Yadadri Tirumala Devasthanam,
famously Swarnagiri Sree Venkateswara Swamy Devasthanam,
situated atop Manepally Hills in Bhuvanagiri, Hyderabad, Telengana
Yadadri Tirumala Devasthanam,
famously Swarnagiri Sree Venkateswara Swamy Devasthanam,
situated atop Manepally Hills in Bhuvanagiri, Hyderabad, Telengana
Chintadripet Sri Adhikesava Perumal thiruther ~ 10.4.2026
: https://youtu.be/Oa9gLJ30Wac
Sri Sankatahara Mangala Maruthi Devasthanam
(Sri Mangala Maruthi Anjeneyar Temple)
Thiruvonamangalam, near Alangudi/Kumbakonam in the Tiruvarur
district
Our divine Temples showcase great architecture as well. Our temples are renowned for their massive, intricately carved gopurams (gateway towers) with the tallest ones often rising over 200 feet. Key examples include the 239.5-ft Rajagopuram at Srirangam, the 249-ft tower at Murudeshwara, and the 217-ft eastern tower at Tiruvannamalai besides the beautiful gopuram at Sri Villiputhur.
The gopurams are designed and constructed as per rules given in the texts of Vaastu Shastra. It is usually a tapering oblong in form with ground-level wooden doors, often richly decorated, providing access. In Tamil language, gopuram is a derivation is from two words: கோ (kō) and புறம் (puram) meaning 'king' and 'exterior' respectively. During the Sangam period, it was known as ஓங்கு நிலை வாயில் (ōnggu nilai vāyil) meaning 'imperishable gateway'.
No
post on Gopuram – just as I am preparing a post on a lesser-known Temple, here
is a teaser - a bommai on its Gopuram .. .. ….. try and identify the place !!
‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ - . காலையில் எழுந்ததும் முதல் தரிசனமாக கோயில் கோபுரத்தைக் கண்டால் அந்த நாள் முழுவதும் எல்லா வித நன்மைகளும் நடக்கும். பெரிய கோபுரங்களில், அழகாக செதுக்கப்பட்ட பற்பல சிற்பங்களை காணலாம். பொதுவாக, பெருமாளின் அவதாரங்கள், லீலா மஹிமைகள், ஆழ்வார் ஆசார்யர்கள், தேவதைகள், பக்தர்கள், யானை, பசு, முதலான விலங்குகள் என அமைக்கப்பட்டு இருக்கும். இப்படி ஒவ்வொரு பொம்மைகளையும் செதுக்கும் பொழுது அதில் இலக்கண விதி உண்டு. இந்த விதிக்கு ‘பிரதிமாலட்சணம்’ என்பது பெயராகும். இதில் தெய்வ உருவங்கள் அமைக்கப்படும்பொழுது அதன் கண்கள் அனுகிரக பார்வையுடன் சாந்தமாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தெய்வத்தின் திருமுகத்தை விட, உடல் பத்து மடங்கு பெரியதாக இருக்க வேண்டுமாம்
இந்த
அழகான சிலை எங்குள்ளது !! யூகிக்க முடியுமா
!! (பதில் மாலை பதிவில்) – Clue : திவ்யதேசமல்ல, பிரபலமான
கோவில் அல்ல, சென்னை மாநகரத்தில் !!
S.
Sampathkumar
24.1.2026
Pattanam kovil - Sri Chenna Kesava Perumal
pagal pathu uthsavam 1 -2025
https://youtu.be/eWkZBPSI_3U?si=FPKsFn4BFbE8iBnV
IMP Pre-scripts : 1)
Today in some ways is ‘Friendship day’. Friendship Day
celebrates the bonds of friendship, officially recognized by the UN on July
30th, but celebrated in countries like India, the US, and Bangladesh on the
first Sunday of August (August 3rd in 2025).
2. some of you may frown why something on Cricket on this religious post. In 1932, Indian Cricket team toured England marking their Test debut, a crowd of some 25,000, and a fast pitch, greeted the Indians in their first Test match, an event, we believe, of more than mere cricketing importance. The most famous ground in the world, enriched as it is by long years of high tradition, was looking its best with its own particular atmosphere when the Indians having lost the toss went out to field. And what a series of shocks they gave us Sutcliffe, Holmes, and Woolley out for 19 runs in 20 minutes ! India however lost the Test by 158 runs
3. 18.12.2019 was a blessed day ~ we visited Porbandar. Little did we realise the significance of the place Sudhamapuri ! and more of the day ! .. .. it is our good luck.
4. A repost of my 2019 post with some additions / alterations.
அவல் : நெல்லை ஊறவைத்து, இடித்து,
அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும்
அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும்
ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத்தான் நாம் பெரும்பாலும்
பயன்படுத்துகிறோம்.
Porbandar is known to us all as the birthplace of Mohandas Karamchand Gandhi. Onshore explorations in and around Porbandar brought to light the remains of a late Harappan settlement dating back to the 16th-14th centuries BCE. There is evidence to suggest that the Harappan legacy of maritime activity continued till the late Harappan period on the Saurashtra coast. The discovery of ancient jetties along the Porbandar creek signifies the importance of Porbandar as an active center of maritime activities in the past.
Porbandar was the seat of the eponymous princely state in British India. In ancient times Porbandar was known to be Pao Bandar, due to its bread factories that used to export Pao ruti to Arab nations across Arabian sea. Later the state belonged to the Jethwa clan of Rajputs. The state was subordinate to the Mughal governor of Gujarat until being overrun by the Marathas in the latter half of the 18th century. After, they came under the authority of the Gaekwad court at Baroda and eventually of the Peshwa.
All these would pale to insignificance,
when we know the important of this place having connection of Lord Sri Krishna and the legend
of his friendship. In Tamil, we know him as Kuchelar – he is Sudama,
a Brahmin childhood friend of Sri Krishna. Sudama was poor
! ~ his father was Matuka and his mother was Rochana
Devi. His fortune was his friendship with Lord in his early
days. Sri Krishna the Supreme God later was ruling the nearby Dwaraka, while Kuchela’s life was
entwined to abject poverty. His wife Niyati reminded him of
his friendship with Krishna and egged him to go and meet the Lord for
help. Incidentally,
the image of Kuchela perhaps is far different that what is depicted
here at Sudamapuri.
Sudama was reluctant but eventually went to meet him. In his state of affairs, he could not afford any good gift, but remembered the liking of his bosom friend to - அவல் - ‘aval’ (poha / beaten rice) – and he took some aval in a cloth as a present. Lord Krishna whose manifestation was to prove so many things to this World, seized this opportunity to prove His quality of approving friends, irrespective of their stature. Krishna & His consort Rukmani received Sudaama and treated him so royally – with Lord partaking little bit of aval, all the troubles of Kuchela started vanishing. When Sudama finally returned to his home, he found a palatial mansion instead of the hut he had left. He also found his family dressed in opulent garb and waiting for him. He still lived an austere life after that, always thankful to the Lord. It is the price of devotion to Lord.
It is our religion to submit ourselves completely to the Lord without any expectation – it can never be trading of bakthi, seeking some returns. Sudama, was poor, had nothing, yet offered ‘aval’ with devotion and his life changed forever. Lord did not reward him because Sudama was a friend – but he was a sincere, astute, religious person – following the duties cast on him.
Shri Krishna-Sudama is an immortal example of real, non-materialistic friendship. It is a perpetual symbolic definition of real friendship. At Porbandar exists a temple for Sudama - constructed in 1902 and 1907 at the centre of the city. Built with white marble this temple has a number of carved pillars which decorate the temple, open from all sides this temple has a shikhara which is decorated with splendid architecture and carvings. These carvings are also visible above the pillars and the arches which adjoin the pillars. With such architecture this temple is dedicated to the shrine of Sudama which is built in simple structure. There is a beautiful statue of Lord Sri Krishna embracing Sudama. The temple has a maze within its complex and it is believed that if a person crosses this maze all his sins would be forgiven.
We were delighted to know the real-life
story of ‘Krishna Sudama’ friendship and were fortunate to have darshan on
‘Sudama day’ (18.12.2019) at Dwaraka as also at the temple of Sudama. Below is the story of
Sudama and the value of friendship with Lord himself, beautifully
explained by Gurji
Gopalavalli dasar,
posted with his permission. There was not much of buzz nor any spoke of the
day here at these places but social media carried many posts on Kuchela day and
the celebrations elsewhere including Guruvayur.
The temple at Sudamapuri seen now was
renovated and built by : Maharaja Rana Shri Bhavsinhji Madhavsinhji Sahib
Bahadur, the Maharaja of Porbandar belonging to Jethwa dynasty, who ascended the throne
of princely state of Porbandar in 1900 and ruled till his death in
1908.
#மார்கழி #முதல் #புதன்கிழமை ! (#குசேல_தினம்)*
ஆமாம் ! சனாதன தர்மத்தில் இன்று (இந்த வருடம் 18.12.2019, புதன்கிழமை) நண்பர்கள் தினம் ! ஏனென்றால் துவாரகையின் ராஜனான க்ருஷ்ணனுக்கும், ஏழ்மையில் வாழ்ந்த சுதாமாவுக்கும் இடையில் இருந்த நட்பு தான், மிகச்சிறந்தது.
*இன்று #குருவாயூரில் #சுதாமா தினம் (#குசேல
தினம் என்று சொல்வார்கள்)*. பகவான் கண்ணனை சுதாமா ஒரு *#மார்கழி மாத, முதல் #புதன்கிழமை*
துவாரகையில் சந்தித்தார். இந்த விஷயத்திற்கு புராண பிரமாணங்கள் எனக்குத் தெரிந்தவரை
இதுவரை கண்டதில்லை. எங்காவது இருக்கலாம், ஒரு நாள் கண்ணன் பிரமாணம் காட்டித்தருவான்.
எப்படியாயினும் குருவாயூரில் வருஷாவருஷம் இந்த தினத்தை விசேஷமாகக் கொண்டாடுகின்றதால்,
வேறு பிரமாணம் அவசியமில்லை.
*சுதாமாவின் #மனைவியின் பெயர் #சுசிலா !* ஸ்ரீமத்பாகவதத்தில் சுதாமாவிற்க்கு 27 குழந்தைகள் என்று சொல்லப்படவில்லை. சுதாமா ஏழ்மையை ஆசையாய் ஏற்றார். சுசிலாவும் மனதார ஏழ்மையை ஏற்றாள். ஏழ்மை ஒருவனை எல்லா விதத்திலும் பக்குவப்படுத்துகிறது. நம் மனதில் தெய்வ நம்பிக்கையில் குறை காரணமாக, தரித்திரம் கஷ்டம் என தீர்மானித்துவிட்டோம். *#ஏழ்மையில் #வாழ்வில் #நடப்பதெல்லாம் #நாராயணன் #செயல் என்று ஏற்போம் !* பணம், பதவி, அந்தஸ்து வந்துவிட்டால் எல்லாவற்றையும் மாற்றலாம் என்ற மமதை வந்துவிடும்.
ஆனாலும் பசி மிகப்பெரிய கொடுமை. பிள்ளைகளின் பசி பெற்றோரை பொய் சொல்லவைக்கும், திருடவும் தூண்டும். ஆனால் சுசிலா இதையெல்லாம் செய்யாமல் கண்ணனை சரணடைந்தாள். சுதாமா பெரிய ஞானி. உடல் கவலை, வாழ்க்கை இவையெல்லாம் கண்ணன் இஷ்டம் என்று விட்டுவிட்டவர். அதனால் அவரால் இதையெல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. *ஏனென்றால் குருகுல வாசத்தில், வேதபுருஷனான கண்ணனோடு வேதம் பயின்றவர். வேதம் கற்று கண்ணனை அடைந்தவர் பலர். ஆனால் #கண்ணனோடு #வேதம் #பயின்றவர் இவர் ஒருவரே !* அப்படிப்பட்டவருக்கு ஏழ்மை வரமன்றோ. நமக்குத்தான் தெய்வம் என்பது ATM கார்ட் மாதிரி, வேண்டியவாறு தரவேண்டும் என்று எதிர்பார்ப்பு. *எல்லோரும் குருவை அடைந்து கண்ணனை அனுபவிப்பர். சுதாமாவோ #கண்ணனோடு #குருவிற்கு சேவை செய்தவர்.*
சுசிலா தாயாயிற்றே. பிள்ளைகளின் பசி எப்படி பொறுப்பாள் ?!? எப்படியாவது தன் கணவரை ஒரே ஒரு முறை துவாரகா அனுப்பினால், எல்லாம் மாறும் என்று திடமாக நம்பினாள். பல நாள் சுதாமாவிடம் துவாரகா போய்வரச் சொன்னாள். சரியென்று ஒரு நாள் கிளம்பினார். கண்ணனுக்குத் தர ஏதேனும் தா என்றார் சுசிலாவிடம். வீட்டில் ஒன்றுமில்லையே. ஆனாலும் சுசிலா கலங்கவில்லை. அவளுக்கு ஊரார் வைத்த பெயர் க்ஷுத்க்ஷாமா, அதாவது பசியால் இளைத்தவள் என்று அர்த்தம். சுதாமாவிற்கும் பட்டப்பெயர் உண்டு, அதுதான் குசேலர். குசேலன் என்றால் கந்தலாடை உடுத்தியவர் என்று அர்த்தம். சுசிலா அருகிலிருந்த சில வீடுகளில் பிச்சையாக வாங்கினாள் அவலை. *#அவள் வாங்கிய #அவல் தான் சுதாமா கண்ணனிடம் கொண்டு சென்றது.*
ஒருவழியாக துவாரகா வந்து சேர்ந்தார் சுதாமா. கண்ணனுக்குத் தன்னை ஞாபக்கப்படுத்த அவரிடம் இருந்த ஒரே அடையாளம் குரு மட்டுமே. *#குருவருள் தானே #திருவருள்.* குருதியானத்தோடு துவாரகா வந்தவரை த்வாரகாதீசன் ஆசையாய் வாசல் வந்து வரவேற்றான், பழைய பால்ய சினேகிதனாகவே. அவரைக் கொண்டாடினான். *#வேதமாதாவின் #திருவடியைப் பிடித்த சுதாமாவின் #திருவடிக்கு வேதபுருஷனான கண்ணனே #பூஜை செய்தான்.* எல்லா சுகமும் கேட்பவர், கண்ணணைப் பூஜிக்கின்றனர். ஏதும் கேட்காத சுதாமாவை, கண்ணனே பூஜித்தான். செல்வம் கேட்பவரைக் கண்டால் கலங்கும் லக்ஷ்மிதேவியான ருக்மிணித் தாயார், இவரையே பக்திச்செல்வத்தின் அதிபதியாய் கண்டாள்.
கண்ணன், இவர் சொல்லவந்த குருகுல நினைவுகளை,
அவன் சொன்னான். தான் ஏதும் மறக்கவில்லை என்று புரியவைத்தான் மாயன். சுதாமா நெகிழ்ந்தார்.
பேச்சுக்கிடையில் எனக்கு என்ன கொண்டுவந்தாய் என்றான். உயிரைத்தவிர அவர் உடலில் என்ன
உண்டு, என்று ருக்மிணி மனதிற்குள் கண்ணைக் கோபித்தாள். ஆயினும் இவன் மனம் உள்ளபடி யாரறிவார்.
அவனே சொன்னான் " *பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி ! ததஹம்
பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மனஹ !!*. அதாவது ஒரு இலையோ, பூவோ, பழமோ ஒரு சொட்டு
ஜலமோ, அன்போடு பக்தியாய் தருவதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சத்தியம் செய்து கைநீட்டினான்.
எல்லோரும் இவனிடம் கைநீட்டி கேட்பர். ஆனால் இவன் கைநீட்டிக் கேட்டது சுதாமாவிடம். ஆனாலும்
சுதாமாவிற்கு தயக்கம், இத்தனை பெரிய த்வாரகாதீசனுக்கு இந்த அவலை எப்படிக் கொடுப்பது
?!? ஆனாலும் *அவல் தந்த அவள் மனதால் கண்ணனிடம் சரணடைந்தாள்.* கணவரின் மனமும், போக்கும்
மனைவிதானே உள்ளபடி அறிவாள். கண்ணன் அவள் குரல் கேட்டு, இங்கே அவலைப் பறித்தான். எனக்கு
மிகவும் பிடித்தது என்றான் அவள் தந்த ஒருபிடி அவலை வாயில் மென்றபடி. இப்படிக் கண்ணனுக்கு
சுசிலா தந்த அவலை சுதாமா கண்ணனுக்கு துவாரகையில் தந்த நாளே, மார்கழி முதல் புதன்கிழமை.
ஒரு பிடி அவல், அவள் பக்தியால், ஜோராக ருசிக்க, இன்னொரு பிடி எடுக்க, இங்கே இவள் (ருக்மிணி) போதுமென தடுத்தாள். இவர் பக்தியை செல்வத்தால் அழிக்காதே என்றாள், கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள். ஒரு நாள் பொழுது முழுதும் பால்ய குருகுல வாசத்தைப் பேசியே கழித்தான். *ஆனாலும் மனதால் சுசிலாவின் துன்பம் தீர நீங்காத செல்வம் தந்தான். சுதாமாவின் துன்பம் தீர தன்னையே செல்வமாகத் தந்தான்*
கண்ணன் என்னும் செல்வத்தை சுதாமா பூரணமாக அனுபவித்த தினம் இன்று. கிளம்பும்போது, அவ்வப்போது வா என்றானே ஒழிய கையில் ஒன்றும் தரவில்லை. எல்லாம் மனதாலே தந்துவிட்டானே... கண்ணனை எப்படி தோழனாக அனுபவிப்பது என்று சொல்லிக்கொடுத்தவர் சுதாமா. உடுக்கை இழந்தவன் கைபோல், ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்று, சொல்லாமலேயே அருள் செய்த உற்ற தோழன் கண்ணன்.
எல்லோருக்கும் சுதாமா தின வாழ்த்துக்கள். நான் குசேலன் என்று சொல்லமாட்டேன். ஏனென்றால் கண்ணன் சுதாமா என்றே அழைத்தான். ஊராரைப் பொறுத்தமட்டில் அவர் குசேலன். கண்ணனைப் பொறுத்தவரை அவர் என்றுமே அவனின் பிரியமான சுதாமா தான். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சுதாமா கண்ணனைப் பார்க்க துவாரகா செல்லவில்லை. சென்றால் இன்னும் ஏதேனும் தந்துவிடுவானோ என்ற பயமே காரணம். இன்று நமக்கு இதை அனுபவிக்க ஒரு வாய்ப்பு தந்தான் குருவாயூரப்பன். விடியற்காலை அப்பம், அவல், பழம் என்று தரவேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனாலும் பரவாயில்லை. எப்படியோ மார்கழியில் விடியற்காலையில் குருவாயூரப்பன் தியானம் செய்வது நல்லதுதானே.
மனதின் எண்ணங்களே அவல். அப்படியே தருவோம்.
திருக்கோளூர் பெண்பிள்ளை நம் ஸ்வாமி ராமானுஜரிடம் *அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே* என்றாள்
! *நாமும் பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ இன்று கண்ணனுக்கு அவல் தருவோமா அவளைப் போலே
!*
குருஜீ
கோபாலவல்லிதாஸர் (18.12.19, குசேல தினம்)
குருவாயூரப்பன்
கோயிலில் மார்கழி முதல் புதன் கிழமையை குசேலர் தினமாக கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணன்,
குசேலருக்கு அனுக்கிரகம் செய்த நாளாதலால் அன்று பக்தர்கள், இலையில் அவல், அச்சு வெல்லக்கட்டி
ஆகியவற்றை கொண்டு வந்து குருவாயூரப்பனை வணங்குவது வழக்கம். அன்று கோயிலில் பக்தர்கள்
படிக்கணக்கில் அவல் தானம் செய்கின்றனர். குசேலர், கிருஷ்ணனை தரிசிக்க ஆவலுடன் , அவல்
கொண்டு சென்ற நாள் , மார்கழி மாதம் முதல் புதன் கிழமை. அதனால் , இன்றும் குருவாயூரி்ல்
, மார்கழி முதல் புதன் கிழமையை , குசேலர் தினமாக கொண்டாடுகின்றனர். பக்தர்களும் , குருவாயூரப்பனுக்கு
அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர். இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள்
புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கை.
PS
: 1) ‘Kuselan’
starring Rajnikant was an adaptation, amended to suit Tamil audience by its
director P. Vasu. A remake of the Malayalam film Kadha Parayumbol (2007), it
had Rajnikanth, Pasupathi, Meena and Vadivelu. The film was simultaneously made
in Telugu as Kathanayakudu. The plot
revolves around a villager, who had shared a strong friendship with a popular
cinema actor in his youth.
2) The temple at Sudamapuri (Porbandar) was renovated by Rana of Porbandar in 1903.
Maharaja Rana Shri Bhavsinhji Madhavsinhji Sahib Bahadur ( 1867 – 1908) was the Maharaja of Porbandar belonging to Jethwa dynasty, who ascended the throne of princely state of Porbandar on 15 September 1900 and ruled till his death in 1908. Rana of Porbandar got connected to Bhavnagar through marriage to a daughter of HH Maharaja Raol Shri Takhatsinhji Jaswantsinhji of Bhavnagar in 1902. This union, often noted as to Kumari Shri Ramba Sahiba from Bhavnagar's Gohil dynasty, forged ties between the Jethwa rulers of Porbandar and Gohil rulers of Bhavnagar.
Porbandar and Bhavnagar were key princely states under British India. The Indian cricket team toured England in the 1932 season under the title of "All-India’ was captained by the Maharaja of Porbandar. India had just been granted the status of ICC Full Member and they played their inaugural Test match at Lord's in June. It was the only Test arranged on this tour and England won by 158 runs after scoring 259 and 275/8d in the two innings while India were bowled out for 189 and 187.
Lieutenant-Colonel
Maharaja Rana Shri Sir Natwarsinhji Bhavsinhji Sahib Bahadur, KCSI ( 1901 – 1979) was the last Maharaja of Porbandar, the
only son of Maharaja Rana Shri Bhavsinhji Madhavsinhji Sahib , Rana Sahib of Porbandar, was picked to captain the All-India side on
their first major tour of England in 1932 when the Maharaja of Patiala had to
withdraw through illness. It was considered necessary for a prince to lead the
side, and so Porbandar was appointed. He
however did not play in that inaugural test and handed over the captaincy for India's first Test to C.K.
Nayudu.
Jai
Hanuman
Renowned
for its 108-feet-tall Hanuman statue in Delhi, the Jhandewalan Hanuman Temple is
significant among the revered shrines in the capital city. Jhandewalan Hanuman
Temple is located closer to Jhandewalan
metro - right above the raised metro line between Karol Bagh and Jhandewalan
Metro Stations.
The temple
dedicated to Lord Hanuman, took nearly 13 years to be constructed,
becoming a remarkable landmark. An
intriguing feature of the temple is its entrance, designed to resemble the
gaping mouth of a demoness, perhaps symbolizing the demons vanquished by Lord
Hanuman throughout his life, more specifically during his visit to Lanka over
the Sea.
Temple
chariots (thiruther) are great work of art
Kumbakonam
Sri Chakrapani thirukkovil ther (file pic)
poignant history of Pillai LoGachariyar who gave his life
protecting Arangan
Pillai Ulagariyar life
history and his thiruvarasu !!
Imp pre-script : A very lengthy post in two parts – first is about war,
pillage, sufferings – the history and how or why such plunderers were glorified
in Indian history ! Second about a great Acarya who saved the thirumeni of
Thiruvarangan and ensured good continuance of our sampradhayam.
For sure, you had been to Madurai – and while travelling saw ‘Yanai
Malai’ – a hillock in the shape of elephant, around 10 km from Madurai
Mattuthavani bus stand. The hill
stretches over 3 kilo metres and is 90 metres (300 ft) high.
Picturesque Yaanai malai Madurai - afar view
Great Acaryas of Srivaishnavism did Pramanarakshakam, here is one who
extolled Pramanas and also did Prameya rakshanam (protecting / nourshing the
Thirumeni of Emperuman).
பல நூற்றாண்டுகள் முன்பு வாட்களும்
இரத்த வெறியும் கொண்ட கொலையாளிகள் முன்பு ஸம்ப்ரதாயத்தையும், நம்பிக்கையும், வாழ்வியலையும்
காக்க போராடி, இன்னுயிர் இந்த திருவரங்கத்து அடியார்களின், அவர்தம் தலைவனின் சரித்திர
நிகழ்வு - இந்த சகாப்தம். அரங்கன் 50 ஆண்டுகள் இப்படி உலா சென்று திரும்பி வந்தது சோக வரலாறு - அரங்கனுக்காகவே
வாழ்ந்த 'ஸ்ரீவசன பூஷண செல்வன் - சுவாமி பிள்ளை உலகாரியர் அவர் திருமேனியை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு
பல நூறு மைல்கள் சென்று இடையிலே ஜ்யோதிழ்குடி எனும் ஊரிலே திருநாடு அலங்கரித்தது ஒரு
கண்ணீர் காதை.
Please do write to me (Mail @ allikkeni@gmail.com / WA me / or leave
comment in the blog – if you find any error / mistake / or not properly
presented – sure, will change !!
###############################################################################
To the few who hail the
British rule stating that they gave us education, Railways and the like -
please realise that they were mere looters just like Mughal
invaders. In 1930, a young American
historian and philosopher, Will Durant, stepped onto the shores of India for
the first time. He had embarked on a journey around the world to write what
became the magnificent eleven-volume The Story
of Civilization. But he was, in his own
words, so ‘filled with astonishment and indignation’ at what he saw and read of
Britain’s ‘conscious and deliberate bleeding of India’ that he set aside his
research into the past to write a passionate denunciation of this ‘greatest
crime in all history’. His short book, The Case for India, remains a classic, a
profoundly empathetic work of compassion and outrage that tore apart the
self-serving justifications of the British for their long and shameless record
of rapacity in India. As Durant wrote: The British
conquest of India was the invasion and destruction of a high civilization by a
trading company [the British East India Company] utterly without scruple or
principle, careless of art and greedy of gain, over-running with fire and sword
a country temporarily disordered and helpless, bribing and murdering, annexing
and stealing, and beginning that career of illegal and ‘legal’ plunder which
has now [1930] gone on ruthlessly for one hundred and seventy-three years.
Invasions first by Mughals
and then British East India Company – one thing in common was the looting of
the wealth and suffering of people. A war or a fight between people for that matter is never good. Armed conflict, civil war, clashes and
violence; - the ill after-effects are – looting, pillage, suffering of people,
malnourished children, weapon wounded victims, displacement,
disappearances, sexual violence and more – sometimes a culture, a civilisation
gets wiped out and there is huge psychological impact that conflict has
on the people it touches.
Malik Kafur (died 1316),
also known as Taj al-Din Izz al-Dawla, was a ruthless slave-general of
the Delhi Sultanate ruler Alauddin Khalji. He was captured by Alauddin's
general Nusrat Khan during the 1299 invasion of Gujarat, and rose to prominence
in the 1300s.
The drain of wealth out of
India by the British is a well-known fact that has been meticulously recorded
by historians and economists. However, the drain of wealth originally started
with the Islamic invaders who carted off prodigious quantities of wealth to
their Arab, Persian, Turkic and Central Asian homelands for a longer period
than the British in India. Muslim invaders also caused immense damage to our
culture; hearts filled with malice and hatred they tried to destroy every
beautiful art and did immense harm to womenfolk. India was the
world’s leading economy from 1 CE to 1000 CE but in the second millennium it
lost after the Islamic invaders razed India’s universities, disrupted the
economic systems and caused havoc in religious and social life.
Babur invaded India at the
behest of Daulat Khan Lodi and won the kingdom of Delhi by defeating the forces
of Ibrahim Khan Lodi at Panipat in 1526 AD. He laid the foundation of the
Mughal Empire. History reversed in
full circle at the Battle of Karnal – as Mughals desperately pleaded for mercy
and after many hours, Nader Shah
relented and signalled a halt to the bloodshed by sheathing his battle sword
once again. It has been estimated that during the course of six hours of savage
butchery in one day, 22 March 1739, approximately 20,000 to 30,000 Indian
men, women and children were slaughtered by the Afsharid troops. Following his victory, Nader Shah marched to Delhi and occupied
the capital in March 1739. Initially, he accepted a large ransom, but a rumor
of his death sparked a riot in which some of his soldiers were killed. In retaliation, Nader Shah ordered a city-wide
massacre. An estimated 20,000 to 30,000 inhabitants were slaughtered by Persian
troops in a single day, leading to horrific violence and looting. The city was
systematically plundered for its immense wealth. Nader Shah seized the
legendary Peacock Throne and the famed Koh-i-Noor diamond, among countless
other treasures.
During 1310-1311, the Delhi
Sultanate ruler Alauddin Khalji sent an army led by Malik Kafur to the
southernmost kingdoms of India. After subjugating the Hoysalas, Malik Kafur
invaded the Pandya kingdom (called Ma'bar in Muslim chronicles) taking
advantage of a war of succession between the Pandya brothers Vira and Sundara. During
March–April 1311, he raided several places in the Pandya territory, including
their capital Madurai. He was unable to make the Pandya king a tributary to the
Delhi Sultanate, but obtained a huge plunder, including elephants, horses, gold
and precious stones.
Depending on what we chose to
read, history teaches us various things.
Woraiyur, nearer Trichy was once the capital of Cholas – fact supported by
archaeological and literary evidences. The place was under the control of
Cholas even during Kalabhra interregnum. In 1751-52 occurred the ‘siege of
Trichnopoly’ by Chanda Sahib. There were some more battles too .. ..the islamic
invasion was firmly entrenched in Northern India since the days of Mohammad of
Ghori – and in the 13th century they travelled to southern peninsula too.
In history, some great revolutions occurred accidentally and perhaps the first
invasion of Deccan too ! in Delhi, one of the slaves of Ghiyasuddin
Balban raised himself to the throne and his generals ran South.
Ulugh Khan’s conquest set up a permanent sultanate at Madurai that held one of
the cruelest regimes in Indian History and lasted for around forty years. There
are Travel records made by a traveler named Ibn Batuta, who visited India and
who also married one of the daughters of the Sultan himself but was horrified
at the wanton cruelty and bloodshed. Even among themselves the various Sultans
who rapidly succeeded each other for the throne were lusty for fellow blood as
well – it was a regime of treachery. Malik Kafur’s invasions of Malabar
and South had the singular objective – ‘plunder’. According to Amir
Khusru ' the Malik represented that on the coast of Malabar were 500 elephants,
larger than those which had been presented to the Sultan from warangal, and
that he combined the extirpation of the idolaters.
Moving away from the pillages, to us what is of significance is the glorious Temple at Srirangam and Sri Ranganathar. The temple has great religious significance and has seen various dynasties and some plundering too ! ~ it was the saddest of days, when it witnessed the massive invasion and innumerable killings of devout. Koyil Ozhugu, the authentic records of events unravels the events that unfolded at the time when thousands of Srivaishnavaites were massacred defending the holy place.
Next time, you visit Srirangam – have some extra time – first have
darshan of Azhwar, Acaryas, Sri Ranga Nachiyar, Sri Ranga Nathar,
Chakkarathazhwar, Sri Ramanujar – and before that walk on the sands near the
‘1000 pillared mantap and the astonishing Vellai gopuram’ - feel the
sand and mother earth, touch the pillars there – if it is late evening, sit
with eyes closed – if fortunate, you will visualize the history – when few
hundreds travelled far long with Sri Nam Perumal, with the zeal of protecting
HIM !! .. .. .. and also
have darshan of Acaryan Pillai Logachariyar (at his sannathi near Udayavar
sannathi) – the hero behind this post.
* * * * * * * * ** * * *
* * * * * * * * * *
* * * * * * * * ** * * *
* * * * * * * * * *
~ the poignant history of
Sri Namperumal outside Thiruvarangam
and the efforts of our
Acaryar Swami Pillai Logachar.
மதுரையில் உள்ளது ஆனைமலை. இம்மலையின் நீளம் சுமார்
4 கி.மீ, 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால்
ஒரு யானை படுத்திருப்பது போல தோன்றுவதால் இம்மலை யானைமலை எனப் பெயர் பெற்றுள்ளது.
Tomorrow 30.10.2025 is ‘Thiruvonam in the month of Aippaisi’ – celebrating the birth of Sri Poigai Azhwar and Acarya Pillai Ulagariyar. I am posting this lengthy article on Acarya – I am worthless ordinary moral with very little knowledge of our satsampradhayam. Yet the life history of our Acaryar Logachar (more elaborately read and influenced by Thiruvarangan Ula) makes me piece together this article from various sources .. it is a sad piece of history – in school books, we read of Islamic invasion and moghul kingdoms in Delhi and in the North without seriously realizing that they had its deep impact down South too, though there have not been battles of Panipat ! ~ miles away, following a coup that expelled a slave-turned begum and her son from the halls of royal power, Sultan Firoz Shah created Bahmani kingdom in Deccan – created by a rebellion against the Tughlakhs, this dynasty too survived centuries – the period around this time was dark hours as there were constant invasions, pillages, killings, rapes and anarchy on the other regions .. .. sad that our sampradhayam and Thiruvarangam too was deeply impacted. Here is something on our glorious Acarya Pillai Logachar.
Pillai Ulagariyar sannathi at Thiruvarangam periya kovil
Thiruvarangam is the greatest of Divyadesams and Sriranga
Vimanam owes its origin to Brahma, the creator, the first to get it and
worshipped it for long in Satyaloka. The Vimana was later obtained
By Ikshvaku and later descended to mother earth, enabling all of us to have
darshan at the Holy Sri Rangam divyadesam. It is Emperuman, Sri
Ranganathan, (Periya Perumal) who protects us – in His divine drama, there was
a period of melancholy when thousands died in trying to protect Him from the
marauding army of Malik Kafur and his agent Ulugh Khan.
30.10.2025 ஒரு சீரிய நாள் ! -
ஐப்பசியில் திருவோணம் – திருவல்லிக்கேணியில்
ஒரு அதி அற்புத புறப்பாடு நடைபெறும். அழகு மிளிரும் ஸ்ரீ பார்த்தசாரதி
முன்பே திவ்யப்ரபந்த கோஷ்டி ~ அதனினும் முன்பு இரண்டு ஆச்சார்யர்கள் (சுவாமி மணவாள
மாமுனிகள் (விடையாற்றி); ஸ்ரீ பிள்ளை உலகாரியர்) மற்றும் திரு பொய்கை ஆழ்வார்
திருவவதார தினம். ஸ்ரீவைணவ திவ்யதேசத்தில் வாழ்வதில் முக்கிய பலன்
ஒன்று ~ எம்பெருமானை திருவீதி புறப்பாடுகளிலே சேவிக்கும் ஆனந்தம். ஆனால்
சுமார் 700 ஆண்டுகள் முன்பு நடந்த திருக்காவேரியை
தாண்டிச்சென்ற அப்புறப்பாட்டை நினைக்க கண்ணீர் மல்கும்.
Just before the Emperumanar Udayavar Sannathi (Thaanana
thirumeni – Sri Ramanujar Himself) – is the sannathi of ‘Ulagariyar’.
I have read in my young days ‘Thiruvarangam Ula’ written by Sri Venugopalan
(Pushpa Thangathurai) and have heard this story many times from my mother
too ~ and after knowing something on this, one tends to naturally go rushing to
this sannathi, worship the acaryar – stand for a few minutes – turn back to see
none is observing trying to hide the melancholic memories thinking of this
great scholar who sacrificed at such an old age, protecting NamPerumal Himself
~ would one ever need a human to save God – that is one of His wishes and
His way of enacting plays testing us over the times.
Our Acaryar hailed as ‘Pillai Lokacharyar’ ~ his
father Vadakku Thiruveethipillai of his great affection for acharyar Nampillai,
named his first son thus. Pillai Ulagariyar was born in
Thiruvarangam in 1205. He and his younger brother Azhagiya Manavala
perumal nayanar grew up in the holy land of srirangam that lies between
Thirukaveri and kollidam. They learnt our sampradhAyam under the
lotus feet of their father. Before writing further – Srivaishnavam owes
scholastic study to him through his magnum opus – Sri Vachana bushanam ~ a very
small sample to know :
வேதார்த்தம் அறுதி
இடுவது ஸ்ம்ருதி இதிஹாச புராணங்களாலே.
Vedas are divided into Poorva bhagam and Uttara bhagam. The
former, also known as the karma bhagam is the samhita portion and the latter
also referred as Vedantam or Jnyana bhagam is the portion of Upanishads. The
Vedantam explains in detail, about the form, nature, qualities and the riches
[vibhuthis] of Paramatma. To those who wish to learn, there could be a Q on
which is to be relied upon – to which Acaryar ordains thus. i.e., one can
place reliance only upon Vedas / dharma sastras of great sages Manu, Parasara
and others, and the Holy ithihasa puranas of Sri Ramayana and Sri
Mahabaratham. Sri Vachana Bhooshanam,
the divine grantha authored by Sri Pillai lokacharyar has its first four sutras
as the introduction which concludes by stating that among the Itihasas and
Puranas, the instruments in deciding the true meanings of Vedanta, the Itihasas
have more validity. Our Acharyar Sri Manavala mamunigal was so deeply
moved by its rich contents.
I am none to write about our sampradhayam – but more on what is
read, a poignant piece of history of the travails at Thiruvarangam.
History is replete with melancholy ~ nothing can be more heart-rending than the
real story of Thiruvaranga Chelvanar and the devotees of Bhooloka Vaikundam
running places to save the idol from Islamic invasion of 14th century.
Thiruvarangan Ula ’ of Sri Venugopalan is a classic – when the
invaders threaten to take over the beautiful holy island of Srirangam – the
residents rise up to fight – they were not born fighters, neither had the
physique, yet they possessed that indomitable will to do everything for
Thiruvarangar. The book chronicles the preparations,
fight with Sultan’s maurading army sacrificing valuable lives, devadasis doing
kainkaryam at Temple killing themselves ~ finally a small group of people
deciding that Srirangam is no longer a safe place [not for themselves] but for
the Perumal – protecting the moolavar by building wall and running away with
the Num Perumal, Uthsava idol.
At a ripe old age – Lokacharya led a small contingent of
faithfulls and took Arangan to safety in a pallakku. Fearing
that they would be
overtaken if they
went along the
road, they avoided the
road-way and proceeded
slowly through jungles and
unfrequented tracts across
the state of
Pudukottai, marching in tough terrains, jungles braving wild animals and
murderous thieves. Near Tiruppattur
they branched off, avoiding the
main road from
Tiruppattur to Madura because
they had heard
of the near
approach of the enemy.
Lokacharya fled for
shelter to Tirukkoshtiyur about six
miles from Tiruppattur
on the modern
road from Tiruppattur to Sivaganga.
It was probably
on that occasion
that the Muhammadan forces
encamped in the
temple precincts at Tiruppattur,
and it was
too dangerous a
proximity for Lokacharya and
his companions to
continue in Tirukkoshtiyur. They therefore
made a further
detour to the east and
getting through a more or
less dense forest
region, they came to a place
called Jyotishkudi where
they lived a
few months.
During this most
challenging times, the bulk
of the citizens of
Srlrangam had been butchered, temple itself
sacked and desecrated,
and all those
citizens that Lokacharya knew
and cared for
had suffered death.
சிறுவயதில் படிக்கும்போதே நெகிழ்வித்த
காவியம் ஸ்ரீவேணுகோபாலனின் *திருவரங்கன் உலா * - உண்மை சம்பவத்தை உள்வாங்கி எழுதப்பட்டது. கோயில் ஒழுகே
தமக்கு அந்த பாதிப்பையும் கதைக்களத்தையும் தந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டு இருந்தார்.
பதினான்காம் நூற்றாண்டில் - டில்லி சுல்தான் உலூக்கான் (இன்னொரு பெயர் முகமது
பின் துக்ளக்) ஒரு பெரிய படையை திரட்டிக்கொண்டு தென்னிந்தியாவை தாக்குகிறான். -பன்னீராயிரவர் இன்னுயிர் ஈந்த, தள்ளாத வயதில் இன்னல்களை சந்தித்த ஆசார்யரின்
தியாக வரலாற்றை தெரிந்து கொண்ட பின்னர் - ஓவ்வொரு முறை திருவரங்கம் செல்ல
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெள்ளை கோபுரம் (ஒரு தேவதாசியின் தியாக சரிதம்),
ஆயிரங்கால் மண்டபம் மணல்வெளி தாண்டி, ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி முன்பு அமைந்துள்ள சந்நிதியில்
உலகாரியரை தரிசிக்கும் போது பக்தி உணர்வுடன் சற்று கண்ணீரும் தளும்புவது இயல்பே.
தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் வெறிகொண்ட படை வீரர்கள் கடந்து வந்த பாதைதோறும் சிவ,
விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள்,
பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை
பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள்
மடிந்துப்போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும். சமயபுரம் என்று
அழைக்கப்படும் கண்ணனூரில் கடுமையான போர் நிகழ்ந்தது.
படையெடுப்பு என்பது ஒரு துயரவியல் நிகழ்வு. அமைதியாய் வேதவாய்
மொழி அந்தணர்களை வாழ்ந்தவர்களுக்கு என்றும் மறக்க இயலாத துயரம். ஆக்கிரமிக்கும்
படை - ஸ்ரீரங்கத்துக் கோவிலின் சொத்துக்களையும், செல்வங்களையும் கவர்ந்து,
திருவரங்கவாழ் மக்களுக்கு சொல்லொணாத்துயர் தருகிறது. அரங்கன் தங்கள் குலதனம் என்று
எப்போதும் வாழும் ஸ்ரீரங்கம்வாசிகள், கோவிலில் அரங்கனிடத்திலே தங்களை அர்ப்பணித்து
கைங்கர்யம் செய்த தேவதாசிகள், செந்தமிழும் வேதமும் சிறப்புற அறிந்த கைங்கர்யபரர்கள்,
அச்சமயத்தில் வாழ்ந்திருந்த வேதாந்தாச்சார் மற்றும் பிள்ளை லோகாச்சாரியார் போன்றோர்
பலர் சேர்ந்து அரங்கனை காப்பாற்ற பாடுபடுகின்றனர்.
அன்றைய திருவரங்கத்தில் சிறந்து விளங்கிய ஸ்ரீவைணவ பெரியவரான பிள்ளை
உலகாரியர் திருக்கோவில் கைங்கர்யத்துக்காக தம்மை அர்ப்பணித்து ப்ரஹ்மச்சாரியாக வாழ்ந்து
வந்தார். அறுவது கடந்த வயதில், திருச்செவிகளில் கடுக்கனும் திருமார்பில் துளவப்பட்டு
நூல்மாலைகளும் அணிந்து தீவட்டிகளின் ஒளி நடுவே அவரே ஒரு தீப ஒளியாக விளங்கினார். திருவரங்கத்து அரசனான அரங்கன் அன்று ஒரு சிறிய பரிவாரத்துடன்
ஒரு பல்லக்கில் அரங்கத்தை விட்டு வெளியேறினான். உற்சவரின்
அதி சௌந்தர்யமான திருமேனியை எடுத்துக் கொண்டு, பிள்ளை லோகாச்சாரியார் சில வீரர்களுடன்,
சுல்தான் வீரர்கள் கண்களில் படாமல் ஸ்ரீரங்கத்திலிருந்து தப்பிக்கிறார்.
Pillai logachar crossing Cauvery - depiction
திருக்காவேரி / கொள்ளிடத்தில் நீர் பிரவாகமாக ஓடியபடியால், ஆற்றில் கொண்டைக்கால்கள்
நட்டு, அங்கே தீவட்டிகள் சொருகி, வளைவான பாதியில் - ஆழத்தின் விலக்கி - மிக திறமையாக
பல்லக்கை ஏளப்பணிக்கொண்டு சென்றார்கள். அவ்வமயம்
பெருகி வந்த கொலையாளர்களை எதிர்கொண்ட வைஷ்ணவ வீரர்களின் உயிர்மூச்சு பஞ்சு கொண்டான்
என்ற வயோதிகர் தலைமையில் வீறு கொண்டு போரிட்டு 12000க்கும் மேற்பட்டோர் சிரங்கள் சரிந்து, தங்கள் இன்னுயிர் ஈந்தனர். அரங்கமாநகர்
முழுவதும், துயரமும், வீழ்ந்த உயிர்களும், மரண ஓலங்களும் நிறைந்தன !!
திருக்கோபுரத்துநாயனாரும், பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடை அந்தரங்க
சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும்,
நாச்சிமார்களையும் மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம்
கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள். காட்டுவழியில் செல்லும் போது
திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்து சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும்
தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார்.
அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய
மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள்.
இவை எல்லாம் நடந்த கொடிய காலத்தில் உலகாரியருக்கு தள்ளாடும் பருவம் - நூற்றை
தாண்டி நாம் நடக்கக் கூட சிந்திக்கும் பிராயம்.
தன் தள்ளாத வயதில், அரங்கன் மீது கொண்ட பிரேமையாலே பல நாட்ககளுகளுக்கு பின்
திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை சென்றடைந்தார்கள்.
வெறி பிடித்த அரக்க மனம் கொண்ட கொள்ளையர்கள் கூட்டம் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்களை கொன்றதாக
கோயில் ஒழுகு உரைக்கிறது. இதைப் “பன்னீராயிரம்
முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று
கோயிலொழுகு குறிப்பிடுகிறது.
ஆனைமலை ஜ்யோதிஷ்குடி - நரசிங்கமங்கலம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கேதான்
நமது ஆச்சர்யச்ரேஷ்டரான 'லோகாச்சார்யரின் திருவரசு உள்ளது. நம்பெருமாள்
திருவரங்கத்தை விட்டு எழுந்தருள வேண்டிய துயரக்காலத்தில், தள்ளாத வயதில் ஒரு சிறு படையை
உருவாக்கி பயணித்த நம் ஆசார்யன் இங்குள்ள காடுகளுக்கு வந்தபோது மிகவும் சிரமத்துக்கு
உள்ளாகி இருக்கிறார். நம்பெருமானை சுமந்து வந்த ஸ்ரீபாதம்தாங்கிகள் பலநாட்களாக
உண்ணாததால் பலம் குறைந்து இங்கே இளைப்பாறி - நோய்வாய்ப்பட்ட பிள்ளை உலகாரியரையும் மற்றும்
சிலரையும் தவிர - குழு மேலே பயணிக்கிறது. நோய்வாய்ப்பட்ட ஆசார்யர் அரங்கனை
காக்கும் புனித பணியில் இங்கேயே திருநாடு எழுந்தருளுகிறார். உலகாரியருக்கு நினைவு மங்கியபோது அவரது சீடர்களான,விளான்ச்சோலை
பிள்ளை, கூர குலோத்தும தாச நாயனார், திருக்கண்ணங்குடி பிள்ளை,திருப்புட்குழி ஜீயர்,
நாலூர்ப்பிள்ளை ஆகியோர் அவர் பக்கலில் இருந்தனர்.
கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் உலகாரியர் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய
சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை
அலங்கரித்து மதுரை ஆனைமலை அருகிலுள்ள ஜ்யோதிஷ்குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளிபடுத்தி
திருவரசு எழுப்பினார்கள். [the thiruvarasu
identification and in its present form owes a lot to many people, most
important among them being Madurai Prof. Dr Aranganathan Swami]
திருவரங்கன், ஸ்ரீரங்கத்திலிருந்து தொடங்கி அழகர் கோவில், மதுரை, எட்டயபுரம்,
ஆழ்வார் திருநகரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, சத்தியமங்கலம் என
சென்று, பின்னர் இருபது ஆண்டுகள் கழித்துக் திருப்பதிக்கு செல்கிறார். உளுக்கான்
படை மெதுவாக வலுவிழக்கிறது. விஜயநகர அரசாங்கம் பலம் பெற்று தென்னிந்தியாவை சுல்தான்
ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றுகிறது. திருவரங்கன், திருப்பதியில் முப்பது ஆண்டுகள்
பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் ஸ்ரீரங்கம் திரும்புகிறார். 50 ஆண்டுகள் திருவரங்கன்
ஊரை விட்டு சென்ற துயர காவியமே '# திருவரங்கன்
உலா'
நம்பெருமாளை காப்பாற்ற பிள்ளை உலகாரியர் தன் இன்னுயிர் ஈந்த
அதே வேளையில் சுவாமி வேதாந்தாசார்யர், நமது மறை நூல்களை காப்பாற்றி மேல்கோட் நோக்கி
பயணித்தார். இந்த காலகட்டத்திலே அவர் சாதித்தி அபிதீ ஸ்தவம் என்ற நூலில்
இருந்து ஒரு ஸ்லோகம்.
அபிதி இஹ யத் ஜுஷாம்
யத் அவதீரிதா நாம் பயம்
பயம் அபய விதாயின
ஜகத் யத் நிதேச ஸ்த்திதா
தத் ஏதத் அதி லங்கித
த்ருஹிண சம்பு சக்ர ஆதிகம்
ரமா சகம் அதீமஹே
கிம் அபி ரங்க தூர்யம் மஹ:
இந்த உலகில் உள்ளவர்கள் எதை பற்றினால் பயம் நீங்குமோ - அது ஸ்ரீரங்க
நாச்சியாருடன் சேர்ந்திருக்கும் ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளே என அருள்கிறார்.
பிள்ளை உலகாரியார் நமக்கு
18 கிரந்தங்களை அருளினார். இவை "அஷ்டாதஸ ரஹஸ்யங்கள்"
என்ற புகழுடன் விளங்குகின்றன. மற்ற நூல்களில் இல்லாத பல உயர்ந்த ரஹஸ்ய பொருள்களைத்
தெரிவிப்பதை, பெரிய பெருமாளுடைய (திருவரங்கம் மூல மூர்த்தி) ஆணையால் தோன்றியதாய்,
பெரிய பெருமாளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதான ""ஸ்ரீ வசன பூஷணம்" என்ற
ஒப்பற்ற நூலுக்கு இரண்டு பூர்வாசார்யர்களின் விளக்க உரைகள் தோன்றியுள்ளன.
அதிலும், நம் ஆசார்யர் மணவாள மாமுனிகள் அருளிய வியாக்யானம் மிகவும் ஆச்சர்யமான
- அரும் பதவுரைகளோடு பொலிகின்றது.
Here is his thaniyan :
"லோகாசார்யாய
குரவே க்ருஷ்ணபாதஸ்ய சூநவே |
சம்சாரபோகி ஸந்தஷ்ட
ஜீவஜீவாதயே நம:||"
Most of our preceptors lived peacefully extolling Emperuman,
they have handed over to us treasure trove of bakthi literature – there was
this tragic period when our Namperumal [Thiruvarangar] was in exile ~ close to
6 decades - and great deal of credit goes to Acharyar Ulagariyar in protecting
the Uthsava idol and ensuring that posterity could worship NumPerumal
happily.
Our Sampradhayam thrives on the glorious literature handed over
to us by our greatly learned Acaryas and the extreme sacrifices of Sri Pillai
Logachar and thousands of nameless others. Next time you visit Srirangam, take
some extra minutes to go inside this sannathi [just before that of Sri
Ramanujar] thinking of his glory and his sacrifice.
Recently was fortunate to visit Madurai and had opportunity to
visit Pillai Logachariyar thiruvarasu at Jyothishkudi. At the foothills of Yanaimalai in a place now
called Y.Othakadai [யா.ஒத்தக்கடை கிராமம்] is the beautiful Yoga
Narasimha swamy temple. At the tail of
the hill, on the other side – is Acaryar thiruvarasu. From Madurai Mattuthavani bus stand – this is
around 12 kms. One can easily locate and
reach Othakadai Narasimhar thirukkovil and from there some mini bus is
available; autos also ply from that place.
If you travel in your own vehicle – follow a map of reaching the other
side of the hill and move towards its foot at Y Kodikulam and as you pass Govt
Kallar Middle school, this place is hardly a km or two.
Location of Thiruvarasu :
from Yanamalai adivaram Sri Yoga Narasimhar thirukkovil, travel on the path
abutting the hills and on the other side, nearer the school, this place can be
located. Address : Acaryar Pillai Ulagariyar thiruvarasu, Y.
Kodikulam Road, Narasingam, Madurai, Tamil Nadu 625104. If you search – X6H5+J76 on Google Maps, it
will show this temple’s location in
Narasingam, Madurai district.
There is a beautiful lotus pond & a Vinayaka temple – then a Sivan temple and a
temple of ‘Malaichamy’ – from here on, footwear is not allowed. Inside the temple of Malaichamy, women are
not allowed. After that nearer the
foothills, there is an ancient temple of Sri Veda Narayana Perumal.. .. few
steps above lies the thiruvarasu.
Sri Veda Narayana Perumal at adivaram - Jyothishkudi
கொடிக்குளம் என்ற இந்த மலை அடிவார கிராமத்தில் - சிறிய அழகான வேதநாராயண பெருமாள் கோவில் உள்ளது. மூலவர் வேதநாராயணன், உபயநாச்சிமார், தாயார் இல்லாமல் தனியாக எழுந்தருளி உள்ளார். வேதநாராயணப் பெருமாள் அருகில், அந்தணராக வந்து தவம் செய்த பிரம்மா ஒரு தலையுடன், பெருமாளை வணங்கியபடி உள்ளார்.
Pillai Ulagariyar at Thiruvarasu
வாழி உலகாசிரியன் வாழி அவன் மன்னுகுலம்
வாழி முடும்பை என்னும் மாநகரம்
வாழி மனம் சூழ்ந்த பேரின்ப மால்மிகு
நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு .
Azhwar Emperumanar Jeeyar
Thiruvadigale saranam
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
Biblio:
1.
Thiruvarangan Ula – Sri
Venugopalan
2.
Sri Pillai Logachariya –
by Robert C Lester, prominent educator and scholar in religious Studies –
University of Colarado.
3.
Koil Ozhugu –
Thiruvarangam
4.
South India and her
Mohammadan Invaders – Dr S Krishnaswamy Aiyyangar, Prof of Indian History and
Archaelogy, University of Madras, Fellow of UM, Member of Royal Asiatic
Society, Fellow of Royal Historical Society, Reader Calcutta University, Prof
& Fellow of Mysore Univedrsity – published by Oxford University Press in
1921.
thamaraikulam and the well at malai adivaram
Below photos of Sri Pillai Logachariyar thiruvarasu