To search this blog

Wednesday, July 6, 2022

Emperuman pinnazhagu - Kodai Uthsavam

 திவ்யதேசத்தில் வாழும் நாம் எம்பெருமான் முன்னாடி நின்றால் - திவ்யமங்கல ஸ்வரூபத்தை, திருமுக மண்டலத்தை, திருப்பாதங்களை, அபய ஹஸ்தங்களை, திருவாபரணங்களை, சேவித்து இன்புறலாம். 

எம்பெருமான் பின் நடந்து சென்றாலோ - இது போன்ற சேவை அமையலாம்.  எல்லாம் அவன் அருள்.
Tuesday, July 5, 2022

Kodai Uthsava Sarrumurai 2022

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் இன்று 5.7.2022  கோடை உத்சவ சாற்றுமுறை.  ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு கண்டருளினார்.  இன்று ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் சிறப்பான சிகத்தாடை எனும் மல்லிகை மொக்குகள் அழுந்த சுற்றி மேல் வெண்பட்டு கொண்ட அற்புத கொண்டையுடன் சேவை சாதித்தார்.  புறப்பாட்டில் பரந்து விரிந்த வெண்குடைகள்  - இரண்டு 16 ஜான், நடுவில் ஒரு 18 ஜான் !! - தேரடி தெருவில் பெருமாள் புறப்பாடு கண்டருளும்போது கல்மழை போன்று பெரிய பெரிய தூறல்கள் விழவே, குளக்கரை, கேட் ஆம் இல்லாமல் புறப்பாடு - மழை பொழியும்போது அருளிச்செயல் கோஷ்டி – 3  படங்கள் இங்கே !
அரியது கேட்கின் ! .. .. வானோர் தொழுதிறைஞ்சும், - Kodai Uthsavam 6 2022

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது; மானிடராய் பிறந்த காலையின் கூன் குருடு செவிடு நீங்கி பிறத்தல் அரிது ~ the immortal words of Tamil Poetess Avvaiyar.  It means it is difficult (in fact a boon) to be born as a human being; having been born – it is rare to have  a birth devoid of physical challenges like dumb, deaf, blind …. the significance is that one should use appropriately such good birth and do good to the Society. கந்தன் கருணை 1967ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த இந்த  திரைப்படத்தை ஏ.பி. நாகராஜன் இயக்கினார்.   முருகக் கடவுளின் பிறப்பு, அவர் சிறுவனாயிருந்தபோது ஒரு மாம்பழத்துக்காகக் கோபித்துக் கொண்டு பழனிமலை சென்றது, சூரபதுமன் வதம், தெய்வயானை மற்றும் வள்ளியுடனான திருமணம் ஆகிய கந்தபுராண நிகழ்வுகளைக் கதைக்கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டத் திரைப்படம் ஆகும்.   இப்படத்தில்  'அரியது எது என  கேட்டமைக்கு'  அழகான தமிழில்  அவ்வையார் மூதாட்டி அளிக்கும் விளக்கம் - கே வி மஹாதேவன் இசையில் கே பீ சுந்தராம்பாள்  பாடிய அருமையான பாடல் ஞாபகம் உள்ளதா ??  இப்பாடல் -   'தனிப்பாடல் திரட்டு' எனும் நூலில் அமைந்துள்ளது !!  

அரியது கேட்கின் வரிவடி வேலோய்! அரிதரிது மானிடர் ஆதல் அரிது

மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

பேடு நீங்கிப் பிறந்த காலையும், ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது

ஞானமும் கல்வியும் நயந்த காலையும், தானமும் தவமும் தான்செயல் அரிது

தானமும் தவமும் தான்செய்வராயின், வானவர் நாடு வழிதிறந்திடுமே.

 

Ever wondered what is the purpose of life ? ~ why were we born .. why did Emperuman bless us with good hands, legs and tongue ? – what are we to do with the members of the body ??   Before you read further, you may be tempted to hear the magical voice of KB Sundarambal in Kanthan Karunai : 


                 In this earthly World giving more than ample sphere for sins and sins  - any act could lead to that sinful path, adding more harm.  Nammalwar says that he can only think of that Lord worshipped at Paramapadam by celestials whom he would like to praise with choicest words string neatly as garland in his poem without swerving weebit away from the chosen path of devotion.   Here is a pasuram from Swami Nammalwar’s Periya thiruvanthathi : 

வினையார் தரமுயலும் வெம்மையை   அஞ்சி,

தினையாம் சிறிதளவும் செல்ல - நினையாது

வாசகத்தால் ஏத்தினேன் வானோர் தொழுதிறைஞ்சும்,

நாயகத்தான் பொன்னடிக்கள் நான்.

-      - -(பெரிய திருவந்தாதி பாசுரம்) 

கொடிய பாவங்கள் நிறைந்த இப்பூவுலகில்,  நமக்கு தீவினைகள் உண்டு பண்ண நினைக்கிற கொடிய துன்பங்களுக்கு அஞ்சி தினையளவு சிறிய அற்ப காலமும், நான் பரமபதத்திலே நித்யஸூரிகள் என்றென்றும்  தொழுது வணங்கும் பெருமை வாய்ந்த எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகளை மனது உவக்கும்  சொற்களாலே துதிக்கின்றேன், அடியேன் அவற்றை தவிர திணைப்பொழுதும் வீணாகக் கழிய விரும்பமாட்டேன் என்கிறார் நம்மாழ்வார்.   

Today 4th July 2022 is day 6 of Kodai Uthsavam at Thiruvallikkeni and in the siriya mada veethi – gate aam purappadu it was Thiruvasiriyam, Periya thiruvanthathi.  Here are some photos of our beautiful Emperuman Sri Parthasarthi Perumal.

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
4.7.2022  
Monday, July 4, 2022

Thiruvallikkeni Kodai 5 - 2022 : தெய்வ மன்னீர கண்ணோவிச் செழுங்கயலே.

Thiruvallikkeni Kodai 5 - 2022 :  தெய்வ மன்னீர கண்ணோவிச் செழுங்கயலே.

எம்பெருமானுடைய அர்ச்சாவதார திருமேனிகள் அற்புதமானவை ! நம்மை ஈர்த்து ஆட்கொண்டு மறுபடி, மறுபடி அந்த லீலாவிபூதியில் ஆழுமாறு அழைக்க வல்லன.  எம்பெருமானைக் கண்ட கண்கள் மற்றோரு எந்த அழகையும் ரசிக்க மாட்டா !  ... அவனிடத்தில் ஈடுபாடு கொண்ட பக்தர்கள், அவனை மற்று அல்லால் வேறு எவரையும் தொழ மாட்டார்கள்.  திருவல்லிக்கேணி போன்ற திவ்யதேசங்களில் வாசம் செய்யும் பலன் - இத்தகைய எம்பெருமானின் க்ருபா கடாக்ஷத்தை தடையற அனுபவிக்கலாம்,  அவர்தம் திருவீதி புறப்பாடுகளில் ! 


Eyes are beautiful !  - or beautiful people have beautiful eyes !! – you could have noticed ‘eyes’ alone in the back of some autos !  -  some say that  where words are limited, our eyes speak volumes and it was pronouncedly  true during  Covid-19 times, when masks covered faces, allowing eyes to express themselves more freely !!  but do we really take care of them as we look after our skin? We exfoliate, moisturise and apply sunscreen to keep our skin healthy, we tend to miss the most vital part – the eyes where dryness, wrinkles, fine lines and puffiness under the eyes can cause nightmares to anyone. 

Film star, Amber Heard has been in the news again, this time for having ‘one of the most perfect faces’, according to the Golden Ratio of Beauty Phi. An old post about a 2019 study by popular facial cosmetic surgeon  from London, has been making rounds after the Depp-Heard verdict. That  study puts Amber third on the list of most beautiful women in the world, while Bella Hadid leads the list. 

In the Renaissance era, artists like Leonardo Da Vinci, as well as architects used a mathematical equation to make their artwork scientifically perfect. It is denoted by the Greek letter 'phi'. Years later, scientists developed mathematical formulae and software to analyse facial features. According to a  cosmetic surgeon - “First, the length and width of the face are measured, followed by dividing the length by the width. Then three other segments, namely the space between the hairline to a spot between the eyes, space from between the eyes to the bottom of the nose, and from the bottom of the nose to the bottom of the chin, are measured. If the numbers are equal, a person is considered more beautiful. Finally, statisticians measure other facial features to determine symmetry and proportion.”  !!! 

Due to the Covid crisis, masks became mandatory over the last two years.  Did we really follow them could be a Q.  Lipstick sales were down, but eye make-up became more popular. In fact, even bold eye make-up became a trend. Indeed, dramatic and heavy eye make-up, with the black eye-lined or winged eyed look started ruling fashion trends. That was in the Western World – to us the most captivating eyes are of course those  of Sriman Narayana and Thayar.
Today 3rd July 2022 – is Makham   nakshathiram – that of Thirumazhisai azhwar, being day  5 of the Kodai utsavam – Perumal purappadu - chinna mada   veethi – through Gate aam.  The nos. are increasing and Covid is  still threatening though people in gay abandon seems to have thrown caution to winds – think of those dark times when there were no purappadus and when we could not have darshan even.

பரமபதத்தில் அளவு கடந்த இன்பமநுபவிக்கும் நித்யமுக்தராலும்  ஆசைப்பட்டு நாடுதற்குத் தகுந்தவை எம்பெருமானின் திருவுருவங்கள் .. .. அவைதாம் கிடைக்கப்பெற்ற நாம் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள்.  கோடை உத்சவத்தில் ஐந்தாம் நாள் வீதியில் திருவிருத்தம் சேவிக்கப்பெறுகிறது.  இதோ இங்கே சுவாமி நம்மாழ்வாரின் ஒரு அற்புத திருவிருத்த பாசுரம் :-  

ஈர்வனவேலும்  அஞ்சேலும், உயிர்மேல் மிளிர்ந்திவையோ

பேர்வனவோவல்ல  தெய்வநல்வேள்கணை, பேரொளியே

சோர்வன நீலச் சுடர்விடும் மேனியம்மான்  விசும்பூர்

தேர்வன, தெய்வ மன்னீரகண்ணோ  விச்செழுங்கயலே. 

வேல்கள் கொடிய ஆயுதங்கள் - பகைவர் தம் நெஞ்சை பிளக்க வல்லன; அவை மிக கூர்மையானவை.  அத்தகைய கூரிய  வேல்கள் போலவும் அழகிய சேல்மீன்கள்போலவும் உள்ளனவான - இவை  எனது  உயிரை வசப்படுத்தும் பொருட்டு அதன் மேற்பாய்ந்து  அதைவிட்டு நீங்குவன அல்ல. !!  தெய்வத்தன்மையையுடைய அழகிய  மன்மதனுடைய அம்புகளினுடைய சிறந்த ஒளியையே  தாம் வெளியிடுவன; நீலமணியினுடைய சுடர் ஒளியை வீசுகின்ற  திருமேனியையுடையனான எம்பெருமானது திருநாடாகிய பரமபத்தை தனக்கு, ஒப்பாகத் தேடுந் தன்மையுடையன - கொழுத்த கயல் மீன்களென்று சொல்லத்தக்க இவை - மோஹினியென்னும் பெண் தெய்வத்தையொத்த உமது  கண்களோ? - என நாயிகா பாவத்தில் வினவுகிறார் நம்மாழ்வார்.

Here are some photos of Kodai uthsavam day 5 at Thiruvallikkeni divaydesam  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
3.7.2022 
Sunday, July 3, 2022

மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!!

 

அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ

சடகோபன் தண்தமிழ் நூல் வாழ – கடல் சூழ்ந்த

மன்னுலகம் வாழ – மணவாள மாமுனியே

இன்னுமொரு நூற்றாண்டிரும்பகவத் பாகவத அடியார்கள் வாழ! திருவரங்கப் பெருநகர் வாழ! நம்மாழ்வாரின் குளிர்ந்த ப்ரபந்தங்கள் வாழ! கடல் சூழ்ந்த, பொருந்தியிருக்கும் இவ்வுலகம் வாழ! மணவாள மாமுனிகளே! தேவரீர் எங்களுடன் எப்பொழுதும் இருந்து க்ருபை பண்ண வேண்டும்.   பகவத் ராமானுஜரின் திவ்ய ஆணையானது (ஸித்தாந்தமும் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயக் கொள்கைகளும்) சிறந்த முறையில் எந்தத் தடையுமின்றி எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் வளரட்டும்! நன்றாக வளரட்டும்!!.

 

திருக்கச்சி அருகே உள்ள தூசி மாமண்டூர் அருள்மிகு ஸ்ரீ சுந்தரவல்லி சமேத லக்ஷ்மிநாராயணப்பெருமாள் கோவிலில் சேவை சாதிக்கும் மாமுனிகள்

Friday, July 1, 2022

Emperuman abhaya hastham - holy Thulsi

 எம்பெருமான் ஹஸ்தத்தில் தவழும் திருத்துழாய் !! 

மிக்கசீர்த்  தொண்டரிட்ட  பூந்துளவின் வாசமே !! 

 ஸ்ரீமன் நாராயணனை தொழும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு  துளசி மிகவும் முக்கியமானது. ஸ்ரீ வைஷ்ணவர்கள் இதை "திருத்துழாய்" என தொழுவர்.  எம்பெருமானுடைய திருவடியிணைகளிலே பரம பாகவதர்கள் ஸமர்ப்பித்த திருத்துழாய் மலாக்ளின் பரிமளத்தைக் கொய்து கொண்டுவந்து இங்ஙனே வண்டு ஊதுமாகில் என்னுடைய கண்களும் துயில்கொளும், என்னுடைய மேனியும் பழையநிறம் பெறும் என்றால் பரகாலநாயகி

 


Ocimum tenuiflorum -  is very important and divine one for Sri Vaishnavaites.  Yes this is what we commonly worship as "Thulasi" .  Tulsi, Thulasi, Holy basis is an aromatic plant in the family of Lamiaceae. 

இன்று 1.7.2022 கோடை உத்சவத்தில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் அபய ஹஸ்தத்தில் திருத்துழாய் இதழ்களை கண்டு இன்புறலாம்.  

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் – Mamandur Veeravalli Srinivasan Sampathkumar.

Allikkeni arulicheyal goshti

                                                   Thiruvallikkeni arulicheyal goshti shared by Sri Kuram Srivathsangan – old, exact year not known. 

People are young !  - in the first line : Thirucherai Ramanujachar, Kuram Bashyam swami, Vadakarai Narayana iyengar, Ashtagothram NC Parthasarathi Iyengar, Vinjamur Ragavachar, MAV swami .. ..  Thirumalai swami, Seenu swami, Murali swami in 2nd line (not having sigai at that time !) .. .. me also in 3rd line with lil beard !! 

A Great treasure for me !Cow and arulicheyal goshti at Thiruvallikkeni

 மாடுகள் மேய்த்திடும் மாயக்கண்ணன் மதுர கானம் பொழியும் கண்ணபிரானை, பேயாழ்வார் தம் மூன்றாம் திருவந்தாதியில்: 

கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி,-

மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன், 

என மணிநீர்நிற கண்ணபிரான் இடையனாய்ப் பிறந்து, ஆநிரைகள் கூட்டங்களை   புல்லுந் தண்ணீருமுள்ள விடங்களிலே கொண்டு சென்று  மேய்த்தவனாயும், அரக்கர்கர்களை அழித்து - நல்லவர்களை ரட்சித்த குணங்களையும் பாராட்டுகிறார்.  

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் - ஸ்ரீபார்த்தசாரதியாக அருள் பாலிக்கும் திருவல்லிக்கேணி மாட வீதிதனில், இன்று 29.6.2022 கோடை உத்சவ புறப்பாட்டில் - அருளிச்செயல் கோஷ்டியினரும், ஒரு அழகான பசுவும்.Bonding of Cow & calf - தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயானடிக்கே

 பட்டி தொட்டிகளில் எல்லாம்  - மன்னன் படத்தில், ரஜனிகாந்த் நடிக்க, வாலி இயற்றிய பாடலை ஜேசுதாஸ் குரலில் ஒலித்தது.  இளையராஜா இசையில் அப்பாடலில் அனைவரும் கேட்டு இன்புற்றனர்.

அம்மா என்றழைக்காத உயிரில்லையே !  அம்மாவை வணங்காது உயர்வில்லையே!!

நேரில் நின்று பேசும் தெய்வம் !!  -  பெற்ற தாயன்றி வேறொன்று ஏது !

பாடலின் ஜீவநாதம் - தாய்ப்பாசம், அன்னையின் உயர்வு. 


ஸம்ஸாரத்திலே ஸமாஸ்ரயணீயர் பலர் உண்டென்று பிரமிக்க வேண்டா !!  ஸம்பந்த ஞானமுண்டாகவே, நெஞ்சானது அது தானே அவனை ஆராய்ந்து பற்றும்.   நமக்கு தீர்வானது தாமோதரன் தாள்களே ! - எம்பெருமானின் திருவடி நிலைகளே - திருவடி மன அழுக்கை நீக்கும்; வினையை அகற்றும்; செல்வம் சேர்க்கும்.  இது படிக்க புரிந்து கொள்ள சற்று கடினமாக உள்ளதல்லவா !    

உலகத்தில் மனிதகுலத்துக்கு மட்டுமல்ல மற்றெல்லா உயிரினங்களிடத்தும், உயர்வாக சொல்லப்படுவது தாய்மை - தாயின் உள்ளம், பாசம்.   தாய் உள்ளம் என்பது பரிவு காட்டுவது.  கொடும் விலங்குகளின் தாய் கூட தன் குட்டிகளிடம் பரிவாகத்தான் இருக்கும். துன்பம் என்று வரும்போது தாயிடம் ஓடுவது இயல்பாக அமைகிறது. 

Every animal – be the mammoth Elephant, fiery Tiger  or the lowly dog exhibit love to their newborns.  It is more pronounced and observed in Cows.   On birth the cow licks her new-born calf removing amniotic fluids, a behaviour that is stimulated by the presence of the amniotic fluids.  The first few hours after birth are regarded as important for the development of individual specific maternal bonds.  The mother and its calf develop a great bonding – which forebodes well not only for the survival of the new born calf but displays more intense exhibition of their passionate relationship.   

Man is cruel perhaps more because, he can think !  -  in  modern dairy farms calves are routinely separated from the cow within the first 24 hours after birth. This and other matters concerning herd size and cow and calf welfare are of increasing public concern. When the cow and calf are separated – both undergo pangs of separation and sometimes could die too.  The breeders, dairy-keepers do not care – no conscience at all.  It is not as if only humans speak and communicate.  Researchers have recorded and analysed the ways cows communicate with their young, to translate the meanings behind the "moos". They identified two distinctly different call sounds that cows make to their calves, depending on whether they are nearby or separated. They also identified a call calves make to their mothers when they want to start suckling milk. The team from the University of Nottingham and Queen Mary University of London spent ten months digitally recording the cow sounds, then a year analysing them using computers. Just as human voices differ from each other, the researchers confirmed that cows make their own unique sounds.  "A calf certainly knows its mother from other cows, and when a calf blarts the mother knows it's her calf," said  a farmer in Lincolnshire. "If they are not distressed and they are calm they will moo fairly low to the calf, almost talking to their calf. "If they are distressed, in other words they have lost their calf or are separated from their calf, it's a much higher pitched moo. "She starts bleating louder and louder because she's distressed because he's away from her." 

Move away from all these, think of Emperuman, who is our only Saviour and in case you have doubts on why one is not able to fix intent on the lotus feet of Emperuman as Azhwargal practiced ! 

முதலாழ்வார்களில் பொய்கைப்பிரான் அருளிச்செய்தது முதல் திருவந்தாதி.  ஆழ்வார்கள் எண்ணம் போலே நமக்கு   பகவத் விஷயத்திலே மனம்  ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்? என ஆராயவே தேவையில்லை.   அவர்கள் மனஓட்டங்களை அடக்கி எம்பெருமானோடு தமக்குள்ள உறவை  உணர்ந்து,   வேறு எவற்றையும் யாவரையும்  பற்றாமலும்  அவ்வெம்பெருமானையே பற்றிக்கொண்டவர்கள்.   இப்படி சம்பந்த உணர்வு இல்லாதவர்களுக்கு   ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று; அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் சுலபம் என்றாராயிற்று.  

தெளிதாக உள்ளத்தைச் செந்நிறீஇ*, ஞானத்

தெளிதாக நன்குணர்வார் சிந்தை, - எளிதாகத்

தாய்நாடு கன்றேபோல் தண்டுழாயானடிக்கே,

போய்நாடிக் கொள்ளும் புரிந்து.  

உள்ளத்தை மற்ற விஷயங்களில் மேய விடாமல் எவ்வித கலக்கமும் இல்லாமல் தெளிவுடன் எம்பெருமானிடத்திலே  செவ்வனே நிறுத்தி, பகவத்விஷய பக்தியாலே ‘அவன் தலைவன் நாம் அடிமை’ என்கிற தெளிவு உண்டாகும்படி  நன்றாக  அறிபவர்களுடைய மனமானது,  ஆநிரைகள் பல இருக்கும் பெரிய பசுக்கூட்டத்தினிடையே கூட மிக எளிதாக தம்  தாயைத் தேடிக்கொண்டு கிட்டுகிற கன்றைப்போல, குளிர்ந்த திருத்துழாய் மாலையையணிந்த எம்பெருமானது திருவடிகளையே விரும்பி, தானே சென்று தேடிச்சேரும்.  - என அற்புத உரையளிக்கிறார் நம் பொய்கை ஆழ்வார்.  
Blessed are those living at Thiruvallikkeni divyadesam – the abode of Lord Parthasarathi.  Lord Krishna was the great shepherd who showed humans the way to lead life – He mingled with cows and cowherds, showing compassion to all living things.  He is no doubt the very purpose of life – the Rajamannar – King of Kings and owner of cattle which includes all animate lives in the Universe.  

Here are some photos of calf and cows of Triplicane, Sri Parthasarathi Emperuman taken on different occasions and His Rajamannar thirukolam seen with cow and calf. 

adiyen Srinivasadhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar
26th    June 2022.
   

Thiruvallikkeni Kodai uthsavam day 1 - 2022

திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளுக்கு வருடம் முழுவதும் பல உத்சவங்கள் விமர்சையாக நடைபெறுகின்றன.  கோடை கால முடிவில் நடைபெறும் உத்சவம் "கோடை உத்சவம்".  முன்னாளில் பெருமாள் மாலை வேளையில் வசந்த உத்சவ பங்களாவுக்கு எழுந்து அருளி இளைப்பாறி, பின்பு வெய்யில் தணிந்ததும் திரும்புகால் புறப்பாடு கண்டு அருள்வார். 

இப்போது 'வசந்த உத்சவ பங்களா' இல்லாத காரணத்தால் 'பெருமாள் வேங்கடரங்கம் பிள்ளை தெரு வழியாக புறப்பாடு கண்டு அருளி, "கேட் ஆம்"  என்று அழைக்கப்படும் வீடுகள் வழியாக குளக்கரைக்கு திரும்பி புறப்பாடு கண்டு அருள்கிறார்.  இவ்வுத்சவத்தில் 'ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் தனி கேடயத்திலும், உபய நாச்சிமார் தனி கேடயத்திலும்"  எழுந்து அருள்வது விசேஷம்.  

எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் மிக உயர்ந்தவன் -  பழமையான வேதங்களால் முழுமுதற்கடவுளாகச் சொல்லப்பட்டவனுமான பெருமாள்.  அவர் தேன் ஒழுகுகின்ற குளிர்ந்த திருத்துழாய்மாலையை அணிந்துள்ளவன்.   அத்தகைய சிறப்பு வாய்ந்த எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கரியம் செய்வதற்கு தக்க யோக்யதையுடையவர்கள் நித்ய ஸூரிகளேயன்றோ, ஸம்ஸாரிகளான நமக்கொல்லாம் அப்பெருமானைப் பணிந்து உய்தற்கு  வாய்ப்பு கிடைக்குமோ என ஐயுற வேண்டா !!  

மிக உயர்ந்த எம்பெருமானின் திருவடிகளை அடைந்து,  அவனுக்கு அத்தாணி சேவகம் செய்வது பற்றி பொய்கையாழ்வாரின்  முதல் திருவந்தாதி பாசுரம் இங்கே :  

இயல்வாக ஈன்துழாயான்  அடிக்கே செல்ல,

முயல்வார் இயலமரர் முன்னம், - இயல்வாக

நீதியால்  ஓதி நியமங்களால்  பரவ,

ஆதியாய் நின்றார் அவர். 

தனது ஞானம், குணம், பரமபக்தி ஆகியவற்றால் உன்னத நிலையை அடைந்த நித்யஸூரிகள், எம்பெருமான் வசிக்கும் பரமபதத்தில், அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமானது திரு வடிகளில்  நித்ய கைங்கர்யங்கள் செய்து வருவர் !  நம் போன்ற சாதாரணர்களும்,  எம்பெருமானை அடைய, அதற்கு தகுந்த, க்ரமங்களுடன்,  முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து, அந்த உயர்ந்த வேதங்களின் பொருளை  உணர்ந்து அதிற் சொன்ன நியமங்களோடே  முற்பட்டு சித்தராய் நிற்கும் எம்பெருமானை தொழ நமக்கும் எல்லா நலனும் கிட்டும் என்கிறார் நம் பொய்கை ஆழ்வார்.  

The 7 day long Kodai uthsavam commenced at Thiruvallikkeni today -  here are some photos of Kodai uthsava purappadu of Sri Parthasarathi perumal taken on 29th June 2022.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
29.6.2022