Thiruvallikkeni ‘chokkapanai’ - on Thirukarthigai day 5.12.2025 - திருக்கார்த்திகை சொக்கப்பனை
Chokkapanai symbolizes burning of bad behavior and unwanted elements ~ the flames symbolize blossoming knowledge. திருக்கார்த்திகை சொக்கப்பனை வெந்தீயில் மாசுகள் அழிவது போல, துன்பங்கள் ஓடட்டும் ! கெட்ட எண்ணங்கள் ஒழியட்டும்!, தேசம் சுபிக்ஷமாக நிலவட்டும்.
பண்டைய தமிழகத்தில் வேந்தர்தம்
குலமரபுச் சின்னங்களாக இருந்தவை மரங்கள். சேரன் (பனை), சோழன் (அத்தி), பாண்டியன்
(வேம்பு) என ! . பனை புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். பழங்காலத்து
மொழி இலக்கண, இலக்கியங்கள் ஓலைப்படுத்தப்பட்டதனால் நமக்கு வந்து சேர்த்தன - அதில் முக்கிய
பங்கு -பனை ஓலைக்கே!'. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து
பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. கற்பகத் தருவான பனை மரம் கல்பதரு என்றழைக்கப்படுவது.
தேவமரம் என்றும் அழைக்கப்படுவது. பனை மரத்தின் வேர் முதற்கொண்டு நுனி வரை அனைத்துப்
பொருட்களும் மனித வாழ்க்கைக்கு உதவுகின்றன.
Video of Chokkapanai in
front of Sri Parthasarathi Swami thirukkovil on Thirukarthigai day 5.12.2025: https://youtube.com/shorts/c0_bigHy3wM
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
No comments:
Post a Comment