To search this blog

Sunday, January 28, 2024

தையில் மகம் இன்று 2024 - திருமழிசைப்பிரான் அவதரித்த நாள்

 ‘Thaiyil  Makam’ ~ thirunakshathiram of Thirumazhisai Alwar 2024.

தையில் மகம் இன்று தாரணீயிர் ஏற்றம்!   திருமழிசைப்பிரான் அவதரித்த நாள் * 



வாழ்க்கை என்பது என்ன?  பிறப்பா ! உயிரோடு இருப்பதா? !  நிச்சயமான இறப்பை நோக்கி பயணமா ! மகிழ்ச்சியா ! பணமா, புகழா, பதவியா !, செல்வங்களா ! மக்கட்செல்வங்களா ! வெற்றிகளா!  தன்னலமற்ற அர்ப்பணிப்பா? …. இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயம் உள்ளது.   வாழ்க்கை ஒரு பயணம். வாழ்க்கை  அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.  

நன்றாக வாழ்க்கையை வாழ்வது என்பது என்ன ?  செய்யும் சில செயல்களோ அல்லது சிலவற்றை அடைவதோ   மட்டுமே  வாழ்க்கை, முழுமையை எட்டிவிடாது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், "இது மட்டும் நடந்தால் என் வாழ்க்கை முழுமையடையும்" என்கிற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும்.   குழந்தை பொம்மைக்காகவும், சில உணவு பொருட்களுக்காகவும் அழும் .. .. அவை கிடைக்கலாம். ஒவ்வொரு நிலையிலும் தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் மாறும்.   அவை கிட்டுவதானால் மட்டுமே, சந்தோசம் பொங்குவதில்லை! வாழ்க்கை முழுமை அடைவதில்லை.  

Set in future age, an unmanned space probe returns from Mars to Earth orbit with soil samples potentially containing evidence of extraterrestrial life. The probe is intercepted by the International Space Station, whose six-member crew retrieves its samples. Exobiologist Hugh Derry revives a dormant cell from the sample, which quickly grows into a multi-celled organism that American school children name "Calvin." Derry realises that Calvin's cells can change their specialisation, acting as muscle, neuron, and photosensory cells all at once  .. .. .. Science fictions are interesting and that is the story line of “Life” an  American science fiction horror film directed by Daniel Espinosa, written by Rhett Reese and Paul Wernick.  The film follows a six-member crew of the International Space Station that uncovers the first evidence of life on Mars.  In life, there are so many unanswered questions, while the Questions on ‘Life’ are more intriguing!.  

Intuitively, there should be a relationship between the  chance of death and how rapidly and completely one can recover from illness. This parameter is a measure of human ability to maintain homeostasis - normal physiological equilibrium - and is known as resilience. In fact, ageing can be defined as the loss of ability to maintain homeostasis. Typically, the younger the person, the better they are at recovering rapidly from illness.  

Life expectancy is a statistical measure of the average time an organism is expected to live, based on the year of its birth, its current age, and other demographic factors like sex. The most commonly used measure is life expectancy at birth (LEB): -  Cohort LEB is the mean length of life of a birth cohort (all individuals born in a given year) and can be computed only for cohorts born so long ago that all their members have died. Period LEB is the mean length of life of a hypothetical cohort assumed to be exposed, from birth through death, to the mortality rates observed at a given year.  

In the modern era, with advanced medical facilities, people expect to live around 80 – 100 .. .. there would always be some, who defy all such notions and live over 100 Another approach to figuring out how long we can live is to look at how our organs decline with age, and run that rate of decline against the age at which they stop working.   

திருமழிசை ஆழ்வார் - அவதாரஸ்தலம் திருமழிசை

சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) வழியாக திருவள்ளூர்திருப்பதி செல்லும் பாதையில் அமைந்துள்ள ஊர் "திருமழிசை".  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு காப்பியங்களில் பாடப் பெற்ற பல்லவர் காலத்தில் புகழ் பெற்ற புண்ணிய க்ஷேத்ரம்  திருமழிசை.   இவ்வூரில்  ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோவில் அழகுற அமைந்துள்ளது.  திருமழிசை பேரூராட்சி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.  திருமழிசையின் ரியல் எஸ்டேட் சந்தையில் மலர்ந்து வரும் பல திட்டங்களில் மாநில அரசின் மிகப்பெரிய சாட்டிலைட் டவுன்ஷிப்  முக்கியமானது.

- உலகுமழிசையும் உள்ளுணர்ந்துஉலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் “மாநீர் மழிசை வலிது என பிரசித்தி பெற்ற இத்தலத்தில்   துவாபரயுகம் முதலாழ்வார்கள் அவதரித்த சித்தார்த்தி வருஷம் தை மாசம்  கிருஷ்ண பக்ஷம் பிரதமை திதி கூடிய மகம் நட்சத்திரத்தில்பார்க்கவ முனிவருக்கும் கநகாங்கி என்கிற அப்ஸரஸ் ஸ்த்ரீக்கும் குமாரராக  திருமழிசைப்பிரான் அவதரித்தார். இவர் ஸுதர்சனமென்னும் சக்கரதாழ்வாரின் திரு அம்சம்.  




For Srivaishnavaites, Azhwaars and their birthdays  are of great significance.    Bhakthisarar,  well known as Thirumazhisai Azhwar was born in Thirumazhisai and hence is hailed as Thirumazhisai Piran.  This  place is near Poonamallee around 20 kms away from Chennai on the Bangalore High Road. Thirumazhisaippiran’s  works are : Naanmukhan Thiruvanthathi (96) and Thiruchanda Virutham (120).  He was born in the Magam nakshathiram of Thai month.  

இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்னவென்று அறிய- சாக்கியம், சமணம், சைவம், நாத்திகம் உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார். சைவசமயத்தைச் சார்ந்திருக்கும்போது திருமயிலையில் பேயாழ்வார் இவரை திருத்திப் பணி கொண்டார்.   பக்தியில் தலை சிறந்தவராக இவர் விளங்கியதால் முக்கண் மூர்த்தியான சிவபெருமான் இவருக்கு பக்திசாரர் என திருநாமம் சாற்றினார். 

இவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் : 2 -  நான்முகன் திருவந்தாதி (96);  திருச்சந்த விருத்தம் (120) ஆக மொத்தம் 216 பாசுரங்கள். இவரை "துய்ய மதி பெற்ற" என ஸ்ரீமணவாளமாமுனிகள் கொண்டாடுகிறார்.  திருமழிசை ஆழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம்  "கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும் " என பெருமையுடன் அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது.  இதோ இங்கே *திருச்சந்தவிருத்தத்தில்* இருந்து ஒரு பாசுரம் :    

வாள்களாகி  நாள்கள்  செல்ல நோய்மை குன்றி  மூப்பெய்தி

மாளுநாளதாதலால்  வணங்கி வாழ்த்தென் நெஞ்சமே

ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்ததன்றியும்

மீள்விலாத போகம்  நல்க வேண்டும்   மால பாதமே. 

ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே, நம்மை காப்பற்றவல்லன். 24 மணிகள் கொண்ட ஒவ்வொரு தினங்களும்,  நமது ஆயுளை அறுக்கும் வாள்கள்போன்று கழிய,  பலவகை வியாதிகளாலே சரீரம் பலவீனமடைந்து,  கிழத்தனமும், மனச்சோர்வும், நம்மை கவனிப்பாரில்லையே என சோர்ந்து   மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது என பயமும், பதைபதைப்பும் வரும் முன்னரே, எம்பெருமான் ஸ்ரீமன் நாரணனுக்கு  ஆட்பட்டிருப்பதே நன்மையென்று நன்கு உணர்ந்து,  நம்பெருமாளை தொழுது ஏந்துவோம்.  எம்பெருமானின்  திருவடிகளே 'மீள்வு இலாத போகம்' - மறுபடி திரும்பி வருதலில்லாத நித்யபோகம்.  அதை எனக்கு நல்குவீராக என எம்பெருமானிடத்திலே மனமுருகி பிரார்திப்போம்.

On his sarrumurai day, at  Thiruvallikkeni divyadesam, Azhwar had purappadu with Sri Gajendra Varadar.  Here are some photos taken during today’s purappadu  

adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
28th  Jan 2024.  













No comments:

Post a Comment