To search this blog

Friday, January 12, 2024

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா ~ Koodarai Valli 2024

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா ~ Koodarai Valli 2024

 

பக்தி காவியங்களிலே திருப்பாவை ஒரு உயர்ந்த இடத்தைக்கொண்டது.   ஆண்டாள் நீராட்ட உத்சவத்தில்  ஏழாம்   நாள் இன்று (12.1.2024)  .. திருப்பாவையில், இன்றைய நாள் பாசுரம் =   “கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா ” !! அக்காரம்  என்ற சொல் அறிவீரா !!  .. .. மிக மிக இனியது இது.

 


            Today ~  is a very significant day,  the 27th  day of the tamil month of Margazhi. Colloquially known as “Koodarai Valli” – this is a day, when  sweet pongal [made of jaggery with ghee flowing] is offered to God and then shared with all near and dear.. This day assumes significance from the pasuram of Chudi Kudutha Nachiyar – Andal.  In the month of Margazhi starting from day one, one verse of Thiruppavai is ascribed to a day and today is the 27th verse “Koodarai vellum Seer Govinda” 

பொங்கல் பண்டிகை என்றாலே புத்தாடைகளுடன், புதுப்பானையில் சுவையான பொங்கலிட்டு, சூரியனுக்குப் படைப்பதுதான்.  பொங்கலுக்கு மிக முக்கியமானது புதிதாக விளைந்த அரிசியும், புது வெல்லமும்தான்.  வெல்லம்  எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும்.  வெல்லம் இந்திய துணைக்கண்டத்தில் சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு உட்கொள்ளப்படும் ஒரு பண்டமாகும்.  அக்காரம்  : என்பதற்கு பல பொருட்கள் உண்டு.  :   இனிப்பான பொருள், வெல்லம் / சர்க்கரை; கற்கண்டு, கரும்பு என்பன முக்கியமானவை.  அக்காரம் என்பதற்கு கரும்பு, கரும்பில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை என்று பொருள். அடிசில் என்றால் சோறு.  எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கப்படும்  நெய்யும், பாலும் அதிகம் சேர்த்து செய்யப்படும் இந்த அக்கார அடிசில், கைகளில் எடுத்தால் வழிந்தோடும்படியான, பாதி திட திரவ பதத்தில் இருக்கும். 

பாவை நோன்பு நோற்கும் ஆண்டாளும் தோழிகளும்  -  “வையத்து வாழ்வீர்காள்” பாசுரத்தில், “நெய்யுண்ணோம் பாலுண்ணோம்” என்று பிரதிஜ்ஞை பண்ணின இவர்கள் இன்று நோன்பு நோற்று முடிக்கையாலே உணவை வேண்டுகின்றனர்.  ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு  நூறு தடாவில் வெண்ணெய் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சமர்ப்பித்து, ஏறுதிருவுடையான் இன்று வந்திவை  கொள்ளுங்கொலோ எனப் பாட,  எம்பெருமானார் உடையவர் அவளுடைய நேர்த்தியைப் பூர்த்தி செய்யத் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசலும், வெண்ணையும் சமர்பித்து ஆண்டாளுக்கு அண்ணனானார். 

இன்று பாசுர சிறப்பிற்காக  பால், நெய், அரிசி, பயத்தம் பருப்பு வெல்லம், ஏலக்காய்த் தூள், பச்சைக் கற்பூரம் இவை கலந்து அக்காரவடிசல் பதமாக செய்யப்பட்டு, எம்பெருமானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு,  “கூடியிருந்து குளிர்ந்து” என ஆண்டாள் நாச்சியார் அருளிச்செய்தபடி, அனைவருக்கும் வழங்கப்படுகின்றது 

 The true quality of Sri Vaishnavaite is to renounce everything, fall at the Lotus feet of  Sriman Narayana and feel happy of the fact of being his  eternal follower, allowing the Master to decide, determine and dictate the future. The best of wealth that one can get is the chance to do kainkaryam (service) to the God Himself and to Bhagavathas (His followers)

 

கூடாரை வெல்லும் சீர்க்கோவிந்தா உன்றன்னைப்*

பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்*

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்*

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே*

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்*

ஆடை உடுப்போமதன்பின்னே பாற்சோறு*

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்*

கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்.

நெய்யுண்ணோம், பாலுண்ணோம் என்று சொன்னவர்கள் மூட நெய் பெய்து முழங்கை வழிவார உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு கூடியிருந்து உண்போம் என்று நோன்பினால் உன்னை அடைகிறோம் – அதனால் நோன்பின் பூர்த்தியாக உன் ப்ராஸாதங்களை நீ அருளியவற்றை அனுபவிக்கிறோம் என விசேஷம்.  

கோதைப்பிராட்டி இந்த  கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! பாசுரத்தில், இனி வரும் இரண்டு பாசுரங்களிலுமாக கோவிந்த நாமத்தை அனுசந்திக்கிறாள். கூடாரை என்றால் – இவனை வணங்கமாட்டேன் என்று த்வேஷிக்கிற பேர்களை கூட  வெல்லுகிற கோவிந்தா என்கிறாள்.  கூடாரை என்றால் வெறுக்கிற பேர்வழிகள். வெறுப்பாலேயே சதா அவனைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள். ஹிரண்யாக்ஷன் – ஹிரண்யகசிபு, ராவணன் – கும்பகர்ணன், சிசுபாலன் – தந்த வக்ரன் என்று வெறுப்பின் மூல முடிச்சாக, ஆணி வேறாக – இதற்கு மேலாக வெறுக்க முடியாது என்ற அசுரேந்த்ரர்களாக, த்வேஷ திலகமாக இருப்பவர்களை தோற்கப்பண்ணுகிறானாம்! அவர்கள் கருத்தைப் பிழைப்பித்து வெல்கிறான். கோ என்றால் பசு. பசுதனம் லபதே விந்ததி இதி கோவிந்த: என்றார்கள். பசுக்கள் அவனை எங்களை ரக்ஷிக்க வா.. எங்கள் பின்னால் வா என்று அழைக்கவில்லை. அப்படி வருவதால் நாங்கள் கேட்காமலே வந்தாயே என்று கொண்டாடப் போவதுமில்லை. இப்படி இருக்கிற பசுக்கள் பின்னாடியும் போனானே! அவைகள் கேட்காமலே ரக்ஷித்தானே என்று அந்த அர்த்ததில் ரக்ஷிப்பவன் கோவிந்தன் – வெறுப்பில்லாமல் இருப்பதே போதும் என்று கொண்டிருப்பவன் கோவிந்தன் என்று கோவிந்தா என்ற பதத்தை ஆண்டாள் ப்ரயோகித்தாள்! 

சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே, பாடகமே என்றனைய பல்கலனும் – கேசாதி பாதமாக எல்லா அங்கங்களிலும் அணியும் பல்கலனும் நீ தரவேண்டும். சூடகம் என்னும் கைவளை, தோள்வளை, தோடு, செவிப்பூ என்னும் செவிக்கு மேலே அணிகிற நகை, பாடகம் என்றால் பாதத்தில் அணிகிற கழற்காப்பு என்று இவற்றை தரவேண்டும் என்கிறார்கள். உடுத்து களைந்த நின் பீதகவாடை என்று பெரியாழ்வார் பாடியது போல், அவனுடைய ஆடையையும் இவர்கள் எடுத்து அணிகிறார்கள்.  அதன்பின்னே பால்சோறு, மூட நெய்பெய்து முழங்கை வழிவார என்று வ்ரத பூர்த்தியாக, பால் சோறும், முழங்கை வரை வழியும் அளவுக்கு நெய்யுமாக அவனுக்கு சமர்பித்து தாங்களும் அனுபவித்து கூடியிருந்து குளிர்வோம் என்கிறாள் ஆண்டாள். 

To us, the bakthas, it is not only of getting that much sought benevolence of God but more of sharing them with all bhakthas *கூடியிருந்து குளிர்ந்து* [koodi irunthu kulirnthu]. Thiruppavai is also about Govindha Naama Sankeerthanam which reaches its peak in the concluding verses where She ponders ‘kurai ondrum illatha Govinda’. The myriad meanings of Thiruppavai are detailed in many many discourses of Sri Vaishnavaite Periyavars, especially during this month. 

Let us all get the great éclat and glory of all the Worlds by adorning ourselves eating rice food prepared using milk with sumptuous ghee and who eats this ksheerannam will stand ever united and remain cool in heart and joyous by the blessings of the Lord.   I offer my obeisance again and again to Goddess Godhadevi – to her alone – who awakened Lord Krishna and binded him with floral garlands already worn by her.  

                        Here are some photos of Sri Andal (குத்துக்காலிட்டு அமர்ந்த திருக்கோலம் taken at Thiruvallikkeni during the Neeratta Uthsavam purappadu  this morning . 

Sri Andal thiruvadigale saranam.
 
adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
12.01.2024 


No comments:

Post a Comment