To search this blog

Wednesday, February 2, 2022

Thiruvallikkeni Thai Sravana purappadu 2022

The World is in crossroads !  From Mar 24, 2020, India went into lockdown and so did most parts of the globe.  By the end of the year, there was some relief, only to peak again in a few months – the world is getting used to living with it but that fragile peace too is lost by another - the Omicron variant of coronavirus has been spreading fast across the world,  becoming the dominant strain in the United States.   

கொரோனா முன்னரும், பின்னரும், மனிதகுலம் தங்கள் நோய்க்கு மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு குணம் அடைய முயற்சிக்கிறது.   மருந்து  என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தல் என்பது மருத்துவத்துறையின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது.  நோய்வாய்ப்பட வேண்டுமென்று யாருமே விரும்புவதில்லை. அதனால்தான் சளி, காய்ச்சல், தலைவலி போன்ற என்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் முடிந்தவரை அதனை விரைவில் மாத்திரைகள் மூலமே  குணப்படுத்த  முயல்கிறோம்.    

அதிகமாக மாத்திரை சாப்பிட வேண்டாம் என மூத்த குடிமக்களை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சராசரியாக மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரும் தினசரி 8 மாத்திரைகள் சாப்பிடுவது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.  ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது... உண்மை! உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.   



ஸ்ரீவைணவம் ஓர் எளிய மார்க்கம். அருமருந்து (பெ)- மிகச் சிறந்த மருந்து; effective remedy.  மேலும் அருமையான மருந்து, கிடைத்தற்கரிய மருந்து எனவும் கொள்ளலாம்.  நம் பிணிகளுக்கு எல்லாம் அருமருந்து ஸ்ரீமன் நாராயணன் ஒருவனே !    மருந்து என்றது – உலகத்தில் ஔஷதமானது வியாதிகளைப் போக்குவதுபோல எம்பெருமானுடைய திருவடிகளும் நம்முடைய விரோதிகளைப் போக்கவல்லது. 

அநாதிகாலமாக நம்முடைய ரக்ஷணத்தொழிலிலேயே ஊன்றியிருக்கிற எம்பெருமானது திருவடிகளே உபாயமும் உபாயமுமாம் என்கிறார் நம் தமிழ்த்தலைவன் பேயாழ்வார்.   அன்று உலகம் தாயோடைய அடிதானே மருந்தும் பொருளும் அமுதமும் - அவனே மருந்து, அவனே செல்வம், அவனே என் அமுதம், அவன் யார்? வேங்கடவனாக நிற்பவன், உலகமே தன்னுள் கொண்ட விஸ்வரூபன்,  நம்மை என்றென்றும் ரக்ஷித்து காப்பவன்.  இதோ இங்கே  பேயாழ்வாரின் பக்தி சுரக்கும் வார்த்தைகளில் இங்கே ஒரு பாசுரம் : 

மருந்தும் பொருளும் அமுதமும் தானே,*

திருந்திய செங்கண்மாலாங்கே, - பொருந்தியும்

நின்றுலகமுண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,

அன்றுலகம் தாயோன் அடி.  

இவனே பரமபுருஷனென்று தெளிவாகக் கண்டு கொள்வதற்குக் காரணமான  செந்தாமரை போன்ற திருகண்களையுடைய ஸர்வேச்வரனாயும், உலகத்தைக் காத்தருள்வதாகிய அக்காரியமொன்றிலேயே, நின்று பொருந்திய உலகங்களை பிரளயங்கொள்ளாதபடி தானே உண்டு திருவயிற்றிலே வைத்துக் காத்தவனாயும்,   முன்பொரு காலத்தில் - மாவலியிடத்தில் யாசித்துப் பெற்று மூவடியாலே உலகங்களை யெல்லாம் தாவியளந்தவனாயுமுள்ள எம்பெருமானுடைய திருவடிகளே - சிறப்பான மருந்தாம்.  அவையே  ஸம்ஸாரவியாதியையும்   மற்றெல்லா  கடினங்களையும் தீர்க்க வல்லன, அவையே சிறந்த செல்வம், அவையே போக்யமான அம்ருதம்.  

For us, the lotus(red) eyed Sriman Narayana Himself is the medicine; its innate healing power; the Sweet Nectar – the power of wellbeing as well.  He is one who made the Universe, swallowed, remade,  and went on to measure it, by seeking a gift of three feet of land …..  and to Him we offer obeisance.

1st Feb 2022 was Thai Thiruvonam – Sri  Parthasarathi perumal had siriya mada veethi purappadu.  Reminiscing the glorious past, here are some photos of Thai Thiruvonam purappadu dating back to 16/1/2010.

 
adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
1.2..2022  





1 comment: