To search this blog

Sunday, October 17, 2021

Vijayadasami Parvettai purappadu - Vanni maram !!

15th Oct 2021 was significant – it was “Vijayadasami day” – a day for starting education, enterprise and all good things.  Though we could have darshan of Emperuman, there was to be no purappadu.  On Vijayadasami day, there would be ‘parvettai purappadu’ at divyadesams. At Thiruvallikkeni till a couple of days ago, Sri Parthasarathi Perumal astride kuthirai vahanam would visit Vasantha uthsava bungalow where parvettai would be enacted – in recent times, the vanni tree is spruced up temporarily in front of the temple at 36 kaal mantapam .. .. .. today something on Vijayadasami and the significance of the vanni maram.

Telegu tinseldom is to be appreciated - there have been megahit movies based on Ithihasa puranas .. ..  this  film begins with Pandavas triumphs their 12 exiles and starts the 13th year of Agnathavasam [living incognito].  Bhagwan Sree Krishna advises that the Matsya Kingdom, ruled by Virata is the haven for Pandavas living in exile.  Lot happens at this kingdom – it is “Srimad Virata Parvam” -   produced and directed by Nandamuri Taraka Rama Rao under his Ramakrishna Cine Studios banner. NTR did 5 roles – as Bhagwan Krishna, Arjuna, Duryodhana, Brihannala and Keechaka !!


சுமார் 70 அல்லது 80 ஆண்டுகள் முன்,  தேசம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த காலத்தில் தமிழுலகம் அறிந்த சாதனையாளர்களில்  கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, இராஜாஜி, எஸ்.எஸ்.வாசன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஆனந்தவிகடன் பத்திரிகையின் உரிமையாளர் எஸ்.எஸ்.வாசன். அதன் ஆசிரியர் கல்கி என்கிற புனைபெயருடன் அறியப்பட்ட ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.  பிற்காலத்தில், கல்கி கிருஷ்ணமூர்த்தி அவரது நண்பரான எஸ்.சதாசிவம் (திருமதி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அவர்களின் கணவர் ) அவர்களுடன் சேர்ந்து துவங்கிய வார இதழான கல்கியில் வெளிவந்த சரித்திரத் தொடரான பொன்னியின் செல்வன் தமிழில் வெளிவந்த சரித்திர நாவல்களிலேயே மிக பிரசித்தி பெற்றது.   

அதற்கு முன்பே வெளி வந்தது .. ..  "தியாகபூமி" எனும்  கல்கி எழுதிய சமூகப் புதினம்.  ஆனந்த விகடனில் இருபது இதழ்களில் தொடராக வெளிவந்தது. கல்கி இப் புதினத்தில் நிகழ்ச்சிகள் மூலமாகவும், கதைமாந்தர் வாயிலாகவும் காந்தியக் கருத்துகளை வெளியிட்டு சுதந்திர வேட்கையை பரவச்செய்தார்.  1938-1939 களில் இப்புதினம் கோடை, மழை, பனி, இளவேனில் என நான்கு பாகங்களாக வெளிவந்தது.  தொடர் கதை வெளியானபோது பத்திரிக்கையில் அதன் கதை மாந்தர்களை ஒவியங்களில் குறிப்பிடாமல் திரைப்படத்தில் நடிக்கும்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை அச்சிட்டனராம். 

விராடபர்வம் வாசித்தால் மழைவரும் எனும் ஆழ்ந்த நம்பிக்கை

தியாக பூமியின் இரண்டாவது பாகத்தில்  இருந்து ஒரு பகுதி :   நல்லான் சிரித்துவிட்டு, "என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க! மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே!" என்றான்.

     "ஆமாமப்பா, நல்லான்! நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள்? இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்" என்றார் சாஸ்திரியார்.

     சம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. "ஒரு வேளை மழை வந்தாலும் வரும்" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது. 

When  Google India marked the 45th  anniversary of the Chipko movement with a doodle, it was a refreshing flashback to forest communities sacrificing their lives to protect trees from being felled for timber use. One of the first such recorded community protests was at Khejarli village in present-day Rajasthan. In this village, around the year 1730, about 300 Bishnois led by Amrita Devi are said to have sacrificed their lives to protect Khejri trees. The Bishnois, particularly the women in the community, considered Khejri trees (Prosopis cineraria) sacred because of their multi-use benefits.

இந்தியப் பாலைவனங்களின் தங்க மரம்’ எனச் சிறப்பிக்கப்படுவது வன்னி மரம். பாலைவனங்களிலும் வானிலை அதிகம் வறண்டிருக்கும் பகுதியிலும் தாக்குப்பிடித்து வளரக் கூடிய பசுமை மாறாத மரம் வன்னி. இதன் அனைத்துப் பகுதிகளுமே பயன்படுவதால், ‘கற்பகதரு’ என்றும் சொல்வார்கள்.  வன்னி மரம்  சோழ மன்னர்களின் குல மரம் எனும் சிறப்பு உடையது. வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக் கூடியதாம்.  மிக சிறந்த இதிகாசமான மகாபாரதத்தில் விராட பர்வம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.   இந்த கால கட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும்போது, தங்கள் போர் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கின்றது. வன்னி மரம் புனிதமாக கருதப்படுகிறது. மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்ததாக ஏட்டில் உள்ளது.    

வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது.  விருதாச்சலம் விருதகிரி ஆலயத்தில் பழமையான வன்னி மரம் இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளைப் பறித்துதான் அந்தக் கோயிலைக் கண்டினார்கள் என்று சொல்வார்கள்.  எப்படி என்றால், அங்கு விபசித்தி முனிவர் என்று ஒருவர் இருந்தார். அந்த முனிவர் அங்கேயே வாழ்ந்து அங்கேயே ஒரு கோயிலைக் கட்டிவிட்டு ஜீவ சமாதியும் அடைந்திருக்கிறார். அவர்  தினசரி அந்த வன்னி மரத்தின் கீழ் உட்கார்ந்து வன்னி இலைகளை உருவி  வேலையாட்களுக்கு கொடுப்பாராம். அவர்கள் எந்த அளவிற்கு உழைத்தார்களோ அந்த அளவிற்கு அது பொன்னாக மாறுமாம். ஒன்றுமே உழைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தால் அது இலையாகவே இருக்குமாம். கடினமாக வேர்வை சிந்தி அனைத்தும் செய்தவர்களுக்கு அத்தனையும் தங்கமாக மாறுமாம்.  தக்கோலம் ஸ்ரீ இரத்தினவல்லி சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வன்னி மரத்திற்கு  விஜயதசமி அன்று விசேஷ பூஜைகள் செய்யப்படுகின்றனவாம்.

On September 11, 1730, over 360 people of the Bishnoi tribe were killed in Khejarli (Rajasthan) ~ and they fell objecting felling of Khejri trees by the king of Jodhpur.  .. .. that way not many of us knew of Bishnoi community before Salman Khan made headlines for his role in the blackbuck killing case of 1998?   The term Bishnoi translates to the number 29.   29 is the number of tenets laid down by the founder of the Bishnoi sect almost 500 years ago. Of the 6 tenets that focus on protecting nature, the two most thoughtful ones are: Jeev Daya Palani–Be compassionate to all living beings and Runkh Lila Nahi Ghave– Do not cut green trees. The principles were not only tailored to conserve the biodiversity of the area but also ensured an eco-friendly social life.   

Thousands of years ago humans lived in jungles that sustained them, providing both food and shelter. They lived in harmony with the wildlife, respecting their space. They neither hunted for sport, poached, burnt, nor cut down huge swathes of forest land. They venerated nature, because they realised the grave importance of forests, and worshipped trees and animals. In the core of the forests, they nurtured sacred groves — groves of trees that have religious importance. Many of these sacred groves exist even today.   For the Bishnois, conservation of nature and wildlife is their religion. In the arid regions of Rajasthan, they manage sacred groves called orans where there are forests of Khejri trees and large populations of antelopes like the blackbucks and chinkara roam.    

மகாஜனபதம்  என்பது பண்டைய  இந்தியாவில் கோலோச்சிய  16 அரசுகளைக் குறிக்கும்.   வடமேற்கிலுள்ள காந்தாரம் முதற்கொண்டு கிழக்குப் பகுதியில் காணப்பட்ட அங்கம் வரையிலான பதினாறு அரசுகளில் மத்சய நாடு என அறியப்பட்ட விராட நாடும் ஒன்றாகும்.    

மகாபாரதத்தின் 18 பருவங்களுள் நான்காவது விராட பருவம். இப்பருவத்தில், 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, பாண்டவர்கள், மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில், தலைமறைவாக வேலைக்காரர்களாக வாழ்கின்றனர்.  தருமர்  மன்னருடன் சொக்கட்டான் ஆடும் நண்பனாக கங்கன் எனும் பெயரிலும்,  திரௌபதி, விராட இராணி சுதேஷ்ணையின் சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்னாக சைரந்திரி என்ற பெயரிலும், பீமன் விராட அரண்மனை சமையல் கலைஞராக வல்லபன் எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நடனம் கற்றுத் தரும் ஆசிரியராக பிருகன்னளை எனும் பெயரிலும், நகுலன் அரண்மனை குதிரைகளை பராமரிக்கும் கிரந்திகன் எனும் பெயரிலும், சகாதேவன் அரண்மனை பசுக்களை பராமரிக்கும் தந்திரிபாலன் எனும் பெயரிலும் வாழ்ந்தனர். 

மகாபராக்கிரம் பொருந்திய பாண்டவர்கள் ஐவரும் ஒளிந்து வாழ்வது எளிதல்லவே!  அவர்கள் விராட நகருக்குள் நுழையுமுன், ருருவின் மகன் (யுதிஷ்டிரன்) அர்ஜுனனிடம், “நகரத்திற்குள் நுழைவதற்கு முன்பு, நமது ஆயுதங்களை எங்கே வைப்பது? ஆயுதங்களுடன் நுழைந்தால், நாம் நிச்சயம் குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவோம். மேலும், மிகப்பெரிய வில்லான காண்டீவத்தை மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். அதனால், சந்தேகமற, விரைவில் மக்கள் நம்மை அடையாளம் காண்பார்கள். நம்மில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டாலும், {நமது} வாக்குறுதியின் படி, நாம் மேலும் பன்னிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்க நேரிடும்" என்றான்  

அர்ஜுனன்  சொன்னான் :  -   “அடைய முடியா சிகரத்தின் அருகில் இருக்கும், அதோ அந்தக் கடுமை நிறைந்த மயானத்தில், விலங்குகளும் பாம்புகளும் நிறைந்த காட்டுக்குச் செல்லும் வழியை விட்டு விலகியிருக்கும்  இடத்தில, ஒரு பெரும் வன்னி மரம், ஏறுவதற்குக் கடினமானதாகவும், பெரும் கிளைகளை விரிந்து பரப்பியிருப்பியபடியும்  இருக்கிறது. நாம் நமது ஆயுதங்களை அந்த இடத்தில்  பாதுகாப்பாக வைத்துவிட்டு,  நகரத்திற்குச் சென்று துயரத்தில் இருந்து விடுபட்டு வாழலாம்" என்றான்.   நகுலன் அந்த மரத்தில் ஏறி விற்களையும் பிற ஆயுதங்களையும் அதில் வைத்தான்  அந்த மரத்தில் உடையாத பகுதி என்றும், மழையும் ஊடுருவாத பகுதி என்றும் தான்  நினைத்த பகுதியில் அவற்றை {அந்த ஆயுதங்களை} இறுக்கமாகக் கட்டினான்.  

மிக அந்நியாயமாக பாண்டவர்களை அனுப்பிய வனவாசமும், அஞ்ஞாத வாசமும் முடியும் தருவாயும் வந்தது.  துரியோதனன் கலக்கம் அடைந்தான்.எப்படியாவது பாண்டவர்களைக் கண்டுபிடித்தால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை என மீண்டும் வனவாசம் அனுப்பி விடலாம் என எண்ணினான். மறைந்த சூரியன்போல் பாண்டவர்கள் திரும்பி எழுந்து வருவார்கள்..'என்றார் பீஷ்மர். அப்போது ஒற்றர்களால்  விராட நகரில், கீசகன் பெண் ஒருத்தியின் காரணமாக கந்தர்வனால் கொல்லப்பட்டான் என வந்த செய்தி கௌரவர்களுக்கு சந்தோசம் அளித்தது.  விராட நாட்டு மன்னனை முற்றுகையிட்டால், அவனைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள்; அவர்களை வெளிக்கொணரலாம் மேலும்  விராடனிடம் கொண்ட பழைய பகமையைத் தீர்த்துக் கொள்ள இதுவே தருணம் என எண்ணிய .திரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மா அவர்கள் உதவிக்கு வந்தான்.  முதலில் பசுக்கூட்டத்தை கவர்வது அவன் திட்டம்.அப்போது பசுக்களைக் காக்க பாண்டவர்கள் வருவார்கள் என்பது அவன் கணிப்பு. போர் தொடங்கியது.  .. ...... ....






விஜயதசமி அன்று ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பார்வேட்டை புறப்பாடு கண்டு அருள்வார். பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்து அருளி வன்னி மரத்தில் அம்பு எய்யும் வைபவம் சமீப சில வருஷங்களில் வசந்த  பங்களா இல்லாதபடியால் பார்வேட்டை வைபவம் கோவில் வாசலிலேயே நடக்கிறது. புறப்பாட்டில் தாடி பஞ்சகம் மற்றும் ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னம் சேவிக்கபடுகிறது. திருவல்லிகேணியில் 28.09.2009  அன்று   நடந்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே : 

adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
17th Aug 2021. 
 

PS : 1)  நூறாண்டுகளுக்கு முன்பு  மும்பையில் தயாரான, "ஹரிச்சந்திரா" போன்ற புராணப் படங்கள்  சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைபடங்கள் பெற்ற வரவேற்புகளின் காரணத்தினால், மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் ஆர். நடராஜ முதலியார், கீழ்ப்பாக்கத்தில், "இந்தியா பிலிம் கம்பெனி" என்னும் நிறுவனத்தை நிறுவி, 1916 இல், "கீசக வதம்" என்ற சலனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான். விராட பருவம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். யு. கிருஷ்ணப்பா, சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்து இருந்தனர். 

2)  Vanni, [also spelt as Wanni] is the  mainland area of the Northern Province of Sri Lanka, covering the entirety of Mannar, Mullaitivu and Vavuniya Districts, and most of Kilinochchi District. The population and infrastructure of the Vanni were devastated by the Sri Lankan Civil War.

3)  Yalpana Vaipava Malai (யாழ்ப்பாண வைபவமாலை) is a book written by a Tamil poet named Mayil Vaakaanar (மயில் வாகனர்) in 1736. This book contains historical facts of the early Tamil city of Jaffna. The book is dated to have been written  around 1736 during the Governorship of Jan Maccara, the then Dutch Governor of Jaffna. It was translated from Tamil by C. Brito, and first published in 1879. The work is looked upon as one of great authority among the Tamils of Jaffna.



4) Virata Parvam is an upcoming Telegu movie  directed by Venu Udugula, starring Sai Pallavi and Rana Daggubati.  The film has music composed by Suresh Bobbili - the plot revolves around Naxalite movement in Telangana region in the 1990s.










No comments:

Post a Comment