To search this blog

Thursday, June 5, 2025

Thiruvallikkeni Vasanthothsavam day 6 – 2025 : வானவர்க்கும் சேயானை நெஞ்சே சிறந்து.

Thiruvallikkeni Vasanthothsavam day 6 – 2025

                                     காக்கும் இயல்வினன் கண்ண பெருமான் ~  திருவல்லிக்கேணி வசந்தோத்சவம் 6- 2025  இன்று பரமபதநாதன் திருக்கோலத்தில்   ஸ்ரீபார்த்தசாரதி எம்பெருமான் மிக அழகாக சேவை சாதித்தார்.



The 7 day long Vasanthothsavam is  now on at Triplicane.  ‘vasantham ‘ is a season – a pleasant one at that.  There existed a bungalow in Venkatrangam Street abound with many trees, fragrant flowers, ponds and a big well which had steps for getting inside.  This Uthsavam suddenly stopped – and now after two decades, Perumal Vasantha Uthsavam in a newly constructed mandapam.   4th June 2025 was day 6 of the Uthsavam and Sri Parthasarathi gave darshan as ‘Paramapada Nathar’

தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் எல்லா இலக்கண விதிகளும் சூத்திர முறையில் கூறப்பட்டிருக்கின்றன. அகத்திணையியலில்  ஐவகை நிலங்களில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நானிலங்களைப் பற்றிக் கூறும் போது அவற்றின் தெய்வங்களையும் குறிக்கிறது.  இங்கே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் குறிப்பிடப்பட்டுள்ளனர். சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் சிவந்தவன் என்ற பொருளை தரும் இச்சொல்லுக்கு   பூட்டனின் பாட்டன்; ஐந்தாம் தலைமுறை மூத்த ஆண் போன்ற அர்த்தங்களும் உண்டு. .  குறிஞ்சி நிலத்தில் மூங்கிலால் அடிக்கடி தீப்பற்றிப் போவதையும், தீயை அஞ்சத்தக்கதாகவும் கருதி, அதைக் தெய்வ வெளிப்பாடாகக் கொண்டு சேயோன் என்று அழைத்திருக்கிறார்கள் எனவும் குறிப்புகள் உள்ளன.

“மாயோன் மேய காடுறை உலகமும்; சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்; வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் - சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே” 

இங்கே மாயோன் என்பவன் கண்ணன் என்றும், சேயோன் என்பவன் முருகன் என்றும், வேந்தன் என்பவன் இந்திரன் என்றும் பொருள் கூறுவார்கள்.  மாயோன் கரியோன். மாயோனுக்கு மால் என்றும் பெயர். மால் = கருப்பு, மேகம், வானம், கரியோன். முல்லைநிலத்தில், மேலே எங்குப் பார்த்தாலும் நீல அல்லது கரிய வானமும் மேகமுமாய்த் தோன்றுவதாலும், ஆநிரைக்கு வேண்டிய புல்லும் ஆயர்க்கு வேண்டிய வான வாரி அல்லது புன்செய்ப் பயிர்களும் வளர்வதற்கு மழை வேண்டியிருப்பதாலும், மேகத்தை வானத்தோடொப்பக் கொண்டதினாலும், முல்லை நிலத்தார் தங்கள் தெய்வத்தைக் கருமையானதென்று கருதி, மாயோன் என்றும் மால் என்றும் பெயரிட்டனர். திருமால் என்பதில் திரு என்பது அடைமொழி. முல்லை நிலத்திற்குரிய கருடனையும் துளசியையும், முறையே மாயோனுக்குரிய ஊர்தியாகவும் பூவாகவும் கொண்டார்கள்.  

நிற்க !  -  இது தமிழ் இலக்கண பாடமல்ல ..   ஆழ்வார்கள் பாசுரங்களில் அமுதத்தமிழ் பொழிகிறது.  தமிழ் தலைவனாம் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரங்களில் எளிமையான வார்த்தைகளில் அற்புத அர்த்தங்களை அனுபவிக்கலாம்.   கண்ணபிரானையே 'வானோர்க்கும் சேயோன்' என வாழ்த்தி உரைக்கின்றார் நம் பேயாழ்வார்.  




பெரிய மழைநாளிலே கடுஞ்சிறையில் பிறந்த கண்ணன், அன்றிரவே யமுனை ஆற்று வெள்ளத்தை கடந்து கோகுலத்தில் வசுதேவர் இல்லத்தில் தினமும் போராட்டமாக  - பூதனை,  அரிஷ்டன், தேனுகன், பிலம்பன், கேசி, சகடன்,  என பல வடிவில் வந்த அரக்கர்களை கொன்று, இடையில் தவழ்ந்து, விளையாடி, காளியன்  மீது நடமாடி, குரவை கோத்து, கோவர்தனத்தை தூக்கி, ஆநிரை காத்து, குவலயாபீடம் தந்தத்தை  முறித்து  வளர்ந்து பின்னாளில் பாண்டவர்க்கும் நமக்கும் கீதை எனும் பாடம்  உரைத்தான்.  அந்த கண்ணபிரானையே 'வானோர்க்கும் சேயோன்' என வாழ்த்தி உரைக்கின்றார் நம் பேயாழ்வார்.:  

தொழுதால் பழுதுண்டே   தூநீருலகம்,

முழுதுண்டு மொய்குழலாள் ஆய்ச்சி, - விழுதுண்ட

வாயானை மால்விடையேழ் செற்றானை, வானவர்க்கும்

சேயானை நெஞ்சே சிறந்து.

நிர்மலமான நீரையுடைய கடலோடு கூடின உலகங்களை முழுவதும் விழுங்கி,  தனது திருவயிற்றிலே வைத்தவனாயும், அழகிய கூந்தலையுடையளான யசோதையினுடைய வெண்ணெயை அமுதுசெய்த வாயை உடையவனாயும்,  கொழுத்த ரிஷபங்களேழையும் முடித்தவனாயும்  பிரமன் முதலிய தேவர்களுக்கும் எட்டாதவனாயுமுள்ள எம்பெருமானை  சிறப்புற வணங்கினால், அது பழுது ஆகாமல் எல்லா நன்மையையும் பயக்கும் என தனது நெஞ்சத்திற்கு உரைக்கிறார் நம் தமிழ்த்தலைவன் பேயாழ்வார். 

Here are some photos of –“'வானோர்க்கும் சேயோன்'  Sri Parthasarathi Emperuman on  4.6.2025 – day 6 of Vasanthothsava purappadu.  

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasa dhasan 








No comments:

Post a Comment