To search this blog

Tuesday, January 5, 2021

Thiruppallandu thodakkam 2021 ~ பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே.

 

Today Margazhi 21, [5.1.2021] is a significant day – today starts Neeratta uthsavam of Andal and also signifies ‘Thirupallandu thuvakkam’.  திருவத்யயன உத்சவம் இனிதே நிறைவடைந்தது.  பகல்பத்து, இராப்பத்து, இயற்பா சாற்றுமுறை என நாலாயிரமும் பூர்த்தியாய் சேவிக்கப்பெற்றன.  இன்று திருப்பல்லாண்டு தொடக்கம்.  


வில்லிகண்டார் என்பவர்களில் மூத்தவனான வில்லி என்பவனால் ஏற்படுத்தப்பட்ட புதிய நகரமாகையால் வில்லிபுத்தூரென்று திருநாமம்;  வில்லி யென்பவன் புற்றில் இருந்து வடபத்ரசாயிப் பெருமாளைக் கண்டெடுத்துப் பிரதிஷ்டை செய்த திவ்யதேசமென்று இதனை வில்லிபுத்தூர்  என பெருமை பெற்ற ஸ்தலம்.  இங்கே பிறந்து எம்பெருமானுக்கு நந்தவனம் அமைத்து கைங்கர்யம் செய்தவர் "விஷ்ணுசித்தன்".    எம்பெருமான் ஸ்ரீமன்நாரணனை எப்போதும் தம் சித்தத்திலே உடையவர் என்று பொருள்.   

The grand fest - ‘Adhyayana Uthsavam’  comprising of Pagal Pathu, Vaikunda Ekadasi,  Irapathu, culminated with Iyarpa Sarrumurai.  During  this great Uthsavam, “Naalayira Divaprabandham’ is rendered entirely. During Pagal pathu, it is the 1st and 2nd Aayiram pasurams including : Periyalwar Thirumozhi, Thiruppavai, Nachiyar Thirumozhi, Perumal Thirumozhi, Thiruchanda Vrutham, Thirumaalai, Thirupalliyezuchi, Amalalathipiraan, Kanninum Chiru thambu, Thirumozhi, Thirukurunthandagam, ThiruNedumthandagam are recited in the  afternoons. 

The Irapathu is hailed as ‘Thiruvaimozhi Thirunaal’ when after the purappadu, daily one hundred from Thiruvaimozhi  are rendered everyday.   On day 10, it is the last canto ‘Patham Pathu’ of Swami Nammalwar, which speaks of ‘entering Vaikundam’ by all ‘vaikuntham puguvathu mannavar vithiye’ in the pasuram of  Nammalwar.   On Iyarpa Sarrumurai – moonram ayiram is recited.

The period from Thirukarthigai is ‘Anadhyayana kalam’ – a period during which dravida vedam / arulicheyal (Sri Naalayira divyaprabandham)  is not recited at Temples and at homes.  However during dhanur masam (margazhi) Thirupalliyezuchi & Thiruppavai are recited daily.  The thaniyans of Acaryas and Prabandhams are also not chanted during anadhyayanam.  This time is used for learning sri sooktams of our Acaryas – Emperumanar, Pillai Logachar, Vedanthachar, Swami Manavala Mamunigal.

The day after Iyarpa Sarrumurai is Thiruppallandu thodakkam from whence regular recitation of all divyaprabandhams continues in Temples – however traditionally, at homes – it is only from Koorathazhwan Sarrumurai, which falls on Thai Hastham (Feb 2, 2021) 





நமது அற்புத திவ்யப்ரபந்தத்தின் துவக்கம் 'திருப்பல்லாண்டு' - பெரியாழ்வார் அருளிச்செய்தது.  வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைபெற்ற சமயவாதத்தில் வென்று, அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்துயானை மீது வரும்பொழுது ஸ்ரீமந்நாரணன் திருமகளோடு வானத்தில் கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே எம்பெருமானுக்கே  கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சி பாடப்பட்டதே திருப்பல்லாண்டு.  இப்படி எம்பெருமானுக்கே  கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என   இவர் பெயராகிப்போனது.  இதோ இங்கே திருப்பல்லாண்டின் கடைசி பாசுரம் :

 

பல்லாண்டென்று  பவித்திரனைப்  பரமேட்டியை சார்ங்கமென்னும்

வில்லாண்டான் தன்னை  வில்லிபுத்தூர்  விட்டுசித்தன் விரும்பியசொல்

நல்லாண்டென்று  நவின்றுரைப்பார்  நமோ நாராயணாயவென்று

பல்லாண்டும்  பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே. 

பரிபூர்ணன், பரிசுத்தனும், பரமபத நிலயனும் - ஸ்ரீசார்ங்கமென்கிற வில்லை                                அடக்கி ஆள்பவனுமான எம்பெருமானை, ஸ்ரீவில்லிபுத்தூரிற் பிறந்த பெரியாழ்வார் விரும்பி உரைத்த சொல்லாகிய இப்பிரபந்தத்தை,  நமக்கு நல்ல காலம் வாய்த்ததென்று  ஆனந்தித்து  நவின்று உரைப்பார் ஸ்ரீமந்நாராயணனை  சுற்றும் சூழ்ந்துகொண்டு - அவன் திருநாமத்தை உரக்க  நமோ நாராயணாய என்று  எப்போதும் - "பல்லாண்டு, பல்லாண்டு" என மங்களாசாஸநம் பண்ணப்பெறுவார்கள்.

 


ஸ்ரீவைணவர்கள் உரைத்து மகிழும் திருப்பல்லாண்டு  எனும் பெயரில் சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையாக வைத்தெண்ணப்படும்   நூல்களுள் ஒன்று உள்ளது. மற்றொன்று திருவிசைப்பா. இவற்றைப்  பாடியவர் சேந்தனார். இப்பாடல்கள் யாவும் ”பல்லாண்டு கூறுதுமே” என்பதை ஈற்றடியில் கொண்டு பாடப்பட்டுள்ளன.  சேந்தனார் பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும் திருப்பல்லாண்டு பாடிய அருளாளர்,  இவர் திருவெண்காட்டிற்கு அருகில் நாங்கூர் என்னும் ஊரில் தோன்றியவர்.  

Celebrating Thirupallandu thodakkam, here are some photos of Sri Parthasarathi Perumal taken on earlier occasions.

Adiyen Srinivasa dhasan
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
5.1.2021
 

 

No comments:

Post a Comment