To search this blog

Sunday, August 18, 2024

Avani Thiruvonam 2024 - பேரே வரப் * பிதற்றல் அல்லால்

இன்று ஞாயிறு 18.8.2024 - ஆவணி 2   இன்று  க்ரோதி  வருடம், . தக்ஷிணாயனம்;   வர்ஷ  ருது - . சுக்ல  பக்ஷ   திருவோண நக்ஷத்திரம் ..  ஸ்ரீ பொய்கையாழ்வார்  (ஐப்பசி); ஸ்ரீபிள்ளைலோகாச்சார்யர் (ஐப்பசி) ;  ஸ்ரீ வேதாந்தாச்சாரியர் (புரட்டாசி) - மாச திருநக்ஷத்திரம்.  திருவல்லிக்கேணியில் ஒவ்வொரு திருவோணத்தன்றும் சிறிய மாட வீதி புறப்பாடு உண்டு.  ஜேஷ்டாபிஷேகம் முடிந்து பவித்ர உத்சவம் வரை புறப்பாடு கிடையாது - எனவே இன்று பெருமாள் புறப்பாடு கிடையாது

 


தாழை மலர்கள்  (Pandanus fascicularis -  தாழம்பூ) நிறைய அருகருகில் வளர்ந்துள்ள சோலைகளாலே  சூழப்பட்ட ,  காஞ்சீநகரத்தில் , ( திருவெஃகாவிலே )  பொற்றாமரைப் பொய்கையிலே  அவதரித்தவர் நம் பொய்கையாழ்வார்.  இவருக்கு  கவிஞர் போரேறு ; ஸரோமுனீந்த்ரர்;  ஆழ்வார்கள் நைனார் ,  என திருநாமங்கள் உண்டு.  இவர்  அஜ்ஞாநிகளான ஸம்ஸாரிகளோடு ஸஹவாஸம் இல்லாமல் மலர்க்காடுகளில்,  ஊர் ஊராக சஞ்சரித்துக்கொண்டு   பகவத் குணங்களையே தாரகபோஷக போக்யங்களாகக் கொண்டு திவ்ய யோக ஸம்பக்கராய் அநேகமாயிரம் வர்ஷம் எழுந்தருளியிருந்தார்.  எம்பெருமான் திருநாமங்களையே எப்போதும் வாய் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என - திருநாமம் வாயிலேவாஸிதமாக இருக்கவேணுமாய் பொய்கைப்பிரான் அருளிய முதல் திருவந்தாதி பாசுரம் இங்கே : 

பேரே வரப் * பிதற்றல் அல்லால் என் பெம்மானை *

ஆரே அறிவார்? அது நிற்க ** நேரே

கடிக்கமலத்து உள் இருந்தும் * காண்கிலான் * கண்ணன்

அடிக்கமலம் தன்னை அயன்

எம்பெருமானது திருநாமமாகவே,  அவனை ஆராதித்து, அவன் எழுந்தருள பிதற்றுவதைத்தவிர;  அந்த எம்பெருமானை;  யார் தான் அறிய வல்லவர்கள்?;   பரிமளம் மிகுந்த நாபிகமலத்திலே பிறந்து;  நிரந்தர வாஸம்  பண்ணிக்கொண்டிருந்தும் பிரமனே அந்த கண்ணனின்  திருவடித் தாமரைகளை காணப் பெற்றானில்லை எனினும், சொல்லப்புக்காலும் திருநாமம் வாயிலே வரும்படி பிதற்றலல்லால் நமக்கு உய்விக்கும் வழி ஏது !  எம்பெருமான் ஸ்ரீமந்நாரணன் திருவடிகளை பற்றி, அவன் திருநாமங்கள் மட்டுமே சொல்லி, அவனை சேர்வதற்கு நாம் முயற்சிப்போம். 

Today is Avani Thiruvonam – thinking of Emperuman, here are some photos from the mattaiyadi vaibhavam – day 9 of Sri Parthasarathi Perumal Chithiram brahmothsavam – Chithirai Thiruvonam on 1.5.2024.

 
~ adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
18.8.2024 








No comments:

Post a Comment