To search this blog

Sunday, October 30, 2011

Thiruvallikkeni Sri Manavala Maamunigal Uthsavam 7


Sri:
Srimathe Ramanujaya Nama:
Srimath Varavara Munaye Nama:
  
Sri Manavala Maamunigal Uthsavam is going on at Thiruvallikkeni in a grand manner.   Daily there will be ‘Thiruppavai Sarrumurai, Mangalasasanam, Veedhi Purappadu and Thiruvaimozhi Sarrumurai’.  .  On 28th Oct 11 was the 7th day of Uthsavam.  Here are some photos taken during the mangalasasanam at Nammazhwaar sannathi, Dr MAV rendering kattiyam and Amsa vahana purappadu.


திருவல்லிக்கேணியில் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உத்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.     இவ் உத்சவத்தில்  அனுதினமும் 'திருப்பாவை சாற்றுமுறை'; மங்களாசாசனம்; திருவீதி புறப்பாடு; திருவாய்மொழி 
சாற்றுமுறை' என உண்டு. 

28/10/2011 அன்று ஏழாம் உத்சவம்.  திருப்பாவை  சாற்றுமுறை முடிந்து - மாமுனிகள் திருகோவிலில் உள்ள சன்னதிகளில் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடை பெற்றது.  மங்களாசாசனத்தின் போது கட்டியம் சேவிக்க பெறும்.  முனைவர் ம அ வேங்கடகிருஷ்ணன் சுவாமி கணீர் என்ற குரலில் கட்டியம் சாதிப்பதை சேவிக்கும் பாக்கியமும் அன்று கிடைத்தது. மாலை சுமார் ஏழு அரை மணி அளவில் 'மாமுனிகள்' அம்ச வாகனத்தில் எழுந்து அருளினார்.  புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாசதாசன்  

 ஸ்ரீ மணவாளமாமுனிகள் - நம்மாழ்வார் சன்னதிக்கு (வாகன மண்டபத்துக்கு) எழுந்து அருளல்
 Dr. MAV   கட்டியம் சேவித்தல்
ஆச்சார்யருக்கு நம்மாழ்வார் மரியாதை
ஸ்ரீ மணவாளமாமுனிகள் 




ஸ்ரீ மணவாளமாமுனிகள்  அம்ச வாகனத்தில்

Friday, October 28, 2011

Thiruvallikkeni Sri Manavala Maamunigal Uthsavam 6 - Annakkooda Uthsavam


அன்னக்கூட  உத்சவம்  - Annakkoda Uthsavam


Sri:
Srimathe Ramanujaya Nama:
Srimath Varavara Munaye Nama:

We all go to temples and worship Lord in various forms.  For us the Lord is Omnipresent and Idol symbolizes Him.  Often we stand before the Lord and rekindle our worries beseeching his benevolence in getting remedy.

There are others who visualize Him in various swaroopams and enjoy Him in their inner souls.   Saint Periyazhwaar, when he saw Lord Sriman Narayana astride Garuda, started thinking of His magnificence and started singing paeans seeking that no harm ever happen to the Greatest !

The sixth day of Manavaala Mamunigal Uthsavam is celebrated as Annakkoda Uthsavam. On this day, lot of kadambam and other such offerings are made to Perumal. This is said to commemorate the lifting of ‘Govardhana Giri’ by Lord Krishna on the day when it rained very heavily when the cowherds were making offering to Indira.

Yesterday evening (on 27th Oct 2011) at Thiruvallikkeni, on the occasion of Anna Kooda Uthsavam, there was the magnificent purappadu of Lord Parthasarathi –; draped in beautiful silk dress, dressed like a Cowherd King, He wore a turban, had whip in his hand, the other hand was resting,  was adorning many jewels, including impeccable shining ear rings.  He was also wearing bangles and I was told that the two white bangles, which could be seen in the photos below were acquiesced by a bakthar recently.    It was a very rare Darshan to behold…

Here are some photos and small write up on 6th day festival of Sri Manavala Mamunigal Uthsavam at Thiruvallikkeni divyadesam

Regards – S. Sampathkumar
********************************************************
மணவாள மாமுனிகள் உத்சவம் ஆறாவது நாள்  அன்னக் கூட உத்சவம் என பிரசித்தி.  இன்று பெருமாளுக்கு கதம்பம் முதலான அன்னங்கள் அமுது செய்விக்கப்படுகின்றன. 'இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த எழில் விழாவில்' என 'கோவர்தன கிரி' பிரபாவம் நினைவு கூறப்படுவதாகவும் கூறுகின்றனர். 

 ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் 'ஆயர் குலத்தில்' வந்து உதித்தவராக  கோல் (சாட்டை), தலைப்பாகை, தண்டம், என அணிந்து மிக அழகாக சேவை சாதித்தார். "சீலை குதம்பை ஒரு காது, ஒரு காது செந்நிற மேல்  தோன்றிப் பூ" என கண்ணன் கன்றுகள் மேய்த்துவரக் கண்டு யசோதை மகிழ்ந்ததை பெரியாழ்வார் அனுபவித்த வண்ணம், ஸ்ரீ பார்த்தசாரதி தனது காதுகளில் 'ஓலை மற்றும் பூ' போன்ற திருவாபரணங்களை அணிந்து கொண்டு அழகான பட்டு உடுத்தி, கைகளில் வளைகள் அணிந்து சேவை சாதித்தது நம் போன்றோர்க்கு கிடைத்தற்கரியது.  

27/10/2011 அன்று புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 







ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள்

 ஸ்ரீ மணவாள மாமுனிகள்



Monday, October 24, 2011

Sri Manavala Mamunigal Uthsavam @ Thiruvallikkeni Divyadesam - 2011. 2nd Day purappadu


Sri:
Srimathe Ramanujaya Nama:
Srimath Varavara Munaye Nama:

Sri Manavala Mamunigal Uthsavam is being celebrated in a grand manner in Divyadesams.  On 23/10/2011 occurred the Second day and in the evening there was a grand purappadu of Acharyar with Sri Parthasarathi, adorning the famous Pandiyan Kondai and having the sceptre in hand.  Here are some photos taken during the veedhi purappadu.

ஸ்ரீ வரவரமுனி என்று கொண்டாடப்படும் நம் ஆச்சார்யர்  பாழ்பட்டு கிடந்த ஸ்ரீரங்க கோயில் நிர்வாகத்தை ஏற்று ராமானுஜர் காலம் போன்ற நிர்வாகத்தை ஏற்படுத்தியவர்.  தன்  ஆச்சாரியார் திருவாய் மொழி பிள்ளை ஆணையின் பேரில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ ராமானுஜர் விக்ரகத்தை நிறுவி ராமானுஜர் பற்றிய இருபது பாக்கள் கொண்ட யதிராஜ விம்சதி இயற்றியவர். இதனால் யதீந்த்ர ப்ரவர் என போற்றப்பட்டவர்.  1430  ஆண்டில் ஸ்ரீ ரங்கநாதப் பெருமான் முன்னிலையில் -அவரது அவாவின் படி, ஓராண்டு காலம் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்கு -6000-படி அடிப்படையில் உபன்யாசம் நிகழ்த்தினார் . ஓராண்டு கால இறுதி நாளன்று ஸ்ரீரங்கநாதரே  சிறுவனாக வந்து மாமுனிகளின் திறமையை பாராட்டி "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் "என்ற புகழ் பெற்ற தனியனை நமக்கு அளித்தார்.  தென்னசார்ய  ஸ்ரீ வைஷ்ணவர்கள் அனுதினமும் அனுசந்திப்பது இத் தனியனே.  

இவரது பல நூல்களில், உபதேச ரத்தினமாலை எனும் நூல் மிக எளிய பாக்களில் ஆழ்வார்கள் பற்றிய அனைத்து விவரங்களையும், மற்றும் ஆச்சர்யர்கள் பற்றியும் அழகாக எடுத்து உரைக்கிறது

திருவல்லிக்கேணியில்  ஸ்ரீ  மணவாள மாமுனிகளின்  உத்சவம் சிறப்பாக நடந்து வருகிறது.  23/10/2011 அன்று இரண்டாம் உத்சவம்.  மாமுனிகள் ஸ்ரீ பார்த்தசாரதி சேர்ந்து புறப்பாடு.  ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பாண்டியன் கொண்டை செங்கோல் உடன் அற்புதமாக சேவை சாதித்தார்.  அப்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :

அடியேன் ஸ்ரீனிவாச தாசன் 





 ஸ்ரீ பார்த்தசாரதி
 பெருமாள் - பாண்டியன் கொண்டையுடன்

ஸ்ரீ மணவாளமாமுனிகள்
 திவ்யப்ரபந்த கோஷ்டி

Sunday, October 23, 2011

Sri Manavala Mamunigal Uthsavam @ Thiruvallikkeni Divyadesam - 2011.


31st October 2011 (14th day in the tamil month of Aippasi) would be a great day for all Thennacharya Sri Vaishnavaites – for this day marks the birth anniversary of Acharyar Sri Manavala Mamunigal.

Acharyar Sri  Manavala Mamunigal considered the reincarnation of Adisesha,  was the son of Thikalakidanthan thirunavirudayapiran thatharannan, a disciple of Sri Pillailokacarya, and Sriranga nacciyar. He was born in  Kidaram in Tamilnadu, in the year 1370 AD.  His parents named him Azhagiya manavalan, after the Lord Himself.

Manavala mamunigal’s  first work  was - Yatiraja Vimsati, twenty sanskrit stanzas in praise of Ramanuja. Tiruvaymozhip pillai read the works and gave him the title Yatindra Pravanar.  Nam Acharyar is revered under various names as “Yatheendra Pravanar, Sri Vara Vara Muni, Mamunigal”  He has given us 19 granthams – 3 of them in Sanskrit and rest in Tamil & Manipravalam. 

The 10 day long Uthsavam of the Acharyar started today (22nd Oct 2011) at Thiruvallikkeni (so also in other Divyadesams).  On the 5th day of Uthsavam falls Deepavali, this year and there would be a very grand purappadu of Swami Manavala Mamunigal with Lord Parthasarathi on that day.  On 27th Oct 2011 – the 6th day is Annakooda Uthasavam.  31st Oct 2011 is the 10th day – the Satrumurai.

The first day of the Uthsavam happened to be the “5th Sanikizhamai of Purattasi”.  In the evening at around 0700 pm there was purappadu of Sri Manavala Maamunigal with Lord Azhagiyasingar.  Here are some photos taken during the purappadu.

Adiyen Srinivasa dhasan.


Acharyar - Sri Manavala Mamunigal






Lord Azhagiya Singar

Divyaprabandha goshti

Sunday, October 16, 2011

Thiruvallikkeni Sri Parthasarathi Rohini Purappadu - Oct 2011


திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் ரோஹிணி புறப்பாடு

திருவல்லிக்கேணியில் விசேஷ உத்சவங்கள் தவிர - நித்யபடி உத்சவங்களும் சிறப்பாக நடை பெறுகின்றன.  பிரதி மாத பிறப்பு, ரோஹிணி மற்றும் திருவோணம் திருநக்ஷத்திரங்கள், பௌர்ணமி ஆகிய தினங்களில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் சிறிய மாட வீதி புறப்பாடும், ஏகாதசி மற்றும் அமாவாசை தினங்களில் பெரிய மாட வீதி புறப்பாடும் கண்டு அருள்கிறார்.

இன்று 16/10/2011 புரட்டாசி ரோஹிணி :  
மாலை 05.30க்கு   ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் சிறிய மாட வீதி  எழுந்து அருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.