To search this blog

Showing posts with label Women. Show all posts
Showing posts with label Women. Show all posts

Monday, December 15, 2025

Thiruneermalai arulicheyal goshti

 

திருவரங்கம் தொடங்கி அனைத்து ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களிலும் 'அத்யயன உத்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. சென்ற ஞாயிறு (9.12.18) நீர்வண்ணன் நீர்மலை என பாடப்பெற்ற திருநீர்மலை திவ்யதேசத்தில் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டியில் அந்வயிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பொதுவாகவே அதிகம் கூட்டம் இல்லாத திருக்கோவில்களில் கைங்கர்யம் செய்வது மேலும் கடினம் ~ஆனால் இதுபோன்ற இடங்களிலே பட்டர்களும், அத்யாபகர்களும் இதர கைங்கர்யபரர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது தங்களை அற்பணித்துக்கொண்டுள்ளதை காண முடியும்.

திருநீர்மலை திவ்யதேசத்திலே ஆழ்வார்கள் சார்யர்கள் எழுந்து அருளி இருக்க, ஸ்ரீ ரங்கநாதர் மிக அழகான சாற்றுப்படியுடன் வீற்றிருக்க மதியம் அருளிச்செயல் கோஷ்டி. நிதானமாக நன்றாக நடந்தது. 

மண்டபத்தின் முன்பே அமர்ந்திருந்த ஆண்டாள் கோஷ்டியும் ~ மிக அழகாக கோஷ்டி சேவிப்பதை ரசித்ததுடன், தாங்களும் கூட சேவித்தனர். ஆச்சர்யம் என்னவெனில், அதில் சிலர் புத்தகம் இல்லாமல், சற்று கடினமான பெரியாழ்வார் திருமொழி பத்துகளை - அவ்வளவு அனுபவித்து அழகாக கூறியது எனக்கு மிக்க வியப்பு.

 


நிச்சயமாக எம்பெருமான், ஆழ்வார்கள், ஆசார்யர்கள், ஜீயர் அருள்தான் - அவர்களது நிர்ஹேதுக க்ருபைதான்.

அருளிச்செயல் ஓதிய அவர்கள் அனைவருக்கும் அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்.

பின் குறிப்பு : கவலை பாயாமல் அழகாக சேவித்த ஒரு மாமியின் புகைப்படம் அழகாக வந்துள்ளது. எனினும் பிறகு அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அம்மங்கார் தன்னை தனியாக போட வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததால், ஒரு பொது புகைப்படம் மட்டுமே இங்கே !!

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.12.2018 (repost)

Wednesday, December 10, 2025

epitome of bakthi !!!

 



epitome of bakthi - this elderly woman, who climbed along with us ..

Azhwar malai – Thiruneermalai - 2017


Wednesday, July 9, 2025

Thiruvallikkeni thiruther ~ Cow and the women !!

 


Brave !  - thy name !!   July 2017  morning - as Thiruther rolled along, came this cow menacingly with big and sharp horns - those in the front, the ladies did not run, but were composed in shying it away !! **  Triplicane women  rock **

Friday, March 14, 2025

Bakthi ~ Masi Magam 2025

 

Pure bakthi has no limits ~  epitome of devotion, an elderly woman carrying Lord Ganesha for masi magam 2025

 


கணபதி உன்பேரை சொல்லி நாங்கள் அழைத்தாலே

தீராத வினையெல்லாம் தீர்ந்திடுமே !!

 

ganpati bappa morya morya morya 

sankat haran, mangal karan tumhi bappa morya

sab vighno ko dur kare ha vighnharta morya

Friday, July 5, 2024

Aani Amavasai 2024 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

நகரங்களில் பலர் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.  பிரச்னைகள் எனும் பூதம் அவர்கள் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் ஒருவருக்கும் உண்மையாக இல்லை !  ஏன் தனக்கே கூட !!  சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம்.   வாழ்க்கையின் பரம பலன் :  அதிகார போதை, ஆத்திரம், தீய எண்ணங்கள் இல்லாமல் - நான் சாதாரணன், நான் பக்தன், எனது பணி எம்பெருமானுக்கு, அவர்தம் அடியாருக்கு பணி செய்வதே என்பதை உணர்ந்து வாழ்தலே !

 


Today 5th July 2024  is Thiruvathirai in the month of  Aani  – masa thirunakshathiram of our Swami Emperumanar Ramanujar. Today is Amavasai too.. .. ..

When someone asks you – ‘How are you ?’ – what would be the answer – is it simply ‘fine’ or factual ‘not so fine’.  How willing are you to  genuinely listen to people ? How often would you interrupt to say – what I do, how I would have handled this ! or in my personal experience and .. .. ..

நம்மில் பலர் பல பிரச்னைகளிடையே உழல்கிறோம்.  மனா நிம்மதி இல்லை.  தினசரி வாழ்க்கையில் எப்போதும் பலப்பல  பிரச்னைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ! சரியான இடமில்லை, நல்ல உடைகளில்லை  (அதாவது எவ்வளவு இருந்தும் போதும் என்ற மனதில்லை); அலுவலக வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை,  மற்றவர்களுக்கு எல்லாமே எளிதில் நடப்பதாகவும் தமக்கு சாதாரண விஷயங்கள் கூட பல இடர்பாடுகள் நேர்வதாகவும் உண்மையாகவோ மனத்திலோ சிந்தனை;  குடும்பங்களில்  பிரச்னை;  பணமுடை; போதாக்குறைக்கு கொரோனா வேறு உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது. 

Glory, or difficulty – nothing is permanent.  In this World, there have been mighty Kings –  not exactly those  who ruled the entire Universe but many lesser mortals with valour who ruled over a piece of land and were proud -  history has it that they have fallen biting the dust – that what can lesser humans who possess broken pots as their asset dream of …. Alwar directs us to fall at the feet of Lord Sriman Narayana  .. ..

We think, speak and surround ourselves with Self !!  .. .. .. the  ego (Latin for "I") acts according to the reality principle; i.e., it seeks to please the id's drive in realistic ways that, in the long term, bring benefit, rather than grief.  At the same time, Freud concedes that as the ego "attempts to mediate between id and reality, it is often obliged to cloak the unconscious commands of the id with its own preconscious rationalizations, to conceal the id's conflicts with reality, to profess...to be taking notice of reality even when the id has remained rigid and unyielding." The reality principle that operates the ego is a regulating mechanism that enables the individual to delay gratifying immediate needs and function effectively in the real world.  

மனித இனத்தை, எண்ணங்களும், கவலைகளும் - என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும், எவ்வளவு நாட்கள் இவை தொடருமோ போன்ற மனப்பிராந்திகளும் கலக்குகின்றன.  இது போன்ற ஸ்திரமற்ற கலங்கிய நிலைக்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். "அகங்கார மமகாரங்கள்" கவுரவர்கள் அழிவுக்கு காரணமானது ! எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் நான், எனது என்ற  மனநிலையை விலக்க கீதோபதேசம் செய்தார்.  - அது என்ன "அஹங்காரமமகாரம்" -  நான்’ என்ற முனைப்பு அகங்காரம் - 'எனது' என்ற 'பற்று' மமகாரம்.

மமதை என்ற சொல்லுக்கு செருக்கு, ஆணவம், திமிர் போன்ற பொருள்கள் கொள்ளலாம்.  self-conceit, vanity, haughtiness.  வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.

அஹங்காரம் என்பது ஏதோ துர்யோதனனிடம் மட்டுமே இருந்த கெட்ட குணமல்ல.  நமக்கு நம் குணங்கள் அழகானவையாக, நம் மனதில் படலாம் !  ஆனால் நாம் ஒவ்வொருவரிடமும் துர்யோதனாதிகளின் செருக்கு ஆழ்ந்த மனத்தில்  அருவறுப்பான கரையாக படர்ந்துள்ளது.  நமக்கு மற்றவர்கள் பலர் திமிர் பிடித்து நடந்து கொள்வதாக படுகிறது !  .. .. ஆனால்  நம்மிடம் எவ்வளவு பேர் அணுகி தங்களை கஷ்டங்களை, நம் குறைகளை சொல்லிவிட முடியும்.   நாம் நமது அருவறுப்பான பகுதிகளை பார்க்க விரும்புவதில்லை..  நான் என்னும் சொல்லுக்கு இலக்காக இருக்கிற மனிதன் தன்னை மற்றவர்களிடத்திருந்து பிரித்து வைத்துத் தன்னை உயர்ந்தவனாகக் கருதினால் அது அஹங்காரம். நான் என்னும் சொல்லை உபயோகப்படுத்துவதற்கிடையில் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்து வைத்துத் தனிப்பெருமை நாடாதிருந்து பழகினால் அது அஹங்காரமற்ற நிலை.

மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னை தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அகங்காரமும் மமகாரமும் இருப்பதை அவர்களால் உணர முடியாது. அடுத்தவர் உணர்த்தினால்தான் உண்டு.

அஹங்காரம்  மமகாரம்  ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம்.  தன்னை பற்றி என்றென்றும் நினைக்காமல் எம்பெருமானையே நினைத்து உள்கசிந்த  ஸ்வாமி நம்மாழ்வாரே - நெடுநாளாக  அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதாபிக்கிறார். நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் கிடையாது என்றபடி அவர் உரைக்கும் திருவாய்மொழி பாசுரம் இங்கே :

யானேயென்னை அறியகிலாதே,

யானேயென் தனதேயென்ரூ  இருந்தேன்,

யானேநீ  யென்னுடைமையும்  நீயே,

வானேயேத்தும்  எம்வானவரேறே.

விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள நித்யஸூரிநாதனான எம்பெருமானே!  இதுகாறும் என்னை  - நான் எப்படி உனக்கு அடிமைப்பட்டவன், எவ்வாறு எல்லாம் உன் அருளாலே நடைபெறுகிறது என்பதையெல்லாம் அறியமாட்டாமல் 'யானே என் தனதே'  என்று அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து,  அவற்றை தவிர்த்து  நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில் -   எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் என்பதே, என தெள்ளத்தெளிவாக  உரைக்கின்றார் சுவாமி  நம்மாழ்வார்.

சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக ஒப்பனை செய்து கொண்டார்கள் என, மதுரைக்காஞ்சி நூல் கூறுகின்றது. கூந்தல் மீது அணிகின்ற பொருட்களை, தலை அணிகலன்கள் என்கின்றனர். இவற்றில் மகுடம் எனும் அணிகலனும் ஒன்றாகும்.  நவீன கால இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை  செய்து கொள்கிறார்கள்.  கூந்தலை அலங்கரிக்கும் பாரம்பரிய அணிகலன்களை, சிறப்பு நாட்களில் அணிவதை, இன்றும் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  

இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன.

சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன்  ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வர சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். 

சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை சில, குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள்.   இன்று திருவல்லிக்கேணி எம்பெருமானின் விசேஷ சிகை அலங்காரத்தையும், அதில் சூட்டிக்கொண்ட பூக்களையும், ஆபரணங்களையும் இங்கே கண்டு இன்புறலாம்.





Here are some photos of Sri Parthasarathi Emperuman taken during Aani Amavasai purappadu today.   Falling at the feet of Emperuman praying to remove all my ignorance and bless me with a stable mind that is attached to His lotus feet and encourages in doing kainkaryam to Emperuman and His followers

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5th July 2024.  









Monday, June 3, 2024

interesting Kanchi Silk saree story ! ~ Sri DEva Perumal Nachiyar thirukolam 2024

புடவை கடையில் மனைவி, [சகோதரி, அம்மா] - பட்டு புடவை பார்த்துக்கொண்டே இருக்க "ஞே" என்று விழித்து காத்த அனுபவம்  உண்டா !  - தாமரை பூ கலரில் நீல பார்டரில் (ராபின் ப்ளூ)  பட்டு புடவை  எவ்வளவு அழகாக இருக்கும் ?

 


1978ம் ஆண்டு  கே. சங்கர் இயக்கத்தில்  முத்துராமன், ரோஜா ரமணி நடிக்க வெளிவந்த படம் "வயசு பொண்ணு". இத்திரைப்படமானது இதயம் பேசுகிறது மணியன் அவர்களின், ஆனந்த விகடனில் வெளிவந்த.   லவ் பேர்ட்ஸ்  நாவல் கதை.  MS  விஸ்வநாதன் இசையில் முத்துலிங்கம் வரிகளில் பிரபலமான பாடல் : 

“காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப்பொட்டு வைத்து

தேவதை போல் நீ நடந்து வர வேண்டும்” 

மாமன்னர்களும், சைவ வைணவ சமய குரவர்களும் வாழ்ந்த நற்பூமியாம் பல்லவ நாட்டின் தலைநகராம் காஞ்சி மாநகரம், கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமென்பர் அது போல் காஞ்சி மாநகர் குறித்த  முதுமொழி -  'காஞ்சிக்கு சென்றால் காலாட்டிப் பிழைக்கலாம்'.  காலாட்டிப் பிழைப்பது அவ்வளவு புகழ்பெற்ற நெசவுத் தொழில் - கால்களால் ஆட்டி ஆட்டி தறிபோடும் தொழில் காஞ்சி மாநகருக்கு நெசவு  துணிகள் - பட்டு புடவைகள் ஜகப்ரஸித்தம்.  அழகான புடவைகளின் உற்பத்தி  பாலாற்றில் அமைந்துள்ள  காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்டுள்ளது. 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்த புடவைகள் திருக்கச்சி  கோவில்களில் நெய்யப்பட்டனவாம். தூய மல்பெரி பட்டில் இருந்து நெய்யப்பட்ட காஞ்சிபுரம் சேலைகள் மிக மிக அழகானவை.  காஞ்சிபுரம் பட்டுப் புடவையின் தனித்துவமான நெசவு நுட்பம் ஜரியுடன் மூன்று ஒற்றை நூல் பட்டு நூல்களைப் பயன்படுத்துகிறது, அதாவது திரவ தங்கம் மற்றும் வெள்ளியில் தோய்க்கப்பட்ட பட்டு நூல்கள். மல்பெரி பட்டு கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், தங்க ஜரி சூரத்திலிருந்தும் வருகிறது என அறிகிறோம்.  

தீபாவளி, கல்யாணம், வீட்டுல விசேஷங்கள் என்றால் - 'நிச்சயம் பட்டுப் புடவைதான்' என்று உறுதியாகச் சொல்பவர்களின் பட்டியலில் நீங்களும் இருக்கலாம். பட்டுப் புடவையின் நிறம், ஜரிகை , புது புது டிசைன், போன்றவை தான் வாங்குவதை முடிவு செய்கின்றன; விலையல்ல  என்பதை - 'இந்த கலர் எனக்கு நன்றாக உள்ளதா?' என்ற loaded கேள்விக்கு பதில் தந்த கணவன்மார்கள் அறிவார்கள் !    பார்ப்பதற்கு ஒரே மாதிரியான பட்டுப் புடவையின் விலை, கடைக்குக் கடை வேறுபடும். அதனால், பட்டின் தரம் குறித்து எப்போதும் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.  நகையில் கலந்திருக்கும் தங்கத்தைப் போலவே, பட்டுப் புடவையின் தரத்தைப் பற்றியும் ஏராளமான சந்தேகங்கள் குழப்பங்கள். மல்பெர்ரி, டஸ்ஸார், எர்ரி, மூகா என நான்கு வகையான பட்டுகள் இருக்கின்றன. இதில் மல்பெர்ரி வகை மட்டுமே, வளர்ப்பு முறையிலான பட்டுப் பூச்சிகளிலிருந்து எடுக்கப்படும் இழை. மற்றவை அடர்ந்த காடுகளில் உள்ள பட்டுப்பூச்சிகளிடமிருந்து கிடைக்கக்கூடிவை. தமிழகத்தைப் பொறுத்தவரை, மல்பெர்ரி வகை பட்டு அதிகமாக விற்பனையாகிறாதாம். 

புடவை நெய்வதற்குப் பயன்படுத்தப்படும் நூலானது முதலில் அரிசி நீரில் ஊறவைக்கப்பட்டு பின்னர் வெய்யிலில் உலர்த்தப்படுகிறது. பின்னர் பட்டு நூலானது வெள்ளி மற்றும் தங்க ஜரிகைகளுடன் கோர்க்கப்பட்டு கைத்தறியில் பூட்டப்படுகின்றன. காஞ்சி பட்டுப் புடவை நெய்யப் பயன்படுத்தப்படும் வார்ப் ஃபிரேமானது,  240 துளைகளைக்கொண்ட வார்ப்பும் 250-3000 நூல்களுடன் வெஃப்டில் 60 துளைகளையும் உள்ளடக்கியது.  பளிச்சென்ற நிறங்களிலும், யாளி, மாங்காய், ருத்ராட்சம், மயில், கோயில் கோபுரம், ஆகியவற்றை மைய்யப்படுத்தியே இவற்றின் வடிவமைப்புகள் இருக்கும். புடவை மொத்தமும் ஒரே நிறத்தில் நெய்யப்படுபவை மற்றும் கோர்வை எனப்படும் உடல் ஒரு நிறம், பார்டர் மற்றும் முந்தானை ஒரு நிறம் என தனித்தனியே நெய்யப்பட்டு பின் ஒன்றாக இணைப்படும் புடவைகள் என இரண்டு ரகங்களில் நெய்யப்படுகின்றன என ஒரு புடவை கடை குறிப்பு சொல்கிறது !! 

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளுக்காக   இந்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. ஆண்களுக்கு தெரிந்த வண்ணங்கள் - வெள்ளை, நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை.  எப்போதாவது வாய் தவறி கலரில் என்ன இருக்கிறது என்று கேட்டு விட்டால் அன்று நீங்கள் உபவாசம் தான் !!   அறிவார்ந்த பெண்மணிகள் அறிந்த வண்ணங்களில் சில (சில மட்டுமே இங்கே!): - ஆழ் செந்நீலம் (ஊதா); இள மஞ்சள் - Flavescent / Primrose; கத்தரிநீலம் - Periwinkle (நித்திய கல்யாணி); காயாம்பூ (நிறம்) - Purple colour; குங்குமச் சிவப்பு - Vermeil;  குங்குமப்பூ(நிறம்) - Croceate / Saffron;  குருதிச்சிவப்பு - Erythraean / Sanguineous / Incarnadine;  குருதிச்செம்மை - Vermilion; கோமேதக(நிறம்) -Topaz; சருகிலை (நிறம்) - Filemot; செங்கருநீல (நிறம்) - Violet; பூஞ்சல் (மங்கனிறம்) - Brownish colour;  பூஞ்சாயம் (அழுத்தமான சிவப்பு) - Deep, ruddy colour;  மஞ்சள் பச்சை - Chartreuse / Zinnober; . மஞ்சள் பழுப்பு - Lurid / Ochre; மஞ்சள்சிவப்பு - Wallflower;  மணிச்சிவப்பு - Rubious;  மரகதப்பச்சை - Smaragdine (திருவண்ணாமலை தமிழ் சங்கம் முக நூலில் கண்டது - முழு பட்டியல் அல்ல !!! -  அறிவார்ந்த பெண்மணிகள்  சளைக்காமல் மேலும் மேலும் வண்ணங்களை தேடி திக்கு முக்காட செய்வார்கள்.  ஆண்களுக்கோ இது எப்போது முடியும், எவ்வளவில் முடியும் என்ற கவலை ரத்த அழுத்தத்தை எகிற செய்யலாம்.

 

Let me stop here !!! ~  certainly not a post on Silk sarees of Kanchipuram or elsewhere but on the most beautiful darshan had on 24.5.2024 at Thiruvallikkeni divaydesam.

 




Srimannarayana- the ever merciful Lord is always our esteemed protector. He is our Rakshak. He is glorified in the Vedas as the Supreme entity. He is "Veda Mudalvan". The sublime beauty and oozing benevolence as exceptionally visible in the Thirumugam [face] of Perumal – Nachiyar.   Here is Sri DEvathi Rajar draped in a beautiful pattu saree on Nachiyar thirukolam alankaram on day 5 of the uthsavam.

               இன்று வரதராஜர் உத்சவத்தில் ஐந்தாம் நாள் ~ நாச்சியார்  திருக்கோலம். சர்வலக்ஷணங்களும் பொருந்திய எம்பெருமான் தாயராக நாச்சியார் திருக்கோலத்தில் மேலும் வாத்சல்யமும் சேர்ந்து மிக்க அழகாக பக்தர்களுக்கு அருள்  பாலித்தார்.  திருவல்லிக்கேணி உறை ஸ்ரீ வரதராஜர் கம்பீரம் மிக்கவர். அவரது அழகு சௌந்தர்யம் வார்த்தைகளால் விவரிக்கமுடியாதது. பெருமாள் தனது கல்யாண குணங்களை எல்லாம் நமக்கு அருளி, மிக அழகாக குத்துக்காலிட்டு அமர்ந்து அபயஹஸ்தத்துடன் காட்சி தரும் எழில் மிகு திருக்கோலமே  நாச்சியார் திருக்கோலம்;  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில  படங்கள் இங்கே :

adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar 
24/5/2024












Friday, February 16, 2024

Ratha Sapthami - Chandra Prabhai kolam

 

Enchanting divine Thiruvallikkeni – beautiful kolam for

Chandra prabhai purappadu of Sri Parthasarathi Emperuman

 



.. .. at Singarachari Koil St., near Samarao school.

16.2.2024

Monday, August 28, 2023

Thiruvallikkeni ThirupPavithrothsavam 3 2023 - all about silk !!

How often do you buy Silk saree ? – what is costliest one ever bought by you ??

 


Silk is the strongest natural textile in the world. This textile was just recently surpassed in strength by a lab-engineered biomaterial, but it remains the strongest fabric made through natural processes. Westernization has made many  look more comfy in different attires  but traditional attires   continue to stand a step ahead.  In this Maha Bharath, especially Southern India - wearing saree comes up as a special affair it is  magic draped in nine yards.  Back in 2012 a saree made waves – it was not just pure silk alone it had  Navratna stones and gold embroidery.  Its makers were  Chennai Silks and was priced at Rs.40 lakh, entering the Guinness World Records.  That saree reportedly  had  navratna stones like diamond, emerald, ruby, yellow sapphire, sapphire, topaz, pearl, cat's eye and coral,  embroidered in metals such as gold, platinum and silver.  

 


இன்று 28.8.2023 திருவல்லிக்கேணி திவ்யதேசத்திலே திருப்பவித்ரோத்சவத்திலே மூன்றாம் நாள்.  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சிறிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  பல்வேறு உத்சவங்களில் ஆவணி மாதம் நிகழும் பவித்ரோத்சவம் சிறப்பு வாய்ந்தது. பவித்ரம் என்ற சொல்லுக்கு 'சுத்தம் அதாவது பரிபூரணமான அப்பழுக்கு இல்லாத ஒன்று' என்று பொருள் கொள்ளலாம்.   இன்று மாலை நம் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், பெரிய  அழகு மலர் மாலையுடன், கிரீடம்,  புதுப்பூணூல் சாற்றிக்கொண்டு அற்புத புறப்பாடு கண்டு அருளினார். இன்றைய படங்களிலே பெருமாள் பல வண்ணப் பட்டு மாலைகள் அணிந்து இருப்பதை சேவிக்கலாம். இவை பவித்ரம் என்று அழைக்கப்படுபவை.  




Silk has got a pride of place – silk sarees attract women, silk dhoties are ritualistic.  Silk is a natural protein fibre, some forms of which can be woven into textiles. The best-known silk is obtained from the cocoons of the larvae of the mulberry silkworm Bombyx mori reared in captivity (sericulture). The shimmering appearance of silk is due to the triangular prism-like structure of the silk fibre, which allows silk cloth to refract incoming light at different angles, thus producing different colors. Silk is produced by several insects; but, generally, only the silk of moth caterpillars has been used for textile manufacturing.   

To those who would advise shunning silk due to killing of caterpillars – do read on.  Odisha has successfully piloted the Ahimsa Silk project which is an eco-friendly, cruelty-free alternative to the conventional fabric being used by silk connoisseurs. From 700 farmers across five districts last year, the department plans to rope in 3,000 farmers this year to grow it.  Close to 30,000 silkworms are boiled alive to weave a Pata or silk saree. But Odisha has decided to end the killing. A pilot project called ‘Ahimsa Silk’ initiated by the department of Handlooms, Textiles & Handicrafts, ensures that silkworms are not killed to make silk, unlike the traditional method under which it is extracted after boiling the cocoons with live worms inside. For this purpose, the department has adopted castor-based Ericulture reported Indian Express.

Ahimsa silk - also called peace, vegan or cruelty-free silk - is a gentle, non-violent method of making silk from Eri silkworms. It follows a process under which silkworms grow and feed on castor leaves for 18 to 20 days till they reach their final size. The worms then start to create their cocoon which takes another 9 to 10 days. They slowly transform into moths and once they fly out of the cocoons, the silk-making begins.  Each Eri silk cocoon has a continuous filament that has a usable length of 900 metres to 1 km that is freed by softening the sericin (a protein that binds the filament) and then unwinding the strands. These extremely delicate and thin silk strands are twisted together to form yarn. The peace silk shuns the violence. “Non-violence is one of the most important tenets of Hinduism. If one questions whether Lord Jagannath would love to wear clothes that are woven by killing innocent silkworms, the answer would be no. Hence, we decided to dedicate the Ahimsa silk to the Holy Trinity,” said an  official.

The Silk Routes were of great importance in the passage of not only goods and crafts but also of religions and ideologies throughout Central Asia, the Near East and Europe.   The literary, architectural and artistic effects of this can be traced today in the cultures of civilizations along the Silk Routes.  Moving away today is day 3 of Thiru Pavithrothsavam at Thiruvallikkeni divyadesam and Sri Parthasarathi Emperuman dazzled wearing beautiful garlands and thiruppavithirams made of silken threads.

பேயாழ்வார் இடைகழியில் மற்ற இருவர் ஏற்றிய விளக்கினிலே பெருமாளை சேவித்து 'திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்' என இசைத்தவர்.  அவரது வரிகள் இங்கே:  

விரும்பி  விண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார்

சுரும்பு துளையில்  சென்றூத, அரும்பும்

புனந்துழாய் மாலையான் பொன்னங் கழற்கே,

மனம்துழாய் மாலாய் வரும்.

பூக்கள் மணமானவை; அழகானவை;  அவைகளை தொடுத்தால் கிட்டும்  அழகிய மாலையிலே,  சுறுசுறுவென இயங்கும்  சிறகுகளையுடைய வண்டுகள் துளையில் சென்று ஊத, அதனால்  அரும்புகள் உண்டாகப்பெற்ற மிக தூய நல்ல திருத்துழாய் மாலையை அணிந்தவனான எம்பெருமானுடைய பொன்னாங்கழல்கள் - சாதாரண திருவடிகள் அல்ல !   விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையுமளந்த மிகவழகிய திருவடிகள்,  விஷயத்திலேயே எனது மனமானது லயித்து  அதனையே நினைத்து  மயங்கிக் கிடக்கின்றது. அந்த எம்பெருமானின் தங்க திருவடிகளையே சரணாக பற்றினேன் - எனக்கு எவ்வித குறையும் வாராது என அறுதியிடுகிறார் சுவாமி பேயாழ்வார்.

It is surrendering unto Him being guided by our Acaryas.  Prapatti is neither mere faith in the saving grace of Sriman Narayana  nor a mere prayer to Him for protection/ salvation / moksha. Prapatti would not  mean a mere surrender and a life centered around serving Sriman Narayana.  The concept of Prapatti encompasses all of this & is much much more. Though "Saranagathi" is in general used for denoting "surrender" – it is a life of ultimate surrender and living under the lotus feet of Sriman Narayana.  

Here are some photos of Sri Parthasarathi Perumal taken today evening. 

adiyen Srinivasadhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.8.2023