To search this blog

Sunday, February 6, 2022

Sri Andal Neerattam 2022 - *கரிய குருவிக் கணங்கள்*

 For Srivaishnavaites, life is blissful living in Divyadesam and doing some kainkaryam to Emperuman.


In concrete jungles of cities too, there are so many birds – as I stand in my terrace – I could see so many varieties of them – though people like me could only identify Crows, Sparrows, Parrots, Pigeons, Cuckoos, Vultures, Mynah, Woodpeckers and .. .. .. but could observe so many ! Bird-watching, the observation of live birds in their natural habitat, a popular pastime and scientific sport that developed almost entirely in the 20th century. In the 19th century almost all students of birds used guns and could identify an unfamiliar species only when its corpse was in their hands. Modern bird-watching has been made simple and more fascinating  with availability of gadgets - of optical aids, particularly binoculars, which enabled people to see and study wild birds, without harming them, better than ever before.  .. .. and now there are specialized web platforms.

தேசிய கவி சுப்ரமண்ய பாரதி உயிர் வாழ்ந்த காலத்தில் மிகவும் வறுமையில் வாடினார்.  அவர் தேசிய உணர்வை ஊட்டியவர், கூடவே பறவைகளையும் பேணினார் - காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்றும் பாடினார்.  நாம் அண்ணாந்து பார்க்கும் மரங்களில், காக்கைகளும் சிட்டுக்குருவிகளை அடக்கம்.   பல சிறிய பறவைகளை கண்டு இவை  குருவியா, இல்லையா..?’ என்று  குழப்பம் வரும்.   ஆண்டாள் அருளிய திருப்பாவை ஏழாம் பாசுரத்தில், ""கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து / பேசின பேச்சரவம் கேட்டிலையோ?'' என்று "ஆனைச் சாத்தன்' என்னும் பறவையைப் பற்றிய  குறிப்புக் காணப்படுகிறது. 

Robots are quite interesting ! ~ in Rajni starrer Enthiran (Robot) – Chitti, the humanoid robot would read a full book by just scanning it in his face for a couple of seconds.  That perhaps was a thought that Sujatha wrote in ‘Mr Munsamy oru  1.2.1’ – in which a roadside rickshaw puller acquires super memory by an injection that were to lost only for a short period !!   The film had Super Star Rajinikanth in dual roles, as a scientist and an andro humanoid robot, alongside Aishwarya Rai.   The story-line revolved around the scientist's struggle to control his creation, the android robot whose software was upgraded to give it the ability to comprehend and generate human emotions.   

Then came the sequel – ‘2.0’ though termed as Science fiction was not all that interesting ! The film follows the conflict between Chitti, the once dismantled humanoid robot, and Pakshi Rajan, a former ornithologist who seeks vengeance upon cell phone users to prevent avian population decline.  The movie starts with an unknown man walking up to a cell tower and hanging himself, before shifting to Dr. Vaseegaran, who has recently built a new android humanoid assistant named Nila .. .. ..  Shortly after, all the mobile phones in the city begin to fly into the sky, throwing the public into a panic.  

You may or may not have watched this ‘glossy black bird’  with a distinctive forked tail and perched on a bare branch was looking for something when it suddenly flew and was next seen  hovering over a Tawny eagle, more than twice his size and much stronger. This  bird, known as the black drongo was unfazed and fearlessly fighting off the eagle from his territory.   Despite their small size, the black drongos are aggressive and fearless. They display mobbing behaviour and routinely attack birds of prey when their nests or young are threatened. It is also called the king crow, not because he is "as black as a crow" but because of this bird's courage to put crows, even kites and eagles, to flight should they venture out to plunder eggs and hatchlings.

கேளடா மானிடவா !  .. ....  எம்மில் கீழோர் மேலோர் இல்லை  ~ என்ற பாரதியார் பாட்டினை கேட்டு இருப்பீர்.   அது 'மகாகவி சுப்பிரமணிய பாரதியின் "குருவி பாட்டு.

அருவி போலக் கவி பொழிய - எங்கள் அன்னை பாதம் பணிவேனே

குருவிப் பாட்டை யான்பாடி - அந்தக் கோதைப் பாதம் அணிவேனே.

என்பன அவர்தம் வரிகள்.  1909 ஜனவரி 1ஆம் தேதி, பாரதியாரும் சில இளைஞர்களும் சரஸ்வதி விலாச சபையில் கூடியிருந்த சமயம் சபை அங்கே  குதூகலமாய் பறந்து சென்ற  குருவிகளின் இன்பகரமான வாழ்க்கை பற்றி  பாரதியார் பாடிய பாடலாம் இது. 

திருவல்லிக்கேணி தற்சமயம் கான்க்ரீட் காடாக இருந்தாலும், சில இடங்களில் மரங்கள் உள்ளன.  எங்கள் வீட்டு மாடியில் அருகில் உள்ள அரசமரத்தில் அழகான பச்சை கிளிகளையும், கொஞ்சும் புறாக்களையும், குயில்களையும், மைனாக்களையும்,  கீச்சு கீச்செனும் சிட்டுக்குருவிகளையும், இன்ன பிற குருவி வகைகளையும் காணலாம்.  அவை தம் இனிய சத்தம் மனதை கிறங்க வைக்கும்.   ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கண்டது கருங்குறுவியை  .. .. .. அவை கீசு கீசவில்லை !  ~  திருமாலின் வரவை சொல்லினவாம் !!!

பக்தி ஸ்ரத்தைக்கு உதாரணமாய் திகழ்ந்த ஆண்டாள் சிறந்த கவிதாயினி.  அதிகாலையில் என்ன நிகழும் ?  எங்கே என்பதும் முக்கியம் !! ஆண்டாள் பிறந்தவூரில் திர்யக்குக்களுங்கூட எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டிருக்குமாம்.  இதையே ஆண்டாள், மிக அழகாக – கருங்குருவிகள் கூட்டங் கூட்டமாக காலை எழுந்திருந்து இருந்து எம்பெருமானுடைய வரவை கொண்டாடி மகிழுமாம் என சிலாகிக்கிறார்.



கருங்குருவி  -  கரிச்சான் குருவி எனலாம்  (Drongo) என்பது சிறிய வகைப் பறவையாகும். இது பரவலாக தென் மற்றும் தென்கிழக்காசிய பிரதேசங்களில் காணப்படுகின்றது. வளர்ந்த கரிச்சான் பறவைகள் கடும் சாம்பல் நிறம் கொண்டு, ஆழமாக பிரிக்கப்பட்ட (இரட்டை வால் தோற்றம்) நீண்ட வாலைக் கொண்டது. இதனால் இதை ஊர்ப்புறங்களில் இரட்டைவால் குருவி எனவும் அழைப்பர். இவ்வினங்களில் துணையினங்கள் சாம்பல் நிற இறகு நிறத்தில் காணப்படுகின்றன. சில இனங்கள் தலையில் வெள்ளை குறியுடன் காணப்படுகின்றன. இளம் பறவைகள் மங்கலான பழுப்பு சாம்பல் நிறத்தில் காணப்படும். கரிச்சான்கள் கரையான், வெட்டுக்கிளிகள், குளவி, எறும்பு, புழுக்கள் போன்றவற்றை விரும்பி உண்ணும்.

It is  black drongo (Dicrurus macrocercus) (கருங்குருவி) seen commonly across the country, often seen perched high on power cables and exposed branches, keeping a keen eye out for passing insects, its chief form of nourishment.     A skilled mimic of other species, and a strong songster in general, delivering a wide range of pleasant fluty calls, harsh chattering, nasal notes, and high sharp whistles.  It can also be spotted perched on grazing animals and picking grub off their hides.  Black drongo (Dicrurus macrocercus) is a small Asian passerine bird of the drongo family Dicruridae. It is a wholly black bird with a distinctive forked tail perching conspicuously on a bare perch or along power or telephone lines.    To the unobservant, the black drongo could appear rather unremarkable. Apart from the swift, balletic dives that it makes to pursue its prey, nothing about the drongo’s physical appearance — the small squat body, the glossy black feathers or even the distinctive forked tail — is spectacular. But to merely glance and then ignore this bird is to lose sight of a bird truly remarkable, fearless and aggressive.

Back in 1928, an English police officer and ornithologist in India named Hugh Whistler, called it the King Crow, not because it was related to crows, but because it surpassed the menacing behaviour of the Corvidae (Crow) family. At about 28 cm, it has a black plumage, its glossiness bordering on blue iridescence in favourable light. It has a small white spot at the base of the bill gape (base of the bill), called a rictal spot, a distinguishing mark that separates the Black Drongo from others in the family. Sexes look alike and the bird has a red iris, with its bill and legs fashionably all black.


இதோ இங்கே கோதைப்பிராட்டியின் நாச்சியார் திருமொழியில் இருந்து ஒரு பாசுரம் : 

காலை எழுந்திருந்து*  கரிய குருவிக் கணங்கள்*

மாலின் வரவு சொல்லி*  மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ*

சோலைமலைப் பெருமான்*  துவாராபதி எம்பெருமான்*

ஆலின் இலைப் பெருமான்*  அவன் வார்த்தை உரைக்கின்றதே*.

ஆண்டாள் பிறந்த திவ்யமான ஸ்ரீவில்லிபுத்தூரில் புள்ளினங்களும் கூட  எம்பெருமானைப்பற்றின சிந்தனையே கொண்டவையாக இருக்குமாதலால்,  சில கருங்குருவிகள் காலை யெழுந்திருந்து கூட்டங் கூட்டமாக பறந்து வந்து,  இருந்து எம்பெருமானுடைய வரவை தங்கள் குரலில் இனிமையாக உரைப்பதாக  ஆண்டாள் நாச்சியார் உணர்கிறார்.   இப்பறவையினங்கள் - சோலைமலை எனும் திருமாலிருன்ச்சோலை வாழ் துவராபதி எனும் துவாரகையை ஆண்டு ஆலிலையில் பள்ளி கொண்ட எம்பெருமான் கண்ணன் உடைய வார்த்தைகளையே உரைப்பதாக ஆண்டாள் அனுபவிக்கிறார்.  அவ்வெம்பெருமானிடமே தான் சென்று சேர பிரார்திக்கின்றார்.

Celebrating Sri Andal Neeratta uthsavam, here are some photos from Neeratta uthsava purappadu day 6 on 10th Jan  2022.  Kothaipiratti had purappadu from Temple to neeratta mandapam, had thirumanjanam and returned back to Temple.  There was no thiruveethi purappadu around Kairavini thirukulam or mada veethi.

adiyen Srinivasa dhasan,
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
6th Feb 2022.







1 comment:

  1. Nice writing of birds with our sri. Andal pasuram. So many birds in nearby marudhani maram..... Surprising!

    ReplyDelete