while developing the theology of śaraāgati in works such as the Śrīvacana Bhūaam. He emphasized that: the soul is utterly incapable (ākiñcanya), the Lord is the sole means (upāya),  the Lord's grace alone saves.   

One of the verses of Swami Nammalvar’s Thiruvaimozhi  most often quoted in discussions of surrender is:

"புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே."

"I, Your servant, who has no other refuge, have come and taken shelter beneath Your feet."

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasa dhasan

4.8.2026

PS: forgive me for any conceptual errors, if something is amiss, please do message me on WA or respond here.

 

Sunday, August 2, 2026

Madurai Prof Dr Sri U.Ve,. Arangarajan Swami 90 - book release

மதுரை பேராசிரியர் முனைவர் ஸ்ரீ உ.வே. இரா. அரங்கராஜன் ஸ்வாமி நவத்யப்த பூர்த்தியை [90] முன்னிட்டு புத்தகங்கள் வெளியீட்டு  விழா

திருவல்லிக்கேணி  ஸ்ரீ யதுகிரி யதிராஜ மடத்தில் இன்று

 


ஆச்சார்ய மங்களாசாசனம் மற்றும் புத்தக வெளியீடு : ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் யோக  ந்ருஸிம்ஹ ஸ்வாமி

 

: https://youtu.be/L0O0HbzT9H4


Madurai Prof Arangarajan Swami 90 - book release

 

மதுரை பேராசிரியர் முனைவர் ஸ்ரீ உ.வே. இரா. அரங்கராஜன் ஸ்வாமி நவத்யப்த பூர்த்தியை [90] முன்னிட்டு புத்தகங்கள் வெளியீட்டு  விழா

திருவல்லிக்கேணி  ஸ்ரீ யதுகிரி யதிராஜ மடத்தில் இன்று

 


ஆச்சார்ய மங்களாசாசனம் மற்றும் புத்தக வெளியீடு : ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் யோக  ந்ருஸிம்ஹ ஸ்வாமி

 



தலைமையுரை : முதுமுனைவர் ஸ்ரீ உ.வே. ம அ. வேங்கடகிருஷ்ணன் ஸ்வாமி 

More photos later !!


Friday, July 24, 2026

Naimisaranyam divyadesam ~ *நைமிசாரணியத்துள்* எந்தாய் !!

Naimiāraya (Sanskrit: नैमिषारण्य),   lit.'Naimisha forest', also referred as Naimisha (Sanskrit: नैमिष) or Nimkhårvan  is a sacred forest  mentioned in Puranic literature, as well as both the Ramayana and the Mahabharata. It is regarded to be the place where the Puranas had been narrated for the first time, before a large gathering of sages.  The ancient forest corresponds to modern day Nimsar, situated along the Gomati river in the Sitapur district of Uttar Pradesh, India. 

நெஞ்சினால், நினைந்தும், வாயினால் மொழிந்தும் - நீதியல்லாதன செய்தும் .. ..

வந்துன் திருவடியடைந்தேன் *நைமிசாரணியத்துள்* எந்தாய்  !!

 


Throughout my life - thinking wickedly, speaking in harsh tones, doing many acts against Dharma, have committed many sins – now am falling at your feet

O the Lord at Naimisaraniyam 

Revered as a sacred Tapovanam, it is believed Sriman Narayana  manifests here as the entire forest. It is the legendary site where 88,000 sages gathered and Sage Sutha narrated the Puranas. There are 9 tapovams. They are Dandakaranyam, Saindhavaranyam, Jambhukaranyam, Pushkararanyam, Utpalaranyam, Badrikaranyam, Gurujangalaranyam, Aruputharanyam and Naimisaranayam.  Naimisaranyam is regarded as a holy forest – Emperuman himself  is in the form of forest. 

Naimisaranya is located at the junction of the roads from Sitapur and Khairabad, 32 km from Sitapur and 42 km from the Sandila railway station, 45 miles north of Lucknow in Uttar Pradesh. Naimisaranya is also known as Nimsar or Nimkhar and is located on the left bank of the river Gomati.  The famous poet, Surdas resided here. Maharishi Suta, the author of 18 puranas is believed to have lived here and presented his sayings to the sages. 

Pic taken couple of years ago !

 
Aadiyen Srinivasa dasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
24.7.2026

Thursday, July 23, 2026

74 Simhasanathipathigal !! ? - Simhagiri (Belagola) Temple

 

The quintessential of Srivaishnavism is undiluted devotion to Sreeman Narayana as the Supreme eternal Bhagwan. We reach Emperuman through kainkaryam as ordained by our Azhwar / Acaryas and by following the path guided by Acaryas. 

இணையம், புத்தகங்கள், சமூக வலைத்தளங்கள் என எத்தனை இருந்தாலும், நம்மை எம்பெருமானிடத்திலே இட்டுச்செல்ல வல்லவர் நம் ஆசார்யர் மட்டுமே !

 


A very beautiful painting at Shree Vishvamangala Lakshmi Narasimha swami thirukkovil, (Simhagiri) Belagola, Srirangapatna Taluk, Karnataka, near Mysore. Regards to Sri Pattanna Swami and his kumarar Sriram [taken in 2025] 

The pic reminisces the 74 Simhasanathipathis  ordained by our Emperumanar to propagate Srivaishnavism .. Udayavar gave the vigraham of Lakshmi Nrusihma for thiruvaradhana to all the simhasanapathis as per Guru Parampara.  … .. and other eminent disciples of Udayavar :  Mudaliāṇḍān (Dasarathi); Kūrathāzhwān; Embār; Kidambi Ācchān; Ananthāzhwān; Vaduga Nambi;        Tirukkurugai Pirān Piḷḷān; Arulaa Perumā Emberumāār; Piḷḷai Urangāvilli Dāsar (my thoughts! – may not be the exact description of the representation)

Tuesday, July 14, 2026

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 


நகரங்களில் பலர் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.  பிரச்னைகள் எனும் பூதம் அவர்கள் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் ஒருவருக்கும் உண்மையாக இல்லை !  ஏன் தனக்கே கூட !!  சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம். வாழ்க்கையின் பரம பலன் :  அதிகார போதை, ஆத்திரம், தீய எண்ணங்கள் இல்லாமல் - நான் சாதாரணன், நான் பக்தன், எனது பணி எம்பெருமானுக்கு, அவர்தம் அடியாருக்கு பணி செய்வதே என்பதை உணர்ந்து வாழ்தலே !




Today 14th July 2026   is Punarvasu  in the month of  Aani  – masa thirunakshathiram of Kulasekara Azhwar, Swami Mudaliandan & Embar…. Today is Amavasai too.. .. ..

When someone asks you – ‘How are you ?’ – what would be the answer – is it simply ‘fine’ or factual ‘not so fine’.  How willing are you to  genuinely listen to people ? How often would you interrupt to say – what I do, how I would have handled this ! or in my personal experience and .. .. .. 

நம்மில் பலர் பல பிரச்னைகளிடையே உழல்கிறோம்.  மனா நிம்மதி இல்லை.  தினசரி வாழ்க்கையில் எப்போதும் பலப்பல  பிரச்னைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ! சரியான இடமில்லை, நல்ல உடைகளில்லை  (அதாவது எவ்வளவு இருந்தும் போதும் என்ற மனதில்லை); அலுவலக வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை,  மற்றவர்களுக்கு எல்லாமே எளிதில் நடப்பதாகவும் தமக்கு சாதாரண விஷயங்கள் கூட பல இடர்பாடுகள் நேர்வதாகவும் உண்மையாகவோ மனத்திலோ சிந்தனை;  குடும்பங்களில்  பிரச்னை;  பணமுடை; போதாக்குறைக்கு கொரோனா வேறு உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது.   ஒவ்வொரு கால கட்டத்திலும் விதவிதமான பிரச்னைகள்.  அலைகள் எல்லாம் ஓர் நாள் ஓயும். நாம் நிம்மதியாக வேலைகளை துறந்து ஓய்வாக அமைதியான வாழ்க்கை 60 களில் வாழலாம் என நினைக்கிறோம்.  சும்மா இருப்பதும் பெரும் சுமையாகிறது ! நமக்கு வயதாகும் காலகட்டத்தில் புதுப்புது பிரச்னைகள் !! 

Glory, or difficulty – nothing is permanent.  In this World, there have been mighty Kings –  not exactly those  who ruled the entire Universe but many lesser mortals with valour who ruled over a piece of land and were proud -  history has it that they have fallen biting the dust – that what can lesser humans who possess broken pots as their asset dream of …. Alwar directs us to fall at the feet of Lord Sriman Narayana  .. ..

We think, speak and surround ourselves with Self !!  .. .. .. the  ego (Latin for "I") acts according to the reality principle; i.e., it seeks to please the id's drive in realistic ways that, in the long term, bring benefit, rather than grief.  At the same time, Freud concedes that as the ego "attempts to mediate between id and reality, it is often obliged to cloak the unconscious commands of the id with its own preconscious rationalizations, to conceal the id's conflicts with reality, to profess...to be taking notice of reality even when the id has remained rigid and unyielding." The reality principle that operates the ego is a regulating mechanism that enables the individual to delay gratifying immediate needs and function effectively in the real world.  

மனித இனத்தை, எண்ணங்களும், கவலைகளும் - என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும், எவ்வளவு நாட்கள் இவை தொடருமோ போன்ற மனப்பிராந்திகளும் கலக்குகின்றன.  இது போன்ற ஸ்திரமற்ற கலங்கிய நிலைக்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். "அகங்கார மமகாரங்கள்" கவுரவர்கள் அழிவுக்கு காரணமானது ! எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் நான், எனது என்ற  மனநிலையை விலக்க கீதோபதேசம் செய்தார்.  - அது என்ன "அஹங்காரமமகாரம்" -  நான்’ என்ற முனைப்பு அகங்காரம் - 'எனது' என்ற 'பற்று' மமகாரம்.

மமதை என்ற சொல்லுக்கு செருக்கு, ஆணவம், திமிர் போன்ற பொருள்கள் கொள்ளலாம்.  self-conceit, vanity, haughtiness.  வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.

அஹங்காரம் என்பது ஏதோ துர்யோதனனிடம் மட்டுமே இருந்த கெட்ட குணமல்ல.  நமக்கு நம் குணங்கள் அழகானவையாக, நம் மனதில் படலாம் !  ஆனால் நாம் ஒவ்வொருவரிடமும் துர்யோதனாதிகளின் செருக்கு ஆழ்ந்த மனத்தில்  அருவறுப்பான கரையாக படர்ந்துள்ளது.  நமக்கு மற்றவர்கள் பலர் திமிர் பிடித்து நடந்து கொள்வதாக படுகிறது !  .. .. ஆனால்  நம்மிடம் எவ்வளவு பேர் அணுகி தங்களை கஷ்டங்களை, நம் குறைகளை சொல்லிவிட முடியும்.   நாம் நமது அருவறுப்பான பகுதிகளை பார்க்க விரும்புவதில்லை..  நான் என்னும் சொல்லுக்கு இலக்காக இருக்கிற மனிதன் தன்னை மற்றவர்களிடத்திருந்து பிரித்து வைத்துத் தன்னை உயர்ந்தவனாகக் கருதினால் அது அஹங்காரம். நான் என்னும் சொல்லை உபயோகப்படுத்துவதற்கிடையில் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்து வைத்துத் தனிப்பெருமை நாடாதிருந்து பழகினால் அது அஹங்காரமற்ற நிலை.

மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னை தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அகங்காரமும் மமகாரமும் இருப்பதை அவர்களால் உணர முடியாது. அடுத்தவர் உணர்த்தினால்தான் உண்டு.

அஹங்காரம்  மமகாரம்  ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம்.  தன்னை பற்றி என்றென்றும் நினைக்காமல் எம்பெருமானையே நினைத்து உள்கசிந்த  ஸ்வாமி நம்மாழ்வாரே - நெடுநாளாக  அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதாபிக்கிறார். நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் கிடையாது என்றபடி அவர் உரைக்கும் திருவாய்மொழி பாசுரம் இங்கே :

யானேயென்னை அறியகிலாதே,

யானேயென் தனதே என்று   இருந்தேன்,

யானேநீ  யென்னுடைமையும்  நீயே,

வானேயேத்தும்  எம் வானவரேறே.

விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள நித்யஸூரிநாதனான எம்பெருமானே!  இதுகாறும் என்னை  - நான் எப்படி உனக்கு அடிமைப்பட்டவன், எவ்வாறு எல்லாம் உன் அருளாலே நடைபெறுகிறது என்பதையெல்லாம் அறியமாட்டாமல் 'யானே என் தனதே'  என்று அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து,  அவற்றை தவிர்த்து  நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில் -   எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் என்பதே, என தெள்ளத்தெளிவாக  உரைக்கின்றார் சுவாமி  நம்மாழ்வார்.

சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக ஒப்பனை செய்து கொண்டார்கள் என, மதுரைக்காஞ்சி நூல் கூறுகின்றது. கூந்தல் மீது அணிகின்ற பொருட்களை, தலை அணிகலன்கள் என்கின்றனர். இவற்றில் மகுடம் எனும் அணிகலனும் ஒன்றாகும்.  நவீன கால இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை  செய்து கொள்கிறார்கள்.  கூந்தலை அலங்கரிக்கும் பாரம்பரிய அணிகலன்களை, சிறப்பு நாட்களில் அணிவதை, இன்றும் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  

இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன்  ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வர சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். 

சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை சில, குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள்.   இன்று திருவல்லிக்கேணி எம்பெருமானின் விசேஷ சிகை அலங்காரத்தையும், அதில் சூட்டிக்கொண்ட பூக்களையும், ஆபரணங்களையும் இங்கே கண்டு இன்புறலாம்.

 

தெளிவான மனா நிலையுடன், உடல் உபாதைகள் வியாதிகள் இல்லாமல் - நல்ல மனது, உடல் நிலை ஆரோக்கியத்துடன், எம்பெருமானுக்கு பணி செய்து கிடத்தலே அற்புத வாழ்க்கையாம்! ஏனைய பொருட்செல்வங்கள் செல்வங்களல்ல!!

Here are some photos of Sri Parthasarathi Emperuman taken during Aani Amavasai purappadu today.   Falling at the feet of Emperuman praying to remove all my ignorance and bless me with a stable mind that is attached to His lotus feet and encourages in doing kainkaryam to Emperuman and His followers

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14th July 2026.