To search this blog

Wednesday, January 20, 2021

Thai Revathi 2021 - Srimannathar purappadu - 'நமனும் முத்கலனும்' பேச !!

திருவரங்கத்து உறையும் என் திருவரங்கனே  ! உன்னையல்லால்

என்னை உய்விக்க வல்லவர் எவர்  உளர்  ??  


 

சொர்க்கம் நரகம்  என்ற பெயரில் பல்லாண்டுகள் முன் ஒரு தமிழ் படம் வந்ததாக ஞாபகம்.  வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் ஒவ்வொருவரும் மற்றவரை வீழ்த்தி வெற்றி பெற முயலுகிறோம். வெற்றிக்கு பின் ?  -  பணம், புகழ், செல்வம், சேர்ந்தால் - மனா நிம்மதி போகலாம்.  நம்மை  வீழ்த்த உடனிருப்பவர்களே முயற்சிக்கிறார்கள் என்கிற எண்ணம்; நம்மை சுற்றியிருக்கும் யாரும்  உண்மையாக இல்லை’ என்கிற நினைப்பு நாளுக்கு நாள் வலுக்குமாம். . இத்தகைய அந்த சந்தேகங்கள்  மனதளவில் வீழ்ந்துபோகச் செய்து துக்கத்தை அளிக்கவல்லன.   கோபம், பொறாமை, எரிச்சல், பதற்றம், ஆத்திரம், சந்தேகம், பயம் இவற்றால் ஆளப்படும்போது, ஒருவர் கொடிய நரகத்தில் இருப்பார்கள் !  அன்பு, ஆனந்தம், பரவசம், அமைதி, போன்ற செல்வங்களை அனுபவிக்கையில்   சொர்க்கத்தில் இருக்கிறீர்கள்.  சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போலாகுமா?  .. .. என வினவுவது நமக்கு எது சிறந்தது என நாம் நம்பும் மனநிலை.  Xanadu  located in Inner Mongolia, northern China, was made the capital  of the Mongol Empire by Kublai Khan.  Xanadu received lasting fame in the western world thanks to the Venetian explorer Marco Polo’s description of it in his celebrated book Travels. The city received another boost in the popular imagination when it was made the subject of a poem by Samuel Taylor Coleridge.  Distant and mysteriously lost Xanadu, thus, came to represent a place of mystery, splendid luxury and easy living.  Happiness is a state of mind – it is the state of bliss, state of being worry-free.  Many of us dream of going to heavenly ‘sorga’!  

வைகுண்ட ஏகாதசி சமயம் வைணவ திருக்கோவில்கள் சென்று சொர்க வாசல் வழி வந்து இருப்பீர்கள் ! ..  அது  பரமபத வாசல்  ஆனால்  சாதாரணமாக மக்கள் கூறுவது -  ‘சொர்க்க வாசல் திறப்பு!’.    சொர்க்கம் என்பது ஒரு சிறந்த உலகம்,  தேவலோகம்.  பரமபதம் என்பது மோட்சம்.   சொர்க்க லோகம் என்பது இந்திரனால் ஆட்சி செய்யப்படும் தேவ உலகம் . பூமியில் மனிதர்கள் வாழும் போது செய்த புண்ணியத்தால், இறந்த பின் அடையப்படும் இடம். முடிவற்ற இன்பம், சுதந்திரம் அதுவே சொர்க்கம்.  சரி சொர்க்கத்தின்  திறப்பு விழா எது ? அதன் திறவுகோல் எது ?? வைணவம் ஒரு மிக எளிய மார்க்கம்.  அந்த காலங்களில் எம்பெருமானது பெயர்களையே குழந்தைகளுக்கு இடுவர்.  பெரியாழ்வார் - 'நம்பி, பிம்பி என' நாட்டு பெயர்கள் இடாதீர்கள்; செம்பெருந்தாமரைக்கண்ணன் பெயர்கள் இட்டு அழையுங்கோள் - அந்த நாரணன் தம் அன்னை நரகம் புகாள் என்கிறார். இப்படி எதோ போகிறபோக்கில் திருநாமம் சொல்லி, காதில் விழுந்ததற்கே நரகத்தை சுவர்க்கம் ஆகும் அளவுக்கு பலன் என்றால் திருநாமங்களின் பெருமைகள் சொல்லி முடிவதில்லை என்பதே உண்மையாகும்.  அதற்கான வ்ருத்தாந்தம் 'நமனும் முத்கலனும்' பேசிய கதை. 

Today 20th Jan 2021  -  is   Thai  Revathi.   At Thiruvallikkeni divaydesam, Sri Mannathar (Sri Ranganathar) had siriya mada veethi purappadu.  Here are some photos of Lord Ranganathar during today’s purappadu. 

The great saint by name Vipra Narayanar, born at Thirumandankudi also known as Bhaktanghri renu later came to be hailed as  ‘Thondaradippodi Alvar’ due to his devotion to the devotees of Lord. Thondaradipodi rendered 55 verses in praise of Lord Ranganatha - 10 verses of Thirupalli Yezhuchi and 45 verses of Thiru Maalai.  Thirupalliyezhuchi is recited in every temple to wake up the Lord and rendered during kalasanthi in the morning.   In Thirumaalai, Azhwar  hails the advantages of uttering the names of Paripoornan Sriman Narayanan as  : 

நமனும் முற்கலனும் பேச  நரகில் நின்றார்கள் கேட்க*

நரகமே சுவர்க்கம் ஆகும்  நாமங்களுடைய நம்பி*

அவனதூர்  அரங்கம் என்னாது அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்*

கவலையுள் படுகின்றார்  என்று  அதனுக்கே கவல்கின்றேனே. பண்டு முத்கலன் என்பான் ஒருவன் பாபபிரசுரனாய் வர்த்திக்கிற நாளிலே -தேனுவை தானம் பண்ணுகிற சமயத்தில் 'கிருஷ்ணா' என்று சொல்லி கொடுத்தானாம்.  வாழ்நாள் முழுவதும் பெரும்பவங்கள் செய்த  முத்கலன்  இறந்தப்போது , யம தூதர்களால் பிடிக்கப்பட்டு யம லோக வாயிலில் நிறுத்தப்படுகிறான்.   அங்கே, மாறாக யமன் அவனை மரியாதையுடன் வரவேற்றான். அது ஏன் என்று முற்கலன் கேட்க, அதற்கு எமன், அவன் ஒருநாள் கிருஷ்ணா என்ற நாமம் உரைத்ததாக பேசிக் கொண்டு இருந்தான். அறிவு இல்லாத மனிதன் கூட ஓரு தடவை "அரங்கா" என்று அழைத்தால் நரகம் எல்லாம் புல் முளைத்துப் போயிருக்கும்.  எனக்கு வேலை இருந்திருக்காதே என நமன் உரைக்க, அத்தகைய சஹஸ்ரநாமங்களை, எம்பெருமானது ஆயிரக்கணக்கான  திருநாமத்தின் பெருமைகள் கேட்ட அனைவரும் சொர்கம் புக - அந்த சம்பாஷணையால் அன்று நரகமே சுவர்கமானதாம். 

The inmates of hell overhear the words extolling the Lord  exchanged by Yama and Mudgalar ~ that chance hearing was so powerful to convert hell in to heaven ~ that Great Lord resides in Thiruvarangam ... the Azhwar feels bad and deeply worries for those mortals who even when otherwise learned, fail and falter to make the cardinal mistake of not realising Thiruvarangam and its  Periya Perumal – Thiruvaranga Chelvan Sri Ranganathan.  For all of us, here is a chance to have darshan of our Sri Ranganathar at Thiruvallikkeni during purappadu. 

              ஸ்ரீரங்கநாதனின்  திவ்யதரிசனம் இன்று திருவல்லிக்கேணியில் 'ரேவதி’ புறப்பாட்டில்  - சில படங்கள் இங்கே.

 

 
adiyen Srinivasa dhasan.
Mamandur Veeravalli Srinivasan Sampathkumar
20/01/2021. 1 comment: