To search this blog

Showing posts with label Alankaram. Show all posts
Showing posts with label Alankaram. Show all posts

Thursday, September 10, 2026

Thursday, September 3, 2026

Thirumylai Sri Madhava Perumal Paniporvai 2020

 

நாம் எம்பெருமானை பல்வேறு வாசனை மலர்கள் அளித்து, மிக அழகான திருவாபரணங்கள் சாற்றி, அற்புதமான பட்டு பீதாம்பரங்கள் சாற்றி - அவரது திருமேனி அழகை அனுபவிக்கின்றோம்.   தங்க அங்கி, வெள்ளி அங்கி, மலர் அலங்காரம்  இவைகள் தரிசித்து இருப்பீர்கள்.   எம்பெருமானுக்கு கபாயம்  எனும் போர்வையும் சாற்றப்படுகிறது.  சில திவ்யதேசங்களில், இரவு அல்லது அதிகாலை புறப்பாடு கண்டருளும்போது, எம்பெருமான்  பனிப்போர்வை போர்த்திக்கொண்டு அருள் பாலிக்கிறார். 



திருமயிலை திரு அரவிந்த மாதவர் பரமபத வாசலுக்கு அதிகாலை புறப்பாடு  கண்டு அருளும்  போது பனிப்போர்வையுடன் எழுந்து அருளிய அற்புத வைபவம். 

Vaikunda Ekadasi – at Thirumylai Sri Madhava Perumal Thirukovil, Sri Aravindha Madhavar   (wearing Paniporvai)  - 25.12.2020

Wednesday, August 26, 2026

Sri Parthasarathi Perumal muthangi sevai 2026

 




Sri Parthasarathi Emperuman muthangi sevai

 Thiruvallikkeni Pavithrothsavam day 5 26082026


ஆழியங் கையனே வாராய். ~ Allikkeni Pavithrothsavam 4 2026

 

Thiruvallikkeni Pavithrothsavam 4 – 2026


 

திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் திருப்பவித்ரோத்சவம் - தினமும்  ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் திருவீதி புறப்பாடும், யாகசாலை, திருவாய்மொழி கோஷ்டி என சிறப்புற பரிமளித்து வருகிறது.  25.08.2026 அன்று இவ்வுத்ஸவத்தில் நான்காம் நாள்.

திருவல்லிக்கேணி   ஸ்ரீபார்த்தசாரதி - ஸ்ரீ கண்ணன் எம்பெருமான், பாரதப்போர் தனிலே பார்த்தனுக்கு சாரத்யம் பண்ணினவன். ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஒரு அற்புதம்.  எம்பெருமான் இடையனாக, பலப்பல கஷ்டங்களுக்கு நடுவே நாளொரு மேனியும் பொழுதொரு  அற்புத லீலைகளுமாய் திருவாய்ப்பாடியிலே வளர்ந்தான்.  யசோதாபிராட்டியும் மற்றைய ஆயரும் கொஞ்சி குலாவி பாலூட்டி சீராட்டி கண்ணனை வளர்த்தனர்.  கண்ணனும் பலராமனும்  “காடுகளூடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி“ என்கிறபடியே ஒன்றிரண்டு காடுகளன்றிக்கே, காடுகள்தோறும் திரள்திரளான கன்றுகளை மேய்த்து ஒரு மத்தகஜம் உலாவுமா போலே சென்று வந்தான்.  அத்தகைய மணிவண்ணன்,   யசோதை தன்கையிலும் தடி வைத்துக்கொண்டிருந்தாளாகையாலே அதனைக் கண்டு அஞ்சி ஓடிப்போய் விடுவனோ வென்று சங்கித்து, பிரானே! நான் அது செய்யகில்லேனென்கிறாள். என்கையில் கோலுள்ளது உண்மைதான், ஆனால் இது கொண்டு காரியங் கொள்ளும்படியான வன்மை எனக்கில்லை காண் என்கிறாள். 







இதோ கலியன் திருமங்கை மன்னனின் வார்த்தைகளில் ஒரு பாசுரம். : -

உந்தம் அடிகள் முனிவர் உன்னைநான் என்கையிற் கோலால்

நொந்திட மோதவுங்கில்லேன்  நுங்கள்தம்   ஆநிரையெல்லாம்

வந்து புகுதரும் போது வானிடைத் தெய்வங்கள் காண

அந்தியம் போதங்கு நில்லேல்!  ஆழியங் கையனே வாராய். 

திருவாழியினால்   அழகு பெற்ற   திருக்கைகளை உடையவனே! எங்கள் கண்ணபிரானே !  நீ செய்கிற தீமைகளைக் கண்டால், உங்கள் பிதாவாகிய நந்தகோபர் சீற்றம் கொள்வார்.  [யசோதையாகிற] நானோ, என் கையிலுள்ள கொம்பினால் உன்னை நோகும்படி அடிக்கவும் மாட்டேன்,  உங்களுடைய பசுக்கூட்டங்களெல்லாம்  காடுகளில் மேய்ந்து திரிந்து,  மீண்டு வந்து ஊர்க்குள்  புகும்போது ஆகாசத்திலுள்ள தேவதைகள் கண் எச்சில் படுமாறு  காணும் மாலைப்பொழுதிலே  நாற்சந்தியிலே நிற்கவேண்டா, என்னருகே வந்திடாய் என யசோதை சீராட்டுகிறாள்.

அத்தகைய அழகிய மணிநிறக் கண்ணபிரான் அற்புதமான திருவபிஷேகம், மலர் மாலைகள், திருவாபரணங்கள், பதக்கங்கள், யக்னோபவீதம்,   திருபவித்ர மாலைகள்  அணிந்து காட்சியளிக்கும் சில படங்கள் இங்கே. 

Here are some photos of Sri Parthasarathi perumal purappadu – Pavithrothsavam day 4 at Thiruvallikkeni on 25.8.2026.  

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
 







 

Sunday, August 23, 2026

Thirupavithrothsavam day 2 2026 - Sri Parthasarathi Perumal

 

Sri Parthasarathi Emperuman, ornately adorned with choicest flowers, silken Pavithram, Yagnopavitham,  golden bracelet, Thirumarbu Lakshmi Pathakkam a precious-stone-studded necklace —  “effulgent” splendor  Thirupavithrothsava Sevai,  Day 2 | 23.8.2026.  [Photographed with Nikon Z6 — background edited].


Tuesday, July 28, 2026

Thakkankulam Sri Varadharajar muthangi Samarpanai

 

Muthangi Samarpanai for Sri Varadharajar @ thakkankulam, Sholinghur

 


புகழ்பெற்ற திவ்யதேசங்களிலே சோழசிம்ஹபுரம் [எனும் ஷோலிங்கர்]  ஒரு அற்புத திவ்யதேசம்.  இது மலைகளில் அமைந்துள்ளது.  கடிகாச்சலம் என பெயர் பெற்ற இந்த திவ்யதேசத்தில் ஒரு நாழிகை வாழ்ந்தாலே எல்லா நன்மையையும் பயக்கும்.  பெரிய மலையில் (சுமார் 1300 படிகள் மேல் ஏறிச்சென்று சேவிக்க வேண்டும்) எம்பெருமான் - சங்கு சக்ரதாரியாக யோக பீடத்தில் யோக ந்ருஸிம்ஹனாக சேவை சாதிக்கின்றார்.  சிறிய மலையில் யோக நிஷ்டையில் சிறிய திருவடியும் ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.  உத்சவர் அக்காரக்கனி எம்பெருமான் (ஸ்ரீ தக்கான்) கொண்டபாளையம் ஊரில் அமர்ந்துள்ளார்.

இவ்வூரில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள  தக்கான் குளம் மிகவும் பிரசித்தி.  ஸ்வாமி முதலியாண்டான் திருவம்சத்தில் அவதரித்த ஸ்வாமி ஸ்ரீ தொட்டையாச்சார்யார் இந்த திருத்தலத்தில் அற்புதமான கைங்கர்யங்கள் செய்து வந்தார். திருக்கச்சி ஸ்ரீதேவப்பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்த இவருக்கு, ஒரு சமயம் - திருக்கச்சி தேவாதி ராஜனே கருட வாகனத்தில் பறந்து வந்து இங்கேயே காட்சியளித்தது சிறப்பான வைபவம்.   

திருக்கச்சி ப்ரஹ்மோத்சவ வைபவத்தில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளிங்கருக்கு எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்த வைபவம் - ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை என்று சிறப்புற  வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார். இக்கோவில் விமானத்திற்குப் புண்ணிய கோடி விமானம் என்று பெயர். மூலவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜப் பெருமாள். பெருமாள் தன் ஒரு கையில் சக்கரமும், மறுகையில் சங்கும், மூன்றாம் கையில் தாமரையும் நான்காம் கையில் கதையுடனும் கருட வாகனத்தில் மூலவராகவே காட்சி அளிக்கிறார். அவசர அவசரமாகத் தனது பக்தன் தொட்டாச்சார்யாருக்குக் காட்சியளிக்க வந்ததால், ஒரு திருவடி கருடன் தோளிலும் மறு திருவடி கருடனின் கையிலும் இருக்கும்படியாகக் காட்சியளிக்கிறார். எம்பெருமானின் வாகனமான பெரிய திருவடி கருடாழ்வார் 'ஸ்ரீமன் நாரணனே' பரம்பொருள் என விளக்கும் ஞான முத்திரையோடு எழுந்தருளியுள்ளார்.  இப்பெருமாளை வணங்கினால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்  





மூலவராக இருக்கின்ற கருடன் உடலில் எட்டு நாகங்களை ஆபரணமாய்க் கொண்டு காட்சியளிக்கிறார். கருடாழ்வாரின் தலைக்கு மேலொரு நாகம், காதிற்கு ஒன்று வீதம் இரு நாகம், இரு கையிலும் வளையலாக இரண்டு, மார்பில் ஒன்று, தொடையில் ஒன்று பாதத்தில் ஒன்று என மொத்தம் எட்டு நாகங்கள். காலையில் கருட வாகனத்துடன் பெருமாளைச் சேவித்தால் சகல விதமான ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்று புராணம் கூறுகிறது.  இத்திருக்கோயில் சோளிங்கர் தக்கான் குளக்கரையில் அமைந்துள்ளது.

இந்த திருக்கோவில் நம் தொட்டையாச்சார் பரம்பரையினரால் சிறப்புற கைங்கர்யங்களுடன் மிளிர்கிறது.  சில ஆண்டுகள் முன்னர் நம் ஆச்சார்யரால்    இந்த திருக்கோவிலில் புனருத்தாரணம் முடிந்து ஸம்ப்ரோக்ஷணம் சிறப்புற நடைபெற்றது.  ஸ்ரீ உ.வே. கோவில் கந்தாடை சண்டமாருதம் தொட்டையாச்சார் சுவாமி வம்சத்தினரே இத்திருக்கோவிலின் பரம்பரை  ஆதீன  அறங்காவலர்கள்.

இந்த திருக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் உற்சவருக்கு அழகான வேலைப்பாடுகள் கொண்ட  முத்தங்கி, இன்று (25.7.2026)   திரு கோபி குடும்பத்தினரால்   நமது ஆச்சார்யர் மூலமாக சமர்ப்பணம் செய்யப்பட்டு, சகஸ்ர தீப அலங்கார சேவை மிக சிறப்புற நடைபெற்றது.  இந்த வைபவத்தின் சில படங்கள் இங்கே







ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !! 

 

adieyn  Srinivasa dhasan. 
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar

 

 

Saturday, July 25, 2026

Sri Parthasarathi Kodai uthsava Sarrumurai 2026 - collage

 

Sri Parthasarathi Perumal Kodai Uthsava Sarrumurai 21072026

Sigathadai kondai during purappadu &

Poocharru kireedam for thirumbukal from Vasantha uthsava bungalow

 

Here is a collage – first of Sri Parthasarathi on His purappadu to Vasantha bungalow (Periya mada veethi – gate aam – kulakkarai – Vasantha bungalow) – at VB – He has Oonjal -  thiruvaradhanam – poocharru – the Second is the photo of His thirumbukal purappadu ?

 


Did you notice distinct changes in sarruppadi (alankaram) ! [during Kodai Uthsavam Sri Parthasarathi Emperuman and Ubayanachimar have purappadu in separate kedayams] 

Though most ardent devotees of Thiruvallikkeni know and notice this distinctly – it is easier to identify and worship through this collage.  The two photographs capture these two sacred moments of the same utsavam.

 

       Kireedam (floral crown): This is the most obvious change. The first has the traditional gem-studded royal crown with a jasmine floral wrapping known as Sigathadai,  with Thura pathakkangal - the second is  an entirely floral kireedam with a central red rose motif.

       Thirumugam (divine face) may look slightly different as karna pathakkangal have changed

       Abhaya Hastam: In the first alankaram the hand is fully gem-studded, while in the second it is golden appearance of hastham with decorative stones in the middle only.  

          Kaumodaki Gadai (mace): The mace in the first is richly jewelled from top to bottom, with hastham too having diamonds – the second is the pure koal (parralar veeya koil kaiyil konda Piran) – the hastham with simple golden kavacham.    

          Thiruvabaranams on Thirumarbu (ornaments on the chest): The first has a far more elaborate arrangement of necklaces, pendants and gem-studded kavacham. The second is intentionally less ornate with a single Navrathna malai.

          in the second the vaitheeka veshti in the manner of panchakavacham is evident

·        The anklets in the leg are different

          Garlands: Although both use jasmine with red and purple bands, the way way they are draped is different.

·        Thiruvadi – thiruthuzhai in the second 

          Overall mood: The first is unmistakably a Raja Alankaram—majestic and jewel-dominant. The second draws the eye first to the pushpa alankaram (flower adornment), making it feel gentler despite being the same deity. 

Those who are closely associated with temple traditions—archakas, kainkaryaparars, regular utsava followers, photographers, or devotees who attend every day's alankaram—tend to notice these nuances immediately. For them, each alankaram tells a story.

The photos evidently portray the subtle differences as both are taken from almost a similar frontal angle, show Emperuman ‘Pathathi Kesam’ [feet to Crown]; in good resolution and details are preserved.  

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
21.07.2026

Tuesday, July 14, 2026

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 


நகரங்களில் பலர் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.  பிரச்னைகள் எனும் பூதம் அவர்கள் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் ஒருவருக்கும் உண்மையாக இல்லை !  ஏன் தனக்கே கூட !!  சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம். வாழ்க்கையின் பரம பலன் :  அதிகார போதை, ஆத்திரம், தீய எண்ணங்கள் இல்லாமல் - நான் சாதாரணன், நான் பக்தன், எனது பணி எம்பெருமானுக்கு, அவர்தம் அடியாருக்கு பணி செய்வதே என்பதை உணர்ந்து வாழ்தலே !




Today 14th July 2026   is Punarvasu  in the month of  Aani  – masa thirunakshathiram of Kulasekara Azhwar, Swami Mudaliandan & Embar…. Today is Amavasai too.. .. ..

When someone asks you – ‘How are you ?’ – what would be the answer – is it simply ‘fine’ or factual ‘not so fine’.  How willing are you to  genuinely listen to people ? How often would you interrupt to say – what I do, how I would have handled this ! or in my personal experience and .. .. .. 

நம்மில் பலர் பல பிரச்னைகளிடையே உழல்கிறோம்.  மனா நிம்மதி இல்லை.  தினசரி வாழ்க்கையில் எப்போதும் பலப்பல  பிரச்னைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ! சரியான இடமில்லை, நல்ல உடைகளில்லை  (அதாவது எவ்வளவு இருந்தும் போதும் என்ற மனதில்லை); அலுவலக வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை,  மற்றவர்களுக்கு எல்லாமே எளிதில் நடப்பதாகவும் தமக்கு சாதாரண விஷயங்கள் கூட பல இடர்பாடுகள் நேர்வதாகவும் உண்மையாகவோ மனத்திலோ சிந்தனை;  குடும்பங்களில்  பிரச்னை;  பணமுடை; போதாக்குறைக்கு கொரோனா வேறு உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது.   ஒவ்வொரு கால கட்டத்திலும் விதவிதமான பிரச்னைகள்.  அலைகள் எல்லாம் ஓர் நாள் ஓயும். நாம் நிம்மதியாக வேலைகளை துறந்து ஓய்வாக அமைதியான வாழ்க்கை 60 களில் வாழலாம் என நினைக்கிறோம்.  சும்மா இருப்பதும் பெரும் சுமையாகிறது ! நமக்கு வயதாகும் காலகட்டத்தில் புதுப்புது பிரச்னைகள் !! 

Glory, or difficulty – nothing is permanent.  In this World, there have been mighty Kings –  not exactly those  who ruled the entire Universe but many lesser mortals with valour who ruled over a piece of land and were proud -  history has it that they have fallen biting the dust – that what can lesser humans who possess broken pots as their asset dream of …. Alwar directs us to fall at the feet of Lord Sriman Narayana  .. ..

We think, speak and surround ourselves with Self !!  .. .. .. the  ego (Latin for "I") acts according to the reality principle; i.e., it seeks to please the id's drive in realistic ways that, in the long term, bring benefit, rather than grief.  At the same time, Freud concedes that as the ego "attempts to mediate between id and reality, it is often obliged to cloak the unconscious commands of the id with its own preconscious rationalizations, to conceal the id's conflicts with reality, to profess...to be taking notice of reality even when the id has remained rigid and unyielding." The reality principle that operates the ego is a regulating mechanism that enables the individual to delay gratifying immediate needs and function effectively in the real world.  

மனித இனத்தை, எண்ணங்களும், கவலைகளும் - என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும், எவ்வளவு நாட்கள் இவை தொடருமோ போன்ற மனப்பிராந்திகளும் கலக்குகின்றன.  இது போன்ற ஸ்திரமற்ற கலங்கிய நிலைக்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். "அகங்கார மமகாரங்கள்" கவுரவர்கள் அழிவுக்கு காரணமானது ! எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் நான், எனது என்ற  மனநிலையை விலக்க கீதோபதேசம் செய்தார்.  - அது என்ன "அஹங்காரமமகாரம்" -  நான்’ என்ற முனைப்பு அகங்காரம் - 'எனது' என்ற 'பற்று' மமகாரம்.

மமதை என்ற சொல்லுக்கு செருக்கு, ஆணவம், திமிர் போன்ற பொருள்கள் கொள்ளலாம்.  self-conceit, vanity, haughtiness.  வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.

அஹங்காரம் என்பது ஏதோ துர்யோதனனிடம் மட்டுமே இருந்த கெட்ட குணமல்ல.  நமக்கு நம் குணங்கள் அழகானவையாக, நம் மனதில் படலாம் !  ஆனால் நாம் ஒவ்வொருவரிடமும் துர்யோதனாதிகளின் செருக்கு ஆழ்ந்த மனத்தில்  அருவறுப்பான கரையாக படர்ந்துள்ளது.  நமக்கு மற்றவர்கள் பலர் திமிர் பிடித்து நடந்து கொள்வதாக படுகிறது !  .. .. ஆனால்  நம்மிடம் எவ்வளவு பேர் அணுகி தங்களை கஷ்டங்களை, நம் குறைகளை சொல்லிவிட முடியும்.   நாம் நமது அருவறுப்பான பகுதிகளை பார்க்க விரும்புவதில்லை..  நான் என்னும் சொல்லுக்கு இலக்காக இருக்கிற மனிதன் தன்னை மற்றவர்களிடத்திருந்து பிரித்து வைத்துத் தன்னை உயர்ந்தவனாகக் கருதினால் அது அஹங்காரம். நான் என்னும் சொல்லை உபயோகப்படுத்துவதற்கிடையில் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்து வைத்துத் தனிப்பெருமை நாடாதிருந்து பழகினால் அது அஹங்காரமற்ற நிலை.

மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னை தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அகங்காரமும் மமகாரமும் இருப்பதை அவர்களால் உணர முடியாது. அடுத்தவர் உணர்த்தினால்தான் உண்டு.

அஹங்காரம்  மமகாரம்  ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம்.  தன்னை பற்றி என்றென்றும் நினைக்காமல் எம்பெருமானையே நினைத்து உள்கசிந்த  ஸ்வாமி நம்மாழ்வாரே - நெடுநாளாக  அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதாபிக்கிறார். நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் கிடையாது என்றபடி அவர் உரைக்கும் திருவாய்மொழி பாசுரம் இங்கே :

யானேயென்னை அறியகிலாதே,

யானேயென் தனதே என்று   இருந்தேன்,

யானேநீ  யென்னுடைமையும்  நீயே,

வானேயேத்தும்  எம் வானவரேறே.

விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள நித்யஸூரிநாதனான எம்பெருமானே!  இதுகாறும் என்னை  - நான் எப்படி உனக்கு அடிமைப்பட்டவன், எவ்வாறு எல்லாம் உன் அருளாலே நடைபெறுகிறது என்பதையெல்லாம் அறியமாட்டாமல் 'யானே என் தனதே'  என்று அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து,  அவற்றை தவிர்த்து  நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில் -   எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் என்பதே, என தெள்ளத்தெளிவாக  உரைக்கின்றார் சுவாமி  நம்மாழ்வார்.

சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக ஒப்பனை செய்து கொண்டார்கள் என, மதுரைக்காஞ்சி நூல் கூறுகின்றது. கூந்தல் மீது அணிகின்ற பொருட்களை, தலை அணிகலன்கள் என்கின்றனர். இவற்றில் மகுடம் எனும் அணிகலனும் ஒன்றாகும்.  நவீன கால இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை  செய்து கொள்கிறார்கள்.  கூந்தலை அலங்கரிக்கும் பாரம்பரிய அணிகலன்களை, சிறப்பு நாட்களில் அணிவதை, இன்றும் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  

இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன்  ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வர சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். 

சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை சில, குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள்.   இன்று திருவல்லிக்கேணி எம்பெருமானின் விசேஷ சிகை அலங்காரத்தையும், அதில் சூட்டிக்கொண்ட பூக்களையும், ஆபரணங்களையும் இங்கே கண்டு இன்புறலாம்.

 

தெளிவான மனா நிலையுடன், உடல் உபாதைகள் வியாதிகள் இல்லாமல் - நல்ல மனது, உடல் நிலை ஆரோக்கியத்துடன், எம்பெருமானுக்கு பணி செய்து கிடத்தலே அற்புத வாழ்க்கையாம்! ஏனைய பொருட்செல்வங்கள் செல்வங்களல்ல!!

Here are some photos of Sri Parthasarathi Emperuman taken during Aani Amavasai purappadu today.   Falling at the feet of Emperuman praying to remove all my ignorance and bless me with a stable mind that is attached to His lotus feet and encourages in doing kainkaryam to Emperuman and His followers

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14th July 2026.
  












Tuesday, June 30, 2026

Yoga Narasimha !! - “Narasimha-vapuḥ Śrīman Keshava Puruṣottama”

 

யோக நரசிம்மரே, எனக்கு பயமற்ற நிலையும் மன அமைதியும் அருளும்.

“Narasimha-vapu Śrīman Keshava Puruottama”

 


“Oh Lord Narasimha, O resplendent Keshava, O Supreme Lord.”  The Narasimha-vapu invocation is  more than name the deity; it highlights Narasimha as Sriman Narayanan’s fierce, protective form and frames the prayer as a plea for refuge, courage, and victory over obstacles.  The phrase is powerful as it combines a specific avatara name with a theological title: “vapu” points to the divine form, while “Śrīman Keshava Puruottama” anchors Narasimha within the full identity of Vishnu as the auspicious supreme person. This makes the line both a praise of the avatara and an affirmation of Vishnu’s total supremacy.  

           Yoga Narasimha signifies the same divine Narasimha power, but in a calm, meditative form: strength held in stillness, protection joined with inner discipline, and ferocity transformed into composure. This yogic posture  is associated with serenity, meditation, and the power to overcome inner obstacles as well as outer threats  

On day 5 of Aani Brahmothsavam [29.6.2026], Sri Thelliya Singar gave darshan as Yoga Narasimha and blessed devotees.

Thursday, June 25, 2026

Sri Azhagiya Singar - Pullankuzhal kannan sarruppadi 2026

 

Of the many musical instruments -  Flute is divine.  The greatest of all musicians is of course the divine Flautist Lord Krishna – who mesmerized everyone as He grew up in Gokul.



At Thiruvallikkeni – Sri Thelliya Singan as the divine flautist – Pathi ula to Punnai kilai vahanam this evening [25.6.2026] Aani Brahmothsavam 2026