To search this blog

Friday, August 30, 2024

Sri Jayanthi - Thiruvallikkeni Kannan purappadu 2024

ஸ்ரீஜெயந்தி : திருவல்லிக்கேணி கண்ணபிரானின் சேஷ வாஹன புறப்பாடு

On  27.8.2024,   birth of Lord Krishna was grandly celebrated as ‘Sri Jayanthi’ -functions were on at Thiruvallikkeni divyadesam, at many other divyadesangal; at every home -  in the manner of Lord Krishna being born at every home – devotees were elated.  The next morning  occurs  the purappadu of Sri Krishna. At Thiruvallikkeni, the presiding deity is Sri Parthasarathi ~ Lord Krishna Himself, as He volunteered to drive the chariot of Arjuna and offer to the World, the great Bhagwad Gita. 

 



 'ஸ்ரீ ஜெயந்தி'  சிறப்புற கொண்டாடப்பட்டது. இன்றைய கால கட்டத்தில், 'ஜெயந்தி' என்பது 'பிறந்த தினத்தை'  குறிப்பது என்பது போல - பல 'ஜெயந்திகள்' மக்களால் கொண்டாடப்படுகின்றன !  ஆனால் 'ஸ்ரீ ஜெயந்தி' என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினத்தை மட்டுமே குறிக்க வல்லது. 

"ஜெயந்தி" என்பது ஒரு முகூர்த்தம். அஷ்டமியும் நவமியும் சேரும்; ரோஹிணி நக்ஷத்திரத்தில்  [மிருகசீர்ஷம் வரும் சமயம்] உள்ள ஒரு சிறப்பான 'ஜெயந்தி' என்கிற முஹூர்த்ததில் ஸ்ரீ கிருஷ்ணர் வடமதுரையில் அவதரித்தார்.  கண்ணன் பிறந்த நாள் என்பதால் அதற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக 'ஸ்ரீ ஜெயந்தி' ஆனது. எனவே எப்படி 'ஸ்ரீ ராம நவமி' என்பது ஸ்ரீராமர் அவதரித்த நந்நாள் என கொண்டாடுகிறோமோ அதே போல ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தநாள் 'கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஸ்ரீ ஜெயந்தி'.  மற்றைய பிறந்த நாள்களை 'ஜெயந்தி' என கொண்டாடுதல் தகா!   [முனைவர் ம அ வேங்கட கிருஷ்ணன் சுவாமி சொல்லக் கேட்டது] 

 ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான். பெரியாழ்வார்  கண்ணனிடத்திலே அளவு கடந்த பிரேமையாலே வடமதுரையிலே பிறந்த கண்ணபிரானை திருக்கோட்டியூரிலே பிறந்ததாக ஒவ்வொரு பருவத்தையும் கொண்டாடி மகிழ்கிறார். ஓரிடத்தில் "செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்த அக்காரம் நறுநெய் பாலால்" என -  செந்நெல்லரிசியும்சிறு பயற்றம் பருப்பும்காய்ச்சித் திரட்டி நன்றாகச் செய்த  அக்காரம் என்கிற கருப்புக் கட்டியும்மணம் மிக்க நெய்யும்;  பால் ஆகிய இவற்றாலேயும் ("கன்னலிலட்டுவத்தோடு சீடை காரெள்ளினுண்டை"எனவும் அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து என்பதாகவும் சிறந்த சிற்றுண்டிகளை பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார்.  தவிர பெருமாளுக்கு சிறந்த பழங்கள் பல சமர்ப்பிக்கப்படுகின்றன. இவற்றுள் நாவற்பழமும் சிறப்பிடம் பெறுகிறது.  




கண்ணபிரானது  வைபவம் மிக சிறப்பானது.  எம்பெருமானது திருவவதாரங்களிலே மிகவும் எளியன் கண்ணன்.  நம் இல்லங்களிலே பிறந்து, நாம் அளிப்பவைகளை உண்டு நமக்கு பேரானந்தம் தருகிறான்.  திருக்கோவிலில் சிறப்பாய் பிறந்த கண்ணனை தொட்டிலில் இட்டு சீராட்டுகின்றனர்.  குழந்தையின் ஒவ்வொரும் பருவமுமே நமக்கு ஆனந்தத்தை தரும்.  தவழ்ந்த குழந்தை  தளர்நடை நடப்பது பேரழகு.  ஆரம்பத்தில் குழந்தைகள் தடுமாறி நடப்பது போன்ற நடை.  தளர்நடை = தளர் + நடை. அசைந்து நடக்கும் சிறுநடை.   கண்ணபிரான் தளர்நடை நடக்கும்போது, காலிலணிந்துள்ள பாதச் சதங்கைகல்  கிண்கிணென்று சப்திக்கும் சந்தோஷத்திற்கு ஓர் ஏற்ற உபமாநம்   யானையானது மதத்தின் மிகுதியால் கட்டுத்தறியை முறித்துவிட்டுக் காலிலிட்ட இருப்புச் சங்கிலியை யிழுத்துக்கொண்டு நடக்கை என பரவஸிக்கிறார் பெரியாழ்வார்.  

இதோ இங்கே பெரியாழ்வாரின் பக்தி தோய்ந்த வரிகளில் ஒரு பாசுரம் :  

தொடர்சங்கிலிகை சலார்பிலாரென்னத் தூங்கு பொன்மணியொலிப்ப  

படு  மும்மதப்புனல் சோர வாரணம் பைய  நின்று ஊர்வதுபோல்  

உடங்கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப உடைமணி பறைகறங்க  

தடந்தாளிணைகொண்டு சார்ங்க பாணி தளர்நடை நடவானோ.  

 

பெரிய மதகரியின்  இரும்புச்சங்கிலியின் தொடர்பு  ’சலார்பிலார்’ என்று சப்திக்கவும், தொங்குகின்றனவும்  பொன்கயிற்றிற்  கட்டியிருப்பனவுமான  மணிகள் ஒலிக்கவும், அவ்வமயம்  உண்டான  மூன்று வகையான மதநீர் பெருகவும், தனது பருத்த உடலையும் தலையும் ஆட்டிக்கொண்டு கம்பீரமான யானை  மெல்ல நடந்து போவது போல - காற்சதங்கைகள் தம்மிலே தாம்கூட்டி  சப்திக்கவும்,  திருவரையில் கட்டிய  சிறு மணிகள் பறைபோல் சப்திக்கவும்,  சார்ங்கமென்னும் வில்லை கையிலேந்திய பிள்ளையாகிய கண்ணபிரான்  தன்னுடைய பாதங்களிரண்டினால் தளர் நடை,  இளநடையை நடக்கவேணும் என கொஞ்சி மகிழ்கிறார் விஷ்ணுசித்தர் தமது பெரியாழ்வார் திருமொழியில்.  

In the morning  after His birth, occurs purappadu of beautiful Bala Krishnan in Sesha vahanam.   At Thiruvallikkeni divaydesam,  this  birthday purappadu enters Nagoji rao street and Yadava chathiram – traditional places where those who tendered to cows live, much to the happiness of Sree Krishna.  All along, at all places devotees submit fresh butter and milk for Sri Krishna.





திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஸ்ரீஜெயந்தி மறுநாள் காலை   ஸ்ரீகிருஷ்ணர் சேஷ வாஹனத்தில் புறப்பாடு கண்டருள்கிறார்.  நாகோஜி ராவ் தெரு உள்ளேயும், யாதவ சத்திரத்துக்கும் இந்த புறப்பாட்டில் கண்ணன் எழுந்தருளுகிறார். செல்லுமிடமெல்லாம் பக்தர்கள் வெண்ணை, பால், பழங்கள் சமர்பிக்கின்றனர்.  தள்ளித்தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய் மாயக்கண்ணன் புரிந்த லீலாவிநோதங்களை நினைவுகூறும் விதமாக காளிங்க நர்த்தனம் புரியும் அழகான குட்டிகண்ணன் சேஷவாஹனத்தில் பக்தர்களுக்கு அருள்செய்தார்.  பக்தர்களை உய்விப்பதற்க்காக இவ்வுலகத்தில் அவதரித்து,  வாழ்ந்துநாம் அறிவுபெற நல்லமுதமாம் 'ஸ்ரீபகவத்கீதையைஅருளிய கண்ணபிரானின் திருவடிகளைபற்றியவருக்குநிர்ஹேதுக  க்ருபை  உடையவனான எம்பெருமான் எல்லாநலன்களையும் தானேஅளித்து,  நம்மை பாதுகாப்பார்.  

"வடமதுரைப் பிறந்த தாதுசேர்தோள் கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரணே."  : வடமதுரையிலே அவதவதரித்த,   மாலையணிந்ததோள்களையுடைய கண்ணனைத் தவிர நமக்கு வேறொரு  புகலில்லை. அவன்தாள்களே சரணம்.  

Here are some photos  of Kannan purappadu at Thiruvallikkeni

எம்பெருமான் திருவடிகளேசரணம்ஜீயர் திருவடிகளே சரணம்

ஆச்சார்யன் திருவடிகளேசரணம் !!!

 
~ adiyen Srinivasadhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28.8.2024. 











No comments:

Post a Comment