To search this blog

Saturday, October 30, 2021

Hailing Swami Manavala Mamunigal Uthsavam 2021

அக்டோபர் 18 ஐப்பசி பிறந்தது .. .. அடிக்கடி மழை பெய்கிறது.. .. சீதோஷ்ணம் மிதமாக உள்ளது - மொத்தத்தில் ஒரு சந்தோஷ சூழ்நிலை.

We are in the state of extreme Bliss !  - the adjective ‘blissful’ would mean -  Extremely happy; full of joy; experiencing, indicating, causing, or characterized by bliss.  .. .. it is the month of Aippaisi and it heralds  rains in Tamil Nadu .. .. it is a time of bountiful goodness – Srivaishnavaites are extremely blissful as alongside Deepavali festival comes sarrumurai of Muthal Azhwargal (Thiruvonam, Avittam & sadayam)  and Thirumoolam marks the birth celebrations of our Matchless AcaryaSwami Manavala Mamunigal.  From today 30.10.2021  starts the glorious 10 day celebrations – Deepavali is on day 6 of the Uthsavam 4.11.2021; Annakkoda uthsavam, the next day and Sarrumurai celebrations (Aippaisi Thirumulam) on Monday, 8.11.2021.

ஸ்ரீ வைஷ்ணவம் எனும்  ஆலமரம் தழைக்க இராமானுஜரின் மறு அவதாரமாக தோன்றினவர்  நம் ஆச்சார்யன் ஸ்வாமி  மணவாள மாமுனிகள் ~ அவரது திருவவதாரத்தால் இந்த ஐப்பசி மாசம் சிறப்புற்றது.  மாமுனிகள் மழைச்சாமி - நம் ஆசார்யன் உத்சவத்தில் நல்ல மழை பெய்து நாட்டையே வளப்படுத்தும். 

மழை .. .. மானுடர்க்கு, பயிர்களுக்கும், உயிர்களுக்கும் கோடை மழை.  பூமியின் சுழற்சி காரணமாக காற்று வீசும் திசை சற்றே விலகும். இதன் விளைவு தான் வடகிழக்குப் பருவக் காற்று. வங்கக் கடல் மேலாக வரும் போது அது நிறைய ஈரப்பசையை எடுத்துக்கொண்டு மழை பெய்விக்கிறது.  மழை இல்லாமல் பயிர் இல்லை; மழை பெய்யாவிட்டால் விவசாயம் இல்லை. 

வானின் கொடையே மழை !! மழை வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும்.   கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம். 

தென்மேற்குப் பருவமழை நிறைய மழையை தரும்.   செய்திகளில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம்.  வானிலை ஆராய்ச்சி மையங்களில் “Rain gauge” என்று கூறப்படும் மழை மானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, 'இத்தனை மி.மீ. மழை பெய்தது' என்று சொல்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள். ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம். எனவே, 10 மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ள வேண்டும். தற்போது பல வகையான தானியங்கி மழை மானிகள் சந்தையில் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவை குறித்து தகவல் தந்துவிடும். 

"ஐப்பசியில் அடை மழை" என்று சொல்வார்கள். தமிழ் பஞ்சாங்கம் பற்றித் தெரியாதவர்களுக்கென சொல்வதானால் ஐப்பசி மாதம் என்பது அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் மத்தி வரை. ஐப்பசியில் அடை மழை என்று சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் டிசம்பர் மத்தி வரை மழை நீடிப்பது உண்டு. அதாவது கார்த்திகை முடியும் வரை மழைபெய்ய வாய்ப்பு உண்டு.   இவ்வாறு பருவம் பார்த்து பெய்வதால் தான் விவசாயம் செழிக்கும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் ஆறு கிணறு குளம் குட்டைகளில் நீர் வளம் பெருகி நல்ல விவசாயம் செய்ய முடியும். 

The eternal place of bliss – the abode of Lord Ranganatha – Thiruvarangam is ‘Periya Kovil’ for devout Srivaishnavaites.   For us everything associated with the reclining Lord Ranganatha is ‘Periya’ (the Big  ~ nonpareil)  ~ the Lord here is Periya Perumal; his consort is Periya Pirattiyar;  the holy bathing [Thirumanjanam] in the month of Aani is ‘Periya Thirumanjanam’ ……….. the Acharyar known as ‘Periya Jeeyar’ is our Swami Manavala Mamunigal who spent a major portion of his life at Thiruvarangam serving the Lord.  

Mamunigal (Nam Periya Jeeyar)  is known as ‘Yathindra Pravanar’ arising out of his irresistible attachment to the lotus feet of Sri Ramanujar known as ‘Yatheendrar’.  Sri  Manavala Mamunigal is the incarnation of Adisesha.  He was born in Alwar Thirunagari, Tamilnadu in AD 1370.  At birth he was known as ‘Azhagiya Manavala Perumal Nayanaar’.  Later he was hailed in very many names such as ‘Yatheendra Pravanar’, Ramyajamathru, Saumyajamatru, Visada-Vak-Sikhamani , Varayogi, Varavaramuni and more….. 

For a Srivaishnavaite, Kainkaryam is essential; Selfless and unconditional “kainkaryam i.e., service to Lord” cleanses the soul of the performer. One must adore and be attached to their Acharyan and only the direction of Acharyar will lift us from all earthly evils – and for Us fallen at the feet called ‘Ponnadiyam Sengamalam’ – Swami Manavala Mamunigal will direct us and take us to salvation.  Those of us who try and uphold the ideals of our religion and its cultural heritage, will sure be benfitted as it then becomes the responsibility of Acharya to take care of Sishya's Atma guna poorthi. 

சீரும் சிறப்புமான அய்ப்பசியில் திருமூலம் - இன்று முதல் பெரிய ஜீயர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை வைபவம் துவங்குகிறது.

"அடியார்கள் வாழ,  அரங்க நகர் வாழ,

சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,

கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,

மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண்டிரும்".

Hailing the start of Mamunigal uthsavam here is a photo of Mamunigal eedu kalakshepam, birth of ‘Srisailesa thayapathram’ thaniyan and some photos of Swami Manavala Mamunigal and Sri Parthasarathi perumal dating back to 2015.

 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
30.10.2021.


  

No comments:

Post a Comment