To search this blog

Tuesday, July 14, 2026

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 

Aani Amavasai 2026 - "அகங்கார மமகாரங்கள்" - Ornaments worn on head !!!

 


நகரங்களில் பலர் நரக வாழ்க்கை வாழ்கின்றனர்.  பிரச்னைகள் எனும் பூதம் அவர்கள் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது.  அவர்கள் ஒருவருக்கும் உண்மையாக இல்லை !  ஏன் தனக்கே கூட !!  சரித்திரம் பலப்பல சாம்ராஜ்யங்களையும், நதிகளின் தீரத்திலே நகரகங்களையும் கண்டுள்ளது. நம் போன்ற ஸ்ரீவைணவர்களுக்கு பல்வேறு க்ஷேத்திரங்களுக்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை சேவித்து, கைங்கர்யங்கள் செய்து, அவன் புகழ் பாடி திளைப்பதே பேரின்பம். வாழ்க்கையின் பரம பலன் :  அதிகார போதை, ஆத்திரம், தீய எண்ணங்கள் இல்லாமல் - நான் சாதாரணன், நான் பக்தன், எனது பணி எம்பெருமானுக்கு, அவர்தம் அடியாருக்கு பணி செய்வதே என்பதை உணர்ந்து வாழ்தலே !




Today 14th July 2026   is Punarvasu  in the month of  Aani  – masa thirunakshathiram of Kulasekara Azhwar, Swami Mudaliandan & Embar…. Today is Amavasai too.. .. ..

When someone asks you – ‘How are you ?’ – what would be the answer – is it simply ‘fine’ or factual ‘not so fine’.  How willing are you to  genuinely listen to people ? How often would you interrupt to say – what I do, how I would have handled this ! or in my personal experience and .. .. .. 

நம்மில் பலர் பல பிரச்னைகளிடையே உழல்கிறோம்.  மனா நிம்மதி இல்லை.  தினசரி வாழ்க்கையில் எப்போதும் பலப்பல  பிரச்னைகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும் நிலை ! சரியான இடமில்லை, நல்ல உடைகளில்லை  (அதாவது எவ்வளவு இருந்தும் போதும் என்ற மனதில்லை); அலுவலக வேலையில் மேலதிகாரிகளுடன் பிரச்னை, கீழ் பணிபுரிபவர்களுடன் பிரச்னை, சக  பணியாளர்களுடன் பிரச்னை,  மற்றவர்களுக்கு எல்லாமே எளிதில் நடப்பதாகவும் தமக்கு சாதாரண விஷயங்கள் கூட பல இடர்பாடுகள் நேர்வதாகவும் உண்மையாகவோ மனத்திலோ சிந்தனை;  குடும்பங்களில்  பிரச்னை;  பணமுடை; போதாக்குறைக்கு கொரோனா வேறு உலகத்தையே ஆட்டிப்படைத்து விட்டது.   ஒவ்வொரு கால கட்டத்திலும் விதவிதமான பிரச்னைகள்.  அலைகள் எல்லாம் ஓர் நாள் ஓயும். நாம் நிம்மதியாக வேலைகளை துறந்து ஓய்வாக அமைதியான வாழ்க்கை 60 களில் வாழலாம் என நினைக்கிறோம்.  சும்மா இருப்பதும் பெரும் சுமையாகிறது ! நமக்கு வயதாகும் காலகட்டத்தில் புதுப்புது பிரச்னைகள் !! 

Glory, or difficulty – nothing is permanent.  In this World, there have been mighty Kings –  not exactly those  who ruled the entire Universe but many lesser mortals with valour who ruled over a piece of land and were proud -  history has it that they have fallen biting the dust – that what can lesser humans who possess broken pots as their asset dream of …. Alwar directs us to fall at the feet of Lord Sriman Narayana  .. ..

We think, speak and surround ourselves with Self !!  .. .. .. the  ego (Latin for "I") acts according to the reality principle; i.e., it seeks to please the id's drive in realistic ways that, in the long term, bring benefit, rather than grief.  At the same time, Freud concedes that as the ego "attempts to mediate between id and reality, it is often obliged to cloak the unconscious commands of the id with its own preconscious rationalizations, to conceal the id's conflicts with reality, to profess...to be taking notice of reality even when the id has remained rigid and unyielding." The reality principle that operates the ego is a regulating mechanism that enables the individual to delay gratifying immediate needs and function effectively in the real world.  

மனித இனத்தை, எண்ணங்களும், கவலைகளும் - என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளும், எவ்வளவு நாட்கள் இவை தொடருமோ போன்ற மனப்பிராந்திகளும் கலக்குகின்றன.  இது போன்ற ஸ்திரமற்ற கலங்கிய நிலைக்கு முக்கிய காரணம்   மனிதரிடையே காணப்படும் அகவிருளான கோபம் பொறாமை பொறுமையின்மை பேராசை சுயநலப் போக்கு அகங்காரம் மமகாரம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். "அகங்கார மமகாரங்கள்" கவுரவர்கள் அழிவுக்கு காரணமானது ! எம்பெருமான் ஸ்ரீகிருஷ்ணர் நான், எனது என்ற  மனநிலையை விலக்க கீதோபதேசம் செய்தார்.  - அது என்ன "அஹங்காரமமகாரம்" -  நான்’ என்ற முனைப்பு அகங்காரம் - 'எனது' என்ற 'பற்று' மமகாரம்.

மமதை என்ற சொல்லுக்கு செருக்கு, ஆணவம், திமிர் போன்ற பொருள்கள் கொள்ளலாம்.  self-conceit, vanity, haughtiness.  வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற வேகம், தோல்வி வந்து விடுமோ என்கிற பயம், அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை, என்ன நேர்ந்தாலும் அதிருப்தி, அடுத்தவர்கள் நிலை பார்த்து பொறாமை முதலான தன்மைகள் மமகாரத்தினால் உருவாக்கப்படுபவை.

அஹங்காரம் என்பது ஏதோ துர்யோதனனிடம் மட்டுமே இருந்த கெட்ட குணமல்ல.  நமக்கு நம் குணங்கள் அழகானவையாக, நம் மனதில் படலாம் !  ஆனால் நாம் ஒவ்வொருவரிடமும் துர்யோதனாதிகளின் செருக்கு ஆழ்ந்த மனத்தில்  அருவறுப்பான கரையாக படர்ந்துள்ளது.  நமக்கு மற்றவர்கள் பலர் திமிர் பிடித்து நடந்து கொள்வதாக படுகிறது !  .. .. ஆனால்  நம்மிடம் எவ்வளவு பேர் அணுகி தங்களை கஷ்டங்களை, நம் குறைகளை சொல்லிவிட முடியும்.   நாம் நமது அருவறுப்பான பகுதிகளை பார்க்க விரும்புவதில்லை..  நான் என்னும் சொல்லுக்கு இலக்காக இருக்கிற மனிதன் தன்னை மற்றவர்களிடத்திருந்து பிரித்து வைத்துத் தன்னை உயர்ந்தவனாகக் கருதினால் அது அஹங்காரம். நான் என்னும் சொல்லை உபயோகப்படுத்துவதற்கிடையில் தன்னை மற்ற உயிர்களோடு இணைத்து வைத்துத் தனிப்பெருமை நாடாதிருந்து பழகினால் அது அஹங்காரமற்ற நிலை.

மமகாரம் என்பது என் வீடு, என் சொத்து, என் சுகம், என் கல்வி, என் உடைமை என்பனவாம். அகங்காரம் என்பது நான் செய்தேன், நான் சாதித்தேன், என்னை தவிர வேறு யாராலும் முடியாது போன்ற எண்ணத்தின் வெளிப்பாடாகும். இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் அகங்காரமும் மமகாரமும் இருப்பதை அவர்களால் உணர முடியாது. அடுத்தவர் உணர்த்தினால்தான் உண்டு.

அஹங்காரம்  மமகாரம்  ஆகிய இவ்விரண்டும் அக்ஞானத்தினின்று உதிப்பவைகளாம்.  தன்னை பற்றி என்றென்றும் நினைக்காமல் எம்பெருமானையே நினைத்து உள்கசிந்த  ஸ்வாமி நம்மாழ்வாரே - நெடுநாளாக  அஹங்காரமமகாரங்களால் பாழாய்ப் போனேனே, என்று இழந்த நாளைக்கு அநுதாபிக்கிறார். நான் உனக்கு அடிமைப்பட்டவன்; எனக்கென்று தனியே ஒரு பொருள் கிடையாது என்றபடி அவர் உரைக்கும் திருவாய்மொழி பாசுரம் இங்கே :

யானேயென்னை அறியகிலாதே,

யானேயென் தனதே என்று   இருந்தேன்,

யானேநீ  யென்னுடைமையும்  நீயே,

வானேயேத்தும்  எம் வானவரேறே.

விண்ணுலகம் முழுவதும் துதிக்குமாறு உள்ள நித்யஸூரிநாதனான எம்பெருமானே!  இதுகாறும் என்னை  - நான் எப்படி உனக்கு அடிமைப்பட்டவன், எவ்வாறு எல்லாம் உன் அருளாலே நடைபெறுகிறது என்பதையெல்லாம் அறியமாட்டாமல் 'யானே என் தனதே'  என்று அஹங்கார மமகாரங்கள் கொண்டிருந்தேன்.  வாழ்க்கையின் உண்மையை உணர்ந்து,  அவற்றை தவிர்த்து  நான் அநுஸந்திக்கும் வகை யாதெனில் -   எனது உடைமைகளும் நீயிட்ட வழக்காயிருக்கும் என்பதே, என தெள்ளத்தெளிவாக  உரைக்கின்றார் சுவாமி  நம்மாழ்வார்.

சங்க கால தமிழ் பெண்கள் தங்கள் கூந்தலை குழல், அளகம், கொண்டை, பணிச்சை, துஞ்சை என ஐந்து வகையாக ஒப்பனை செய்து கொண்டார்கள் என, மதுரைக்காஞ்சி நூல் கூறுகின்றது. கூந்தல் மீது அணிகின்ற பொருட்களை, தலை அணிகலன்கள் என்கின்றனர். இவற்றில் மகுடம் எனும் அணிகலனும் ஒன்றாகும்.  நவீன கால இளம் பெண்கள், நவீன காலத்துக்கு ஏற்றதுபோல டிரெண்டியாகவும், எளிமையாகவும் இருக்கும் கூந்தல் அணிகலன்களை  செய்து கொள்கிறார்கள்.  கூந்தலை அலங்கரிக்கும் பாரம்பரிய அணிகலன்களை, சிறப்பு நாட்களில் அணிவதை, இன்றும் பல பெண்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.  

இலக்கியங்களில் பெண்களின் கூந்தல் மயில்தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. பூங்குழலி, வண்டார்குழலி என்றெல்லாம் கூந்தலை மையப்படுத்திப் பெண்களுக்குப் பெயர்கள் அமைந்துள்ளன. சிவபுராணத்திலும் சிவனின் ஜடாமுடி பற்றிய தகவல்கள் வருகின்றன. ஜடாதரன் என்றே அவர் அழைக்கப்படுகிறார். பகீரதன்  ஆகாச கங்கையை பூமிக்குக் கொண்டு வர சிவபெருமான் தன் ஜடை முடியில் கங்கையைத் தாங்குகிறார். 

சூடாமணி, திருகுப்பூ, சந்திரப் பிரபை, சூரியப் பிரபை, ராக்கொடி போன்றவை சில, குற்றாலக் குறவஞ்சியில் பெண்கள் அணியும் தலை அணிகலன்கள்.   இன்று திருவல்லிக்கேணி எம்பெருமானின் விசேஷ சிகை அலங்காரத்தையும், அதில் சூட்டிக்கொண்ட பூக்களையும், ஆபரணங்களையும் இங்கே கண்டு இன்புறலாம்.

 

தெளிவான மனா நிலையுடன், உடல் உபாதைகள் வியாதிகள் இல்லாமல் - நல்ல மனது, உடல் நிலை ஆரோக்கியத்துடன், எம்பெருமானுக்கு பணி செய்து கிடத்தலே அற்புத வாழ்க்கையாம்! ஏனைய பொருட்செல்வங்கள் செல்வங்களல்ல!!

Here are some photos of Sri Parthasarathi Emperuman taken during Aani Amavasai purappadu today.   Falling at the feet of Emperuman praying to remove all my ignorance and bless me with a stable mind that is attached to His lotus feet and encourages in doing kainkaryam to Emperuman and His followers

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
14th July 2026.
  












Thiruchanur Sri Sundararajar Sesha vahanam 2017

 

At Alarmelmangapuram (Thiruchanur) Temple of Sri Padmavathi Thayar,

there is separate sannathi for Sundara Rajar



- fortunate to have darshan of Sri Sundaraja Perumal in Sesha Vahanam

taken  in 2017

Monday, July 13, 2026

Sri Ponnadikkal Jeeyar [Onnana Jeeyar] at Thiruvallikkeni

 

Sri Ponnadikkal Jeeyar   @ Thiruvallikkeni Vanamamalai Mutt  

 

திருவரமங்கை என்னும் வானமாமலை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான ஒரு திவ்யதேசம்.   இத்தலம் திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.   நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி என்றெல்லாம் அழைக்கப்படும் இத்தலம் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. 

 

 


What you see above, next to Thiruvadi koil (Sri Anjaneyar temple) in East Kulakkarai theru  is Triplicane branch of Sri Vanamamalai Mutt, the supreme fountain head for Thennacharya sampradhayam following our glorious Acaryar Swami Manavala Mamunigal.  The mutt in fact was eatablished by  PonnadikkAl jIyar under the orders of maNavALa mAmunigaL.  PonnadikkAl jIyar was the first and foremost disciple.  Srivainava sanyasis are Ubhaya Vedanthacharyas and paramahamsa parivrajaka Acaryas. Ubhaya vEdhAnthAchArya means one who has mastered both samskritha vEdham and dhrAvida vEdham with their in-depth meanings. Paramahamsa means one who is like a swan which is pure and the one which can distinguish between sAram (essence) and asAram (residue/insignficant). Parivrajaka means one who is a mendicant - travelling preacher.

 


Our Vanamamalai mutt is also known as thOthAdhri mutt in uththara bhAratham (North India). In addition to the branches here in dhakshiNa bhAratham, there are many thOthAdhri mutts in uththara bhAratham (including nEpAL).    

Sri Vanamamalai Periya Ramanuja Jeer Swami alias Ponnadikkal Jeer established this mutt. Swami wrote viyakiyanam for Thiruppavai; composed thaniyan on Andal, composed   17 songs in praise of Manavala Maamunigal.  Born in 1447 as Azhagiya Varadhar, he became to be famously known as PonnadikkAl jIyar. He is also known as vAnamAmalai jIyar, vAnAdhri yOgI, rAmAnuja jIyar, rAmAnuja muni, etc. He was the first and the prime disciple of our Swami azhagiya maNavALa mAmunigaL. 

Azhagiya varadhar became the first disciple of azhagiya maNavALa mAumingaL when mAmunigaL was a gruhasthar. Azhagiya varadhar immediately accepted sannyAsAshramam and stayed with mAmunigaL most of his life. PonnadikkAl means the one who laid the foundation of mAmunigaL’s sishya sampath. He established many thOthAdhri mutts all over the bhAratha dhEsam and propagated our sampradhAyam in many regions. When mAmunigaL goes for thiumalai yAthrai for the first time, periya kELvi appan jIyar sees a dream, where a gruhasthar is lying down and a sannyAsi is at his lotus feet. jIyar asks the people who are there about these two personalities and they say one is “eettu perukkar” azhagiya maNavALa perumAL nAyanAr and the other is ponnadikkAl jIyar as called by nAyanAr himself. 

 

Yesterday Thirumylai Sri Adhi Kesava Perumal vana bhojana uthsavam was celebrated at the Mutt.  Here is a photo of Sri Ponnadikkal Jeeyar at Thiruvallikkeni Vanamamalai Mutt.  



பொன்னடிக்கால் ஜீயரின் தனியன்:

ரம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர பாதரேகா மயம் ஸதா

ததா யத்தாத்ம ஸத்தாதிம் ராமானுஜ முநிம் பஜே

 

 ~adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar.
13.7.2026

PS : Acknowledge Sri Thothadri Sarathi swami .. https://guruparamparai.wordpress.com for the details of Jiyar.

 

Holy Pashupathinath Temple, Kathmandu, Nepal

 

The holy  Pasupathinath Temple, dedicated to Lord Shiva  in  Kathmandu,  Nepal.


 

"Pashupatinath—the eternal abode of Lord Pashupati, where centuries of devotion, art and architecture converge on the sacred banks of the Bagmati. Every stone here echoes timeless faith." "Some temples impress by their grandeur; Pashupatinath humbles by its sanctity. Amid the bustle of Kathmandu, one steps into a realm where time slows, bells resonate, and faith transcends borders."

Sri Thelliya Singar Thiruther 2017

 

Thiruvallikkeni Aani Brahmothsavam – Sri Thelliya Singar thiruther 2017

Rajagopuram, siriya thiruther with Azhagiya Singar & periya ther aligned


Sunday, July 12, 2026

Thirumylai Sri Adhi Kesavar Vana bhojanam 2026

 

Sri Adhi Kesava Perumal vanabhojanam 2026

at Thiruvallikkeni Sri Vanamamalai Mutt

: https://www.youtube.com/watch?v=SRafsH06fFU




Sree Varamangai aka Vanamamalai divyadesam corridors

 

திருவரமங்கை என்னும் வானமாமலை, நாங்குநேரி, தோத்தாத்ரி, உரோமசேத்திரம், ஸ்ரீவரமங்கை (சீரிவரமங்கல நகர்), நாகணை சேரி என்றெல்லாம் அழைக்கப்படும்  108 வைணவத் திருத்தலங்களில் முக்கியமான ஒரு திவ்யதேசம். 

 


Corridors of Vanamamalai divyadesam 2018 pic by Sri Sundarakrishnan

Saturday, July 11, 2026

திருமயிலை ஸ்ரீ பேயாழ்வார் திருவல்லிக்கேணி மங்களாசாசனம் 17-10-2025.

 

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் என்றுரைத்த ஸ்ரீ பேயாழ்வார்   

திருமயிலை ஸ்ரீ பேயாழ்வார் திருவல்லிக்கேணி மங்களாசாசனம் 17-10-2025.

Sri Sadagopam accompanied by Senai Muthaliyar – mariyathai for Azhwar.

:  https://youtu.be/vXd3lhXdMUg



beau drawing at Sri Ekambareswarar Thirukkovil, Kanchipuram

 


Important pre-script :  The land of Maha Bharat is a Punniya bhoomi Karma bhoomi, land of Temples land where Azhwars & Nayanmars precepted Bakthi literature.  At Temples, we worship the Supreme Lord, marvel the architectural wonders of Pillars, top tiers, Gopurams, Garba gruha and more, we see beautiful decoration of fragrant flowers, ornate ornaments, devotional chantings and more  

Yet this is a post on a transient black board we see some messages of Temple festivals written on Notice Board, some neat, some clumsy anyway they serve a very limited purpose and stand for a short time then they would be erased physically and from the memories of all !! 

This is a story of a Notice Board drawing by Sree Ramana Kalaikoodam, Kanchipuram, that was so impressive I had photographed this in Apr 2012 suddenly it surfaced making it the subject matter of this post. 

Couple of decades ago, there lived in Triplicane a great Sivaji fan,  Painter Raghavan, who would beautifully draw / write on the black boards signage in Street, at Vanamamalai Mutt, for SYMA at TP Koil II lane – a good artist, his works were appreciated but he lived and died in abject poverty !!

 ###########################

 

கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால்

விரவாடும் பெருமானை, விடையேறும் வித்தகனை

அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி

இரவாடும் பெருமானை  என்மனத்தே வைத்தேனே.   

 

பரதகண்டம் எங்கும் புகழ் பரவியிருந்த காஞ்சி ஏகாம்பரேசுவரர் கோவிலில் உச்சிக்கால பூஜை நடந்து கொண்டிருந்தது. அதற்கு அறிகுறியான ஆலாசிய மணியின் ஓங்கார நாதமும் பேரிகை முழக்கமும் கேட்டுக் கொண்டிருந்தன. கோயிலுக்கு வெளியே கோபுர வாசலிலும் சந்நிதி வீதியிலும் கணக்கற்ற ஜனங்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந்தார்கள். பல்லவ சக்கரவர்த்தி பரிவார சகிதமாக ஆலயத்துக்கு வந்திருந்ததுதான் அவ்விதம் ஜனக்கூட்டம் திரண்டிருந்ததற்குக் காரணமாகும். ஆலயத்துக்குள்ளே ஏகாம்பரநாதரின் சந்நிதி என்றுமில்லாத சோபையுடன் அன்று விளங்கிற்று. வெள்ளிக் குத்துவிளக்குகளில் ஏற்றியிருந்த பல தீபங்களின் ஒளியில், சந்நிதியில் நின்ற இராஜ வம்சத்தினாரின் மணிமகுடங்களும் ஆபரணங்களும் ஜாஜ்வல்யமாய்ச் சுடர் விட்டு பிரகாசித்தன. சந்நிதியில் ஒரு பக்கத்தில் இராஜ குலத்து ஆடவர்களும், மற்றொரு பக்கத்தில் அந்தப்புரத்து மாதர்களும் நின்றார்கள்.   

எல்லாருக்கும் முதன்மையாகப் பல்லவ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மர், அறுநூறு வருஷமாக அவருடைய மூதாதையர் அணிந்த கிரீடத்தைத் தம் சிரசில் அணிந்து, கம்பீரமாக நின்றார். கரங்களைக் கூப்பி இறைவனை இறைஞ்சி வழிபட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அவருடைய தோற்றத்திலே பரம்பரையான இராஜகுலத்தின் பெருமிதம் காணப்பட்டது.     

டண் டாண், டண் டாண் என்று ஆலாசிய மணி அவசர அவசரமாக அடித்தது. தம் தாம், தம் தாம் என்று பேரிகை பரபரப்புடன் முழங்கிற்று. சங்கங்கள், எக்காளங்கள், மேளங்கள் தாளங்கள், எல்லாமாகச் சேர்ந்து சப்தித்து ஆலயத்தின் விசாலமான மண்டபங்களில் நாலாபுறமும் கிளம்பிய எதிரொலியுடன் சேர்ந்து மோதிய போது, நாதக் கடல் பொங்கி வந்து அந்தக் கோயிலையே மூழ்கடித்தது போன்ற உணர்ச்சி அனைவருக்கும் உண்டாயிற்று. ஏகாம்பரேசுவரருக்கு தீபாராதனை நடந்ததை முன்னிட்டு இவ்வளவு ஆரவார ஒலிகளும் எழுந்தன. அந்த ஒலிகளுக்கு மத்தியில் பரவசமடைந்த பக்தர்களின் தழுதழுத்த குரல்களிலிருந்து கிளம்பிய "நமப் பார்வதீ பதயே!", "ஹரஹர மகா தேவா!" முதலிய கோஷங்களும் ஏற்பட்டன.   சக்கரவர்த்தியின் அருகில் வந்து நின்று, சிவாச்சாரியார் உரத்த குரலில் கூறினார்; "காலனைக் காலால் உதைத்தவரும், சிரித்துப் புரமெரித்தவரும், கஜமுகாசுரனைக் கிழித்து அவன் தோலை உடுத்தவரும், நெற்றிக் கண்ணில் நெருப்பை உடையவருமான திரிபுராந்தகரின் அருளால், பல்லவேந்திரருக்குப் பூரண வெற்றி உண்டாகட்டும்! புலிகேசியை வதம் செய்து வாதாபியை அழித்து வெற்றி வீரராய்த் திரும்புக! ஜய விஜயீபவா!"  

 ***************************

The foregoing is from the novel ‘Sivakamiyin Sabatham’ of Kalki.   கல்கி எழுதிய "சிவகாமியின் சபதம்" நாவலில் காஞ்சி (ஏகாம்பரேஸ்வரர்) கோயில், அதன் சுற்றுப்புறம் மற்றும் கோயில் நிகழ்வுகள் முக்கிய பின்னணியாகவும் சம்பவங்களைக் கடத்தும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாவல் பல்லவர் கால சரித்திர சூழ்நிலையைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது; கதையின் பல முக்கிய அரங்குகள் காஞ்சி நகரும்தான், அதிலும் ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) சன்னிதி சேர்த்து வர்க்கப்படுத்தப்பட்டுள்ளன. 

சிவகாமியின் சபதம்/சிதைந்த கனவு:  நான்காம் அத்தியாயம்   - ஏகாம்பரர் சந்நிதி 

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில்   சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் நிலத்தைக் (பிருத்வி) குறிக்கும்   ஆலயம். 172 அடி உயரமுள்ள திருக்கச்சி ஏகம்பம் - ஏகாம்பரநாதர் திருக்கோயில் ஒன்பது நிலை ராஜகோபுரம்   மன்னர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது   சுமார் 40 ஏக்கர்  பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில்  பார்வதி தேவி சிவனை மணக்க மண்ணால் சிவலிங்கம் செய்து வழிபட்ட தலம். அம்பாள் பார்வதி தேவி அணைத்த சிவன் என்ற காரணத்தினால் ஈசனுக்கு 'தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள தீர்த்தமே கம்பா நதியாகும். முற்காலத்தில் ஒரு நதியாக ஓடிய கம்பா நதி தற்போது சிறிய தீர்த்தமாகக் காட்சியளிக்கிறது. 

நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களில்   அதிசயமாக சைவ தலமான இத்தலத்தில் ஒரு திவ்ய தேசம் அமைந்துள்ளது. மூலவர் ஏகாம்பரநாதர் எனும் தழுவக்குழைந்தநாதரை வழிபட்டு சுற்றி வரும்போது உள்ள  பிராகாரத்தில் திரு நிலாத்திங்கள் துண்டப்பெருமாள் சன்னிதி அமைந்துள்ளது. 

Ekambareswarar Temple is a very big temple, associated with the five elements, the Pancha Bhoota Stalas, and specifically the element of earth, or Prithvi. Shiva is worshiped as Ekambareswarar or Ekambaranathar or Rajalingeswaram, and is represented by the lingam as Prithvi lingam. His consort Parvati is depicted as Elavarkuzhali. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Thevaram, written by Tamil saint poets known as the nayanars and classified as Paadal Petra Sthalam. This vast temple is one of the most ancient in India having been in existence since at least 600 CE.   Adi Shankara,   got Kanchipuram remodelled along with expansion of this temple along with Kamakshi Amman temple and Varadaraja Perumal Temple with the help of local rulers. There are inscriptions dated 1532 CE (record 544 of 1919) indicating the gift of number of villages made by Achutaraya. The Vijayanagar kings, during the 15th century, also made lot of contributions to the temple.    

The meaning of the Thevara pasuram mentioned at the start : கரவாடும் வன்னெஞ்சர்க்கரியானைக் கரவார்பால்  :  வஞ்சனை மற்றும் கள்ளம் நிறைந்த கல்நெஞ்சம் படைத்தவர்களுக்கு எட்டாதவனாகிய சிவபெருமான், வஞ்சமற்ற அன்பர்களின் உள்ளத்தில் கலந்து உறவாடுபவன். காளையை (ரிஷபம்) வாகனமாகக் கொண்ட வித்தகனான அப்பெருமான், பாம்புகள் அசைய, சடைதாழ, தனது திருக்கரத்தில் அக்னியைக் கொண்டு இரவில் திருக்கூத்து ஆடுகிறார். அத்தகைய பெருமானை நான் எனது மனத்தில் இருத்தியுள்ளேன்.   





காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்-ல் அருள்பாலிக்கும் ருத்ரகோடி விமானம் ஒரு கோடி ருத்ரர்களால் வழிபடப்பட்ட பெருமைக்குரியது. பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, இந்த விமானத்தின் கீழ் வீற்றிருக்கும் மூலவரை தரிசிப்பது மிகவும் விஷேசம்.   

Now to the subject matter – in 2012 when I visited this temple on way to my native village Dusi Mamandur, had taken a photo the announcement board – now looking back am mesmerized to see that the artist has achieved something quite remarkable with what appears to be ordinary coloured chalk on a blackboard. 

What a lovely work ! – how much time has this artist spent on presenting something which perhaps may stand for 3 or 4 days only.  The entire composition draws the eye naturally towards the main shrine. The road, rows of devotees, lamps and decorations all converge beautifully at the central vahana. Perspective is one of the hardest things to get right in freehand drawing, and here it has been handled confidently. 

As you observe again, the artist hasn't just drawn a vehicle. He has conveyed the feeling of a Brahmotsavam at night:

       fireworks overhead,

       rows of devotees,

       deepams,

       the illuminated mantapam,

       the secondary shrine following behind,

       decorative arches.

For anyone who has attended such a procession, the drawing immediately evokes the experience. If you zoom in, many of the devotees are represented by just a handful of chalk strokes. Yet each figure appears to be carrying a torch or standing in reverence. That is the mark of someone who understands what details matter and what can be left to the viewer's imagination. Instead of filling every surface with colour, the bright yellows, reds, whites and blues are reserved for the deity and the mandapam. Consequently, the eye is immediately drawn to the divine centre of the composition.  

This was almost certainly drawn by someone who has all details of the procession but more than that has so much of devotion at his heart too.  The proportions of the mandapam, the decorations, the sequence of accompanying shrines, the placement of the fireworks—these are not generic festival motifs. They suggest familiarity with the actual utsavam.  

It is an Oxymoron that through a mundane work of ephemeral, he has communicated something that would be etched in memory forever !!!   The date 6-4-2012 is integrated into the composition rather than simply written as information. It becomes part of the artwork itself, anchoring the drawing to a specific festival. For someone studying temple traditions years later, that is invaluable. To me, this is not merely a notice board—it is a piece of folk temple art, created with devotion, intended to exist briefly, and fortunately captured by me !!

  

From  artistic point of view some Qs like whether it is freehand, or sketched lightly first, how many hours it would have taken and whether he continues to make such boards even today !!  His mobile no. 9842337665 is available on the photo – I messaged him sending the photo and stating my intention to write a post – he simply responded – ‘OK’ !!       

We naturally admire the deity, the archakas, the veda/arulicheyal ghoshti, Othuvaars,  the musicians, and the volunteers. But there are also artists who decorate the streets, paint signboards, draw kolams, prepare floral arrangements, and create temporary works like this blackboard. Their contribution is devotional in its own right, yet it rarely receives recognition.   This post may not become viral, it may not reach to a larger audience but I would be much happier, if someone reading this takes time to appreciate the artist in person.  

திருக்கச்சி உறை  ஸ்ரீ வரதராஜப் பெருமாளும், ஸ்ரீ ஏகாம்பரநாதரும்  இந்த வரைபட கலைஞக்கும் ஏனைய கைங்கர்யம் புரிவோர்களுக்கும்  நல்ல உடல்நலம், மனநிறைவு,  செல்வம் என எல்லா வளங்களையும் அருள வேண்டுகிறேன்.

.
Regards – S Sampathkumar
11.7.2026