To search this blog

Monday, December 15, 2025

Thiruneermalai arulicheyal goshti

 

திருவரங்கம் தொடங்கி அனைத்து ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களிலும் 'அத்யயன உத்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. சென்ற ஞாயிறு (9.12.18) நீர்வண்ணன் நீர்மலை என பாடப்பெற்ற திருநீர்மலை திவ்யதேசத்தில் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டியில் அந்வயிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

பொதுவாகவே அதிகம் கூட்டம் இல்லாத திருக்கோவில்களில் கைங்கர்யம் செய்வது மேலும் கடினம் ~ஆனால் இதுபோன்ற இடங்களிலே பட்டர்களும், அத்யாபகர்களும் இதர கைங்கர்யபரர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது தங்களை அற்பணித்துக்கொண்டுள்ளதை காண முடியும்.

திருநீர்மலை திவ்யதேசத்திலே ஆழ்வார்கள் சார்யர்கள் எழுந்து அருளி இருக்க, ஸ்ரீ ரங்கநாதர் மிக அழகான சாற்றுப்படியுடன் வீற்றிருக்க மதியம் அருளிச்செயல் கோஷ்டி. நிதானமாக நன்றாக நடந்தது. 

மண்டபத்தின் முன்பே அமர்ந்திருந்த ஆண்டாள் கோஷ்டியும் ~ மிக அழகாக கோஷ்டி சேவிப்பதை ரசித்ததுடன், தாங்களும் கூட சேவித்தனர். ஆச்சர்யம் என்னவெனில், அதில் சிலர் புத்தகம் இல்லாமல், சற்று கடினமான பெரியாழ்வார் திருமொழி பத்துகளை - அவ்வளவு அனுபவித்து அழகாக கூறியது எனக்கு மிக்க வியப்பு.

 


நிச்சயமாக எம்பெருமான், ஆழ்வார்கள், ஆசார்யர்கள், ஜீயர் அருள்தான் - அவர்களது நிர்ஹேதுக க்ருபைதான்.

அருளிச்செயல் ஓதிய அவர்கள் அனைவருக்கும் அடியேனின் பணிவான நமஸ்காரங்கள்.

பின் குறிப்பு : கவலை பாயாமல் அழகாக சேவித்த ஒரு மாமியின் புகைப்படம் அழகாக வந்துள்ளது. எனினும் பிறகு அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, அம்மங்கார் தன்னை தனியாக போட வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததால், ஒரு பொது புகைப்படம் மட்டுமே இங்கே !!

 
அடியேன் ஸ்ரீனிவாச தாசன்.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
15.12.2018 (repost)

No comments:

Post a Comment