To search this blog

Wednesday, January 3, 2024

Thiruvallikkeni Iyarpa Sarrumurai 2024

மலைபடுகடாம்  .. .. இதை கேட்டவுடன் உங்கள் எண்ண ஓட்டம் என்ன ?  .. ..  தமிழ் நன்கு அறிவீரா? – 2.1.2024 இன்று ஸ்ரீவைணவ திவ்யதேசங்களில் 'தமிழ் சிறப்பு'  கொண்டாட்டம்.

 


After 20 days bonanza of darshan and hearing Arulicheyal of  Adhyayana Uthsavam comprising of Pagal Pathu, Vaikunda Ekadasi, Irapathu, festivities culminate  with Iyarpa Sarrumurai – during this great Uthsavam, “Naalayira Divaprabandham’ is rendered entirely.  

During Pagal pathu, it is the 1st and 2nd Aayiram pasurams including : Periyalwar Thirumozhi, Thiruppavai, Nachiyar Thirumozhi, Perumal Thirumozhi, Thiruchanda Vrutham, Thirumaalai, Thirupalliyezuchi, Amalalathipiraan, Kanninum Chiru thambu, Thirumozhi, Thirukurunthandagam, ThiruNedumthandagam are recited in the  afternoons.  

The Irapathu is hailed as ‘Thiruvaimozhi Thirunaal’ when after the purappadu, daily one hundred from Thiruvaimozhi  are rendered everyday.   On day 10, it is  the last canto ‘Patham Pathu’ of Swami Nammalwar, which speaks of ‘entering Vaikundam’ by all ‘vaikuntham puguvathu mannavar vithiye’ in the pasuram of  Nammalwar. 

 


The day after the culmination of Irapathu,  comes “Iyarpa Sarrumurai” when all pasurams of Iyarpa are being rendered.  2.1.2024 it was the Iyarpa sarrumurai at Thiruvallikkeni.  At the Thiruvaimozhi Mandapam, there was the grand golu of all Azhwargal and Acharyas and in the centre was Lord Parthasarathi.  Divyaprabandha goshti started around 0500 pm  ~ the pasurams forming part of the Moondravathu Aayiram, known as Iyarpa : Muthal Thiruvanthathi,   Irendam Thiruvanthathi, Moondram Thiruvanthathi, Nanmugan Thiruvanthathi, Thiruvirutham, Thiruvasiriyam, Periya Thiruvanthathi, Thiruvezhuk koorrirukkai, Siriya Thirumadal, Periya Thirumadal and Iramanuja Noorranthathi [also known as Prabanna Gayathri] of Thiruvarangathu Amuthanar were all rendered.

தமிழ் இலக்கியம் பல்லாயிரம்  ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன.  இலக்கியம் ஒரு கலை. கலையென்பது  சொல்லுகிற  செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது;   பழந்தமிழில்  ஆடல், பாடல், இசை அல்லது இயல், இசை, நாடகம் என்று மூன்று கலைகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் தழுவியும் வருபவையாகக் கூறப்படுகின்றன. இயல் என்பது பாடல் அல்லது கவிதையைக் குறிக்கும். இந்த மூன்று கலைகளும் சேர்ந்து முத்தமிழ் என்று சொல்லப்படுகிறது. 

முத்தமிழில் - இயல் என்னும் தமிழ்,  இயல்பாகப் பேசப்படுவதும் எழுதப்படுவதுமாகியது. திவ்யப்ரபந்தத்தில் மூன்றாவது ஆயிரம் " இயற்பா" -இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா.  நமது ஆச்சார்யரான சுவாமி நாதமுனிகள் நாலாயிரம் பாசுரங்களையும் இயல், இசைக்குத் தக்கவாறு பிரித்தார். இப்பகுப்பினைச் செப்பும் தமிழை இயலிசையிற் சேர்த்து என்று வடிவழகிய நம்பிதாசரின் குருபரம்பரையும்     குறிப்பிடுகின்றது.  சுமார் ஆயிரம்  பாடல்கள் இயற்பாவாகவும் மற்றையவை இசைப்பாவாகவும்  வகுக்கப்பட்டிருக்கின்றன. 

இயற்பா :  முதல் திருவந்தாதி (ஸ்ரீபொய்கையாழ்வார்); இரண்டாம் திருவந்தாதி (ஸ்ரீ பூதத்தாழ்வார்); மூன்றாம் திருவந்தாதி (தமிழ் தலைவன் பேயாழ்வார்); நான்முகன் திருவந்தாதி (திருமழிசைப்பிரான்); திருவிருத்தம் (ஸ்வாமி நம்மாழ்வார்); திருவாசிரியம் -  (ஸ்வாமி நம்மாழ்வார்); பெரிய திருவந்தாதி -  (ஸ்வாமி நம்மாழ்வார்);  திருவெழுக்கூற்றிருக்கை; சிறிய திருமடல் & பெரிய திருமடல் (திருமங்கை மன்னன்) - ஆகிய பாசுரங்களின் தொகுப்பே இயற்பா  ! 

இந்த பதிவின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட 'மலைபடுகடாம்' - சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.  இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர். நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந்நூற்பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. 
The photo at the start is a screengrab of Iyarpa sarrumurai at Thiruvallikkeni divaydesam in 2021.  அத்யயன உத்சவத்தின்  அத்யந்த நாயகனான ஸ்வாமி நம்மாழ்வாரின் 3 படங்கள் இங்கே.  மூன்றாவது படம் - இராப்பத்து சாற்றுமுறை அன்று வைகுண்டம் புகும் கவசம் இல்லா திருமேனி.

 
~ adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
2nd  Jan 2024.

 

  

No comments:

Post a Comment