To search this blog

Tuesday, February 4, 2020

Thanjai Brihadeeswaram kumbabhishekam 2020


Thanjavur is an important center of South Indian religion, art, and architecture. Most of the Great Living Chola Temples, which are UNESCO World Heritage Monuments, are located in and around Thanjavur. The foremost among these, the Brihadeeswara Temple, famously known as ‘Thanjai Rajarajewswaram’.  Thanjavur is also home to Tanjore painting, a painting style unique to the region.

The imposing structure ‘Thanjai Periya Kovil’ -  Peruvudaiyar Kovil (தஞ்சைப் பெருவுடையார் கோயில்) is one of India's most prized architectural sites. Built by emperor Raja Raja Chola I and completed in 1010 AD, Peruvudaiyaar Temple, also popularly known as the 'Big Temple', turned 1000 years old in 2010. The temple is part of the UNESCO World Heritage Site known as the "Great Living Chola Temples"   along with the Chola dynasty era Gangaikonda Cholapuram temple and Airavatesvara temple.  The temple is a magnificent architectural construct that will never stop surprising anyone visiting the temple. Built using over 130,000 tons of granite, this fabulous structure shows the architectural prowess and affinity of the South Indian kings.

The major attraction of the temple is the 216-feet-tall tower that is built above the Sanctum of the temple. This flamboyant tower can be seen by anyone entering the city from afar. Another breathtaking thing that will sure stupefy the visitor is the magnificent Nandi statue built at the temple; it is about two meters in height, six meters in length and two-and-half meters in width, and weighs around a whopping 20 tons for a statue built from a single stone. Various postures of the famous classical dance, Barathanatyam, are carved carefully on the exterior walls of the upper storey of the temple.
When the temple was built in AD 1010, it was the tallest temple in India hitherto, and it took  seven years to complete. The topmost structure of the temple, called Vimana, weighs around 80 tons, and it reveals how challenging it would have been to take such a heavyweight stone to the top.  The original monuments of this 11th century temple were built around a moat. It included gopura, the main temple, its massive tower, inscriptions, frescoes and sculptures predominantly related to Shaivism. The complex includes shrines for Nandi, Parvati, Kartikeya, Ganesha, Sabhapati, Dakshinamurti, Chandeshvara, Varahi and others.

This temple is a famous tourist attraction centre.  Thousands of bakths from all over the place are thronging to this holy place to witness kumbabishekam slated on 5th Feb 2020.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலின் குடமுழுக்கு விழாவினை காண ஆவலுடன் தஞ்சை வந்த வண்ணம் உள்ளனர்.  இதுவே ப்ரஹதீஸ்வரம். தஞ்சை பெரிய கோவில்.  தஞ்சாவூரைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்யப்பட்ட பகுதி சோழ நாடாகும். தஞ்சை என்பதற்கு, ‘குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி’ என பொருள். பெருகி வரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாக திகழ்ந்தது. இவ்வூர் பற்றிய குறிப்புகள், திருச்சி மலைக்கோட்டை பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. தஞ்சையில் கோவில் கட்டப்படுவதற்கு முன், ‘தஞ்சை தளிக்குளத்தார் கோவில்’ இங்கு இருந்தது. தற்போதும் இங்கு தஞ்சபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பெயராலேயே, ‘தஞ்சாவூர்’ என பெயர் ஏற்பட்டது.

உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும் வாரி வழங்கிய தஞ்சை மண்டலத்தை கி.மு.2ம் நுாற்றாண்டிலிருந்து கி.பி., 13ம் நுாற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் சோழ மரபினர் ஆட்சி செய்தனர். அவர்களின் முதல், 400 ஆண்டு கால ஆட்சிச் சிறப்பை சங்ககால தமிழ் இலக்கியத்திலிருந்து அறிய முடிகிறது. காவிரியில் கல்லணை கட்டி, காடு திருத்தி, நாட்டை வளம் பெறச் செய்த கரிகாற் பெருவளத்தான் என்ற சங்ககாலச் சோழ மன்னன் கி.பி., முதலாம் நுாற்றாண்டில் ஆட்சி புரிந்தான். கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச்சிற்றரசனிடம் போரிட்டு. 90 விழுப்புண்களை பரகேசரி விஜயாலயச் சோழன் பெற்றார். இவர் தான் தஞ்சாவூர் நகரை கைப்பற்றி, தனது தலைநகரமாகக் கொண்டு, தஞ்சை சோழப் பரம்பரையைத் தோற்றுவித்தார். பிற்காலச்சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றியவரே, ராஜராஜ சோழன். இவர் சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவர் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் மேலும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றார்.

தஞ்சாவூரில், 1,010 ஆண்டுகளுக்கு முன், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பெரியகோவில். தமிழரின் பெருமையைப் பறை சாற்றி கொண்டு, உயர்ந்து நிற்கிறது. 240 அடி நீளமும், 120 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்ட நீள் சதுர நிலப்பகுதியைக் கொண்ட இக்கோவிலின் நடுப்பகுதியில், கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்விதமாக இக்கோபுரம் மொத்தம், 13 நிலைகள் கொண்டது. இதன் உயரம், 216 அடி. ஒவ்வொரு நிலையின் உயரமும், சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து உயரத்தில், ‘பிரமிட்’ போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.  ஒவ்வொரு கல்லிலும் கலைநயம். ஒவ்வொரு சிற்பத்திலும் ஓராயிரம் கதைகள். வழிபாட்டுக்குரிய ஆலயமாக மட்டும் அல்லாமல், வங்கியாக, கலைக்கூடமாக, சமூக நிர்வாகத்துக்கான ஒருங்குகூடு மையமாக விளங்கியிருக்கிறது இந்தப் பெரிய கோயில். இதை இராஜராஜேச்வரம் என்று குறிப்பிடுகின்றன இங்குள்ள கல்வெட்டுகள்.

கோவில் கருவறையில் உள்ள  சிவலிங்கத்தின் உயரம், 13 அடி.  இந்தச் சிலைக்குத் தனியாகக் கர்ப்பக்கிரகம் கட்டாமல் கோவில் கோபுரத்தின் உள்கூடு அமைப்பே கர்ப்பகிரகமாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம் கவிழ்த்து வைத்த கூம்பு வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்தச் சுவர்களுக்கு இடையே உள்ள வெற்றிடத்தைப் பார்க்கும்போது, 216 அடி உயர லிங்கம் போல காட்சி அளிக்கும். இக்கோவில் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில், 1004ம் ஆண்டில் கட்டத் தொடங்கி, 1010ம் ஆண்டில் முடிவடைந்தது. கும்பாபிஷேகம் விழா நடந்ததாகக் கல்வெட்டுச் சான்று கூறுகிறது.

நமது நாடு சுதந்திரத்துக்குப் பின், 1980ம் ஆண்டு, ஏப். 3ம் தேதி பெரியகோவிலுக்குக் குடமுழுக்கு விழா நடந்தது. பின்னர், 1997ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. 23 ஆண்டுகளுக்குப் பின், 2020, பிப். 5ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, இக்கோவிலில், இரு ஆண்டுகளாகத் திருப்பணிகள் நடந்து வருகின்றன.

தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேக விழா, நாளை (பிப்.,5ல்)  நடைபெறவுள்ளது.  இதற்காக பெரியகோவில் பின்புறம், 11,900 சதுரஅடி பரப்பளவில் யாகசாலை  அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவில் நூற்றாண்டுகள் வரலாறு கண்டது. மாலிக்குகளும், நவாப்களும், சுல்தான்களும் பலமுறை தஞ்சை பெரிய கோயிலைச் சூறையாடினர். பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயரும் பீரங்கிகளைவைத்துத் தகர்த்தனர். 30 ஆண்டுகளுக்கும் மேல் சிப்பாய்களின் கூடாரமாக இருந்த பெரிய கோயில் பல தாக்குதல்களைச் சந்தித்தது. இருந்தும் அதன் கம்பீரத்தை யாராலும் சிதைக்க இயலவில்லை. அதனால்தான் அது இன்றும் பெரிய கோயிலாக இருக்கிறது.

நாளை (பிப்.5ல்)   பெரிய அளவில் அற்புத கும்பாபிஷேகம் இங்கே நடைபெற உள்ளது. தகவல்கள் : நன்றி தினமலர் நாளிதழ் சிறப்பு பத்திரிக்கை. Here are some photos taken a few years ago.

With regards – S. Sampathkumar


No comments:

Post a Comment