To search this blog

Thursday, October 28, 2021

Thiruvarasu of our Acaryan Sri U Ve Doddachar Swami

Thiruvarasu of  our Acaryan Sri U Ve Kovil Kanthadai Chandamarutham  (Doddachar) Swami

 



For a Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional “kainkaryam cleanses the soul of the performer. One must adore and be attached to their Acharyan – it is ONLY the ACARYAN who  will lift us from all earthly evils.   ~ and everyday we must think of our Greatest Acharyar – Periya Jeeyar - Saint Vara Vara Muni, the last of the ‘Poorvacharyars’ in the grand galaxy of preceptors, known as Alagiya Manavala Nayanar, before he was ordained the holy order of  Sanyasa.  It is none other than our most adored Acharyar  “Swami Manavala Mamunigal” - the reincarnation of Sri Ramanuja who was himself an incarnation of Adisesha, whose birth we would be grandly celebrating on Aippaisi thirumoolam falling on 8.11.2021.

Recently had the fortune of visiting Sri Mushnam …. –besides having darshan of Sri VarahapPerumal, went to Nithyapushkarini and had darshan of our Acaryar thiruvarasu .. .. ..

 ஸ்ரீ:

ஸ்ரீமதே  ராமானுஜாய நம :

ஸ்ரீ ஸ்ரீநிவாஸ மஹாகுரவே நம : 

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின், அடிப்படையே குருபரம்பரை தான். நம் ஒவ்வொரு செயலும் மங்களம் பெறச் செய்வது, ஆசார்ய ஸம்பந்தம் மட்டுமே. ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது

Sri Vaishnava Sampradhayam places great emphasis on following the path shown by Acharyan.  Our  Sampradhayam is proud of the rich lineage of greatest of Acharyas who have guided us towards salvation.  One can easily discern from the  Great ‘Thaniyan’ of Swami Koorathazhwaan that we observe daily - “Lakshminatha samarambaam, Nathayamuna madhyamam – Asmath Achaarya paryanthaam, vanthe Guru parambaram”.   Following the sampradhaya steps, our dasa thirunamam is ‘Srinivasa dhasan’


நமது ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரை ஸ்ரீமந்நாராயணனிடமிருந்து தொடங்குகிறது; பிராட்டியார், சேனை முதலியார், ஸ்வாமி நம்மாழ்வார் என்னும் வரிசையில் நாதமுனிகள் யோகதசையில் வகுளாபரணருக்குச் சீடரானார். ரஹஸ்யார்த்தங்களை தங்கள் சிஷ்யர்களுக்கு உபதேசிக்கு முன்பு அந்த சிஷ்யர்கள், தங்கள் க்ருபைக்குப் பாத்ரமானவர்களா என்று பரிசீலித்து, தங்கள் மனம் நோகாதவண்ணம் , அதே சமயம், தங்கள் மனம் உகக்குமாறு தங்களைப் பின்பற்றுவார்கள் என்று உறுதி செய்து கொண்ட பிறகே உபதேசம் செய்வார்கள். இது ஓராண் வழி ஆசார்யர் சிஷ்யர் என வாழையடி வாழையாக வந்த மரபு. 

நம் சம்பிரதாய செம்மல் யதிகட் இறைவன்   ஸ்ரீபாஷ்யகாரர் அவதரித்து, ஸம்ஸாரிகளிடம் கருணை கொண்டு, அந்த சிஷ்யர்கள் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடவேண்டும் என்கிற வாத்ஸல்யத்துடன், அவர்களைத் திருத்தி, உபதேசங்கள் செய்யலானார். அவர் நமது சத்சம்ப்ரதாய விஷயங்கள், அவற்றில் ஆசையுடையவர் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என பெரு முயற்சி கொண்டார்.

இணையம், புத்தகங்கள், சமூக வலைத்தளங்கள் என எத்தனை இருந்தாலும், நம்மை எம்பெருமானிடத்திலே இட்டுச்செல்ல வல்லவர் நம் ஆசார்யர் மட்டுமே ! எம்பெருமான் தன்னிச்சையான ஸ்வதந்த்ரன், பெருங்கருணை காட்டுபவனும் அவனே, ஆகிலும் சேதனர் கர்மங்களுக்கேற்பப் பலன் தருபவனும் ஆகிறான்.  ஆகவே, இவ்விடத்தில்தான் ஓர் ஆசார்யரின் தேவை உணரப்படுகிறது, உணர்த்தப் படுகிறது. எம்பெருமான் , சேதனர் பொருட்டான தன் இடையறாத நல்லெண்ணத்தினால், சேதனர் உய்ய பல வாய்ப்பு வழிகளை ஏற்படுத்தி, ஒரு சதாசார்யனை அடைவித்து, அவ்வாசார்யர் மூலமாக ஐஹிக மோகங்களிலிருந்து விடுவித்து தன்னையும் தன் கருணையையுமே பற்றி உஜ்ஜீவனம் அடையச் செய்கிறான். 

நம் ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தின் அடிப்படையே - ஆசார்யர்கள்தான்.  பெரிய பெருமாள்; ஸ்ரீரங்கநாச்சியார், சேனை முதல்வர், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பி, எம்பெருமானார் இராமானுசர், கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை, பிள்ளை லோகாச்சார், திருவாய்மொழிப்பிள்ளை, பெரிய ஜீயர் எனும் நம் மணவாள மாமுனிகள், வானமாமலை ஜீயர் சுவாமி,  தொட்டையங்காரப்பை சுவாமி, சண்டமாருதம் சுவாமி எனும் பெரிய சுவாமி தொட்டையாச்சர் என எங்கள் ஆச்சார்யர் குலம் நீள்கிறது.  

சுவாமி முதலியாண்டான் திருவம்சத்தில் கந்தாடைநாயனுக்கு 1.2.1543ல் ஸ்வாமி தொட்டையாச்சார்யார் - தேவராஜகுரு என்கிற தோழப்பரப்பை என திருவவதாரம் செய்தார். சில நூறாண்டுகள்  முன்பு நம்  ஸ்வாமி தொட்டாச்சார்யார்  அக்காரக்கனியாக (இனிப்புச் சுவையுடைய பழம் போன்ற) போற்றப்படும் ஸ்ரீ யோகநரசிம்மருக்குப் பூஜைகள் செய்துவந்தார். பெருமாளிடம் பக்தி கொண்ட அவர் ஆண்டுதோறும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவத்திற்குச் சென்று பெருமாளைத் தரிசிப்பது வழக்கம். ஒரு முறை அவரால்  பிரம்மோற்சவத்திற்குச் செல்ல இயலவில்லை. மூன்றாம் நாள் கருட சேவை உற்சவத்தன்று ஸ்வாமி தொட்டாச்சார்யார் சோளசிம்மபுரம் என்ற தற்போதைய சோளிங்கரில் இருந்தவாறே  'ஸ்ரீ தேவராஜ  பஞ்சகம்' எனும்  ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். இதே நேரத்தில் காஞ்சியில் வரதராஜப் பெருமாள் கருட வாகனரூபமாகத் திருவீதி உலா செல்வதற்காகக் கோயில் வாயிலுக்கு வந்தார். சோளிங்கரில் இந்த ஐந்து சுலோகங்களைப் பாடி முடிக்கவும், காஞ்சியில் கோயில் வாயிற் கதவு மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது. மூடிய கதவுகளுக்குப் பின்னால் கருட சேவையில் இருந்த பெருமாள் அப்படியே சோளசிம்மபுரத்துக்கு  எழுந்தருளி தொட்டாச்சார்யாருக்குக் காட்சி கொடுத்தார். இன்றும் இது  **ஸ்வாமி தொட்டாச்சார்யார் சேவை** என்று காஞ்சியில் வழங்கப்படுகிறது. சோளிங்கபுரத்தில் காட்சி அளித்த பெருமாள், தக்கான் குளக்கரையில் கருட சேவையிலேயே கோவில் கொண்டுள்ளார்.  அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவம்சத்திலே அவதரித்தவர் நம் ஆசார்யர்.

சுவாமி வேதாந்தாச்சார் அருளிய சததூழனிக்கு சண்டமாருதம் என்ற வியாக்கியானம் அருளிச்செய்தார்.  'சண்டமாருதம்' என்றால் புயல் காற்றில் கூட அணையாத விளக்கு என்று பொருள்.  நம் சுவாமி அப்பய்ய தீக்ஷிதர் என்ற சிவாத்வவைதியை  சோழசிம்மபுரம் திருதேரடி மண்டபத்தில் 7 நாட்கள் வாதப்போர் செய்து வென்றவர்.  நமது சம்பிரதாயத்தின் தூண் ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் சுவாமி என்கிற பெரிய ஸ்வாமி தொட்டையாச்சார்  (ஸ்ரீ மஹாசார்யர்) 1-2-1543ம் ஆண்டு அவதரித்தார். சோளஸிம்ஹபுரம் எனும் திருக்கடிகை; தில்லை திருச்சித்திரகூடம் போன்ற பல திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்து, நிர்மாண புணருத்தாரணங்கள் செய்வித்தார்.   நம் ஒன்றான ஸ்வாமியின் தனியன் :

வாதூல ஸ்ரீனிவாஸார்ய தனயன் வினயாதிகம்

ப்ரஜ்ஞாநிதிம் ப்ரபத்யேஹம் ஸ்ரீனிவாச மஹாகுரும் !!

நம் ஸ்வாமி வயோதிகத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் கைங்கர்யங்கள் சிறப்பாக செய்து வந்த சமயம், பரமபத பிராப்தி வருவதை உணர்ந்து ஸ்ரீமுஷ்ணம் நித்ய புஷ்கரிணீ கரையில் தனது சிஷ்யர்களுடன் எழுந்தருளி, ஆபத்சந்நியாஸம் தாமாகவே ஏற்று 3.10.1607 எம்பெருமான் திருவடி நிலை அடைந்தார்.   

நம் திருமாளிகை சிஷ்யர்கள், அவரை அங்கேயே திருப்பள்ளிப்படுத்தி திருவரசு நிர்மாணித்தனர்.  கர வருஷம் திருமாசி உத்திராட நன்னாளில் (19.2.2012) நம் சுவாமி  ஸ்ரீ உ.வே. கோயில் கந்தாடை  சண்டமாருதம் வேதாந்தச்சார் சுவாமி இவ்விடத்தை புனருத்தாரணம் பண்ணி சிறக்க வைத்தார்.

For sure, ‘Thiruvarasu’ is not any ordinary structure …… it is embodiment of our Acharyar.  Thiruvarasu becomes the  nerve cente for realization of our glorious Acharyar’s ideals – preaching and practicing what He taught us. 



We fall at the feet of our Acaryar – varthamana Thoddaiyachar swami (Thoddachar) - Shri U.Ve. Koil Kanthadai Chandamarutham Kanthadaiyandan  @ Yoga Narasimhan Swami.  His thaniyan is :

ஸ்ரீமத்வாதூல குலவாரிதி பூர்ணசந்த்ரம்*  ஸ்ரீமந்மஹார்ய சரணாம்புஜ சஞ்சரீகம் |

ஸ்ரீசிங்கரார்ய கருணாப்த ஸமஸ்தபோதம்*  பக்த்யாச யோகந்ருஸிம்ஹ குரும்ச்ரயாமி||

 

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் !

நம் ஆச்சார்யன் திருவடிகளே சரணம் !!

 

 

adieyn Srinivasa dhasan (Mamandur Veeravalli Srinivasan Sampathkumar). 

28th Oct 2021. 

PS :

1.    நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திலே  ஆழ்வார்கள், ஆசாரியர்கள், பரமபத பிராப்தி பெற்ற பிறகு, அவர்களை பள்ளிப்படுத்திய இடங்களில் சிறிய சந்நிதிகள்/கோவில்களைக்கட்டி, அதில் அவர்களுடைய திருவுருவச்சிலைகளையும் நிறுவி வணங்குவர். .இவ்விடங்களில் அந்தப் பெரியோர்களின் நல்லாசிகள் என்றும் நிலைத்து அரசாட்சி செய்வதால் இந்தத் திருக்கோயில்களுள்ள இடங்கள், அந்தந்தப் பெரியோரின் பெயரோடு சேர்த்து திருவரசு எனப்படுகிறது... இத்தகைய கோவில்களுக்கு முன்னால் பொதுவாக ஓர் அரசமரம் வளர்க்கப்படும் வழக்கமும் உள்ளதால், இந்தப் பெயர் உண்டானதாகவும் சொல்வர்...சில ஸம்ப்ரதாயத்தினர்   இவ்விடங்களை பிருந்தாவனம் என்பர்.

2.     Srimushnam  is in Cuddalore district situate closer to Virudhachalam, 15 km (9.3 mi); Chidambaram, 30 km (19 mi) &   32 km to Kattumannarkoil. 












2 comments: