To search this blog

Monday, September 25, 2023

Lord Krishna - பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!

 இதை விட ஓர் அற்புத சேவை இம்மண்ணுலகில் உண்டா ?  - ஞாநியர்களும் மஹனீயர்கள் எல்லாம் அவனை அடையவும்,  தரிசனம் கண்டருளவும், வேண்டி நிற்க எம்பெருமான் ஸ்ரீமன் நாரணன் ஆலையில் ஆனந்தமாக துயில் கொண்டான்,  அவனே கிருஷ்ணாவதாரத்தில் மாடுகள் மேய்த்தவன், வீடுகள் தோறும் வெண்ணை திருடியவன், ஆய்ச்சியர் விரட்டும்போது ஓடி ஒளிந்தவன் .. .. அவ்வெம்பெருமானை பெரியாழ்வார் தனது  மனமார,

உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா *

ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல்*

பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே!*  -  என மங்களாசாசனம் செய்கிறார்.

 


இவ்வுலகம் தோன்றிய காலத்திற்கு முன்னமிருந்தே, எண்ணிலடங்கா யுகங்களாக, உலகிலுள்ள அனைத்து உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருள்கள் அனைத்தையும் உருவாக்கியதோடு மட்டுமல்லாது, ஊழிப் பேரழிவின் போது அவற்றையெல்லாம் தன் அழகிய வயிற்றினுள் வைத்து பாதுகாக்கின்ற பரம்பொருளே! சின்னஞ்சிறிய ஆலிலை மேல் மெல்ல சயனித்து அறிதுயில் கொண்ட முழுமுதற் கடவுளாம்  நம் ஸ்ரீமன் நாரணன் இங்கே 'பாற்கடலில் ஆதிசேஷனின் மீது பாலகனாக சேவை' சாதிக்கின்றான்.

 


திருவல்லிக்கேணி ருக்மணி ஹால் - திரு ஹேமாத்ரி பொம்மை கடையில் இன்று மாலை எடுக்கப்பட்ட படம்.

 

adiyen Srinivasa dhasan

Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

25.9.2023

Sunday, September 24, 2023

Swami Vedanthachar Sarrumurai 2023

இரண்டு சிம்ஹங்களுக்கு இடையே அவதார ஸ்தலத்தில் ஆசார்யர் வீற்று இருப்பது போன்ற இந்த அற்புத படத்தை எனக்கு அனுப்பியவர் நண்பர் திரு சுந்தரகிருஷ்ணன்


திருவரங்கனுடைய பாதுகையைப் பற்றி, பாதுகா சகஸ்ரம் என்ற தலைப்பிலே விடிவதற்குள்ளே 1000 ஸ்லோகங்களைத்  சுவாமி பாடியதால் - கவிதார்க்கிக சிம்மம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தது. இவர்  “சர்வ தந்திர சுதந்திரர்”,  என்று போற்றப்படுகிறார்

Today  25.9.2023   is  ‘ Thiruvonam ‘ in the month of Purattasi ~ the day marking the sarrumurai of Sri Vedanthachar.     

             ஆசாரமாக இருப்பவர்கள்  அருந்தும் நீர் முதல் உண்ணும் உணவு வரை பல கட்டுப்பாடுகளை பின்பற்றுவர்.    இன்று நாம் பலர் சாப்பிடும் தண்ணீர் பல வடிவங்களில் இருக்கும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு தான் வருகிறது. பெரிய பிராண்ட் என பெயர் பெற்ற நிறுவனங்கள்  சுத்தமான தண்ணீர் என்று அதீத விலைக்கு விற்பது எல்லாம் கூட  சுத்தமான தண்ணீரே இல்லை. இன்று நாம் நம் நதிகளை அழித்துவிட்டு பாட்டில் தண்ணீருக்கு அலைந்துகொண்டு இருக்கிறோம். எங்கு சென்றாலும் ஏகப்பட்ட தண்ணீர் பாட்டில்களை தூக்கிக்கொண்டு - உணவை தேடி அலைகின்றோம்.    எவை எவற்றை உண்ணக்கூடாது என சுவாமி வேதாந்தாச்சார் எழுதிய "ஆகார நியமம்" என்ற நூலின் சில வரிகள்.  பகவானுடைய அடியவர்கள் பகவத்பக்தியை வளர்ந்துக்கொள்ள ஸாத்விக ஆஹாரங்களையே உட்கொள்ள வேண்டும். சில ஆஹாரங்களை விட்டே தீர வேண்டும். எவையெவைகளை விட வேண்டும் என்று ஆசார்யர்  21 பாசுரங்களாலே காட்டியுள்ளார்.   

இவற்றையெல்லாம் கடைபிடிப்பது கடினம் எனும் நல்லோர் தங்கள் ஆக்கையின் வழி உழலலாம்.  நாம் நிறுவனத்தில் டை கட்டச்சொன்னால் கட்டுவோம் !  - அதிகாரி நினைப்பதற்கு முன்பே கை காட்டுவோம் - ஆனால் நமது நல்வாழ்க்கைக்கு நியமனங்கள் பற்றி கூறினால் உதாசீனம் செய்வோம் !!  



இன்று புரட்டாசி திருவோணம். ஸ்ரீ தூப்புல் பிள்ளை என்ற கவிதார்க்க்கிக சிம்மம் என்ற ஸர்வதந்திரஸ்வதந்தரர் என்ற ஸ்ரீமந்  வேதாந்தாசாரியார்  - 755 திருநட்சத்திரம் இன்று ! காஞ்சியில் திருத்தண்கா என்கிற திவ்யதேசம் 'கண்ணன் வெஃக்கா' எனப்படுகிற ஸ்ரீயதோக்தகாரி எம்பெருமான் ஸன்னிதிக்குச் சமீபத்தில் உள்ள ' தேனிளஞ்சோலையே' தண்கா (குளிர் சோலை) என்பர் பெரியோர்.  அதற்கருகில் இருக்கும்   உத்தமமான புரட்டாசித் திருவோண நன்னாளில் உதித்தவர் உயர் வேங்கட குருவான வேதாந்தாசாரியார்.!  

‘தூப்புல்’ வேதாந்தாசாரியாரின்  அவதாரஸ்தலம்.  'தூப்புல்’ தூய்மையான புல். வைதிகர்கள் உபயோகிக்கும் தர்ப்பத்தை குறிக்கும்.   உபய வேதாந்தத்துக்கும், [தமிழ், ஸம்ஸ்க்ருதம்]  என்ற இரண்டிலும் சிறந்து விளங்கியதால்  'வேதாந்தாச்சார்யர்’.  நமக்கு நல்வழி காட்டிடும் ஆசானை நாம் குரு, ஆசாரியன், தேசிகன் என்று பல பெயர்களால் குறிப்பிடுகின்றோம்.  தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள்.  



மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒரு வகையாகும். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். 30 பாடல்களைக் கொண்டு அமையும் இந்தச் சிற்றிலக்கியவகையில் பாடல்கள் அந்தாதி வடிவிலும் இருக்கும். ஸ்வாமி வேதாந்தச்சார் எம்பெருமான் மீது ஒரு மும்மணிக்கோவையை அளித்துள்ளார்.

 


Venkatanathan was the  amsam of  “Thirumani” (bell).  One day, Kidambi Appular, Venkatanathan’s Maternal Uncle, took him to the “Kalakshepam”  of Guru Nadathur Ammal. On seeing Vekatanathan’s “divya thejas” (brilliance), Nadathur Ammal stopped the Kalakshepam and asked the boy to come on stage. Young Venkatanathan grew up to become an astute scholar, a preacher of Srivaishnava siddhantam.  Venkatanathan travelled to Thiruvahindirapuram and did “mangalasasnam” to Lord Deivanayagan and his consort. He then went to Lord Nrusimha’s sannidhi in Oushadagiri, sat under an “Ashwattha” tree and recited the Garuda Mantram.    He also composed  Hayagreeva Sthotra, Garuda-dhandakam, Devanayaga-panchasath, Achyutha-sadakam, and many more literary gems in future.  Swami was well versed in Sanskrit, Prakritham, Tamil and was great in debate earning the title  “Kavitarkikasimham”(A lion among poets). Of his many skills, he confronted a mason in building a well which is now seen at his thirumaligai at Thiruvahindrapuram. 

Swami Vedanthachar  lived a full and fruitful life for 102 years. In the misfortune when Islamic invaders looted Thiruvarangam, alongwith Swami Pillai Logachar, he emerged at the forefront in protecting our sampradhayam.   In the year 1369, he rested his head on the lap of his son Kumara Varadhachariar and left his mortal coil. During his lifetime, Swami lived in Karnataka for 12 long years in a place know as Sathyagalam. 


At Thiruvallikkeni divyadesam, Azhwar / Acaryas would have purappadu with Emperuman on their sarrumurai day.. Here are couple of  photos of Swami Vedanthachar   at Thiruvallikkeni from yesteryears and photos from Thoppul thanks to Sundarakrishnan. 

 

-adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
25.9.2023.

  

Sunday, September 10, 2023

Sri Parthasarathi Emperuman Avani Ekadasi purappadu 2023

Thiruvallikkeni Sri Parthasarathi Emperuman Avani Ekadasi purappadu 2023


 

ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் .. ..

தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே

 


ஸ்வாமி நம்மாழ்வார் திருவாய்மொழியில் - எம்பெருமான் திருவடிகளை சென்னிக்கு அணியாக கொண்டு அனுபவிக்கப் பெற்றோர்க்கு  கிட்டும் கிடைத்தற்கரிய பலன்களை விவரிக்கிறார்.  எம்பெருமானிடத்திலே சரணாகதி  செய்தல்,  நாம் இடர்படும் போதும், மகிழ்வுறும் போதும் இறைச் சிந்தனையுடன் இருப்பது நமக்கு இடர் இல்லாப் பெருவாழ்வை அளிக்கிறது.

 


இன்று 10.09.2023 ஆவணி ஏகாதசி - இன்றைய புறப்பாட்டில் ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமானின் திவ்யசேவை

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்
மாமண்டூர் வீரவல்லி ஸ்ரீனிவாசன் சம்பத்குமார்
10.09.2023 

falling at the feet of Krishna ! - நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்



பெரியாழ்வார் எப்பொழுதும் எம்பெருமான் ஸ்ரீமந்நாரணனையே  தம் சித்தத்தில் கொண்டிருந்தவர்.  பூமாலையோடு பாமாலைகளையும் சூட்டியவர்.  உடலை வருத்தும் நோய்கள் பற்றி இதோ இங்கே அவரது பாசுரம். தம்மிடத்து எம்பெருமான் விரும்பிப் புகுந்ததனால் நோய்களை  அகலும்படி ஆழ்வார் கூறுதல்,  அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.   நமது உடம்பில் பல நோய்கள் ஒவ்வொன்றாக வரிசையாக வந்து சேருகின்றன. நெய்க்குடத்தில் எறும்புகள் வரிசையாக வந்து அப்பிக்கொள்வதுபோல நமது உடம்பிலும் நோய்கள் வரிசையாக அப்பிக் கொள்கின்றன.

 

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்போல்

நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்.

காலம்பெற உய்யப்போமின் மெய்க்கொண்டு வந்து

புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் பைக்கொண்ட

பாம்பணையோடும் பண்டன்று பட்டினம்காப்பே.

 



நெய் வைத்துள்ள குடத்தில் எப்படி எறும்புகள் ஏறுமோ, அப்படி உடம்பாகிய குடத்தில் எல்லா இடத்திலும் பரவி நிற்கும் நோய்களே! சீக்கிரமே விட்டு விலகி,பிழைத்துப் போங்கள்!  வேதத்திற்கு அதிபதியான எம்பெருமான், படங்களுடன் கூடிய பாம்பின் படுக்கையோடு கூட, உடம்பில் புகுந்து விருப்பத்தோடு படுத்திருக்கிறார். இது பழைய உடம்பு இல்லை. இந்த சரீர-ஆத்மா என்கிற பட்டினம் இப்பொழுது எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!

 


Some photos from Kannan purappadu at Thiruvallikkeni in the morning of today

 
adiyen Srinivasa dhasan
Mamandur veeravalli Srinivasan Sampathkumar                        
8th Sept 2023.